என் மலர்
நீங்கள் தேடியது "திருவண்ணாமலை கோவில்"
- நாளை மாலை 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி இரவு 7.53 மணிக்கு முடிவடைகிறது.
- சந்திர கிரகணம் நிகழும் நாளன்று பெரும்பாலான கோவில்களில் நடை அடைப்பது வழக்கம்.
மாசி மாத பவுணர்மியையொட்டி நாளை திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
மாசி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை 6.29 மணிக்கு தொடங்கி நாளை மாலை 5.52 மணி வரையில் உள்ள நிலையில் நாளை மாலை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது.
சந்திர கிரகணம் சமயத்தில் கிரிவலம் செல்லலாமா? என்பது குறித்து அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் பி.டி.ரமேஷ் குருக்கள் கூறுகையில், சந்திர கிரணத்தின் போது கிரிவலம் செல்லலாம். கிரகணம் சமயத்தில் கிரிவலம் சென்றால் இருமடங்கு பலன் தரும்.
கர்ப்பிணிகள் மட்டும் கிரகணம் சமயத்தில் கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும். கிரகணம் என்பது மனிதனுக்கு மட்டுமே. சாமிக்கு கிடையாது. தேவர்கள் கிரகணம் சமயத்தில் தவம் செய்வார்கள். அந்த சமயத்தில் தவம் செய்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே நதிகள், தீர்த்த குளங்களின் கரையில் தவம் செய்யலாம் என்றார்.
- மாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை 6.29 மணிக்கு தொடங்கி நாளை மாலை 5.52 மணிக்கு நிறைவடைகிறது.
- திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் மாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் இன்று (திங்கட்கிழமை) மாலை 6.29 மணிக்கு தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5.52 மணிக்கு நிறைவடைகிறது.
மாசி மாத பவுணர்மியையொட்டி நாளை திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் நாளை மாலை 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி இரவு 7.53 மணிக்கு முடிவடைகிறது. சந்திர கிரகணம் நிகழும் நாளன்று பெரும்பாலான கோவில்களில் நடை அடைப்பது வழக்கம். ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சந்திர கிரகணத்தின்போது நடை அடைக்காமல் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் சந்திர கிரகணம் முடியும் போதும், சூரிய கிரகணம் தொடங்கும் போதும் அருணாசலேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை மாலை 5.10 மணிக்கு கிரகணம் முடியும் போது கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மாசி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை 6.29 மணிக்கு தொடங்கி நாளை மாலை 5.52 மணி வரையில் உள்ள நிலையில் நாளை மாலை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது.
- கோவில் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
- யோகிபாபு அடிக்கடி திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று வருகிறார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக கருதப்படுவதால் இங்கு கிரிவலம் சுற்றுவது, தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியத்தை தருகிறது. சமீபகாலமாக திருவண்ணாமலை திரை உலக நட்சத்திரங்களின் முக்கிய ஆன்மீக மையமாக மாறி வருகிறது.
சமீபத்தில் முன்னணி பிரபலங்கள் பலர் குடும்பத்தினருடன் நேரில் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர். திரை உலகமும், ஆன்மீகமும் வேறு பாதைகள் போல தோன்றினாலும் மனநிம்மதி, நம்பிக்கை, வெற்றி போன்ற உணர்வுகளில் திரை உலகம் ஆன்மீகத்தின் பாதையில் தான் செல்கிறது.
ரஜினி: திருவண்ணாமலை கோவிலின் தீவிர பக்தர் ஆவார். ஆரம்பத்தில் திருவண்ணாமலை கிரிவல பாதைக்கு விளக்கு போட்டு தந்தவர் என்ற பெருமையும் ரஜினிக்கு உண்டு.
சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 17-ந்தேதி தனது பிறந்தநாளையொட்டி மனைவி ஆர்த்தியுடன் திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
ரவிமோகன்: நடிகர் ரவிமோகனும் பாடகி கெனிஷாவும் கடந்த ஜனவரி மாதம் அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்தனர்.
யோகிபாபு: யோகிபாபு அடிக்கடி திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று வருகிறார்.
சரத்குமார்: சரத்குமார் சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்து தொடர்ந்து கிரிவல பாதையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தேவயானி: தேவயானி கடந்த ஜனவரி மாதம் திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்தார்.
ஸ்ரீலீலா: நடிகை ஸ்ரீலீலா கடந்த ஆண்டு இறுதியில் தரிசனம் செய்தார்.
திவ்யாபாரதி: பேச்சிலர் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து வரும் திவ்யா பாரதி திருவண்ணாமலை கோவிலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தரிசனம் செய்தார்.
இது போன்று தனுஷ், விக்ரம்பிரபு, ரோஜா, சசிகுமார், பாபிசிம்கா உள்பட ஏராளமான திரை உலக பிரபலங்கள் திருவண்ணாமலை கோவிலில் சமீபத்தில் தரிசனம் செய்துள்ளனர்.
படம் ரிலீசுக்கு முன்பு வருவது, புதிய படம் தொடங்குவதற்கு முன்பு வருவது தடைகள் நீங்கி மனநிம்மதி பெற்று வேண்டுதல்கள் நிறைவேறச் செய்யும் தலமாக திரை உலக பிரபலங்களுக்கு திருவண்ணாமலை அமைந்துள்ளது.
- அண்ணாமலையை மாதம் தோறும் வரும் பவுர்ணமி தினத்தில் பல லட்சம் பக்தர்கள் வலம் வந்து வழிபடுவது வழக்கம்.
- பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரமாக அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மலையே சிவனாக வணங்கப்படும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை மாதம் தோறும் வரும் பவுர்ணமி தினத்தில் பல லட்சம் பக்தர்கள் வலம் வந்து வழிபடுவது வழக்கம்.
மாசி மாதத்திற்கான பவுர்ணமி நாளை மாலை 6.29 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 5.52 மணிக்கு நிறைவு பெறுகிறது.
இந்த நேரம் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரமாக அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வனத்துறையினரிடம் அனுமதி பெறாமல் தடை மீறி மலை உச்சி வரை சென்று வந்துள்ளார்.
- அவர் மலை ஏறி இறங்க மிகவும் சிரமம் அடைந்ததாகவும், இருள் சூழ்ந்து விட்டதால் மிகவும் அச்சம் அடைந்து விட்டதாக குறிப்பிட்டு உள்ளார்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்கின்றனர். இந்த மலை பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலையில் ஏற வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சின்னத்திரை நடிகையான அர்ச்சனா ரவிச்சந்திரன் என்பவர் ஓரிரு தினங்களுக்கு முன்பு வனத்துறையினரிடம் அனுமதி பெறாமல் தடை மீறி மலை உச்சி வரை சென்று வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் மலை ஏறி இறங்க மிகவும் சிரமம் அடைந்ததாகவும், இருள் சூழ்ந்து விட்டதால் மிகவும் அச்சம் அடைந்து விட்டதாக குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர் மலையேற்றம் செய்கிறீர்கள் என்றால் சீக்கிரமாகவே தொடங்குங்கள், எப்போதும் சூரிய அஸ்தமனத்திற்கு முன் இறங்குவதை திட்டமிடுங்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.
மலைக்கு தடையை மீறி சென்று வந்த அவர் பிறரையும் மலை ஏற ஊக்குவிப்பது போன்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
அந்த வகையில், தை மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தை மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரமாக வருகிற 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.13 மணிக்கு தொடங்கி 2-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 4.45 மணியுடன் நிறைவடைகிறது.
இந்த நேரங்களில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவுர்ணமி கிரிவலத்தையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
- அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம் விழா நடைபெற்றது.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று அதிகாலை சிவகாமசுந்தரி தாயார் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் அலங்கார ரூபத்தில் எழுந்தருளிய சிவகாமசுந்தரி தாயார் சமேத நடராஜருக்கு அண்ணாமலை உச்சியில் 11 நாட்கள் எரிந்த மகா தீப கொப்பரையில் இருந்து எடுக்கப்பட்ட மகா தீப மை சாத்தப்பட்டது.
பின்னர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி வந்த நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
ஆங்கில புத்தாண்டின் முதல் பவுர்ணமி என்பதால், ஆருத்ரா தரிசனம் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கார்த்திகை தீப திருவிழாவிற்கு நெய் காணிக்கை கொடுத்த பக்தர்களுக்கு 2 ஆயிரத்து 668 உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட மகா தீப மை விநியோகம் தொடங்கியது. சில தினங்களில் மகா தீப மை முழுமையாக வழங்கப்படும் என தெரிவித்தனர்.
- கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை:
மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6.45 மணிக்கு பவுர்ணமி தொடங்கி, 3-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4.43 மணிக்கு நிறைவு பெறுகிறது.
இந்த நேரத்தில் மலையே சிவனாக வணங்கப்படும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை பக்தர்கள் வலம் வரலாம் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
- சந்திரசேகரர் தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- அண்ணாமலையார் கிரிவலத்தை ஏராளமான பக்தர்கள் பார்த்து பரவசத்துடன் வழிபட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் நேற்று முன்தினம் மகா தீபம் ஏற்றப்பட்டது.
தீப தரிசன நாளில் அதிகாலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும், மாலையில் அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று இரவு திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
சந்திரசேகரர் தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று அதிகாலை உண்ணாமலை சமேத அண்ணாமலையார் கிரிவலம் சென்றார்.
பவுர்ணமி தினத்தில் அண்ணாமலையார் கிரிவலம் வந்தது கூடுதல் சிறப்பாகும். அண்ணாமலையார் கிரிவலத்தை ஏராளமான பக்தர்கள் பார்த்து பரவசத்துடன் வழிபட்டனர்.
கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு மற்றும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு என அண்ணாமலையார் ஆண்டுக்கு 2 முறை கிரிவலம் வருவது வழக்கமாகும்.
- 11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
- நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது.
அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும்.
தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 13-ந் தேதி வரை தரிசிக்கலாம்.
11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.
நேற்று நள்ளிரவு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீ உண்ணா முலையம்மன் சமேத ஸ்ரீஅருணாச லேஸ்வரர், ஸ்ரீபரா சக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.
தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக, இன்று இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.
- இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.
- தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கார்த்திகை தீப விழா நடைபெறும் திருவண்ணாமலையில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது
மழை பெய்து வரும் நிலையில் திருவண்ணாமலையில் குடையுடன் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.
- திருவண்ணாமலை கோவில் மலையில் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுகிறது.
- உற்சவர் அருணாசலேசுவரரும், உண்ணாமுலையம்மனும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
கார்த்திகை தீப திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை கோவில் மலையில் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இந்த விழாவின்போது உற்சவர் அருணாசலேசுவரரும், உண்ணாமுலையம்மனும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வீதியுலா வரும்போது சுவாமிக்கும், அம்மனுக்கும் சாற்றப்படும் அலங்கார மாலைகள் காஞ்சிபுரத்தில் உள்ள ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினரே அனுப்பி வைத்து வருகிறார்கள். இந்த மாலைகளே சுவாமிகளுக்கு சாற்றப்படுகின்றது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் உள்ள ஜவுளிக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் 163-வது ஆண்டாக அலங்கார மாலைகளை திருவண்ணாமலை கோவிலுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் கே.கே.சிவகுமாரன் குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாலைகள் அனைத்தும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு தீபாராதனைகள் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு சாத்தப்படும் மாலைகளை வணங்கி சென்றனர்.






