என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
பங்குனி உத்திர நாளான நாளை (வெள்ளிக்கிழமை) மகாமகம் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா சென்று கோவிலை சேர்கிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. இதையொட்டி வழக்கமாக இரவு 7 மணிக்கு நடைபெறும் ராக்கால அபிஷேகம் நடைபெறாது.
சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான கீழ நாலுமூலைக்கிணறு குன்றுமேலய்யன் சாஸ்தா கோவிலிலும் நாளை பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் மற்றும் பந்தல் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்....48 நாட்கள் நரசிம்ம பிரபத்தி படித்தால் கைமேல் பலன்
தினமும் நீராடிய பின், “நரசிம்ம பிரபத்தி’ ஸ்லோகத்தை 3,12,24,48 என உங்களுக்கு வசதிப்படும் அளவுக்கு பாராயணம் செய்யுங்கள். அஹோபில மடத்தின் 44வது பட்டமாக வீற்றிருந்த அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் அருளப்பட்ட மந்திரம் இது. இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும். இப்பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வரவேண்டும்.
கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது. 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடியபின் நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும். கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம்.
பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார். “நரசிம்ம பிரபத்தி”யின் தமிழாக்கம் வருமாறு:-
நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை.
சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!
அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!
எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!
இவ்வுலகத்திலும் நரசிம்மரே! அவ்வுல கத்திலும் நரசிம்மரே!
எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல் லாம் நரசிம்மரே!
நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை
அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடைகிறேன்.
பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார்.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.
நேற்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 63 நாயன்மார்கள் வீதி உலா இன்று நடக்கிறது. இன்று மதியம் 3 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்துமூன்று நாயன்மார்களோடு திருக்காட்சியளித்து மாட வீதிகளில் உலா வருகிறார். இரவு 9 மணி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியை காண மயிலாப்பூர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். மயிலாப்பூரில் வசித்து இடம் பெயர்ந்து சென்றவர்கள் 63 நாயன்மார்கள் விழாவின் போது மயிலாப்பூரில் கூடுவது வழக்கம்.
மேலும் நேர்த்தி கடன் செலுத்துபவர்களும் இங்கு வந்து அன்னதானம் உள்ளிட்டவைகளை வழங்கி நேர்த்தி கடன் செலுத்துவார்கள்.
இன்று மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளின் முன்பும் பந்தல் அமைத்து அன்னதானம், நீர்மோர், குளிர்பானம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தானமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் இருந்து மயிலாப்பூர் கபாலீசுரர் கோவில் வரையிலும், மறுபுறம் அடையாறு இந்திரா நகரில் இருந்து மயிலாப்பூர் வரையிலும் நீண்ட தூரத்துக்கு பக்தர்கள் அன்னதானம் வழங்கி நேர்த்தி கடனை செலுத்தினார்கள். இன்று மட்டும் சுமார் 5 லட்சம் மக்கள் கோவிலுக்கு வந்து சென்ற வண்ணம் இருந்தனர்.
63 நாயன்மார்கள் கபாலீசுவரரின் தொண்டர்கள் ஆவர். இவர்களை முன்னே அனுப்பி கபாலீசுவரர், அவர்களின் பின்னால் வீதி உலா வர உள்ளார். இந்த நிகழ்ச்சி 16 கால்மண்டபத்தில் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. 63 நாயன்மார்களும் கோவில் மாட வீதிகளை சுற்றி வலம் வருகிறார்கள். அவர்களுடன் கபாலீசுவரரும் வெள்ளி விமானத்தில் வலம் வருகிறார்.
இந்த நிகழ்ச்சி இரவு 9 மணி வரை நடக்கிறது. இது பார்ப்பவர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமையும் என்பதாலும் கொரோனா தொற்று குறைந்ததால் 2 வருடங்களுக்கு பிறகு இந்த நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாலும் இன்று அதிகளவில் கூட்டம் காணப்பட்டது.
இதனால் இன்று மயிலாப்பூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் அதிக அளவில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று தொடங்கி, தொடர்ச்சியாக 11 மாதங்கள் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், தடைபட்டு வந்த திருமணம் விரைவில் நடந்தேறும்.
நாம் செய்யும் காரியங்கள் எந்த தடையும் இன்றி நடைபெறுவதற்கு, துர்க்கையை வழிபடுவது சிறப்புக்குரியது. அதுவும் ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை வழிபாட்டிற்கு பலன் அதிகம். 1½ மணி நேரம் கொண்ட ராகு காலத்தில், கடைசி ½ மணி நேரத்தை ‘அமிர்தகடிகை நேரம்’ என்பார்கள். இந்த நேரத்தில் நெய்விளக்கு ஏற்ற உகந்த நேரமாகச் சொல்வார்கள். ஞாயிற்றுகிழமை வரும் ராகு காலத்தில் (மாலை 4.30-6 மணி) துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட, வேண்டிய காரியங்கள் வெகு சுலபமாக நிறைவேறும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் (காலை 10.30-12 மணி) தாமரை தண்டை திரியாக போட்டு, நெய்விளக்கேற்றி துர்க்கையை வழிபட்டால், தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும்.
அஸ்த நட்சத்திரம் அன்று துர்க்கைக்கு சிவப்பு பட்டு துணி சாத்தி, சிவப்பு தாமரையை பாதத்தில் வைத்து, 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சூட்டி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை தினமும் நெற்றியில் வைத்து வர விரைவில் திருமணம் நடைபெறும்.
சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி, அர்ச்சனை செய்து வழிபட்டால் சங்கடங்கள் தீரும். விநாயகருக்கு எருக்கம் இலையில் திரிபோட்டு விளக்கேற்றி வழிபட்டால் பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
கடன் பிரச்சினை இருப்பவர்கள், இரட்டை பிள்ளையார் அருளும் ஆலயங்களுக்கு ரோகிணி நட்சத்திரம் அன்று சென்று, சந்தனக் காப்பு செய்து வழிபட்டால் கடன் தொல்லை குறையும்.
நவக்கிரகத்தில் உள்ள அங்காரகன் என்னும் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியாக இருப்பவர், முருகப்பெருமான். வேலை கிடைக்காமல் அவதிப்படுபவர்கள், செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானுக்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால் நல்ல வேலை அமையும்.
விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரம் அன்று முருகனுக்கு வேல் ஆயுதத்தில் எலுமிச்சைப்பழத்தைச் சொருகி வைத்து வழிபடுவதோடு, முருகனுக்கு அர்ச்சனையும் செய்யுங்கள்.
ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி, வில்வம் உள்ள இடத்தில் செய்வினை வேலை செய்யாது. எனவே வீட்டின் பூஜை அறையில் இந்த பொருட்களை வைத்திருங்கள்.
பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளித்து வந்தால், தோஷம், தீட்டு போன்றவை விலகி லட்சுமி கடாட்சம் வீட்டில் நிறையும். பால், தயிர், நெய், கோமியம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.
குழந்தைப் பேறு வாய்க்கப் பெறாதவர்கள், தொடர்ச்சியாக 6 தேய்பிறை அஷ்டமி நாட்களில் காலபைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கப்பெறும்.
பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சன்னிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால், சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுப்பது, பூஜை நடக்காமல் இருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவி செய்வது, இறந்துபோன ஆதாரவற்றவர்களின் உடல் தகனத்திற்கு உதவி செய்வது போன்ற மூன்றும், அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கச் செய்யும்.
எத்தகைய கிரக தோஷமாக இருந்தாலும் சரி... ராமாயணத்தில் உள்ள சுந்தரகாண்டத்தில் இருந்து தினமும் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்து வந்தால் போதுமானது. உங்களுடைய தோஷங்கள் விலகும்.
இந்த கும்பாபிஷேக காலகட்டத்தில் ஆலயத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கோபுர கலசங்களில் உள்ள நவதானியங்கள் மாற்றப்பட்டு, புதிய நவதானியங்கள் வைக்கப்படும். பின்னர் கும்பாபிஷேக நாள் அன்று, அந்த கோபுர கலசங்களுக்கு வேத மந்திரங்கள் ஓத கும்பாபிஷேகம் நிகழ்த்தப்படும். பலருக்கும் இந்த கும்பாபிஷேகத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைப்பதில்லை. ஆனால் கும்பாபிஷேகத்திற்கு பிறகான 48-வது நாளில், மண்டல பூஜை நடத்தப்படும்.
இந்த மண்டல பூஜையில் கலந்து கொண்டால், கும்பாபிஷேகத்தில் பங்கேற்று, அந்த நிகழ்வை தரிசித்ததற்கான பலனைப் பெறலாம்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூரில் உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந்தேதி கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை (புதன்கிழமை) காலை தங்க பல்லக்கு, மாலை திருக்கல்யாணம் இரவு முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. 17-ந் தேதி காலை தங்கப் பல்லக்கு, மாலை குதிரை வாகனம் மற்றும் வேடுபறி உற்சவம் நடக்கிறது. 18-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை தேர்த்திருவிழா நடக்கிறது. மாலை தீர்த்த வாரி சாற்றுமுறை நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் உபயதாரர்கள் முன்னின்று செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்று வழிபாடு செய்வது வழக்கம்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பவுர்ணமி கிரிவலம் தடை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் திருவண்ணாமலையில் பக்தர்கள் மீண்டும் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை அரசால் நீக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இந்தமாதம் (பங்குனி) பவுர்ணமி நாட்களான வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
கிரிவலம் செல்ல வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த கார்த்திகை மாத பவுர்ணமி நாட்களில் மட்டும் 20 ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் தற்போதுதான் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே திரளான பக்தர்கள் தாணிப்பாறை மலையடிவாரம் முன்பு குவிந்தனர். காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரம் பகுதியிலிருந்து மலைப்பாதை வழியாக நடந்து சென்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பங்குனி மாத பிரதோ ஷத்தை முன்னிட்டு மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரை பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு பிரதோஷ பூஜைகளும் நடைபெறுகிறது. பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். முன்னதாக கோவில் வனப்பகுதியில் அமைந்துள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்டவைகளை வனத்துறையினர் பக்தர்களிடம் இருந்து பறிமுதல் செய்து அதற்கு பதிலாக பக்தர்களின் உடமைகள் கோவிலுக்கு எடுத்து செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் துணிப் பை வழங்கினார்.
தாணிப்பாறை அடி வாரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரிய தலமாக ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் ஏகம்பர நாதர் கோவிலில் பங்குனி மாதஉற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான பங்குனி உற்சவ விழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தையொட்டி 24 அடி உயர தேர் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏல வார்குழலியும், ஸ்ரீ ஏகாம்பரநாதரும் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர்.
இதைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில்ஏலவார் குழலியும், ஸ்ரீ ஏகாம்பர நாதரும் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வீ.பாரதிதாசன், ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா. ஆர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம். மகாலெட்சுமி யுவராஜ், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பொன் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இதனால் காஞ்சிபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தெருக்கள் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
தேரோட்டத்தின் போது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம் உள்பட 4 மாநிலங்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் சிவ வாத்தியங்களை இசைத்தவாறு சென்றனர்.
திருத்தேர் 4 ராஜ வீதிகளில் உலாவந்த பின்னர் மதியம் மீண்டும் தேர் நிலையை அடைந்தது. பின்னர் உற்சவ மூர்த்திகள் தேரில் இருந்து கோவிலுக்கு சென்று எழுந்தளி பக்தர்களுக்கு அருளி பாலித்தார்.
இதனையடுத்து திருக்கோவில் உற்சவ மண்டபத்தில் பிராயச்சித்த அபிஷேகமும், விசேஷ திவ்ய சமர்ப்பணமும் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு காண கண் அடியேன் பெற்றவாறே என்ற தலைப்பில் அருட் குருநாதர் சிவாக்கர தேசிக சுவாமிகள் திருமுறை அருளுறை நிகழ்த்துகிறார்.
தேரோட்டத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் காலை முதல் இரவு வரை அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படைவசதிகள் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டு இருந்தது. சிவகாஞ்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பங்குனி மாத உற்சவத்தையொட்டி வருகிற 15-ந் தேதி காலையில் ஆறுமுகப் பெருமான் வீதியுலாவும். மாலையில் பிட்சாடனர் தரிசனமும், இரவு மின் அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறுகிறது.
16-ந் தேதி ஆள்மேல் பல்லக்கு உற்சவமும், இரவு திருக்கோயில் வரலாற்றை விளக்கும் வெள்ளி மாவடி சேவைக்காட்சியும் நடைபெறுகிறது.
17-ந் தேதி சபாநாதர் தரிசனம் மற்றும் ஏலவார் குழலியம்மை ஒக்கப் பிறந்தான் குளத்துக்கு எழுந்தருளி வீதி உலா நடக்ககிறது.
முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது ஏலவார் குழலி அம்மையும் ஏகாம்பர நாதரும் திருக்கல்யாண திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். அன்று இரவு தங்க இடப வாகனத்தில் சுவாமியும், அம்மனும் வீதிஉலா வருகின்றனர்.
18-ந் தேதி பகல் 12 மணிக்கு கந்தப்பொடி உற்சவமும், இரவு நூதன வெள்ளி உருத்திர கோடி விமானத்தில் வீதியுலா வருகின்றனர். 19-ந் தேதி புருஷாமிருக வாகனத்திலும், இரவு பஞ்ச மூர்த்திகள் வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது.
20-ந் தேதி காலையில் சந்திரசேகரர் வெள்ளி இடப வாகனத்தில் எழுந்தருளி சர்வ தீர்த்தக்குளத்தில் தீர்த்த வாரி உற்சவம் நடைபெறுகிறது. இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.






