என் மலர்tooltip icon

    வழிபாடு

    கும்பாபிஷேகம்
    X
    கும்பாபிஷேகம்

    மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் 40 அடி உயர அங்காளம்மனுக்கு கும்பாபிஷேகம்

    சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் மூழங்க, கோவில் மூலஸ்தான விமான கலசத்துக்கும், 40 அடி உயர அங்காளம்மனுக்கும் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு 40 அடி உயரத்தில் அங்காள அம்மன் சிலை புதிதாக நிறுவப்பட்டுள்ளது.

    இந்த கோவிலில் 26 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது.

    நேற்று காலை 7 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும், கலச புறப்பாடும் நடந்தது. அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் மூழங்க, கோவில் மூலஸ்தான விமான கலசத்துக்கும், 40 அடி உயர அங்காளம்மனுக்கும் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் அனுமந்தை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×