என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரவு தெப்பல் உற்சவம் நடந்தது.
திருப்பதியில் ஆண்டு தோறும் 5 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறும்.கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தெப்ப உற்சவம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் தெப்ப உற்சவத்தை விமரிசையாக நடத்த தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி முதல் நாள் தெப்ப உற்சவம் நேற்று இரவு தொடங்கியது. வரும் 17-ந் தேதி வரை 5 நாட்கள் தெப்ப உற்சவம் நடக்கிறது. தெப்பல் உற்சவம் தொடங்கியதையொட்டி ஏழுமலையான் கோவிலில் தினசரி நடைபெறும் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் 5 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதல் நாளான நேற்று இரவு ஸ்ரீ சீதா, ராமர், லக்ஷ்மணர் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்ட தீர்த்தவாரி குளத்தில் மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உலா வந்தனர். 3 சுற்றுகள் வலம் வந்தனர். தெப்பல் உற்சவத்தில் வேதம், பாட்டு, நாதம் ஆகியவற்றுக்கு இடையே தெப்பல் உற்சவம் நடந்தது.
2 ஆண்டுக்கு பிறகு தெப்ப உற்சவ தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்தனர்.
புஷ்கரணி முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வந்தனர்.
இதனால் அலிபிரி சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்பதியில் நேற்று 74,167 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 33,976 பேர் முடி காணிக்கை செலுத்தினர் ரூ.4.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
அத்வேஷி:-
எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும், மகாவிஷ்ணுவின் மீதும், அவரது அடியார்களிடத்திலும் வெறுப்பு கொள்ளாமல் இருப்பவன் ‘அத்வேஷி.’
அனுகூலன்:-
ஒருவர் அத்வேஷியாக இருப்பதோடு, தினமும் பெருமாள் ஆலயங்களுக்குச் செல்வது, கோவில் உற்சவங்களில் பங்கேற்பது, அடியவர்களை போற்றி மரியாதை செய்வது, மற்ற வைணவர்களோடு இணைந்து பணியாற்றுவது என்று இவை அனைத்தையும் விருப்பத்துடன் செய்பவனே ‘அனுகூலன்.’
நாமதாரி:-
மேலே குறிப்பிட்ட குணங்களோடு, மகாவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் ஏதாவது ஒன்றை, தன்னுடைய பெயராக வைத்திருப்பவன் ‘நாமதாரி’ ஆவான்.
சக்ராங்கி:-
மேற்சொன்ன மூன்று குணங்களோடு, வேத சாஸ்திரங்களில் கூறியிருக்கும்படி, மகாவிஷ்ணுவின் திவ்ய ஆயுதங் களான சங்கு, சக்கர சின்னங்களை ஆச்சாரியன் மூலமாக தன் தோள்களில் தரித்தவரும், திருமண் காப்பு அணிந்தவரும் ‘சத்ராங்கி’ எனப்படுவார்.
மந்திரபாடி:-
முன்பு சொன்ன நான்கோடு, சகல ஐஸ்வரியங்களையும் கொடுக்கக்கூடிய அஷ்டகாட்சரமான ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை ஆச்சாரியன் மூலமாக உபதேசம் பெற்று, தினமும் ஜெபித்து காரியசித்தி பெறுபவரே, ‘மந்திரபாடி.’
வைஷ்ணவன்:-
இதற்கு முன்பாக கூறப்பட்ட ஐந்து குணங்களோடு, ஐம்புலன் இன்பங்களையும், இதர தேவதைகளை வழிபடுவதையும் விட்டவன், மோட்சம் அடைவதற்குரிய வழிகளான கர்ம, ஞான அல்லது பக்தி மார்க்கங்களை கடைப்பிடிப்பவனே ‘வைஷ்ணவன்.’
ஸ்ரீவைஷ்ணவன்:-
மேலே சொன்ன 6 வழிகளையும் கடைப்பிடித்து, வேறு சிந்தனை இல்லாமல், ஸ்ரீமந் நாராயணரை மட்டும் மனதில் நிறுத்தி, தினமும் தியானிப்பவனே ‘ஸ்ரீவைஷ்ணவன்.’
ப்ரபந்நன்:-
மேலே குறிப்பிட்ட 7 தகுதிகளோடு, இறைவனை அடைவதற்கு சரணாகதியே தகுந்தது என்ற வழியை பின்பற்றுபவனே ‘ப்ரபந்நன்.’
ஏகாந்தி:-
முன்பு சொன்ன எட்டு தகுதிகளோடு, பெருமாளை அடைவதற்கு சரணாகதியும் கூட போதுமானதல்ல என்று முடிவு செய்து, அந்த பகவானையே உபாயமாக பற்றிக்கொள்பவன்தான் ‘ஏகாந்தி’ ஆகிறான்.
பரம ஏகாந்தி:-
இதற்கு முன்பு சொல்லப்பட்ட 9 தகுதிகளையும் பெற்றிருந்தாலும், பகவானை சரணடைவதோ, அவனையே உபாயமாக கொள்வதோ கடினம் என்பதை உணர்ந்து, நல்ல வழிகாட்டியாக இருக்கும் நல்லதொரு ஆச்சாரியானை சரணடைந்து, அவர் மூலமாக பெருமாளை அடையலாம் என்று முடிவு செய்பவனே ‘பரம ஏகாந்தி.’
சுவாமி புஷ்கரிணி: ஆதிவராக மூர்த்தி சன்னிதிக்கு அருகில் இந்த தீர்த்தம் உள்ளது. இதனை ‘தீர்த்தங்களின் அரசி’ என்று அழைக்கிறார்கள். இங்கு சரஸ்வதிதேவி தவம் இயற்றியதாக தல புராணம் சொல்கிறது. மிகவும் புனிதத்துவம் பெற்ற தீர்த்தம் இது. மார்கழி மாதம் வளர்பிறையில் துவாதசி நாளில் சூரிய உதயத்திற்கு 6 நாழிகை முன்பிருந்து, சூரிய உதயத்திற்கு பின்பான 6 நாழிகை வரை திருப்பதி மலையில் உள்ள அனைத்து தீர்த்தங்களும், இந்த தீர்த்தத்தில் கூடுகின்றன. எனவே அன்றைய தினம் இதில் நீராடி வழிபட்டால் இறைவனின் திருவடியை அடையலாம்.
குமார தீர்த்தம்: மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசி பவுர்ணமி), சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. மனதிற்கு உற்சாகமும், உடலுக்கு இளமையும் தரும் இத்தீர்த்தத்தில் நீராடுபவர்கள், ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுவர்.
தும்புரு தீர்த்தம்: இறைவனை தன்னுடைய நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர், திருப்பதி வெங்கடாஜலபதியை நினைத்து தவம் இருந்த இடத்தில் இருப்பதால் இதற்கு ‘தும்புரு தீர்த்தம்’ என்று பெயர். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (பங்குனி பவுர்ணமி), இதில் நீராடுவோருக்கு பரமபதம் உண்டு.
ஆகாச கங்கை: தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சகல பாபங்களையும் போக்கும் இத்தீர்த்தத்தின் அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர். அந்தக் காலத்திலேயே திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய குடத்தில் வேங்கடவனுக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்துக்கொண்டு நடந்தே வருவாராம். கோவிலில் இருந்து சுமார் 2 மைல் தூரம். எம்பெருமான் இவரது தீர்த்த கைங்கர்யத்தை மெச்சி காட்சி கொடுத்தார். சகல சித்திகளையும் அளிக்கும் இத்தீர்த்தத்தில் சித்திரைமாதம் பவுர்ணமியன்று நீராடுவது மிக விஷேசம்.
பாண்டு தீர்த்தம்: வைகாசி மாதம் சுக்கிலபட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய்க்கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால், அப்போது இதில் நீராடுவோர் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.
பாபவிநாசன தீர்த்தம்: இத்தீர்த்தம் இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. மிக சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியும் உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இதில் சில தீர்த்தங்கள் கூடுகின்றன. அன்றைய தினத்தில் இதில் நீராடுவோர் பெறுவதற்கரிய ஞானம் பெறுகின்றனர். பாவங்களினின்றும் விடுபடுகின்றனர்.
வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரகத்தில் உள்ள சுக்ரனுக்கு, அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் கணவன்- மனைவி கருத்துவேறுபாடு மறையும்.
கணவன்- மனைவி ஒற்றுமையாக வாழ, இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் (காலை 10.30- 12), மஞ்சள், குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிஷேகம் செய்ய வேண்டும். அதோடு நெய் தீபமும் ஏற்றுங்கள்.
குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால், அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது மகரிஷிகளால் சொல்லப்பட்ட எளிமையான பரிகாரங்களில் ஒன்று.
பெரும் துன்பத்தைத் தரக்கூடிய கடன் தொல்லையில் இருந்து விடுபட, யோக நரசிம்மரையும், சிறிய கடன் தொல்லைகளுக்கு லட்சுமிநரசிம்மரையும் வணங்குங்கள். நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமண தடை விலகும்.
கோவிலில் இருக்கும் திரிசூலத்திற்கு குங்கும பொட்டு வைத்து, எலுமிச்சைப் பழத்தை திரிசூலத்தில் குத்தி வைத்து வழிபட்டால், திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.
வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில், கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால், ஏவல், பில்லி, சூனியம் இருந்தால் நின்று விடும்.
சக்கரத்தாழ்வார் சன்னிதியில் 48 நாட்கள், 12 நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், தொழில் வளர்ச்சி பெறலாம், வழக்குகள் சாதகமாகும். 21 செவ்வாய்க்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.
பைரவர் சன்னிதியில் தொடர்ச்சியாக 8 செவ்வாய்க்கிழமைகள் நெய் தீபம் ஏற்றி, சகஸ்ர நாம அர்ச்சனை செய்தாலும், கொடுத்த கடன் வசூலாகும்.
உங்கள் வாழ்க்கையில் சனி பகவானின் பாதிப்பு குறைவதற்கு, ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவாலயங்களுக்குச் சென்று ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து அர்ச்சிக்க வேண்டும். சனிக்கிழமைகளில், சனி பகவானுக்கு தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றினாலும் பலன் கிடைக்கும்.
சிவன் கோவிலில் உள்ள வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகமாகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன.
பிரதோஷ காலத்தில், பார்வதியுடன் ரிஷபாரூட மூர்த்தியாய் காட்சி தரும் ஈசனை வழிபடுபவர்களுக்கு, ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாராதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.
மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் அன்று, தொடர்ச்சியாக 11 மாதங்கள் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தால், திருமணம் விரைவில் நடந்தேறும்.
கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் திருப்பதியில் தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து சென்று வருகின்றனர்.
திருப்பதியில் நாளொன்றுக்கு 25,000 என்ற எண்ணிக்கையில் 30 நாட்களுக்கு ஒரு முறை தேவஸ்தான நிர்வாகம் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுகிறது. அந்த டிக்கெட்டுகள் அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்குள் விற்று தீர்ந்து விடுகின்றன.
இதுதவிர திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் நாளொன்றுக்கு 30,000 இலவச தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் பக்தர்களுக்கு வழங்கி வருகிறது. இதற்காக ஒரு நாள் முன்னர் சென்று திருப்பதியில் காத்திருந்து கட்டண டிக்கெட்டுகளை வாங்கி திருமலைக்கு செல்ல வேண்டும்.
இந்த நிலையில் தேவஸ்தானம் ஐஆர்சிடிசி மூலம் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. அவற்றை ஐஆர்சிடிசி ஆன்லைனில் அவ்வப்போது வெளியிட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் 990 ரூபாய் கட்டணம் செலுத்தி பக்தர்கள் அவற்றை முன்பதிவு செய்ய வேண்டும்.
அதன் பின்னர் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாளன்று திருப்பதி ரெயில் நிலையத்திலிருந்து பக்தர்களை வேன் அல்லது கார் மூலம் திருமலைக்கு ஐஆர்சிடிசி நிறுவனம் அழைத்து செல்லும். அங்கு பகல் 11 மணிக்கு ஐஆர்சிடிசி நிறுவனத்திலிருந்து டிக்கெட் வாங்கிய பக்தர்கள் சாமி கும்பிட கோவிலுக்குள் செல்லலாம். ரூ.300 கட்டண தரிசனத்தில் அவர்கள் தரிசனத்திற்கு செல்லலாம்
அவர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் பக்தர்களுக்கு டிக்கெட்டுக்கு உரிய லட்டு பிரசாதம் ஒன்றை ஐஆர்சிடிசி நிறுவன உதவியாளர் வாங்கி கொடுப்பார். திருச்சானூர் கோவிலிலும் அவர்களுக்கு தரிசன ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது. பின்னர் அவர்கள் ரெயில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவுக்காக நேற்று மாலை திறக்கப்பட்டது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவிலை திறந்து வைத்தார். இன்று முதல் ஆராட்டு விழா தொடங்கியது.
இதற்கான கொடியேற்றம் காலை 10.30 மணிக்கு நடந்தது. திருவிழா கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்தார்.
இன்று தொடங்கும் ஆராட்டு விழா வருகிற 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் ஸ்ரீபூதபலி, உத்சவ பலி ஆகியவை நடைபெறும்.
17-ந் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடக்கிறது. 18-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடக்கிறது. அதன்பின்பு வழக்கமான பூஜைகளுக்கு பிறகு அன்று மாலை கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. மறுநாள் 19-ந் தேதி நடை அடைக்கப்படுகிறது.
ஆராட்டு விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் விழாவில் பங்கேற்கலாம் என தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் உடனடி முன்பதிவு செய்ய நிலக்கல்லில் சிறப்பு முன்பதிவு மையமும் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆராட்டு விழா மற்றும் பங்குனி மாத பூஜைகளில் பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த பஸ்கள் திருவனந்தபுரம், கோட்டயம், கொட்டாரக்கரை, பத்தினம்திட்டை, எர்ணாகுளம், செங்கனூர் உள்பட பல்வேறு நகர்களில் இருந்து விடப்படுகிறது.






