திருவண்ணாமலையில் நாளை பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு

அண்ணாமலையை மாதம் தோறும் வரும் பவுர்ணமி தினத்தில் பல லட்சம் பக்தர்கள் வலம் வந்து வழிபடுவது வழக்கம்.பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரமாக அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் நாளை பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மலையே சிவனாக வணங்கப்படும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை மாதம் தோறும் வரும் பவுர்ணமி தினத்தில் பல லட்சம் பக்தர்கள் வலம் வந்து வழிபடுவது வழக்கம்.

மாசி மாதத்திற்கான பவுர்ணமி நாளை மாலை 6.29 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 5.52 மணிக்கு நிறைவு பெறுகிறது.

இந்த நேரம் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரமாக அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com