என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் 4-ம் நாளான நேற்று வெட்டுமடை இசக்கி அம்மன் கோவில், கொத்தனார்விளை மிடாலமுத்து கோவில் மற்றும் மேற்கு நெய்யூர் ஊரம்மன் கோவிலில் இருந்து சந்தனகுடம் பவனி நடந்தது.
5-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறப்பு, 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, பகல் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4.15 மணிக்கு மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் இருந்து சந்தன குடம் பவனி, 6.15 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி நடக்கிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.
9-ம் நாள் இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டியுடன் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, 10-ம் நாள் அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து களப பவனி, 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, 5 மணிக்கு திருநடை அடைப்பு, 5.30 மணிக்கு பூமாலை, பகல் 12 மணிக்கு குத்தியோட்டம், மாலை 5 மணிக்கு நடைதிறப்பு, இரவு 9.30 மணிக்கு அம்மன் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனி, தொடர்ந்து 1 மணிக்குள் ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

வெண்ணெய் சாத்தி ஆஞ்சநேயரை வழிபடுவது விசேஷம். அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தி, வழிபட்டால், என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்,
அனுமனை கண்டால், காற்றில் கலக்கும் தூசுகள்போல துர்சக்திகள் பறந்து ஓடும் என்கிறது ராமாயணத்தில் ஒரு பகுதியான சுந்தரகாண்டம். ராமநாமத்தின் உயிர் உருவமான ஆஞ்சநேயர் எந்தவிதமான பிரதிபலனையும் கருதாமல் தூய அன்புடனும் பக்தியுடனும் ராமனுக்கு பணிவிடை செய்தார். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வீரம், ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் அனுமன். அன்புக்கும், தொண்டுக்கும், வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் ஆஞ்சநேயர், சிரஞ்சீவி பட்டம் பெற்றவர்.
அனுமனை வழிபாடு செய்தால், திருமால், சிவன், ருத்ரன், பிரம்மா, இந்திரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும். ஸ்ரீராமபெருமானுக்கும் ராவணனுக்கும் நடந்த யுத்தத்தில் ராவணன் இறந்த பிறகு, இரண்டு அசுரர்கள் எப்படியாவது ஸ்ரீராமனை அழிக்க நினைத்தார்கள்.
ராம பக்தனான அனுமனை அனுப்பி அந்த அரக்கர்களை அழித்துவிட்டு வரும்படி உத்தரவிட்டார் ஸ்ரீராமபிரான். அப்போது, தேவர்களும், தெய்வ ரூபங்களும் அனுமனிடம் பல ஆயுதங்களைக் கொடுத்து அனுப்பினர். ஆனால், ஸ்ரீகிருஷ்ணர் மட்டும் அனுமன் கையில் வெண்ணெயைக் கொடுத்தார். அந்த வெண்ணெய் உருகுவதற்குள் அரக்கர்களை அழித்துவிட்டுத் திரும்பவேண்டும் என்பது குறிப்பு.
அதன்படியே செய்தார் அனுமன். அதனால், வெண்ணெய் சாத்தி ஆஞ்சநேயரை வழிபடுவது விசேஷம். வெண்ணெய் எப்படி உருகுகிறதோ, அதைப்போல ராமநாம ஜெயத்தால் அவர் உள்ளம் உருகுகிறார். வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும். வெண்ணெய் வெண்மை நிறமுடையது. வெள்ளை உள்ளமுள்ள பக்தர்களை அனுமன் தன்னுடன் சேர்த்து அருள் செய்கிறான் என்பதன் அடையாளமாக வெண்ணெய் சாத்தப்படுகிறது.
வெண்ணெய் எவ்வளவு வெயில் அடித்தாலும் உருகுவது இல்லை. எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப்போவதும் இல்லை. நினைத்த காரியங்களில் வெற்றி கிடைத்திட, உடல் ஆரோக்கியத்துடன் திகழ, ஸ்ரீ ராம பக்தன் அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தி, ஜெயபஞ்சகத் துதியைச் சொல்லி வழிபட்டால், வெற்றி மாலைகள் தேடி வரும்.

அய்யா வைகுண்டசாமியின் 189-வது அவதார தின விழாவை முன்னிட்டு குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் பங்கேற்ற பிரமாண்ட ஊர்வலம் நடந்தது.
நாகர்கோவில் :
அய்யா வைகுண்டசாமியின் 189-வது அவதார தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் பங்கேற்ற பிரமாண்ட ஊர்வலம் நடந்தது.
முன்னதாக நேற்று காலை அய்யா வைகுண்டர் விஞ்சை பெற்ற திருச்செந்தூரில் இருந்து பக்தர்கள் வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டு நாகர்கோவில் வந்தனர்.
இரவு நாகராஜா கோவில் திருமண மண்டபத்தில் அய்யா வழி பக்தர்களின் சமய மாநாடு நடந்தது. இதில் அய்யா வழி பிரமுகர்கள் பங்கேற்று பேசினர்.
இன்று அதிகாலை நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்புக்கு பிரமாண்ட பேரணி தொடங்கியது. இதில் பங்கேற்க இரவில் இருந்தே நாகராஜா கோவில் திடலில் பக்தர்கள் குவியத் தொடங்கினர். குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்பட தமிழகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.
ஊர்வலத்துக்கு பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கிச் சென்றார். ஊர்வலத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் செல்ல, அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்றனர்.
இதில் காவி உடை அணிந்தபடி கையில் காவிக்கொடிகளை ஏந்தியபடி பக்தர்கள் அய்யா சிவ சிவ என்ற பக்தி கோஷத்தை எழுப்பியவாறு சென்றனர். மேலும் பல பக்தர்கள் தலையில் சந்தனக் குடம் சுமந்து சென்றனர். பல இடங்களில் சுருள் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். அய்யா வைகுண்டரின் ஊர்வலத்துக்கு சாதி, மத பேதமின்றி வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முக்கிய சந்திப்புகளில் செண்டை மேளம், சிங்காரி மேளம் முழங்கவும் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பானகரம், மோர் போன்ற நீராகாரங்களும், அன்ன தர்மங்களும் வழங்கப்பட்டன.
ஊர்வலம் சுசீந்திரம், ஈத்தங்காடு, வடக்குத் தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலைமை பதியை அடைந்தது. அங்கு அய்யாவுக்கு பணிவிடை நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
இதேபோல் பல இடங்களில் இருந்து நடைப்பயணமாகவும், வாகனங்களிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து சாமிதோப்பில் குவிந்தனர். இதனால் சாமி தோப்பில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவுப்படி ஊர்வல பாதைகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சாமிதோப்புப்பதி மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் உள்ள பதிகள், நிழல் தாங்கல்களிலும் இன்று அய்யா அவதாரதின சிறப்பு வழிபாடுகள் நடந்தன. உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, பணிவிடை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் வாகன பவனியும் நடந்தது.
அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாமிதோப்புக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறையும் விடப்பட்டு இருந்தது.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜையுடன் கொடியேற்றப்பட்டு மாசி மகா சிவராத்திரி திருவிழா நிகழ்ச்சி தொடங்கியது.
ராமேசுவரம் :

மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு 7 மணியளவில் சிவாச்சாரியர்களால் வாஸ்து சாந்தி சிறப்பு பூஜை திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் கோவில் சன்னதிகள் 4 மணிக்கு திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து 5 கால பூஜையும் நடந்தது.
அதன் பின்னர் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடகி அறைவாசல் மண்டபத்திற்கு எழுந்தருளினர்.
அங்கு ராமநாதசுவாமி சன்னதி நுழைவு வாயில் முன்பு அறைவாசல் மண்டபத்தில் அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கலசங்களில் வைக்கப்பட்டு ஹோமங்கள் வளர்க்கப்பட்ட புனித தீர்த்தங்களால் அபிஷேகம் நடந்தது.
கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
மூத்த குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கொடி ஏற்றப்பட்டது. அப்போது சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனை வழிபாடுகளும் நடந்தன.
இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான வருகிற 11-ந் தேதி இரவு வெள்ளி ரதம் நிகழ்ச்சியும், 12-ந் தேதி காலை தேரோட்டமும் நடக்கிறது. 13-ந் தேதி அமாவாசையை முன்னிட்டு சுவாமி-அம்மன் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
12 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழாவில் சுவாமி-அம்மன் தினமும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில், அலங்காரத்துடன் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடாகி 4 ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜையுடன் கொடியேற்றப்பட்டு மாசி மகா சிவராத்திரி திருவிழா நிகழ்ச்சி தொடங்கியது.
மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு 7 மணியளவில் சிவாச்சாரியர்களால் வாஸ்து சாந்தி சிறப்பு பூஜை திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் கோவில் சன்னதிகள் 4 மணிக்கு திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து 5 கால பூஜையும் நடந்தது.
அதன் பின்னர் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடகி அறைவாசல் மண்டபத்திற்கு எழுந்தருளினர்.
அங்கு ராமநாதசுவாமி சன்னதி நுழைவு வாயில் முன்பு அறைவாசல் மண்டபத்தில் அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கலசங்களில் வைக்கப்பட்டு ஹோமங்கள் வளர்க்கப்பட்ட புனித தீர்த்தங்களால் அபிஷேகம் நடந்தது.
கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.மூத்த குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கொடி ஏற்றப்பட்டது. அப்போது சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனை வழிபாடுகளும் நடந்தன.
இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான வருகிற 11-ந் தேதி இரவு வெள்ளி ரதம் நிகழ்ச்சியும், 12-ந் தேதி காலை தேரோட்டமும் நடக்கிறது. 13-ந் தேதி அமாவாசையை முன்னிட்டு சுவாமி-அம்மன் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
12 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழாவில் சுவாமி-அம்மன் தினமும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில், அலங்காரத்துடன் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடாகி 4 ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.
திருமணம் நடைபெற வேண்டியும், மன சஞ்சலம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பவும் தினமும் இல்லத்தில் காலை மற்றும் மாலையில் விளக்கேற்றும் நேரத்தில் இந்தப் பாடலை பாடிவர வேண்டுதல் பலிக்கும்.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். ஆனால் இன்று ஆயிரம் வரன்கள் வந்தாலும், ஒரு வரன் கூட அமையாத நிலைதான் பிள்ளைகளை பெற்றவர்கள் படும் துயரம். இதில், இன்றைய பல பெண் வயதாகியும் திருமண பந்தத்தை விரும்பாமல் தனித்து வாழ நினைக்கின்றனர். திருமணத்துக்கு தயாராக இருக்கும் ஆண்களும் பெற்றோருடன் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது.
திருமணம் நடைபெற வேண்டியும், மன சஞ்சலம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பவும் இந்த பாடல் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
அறமிலா அதி பாதக வஞ்சத் தொழிலாலே
அடியனேன் மெலிவாகிமனம்சற் றிளையாதே
திறல்குலாவிய சேவடி வந்தித் தருள்கூடத்
தினமுமேமிக வாழ்வுறும் இன்பைத் தருவாயே
விறல்நிசாசரர் சேனைகள் அஞ்சப் பொரும்வேலா
விமல மாதபி ராமிதருஞ்செய்ப் புதல்வோனே
மறவர் வாணுதல் வேடைகொளும்பொற் புயவீரா
மயிலை மாநகர் மேவிய கந்தப் பெருமாளே!
ஏறுமயில் ஏறிவிளை யாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருளல் வேண்டும்
ஆதிஅரு ணாசலம் அமர்ந்தபெரு மாளே!
இல்லத்தில் காலை மற்றும் மாலையில் விளக்கேற்றும் நேரத்தில் இந்தப் பாடலை பாடிவர வேண்டுதல் பலிக்கும். தடையின்றி திருமண வைபவம் நடந்தேறும்.

பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த மாதம் 12-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து 16-ந்தேதி கம்பம் சாட்டுதலும், 23-ந்தேதி கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம் அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.
இதையடுத்து முக்கிய நிகழ்ச்சியான மாசித்திருவிழாவின் தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக காலை 9 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி பாதிரிப்பிள்ளையார் கோவிலில் தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் மாலை 3.30 மணி அளவில் அம்மன் தேரேற்றம் நடந்தது. அப்போது அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.
இதைத்தொடர்ந்து 4.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஓம் சக்தி...பராசக்தி... என்று சரண கோஷம் எழுப்பினர்.
பக்தர்கள் வெள்ளத்தில் நான்கு ரத வீதிகளில் தேர் வலம் வந்தது. மாலை 5.45 மணிக்கு தேர் நிலையை வந்து சேர்ந்தது. தேரோட்டத்தையொட்டி பூதங்களை போன்று வேடமணிந்து வந்த பக்தர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு மாரியம்மன் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற மாரியம்மன்-காளியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்.சிலர் அலகு குத்தியும், கைக்குழந்தைகளுடனும் குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கியது. அன்று காலை 7 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர் இரவு 9 மணிக்கு காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூச்சாட்டப்பட்டது.
கடந்த 1-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். 2-ந்தேதி காலை 7 மணிக்கு வேல் திருவீதி உலா நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், குண்டம் திறப்பு, இரவு 8 மணிக்கு பண்டார கரகம் எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சியும் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று நடந்தது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து கோவில் தர்மகர்த்தா சங்கரலிங்கம், பூசாரி கிருஷ்ணன் ஆகியோர் குண்டம் இறங்கினர். அவர்களை தொடர்ந்து திரளான பக்தர்கள் தீ மிதித்தனர். சிலர் அலகு குத்தியும், கைக்குழந்தைகளுடனும் குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
பின்னர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு அம்மை அழைத்தல், மாலை 4 மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 10 மணிக்கு காவு பூஜையும் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

திட்டுவிளை வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி பெருவிழா தொடங்கியது. 11-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தர்காக்களில் பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் அவுலியா தர்காவும் ஒன்று. இந்த தர்காவில் வருடாந்திரப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்தூரி பெருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.
தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் மற்றும் நேர்ச்சை வழங்குதல் நடைபெறுகிறது.
வருகிற 11-ந் தேதி இரவு 8 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து இஸ்லாமிய மார்க்க பேருரை நடைபெறுகிறது. இதற்கு ஜமாத் தலைவர் மைதீன்பிள்ளை தலைமை தாங்குகிறார். முகம்மது ஹனீபா மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இதில் குளச்சல் செய்யது மீர் காசிம் ஆலிம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். தர்கா நிர்வாக தலைவர் உதுமான்மைதீன் நன்றி கூறுகிறார்.
12-ந் தேதி காலை 9 மணிக்கு நேர்ச்சை வழங்குதலும், மாலை 6.30 மணிக்கு இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
14-ந் தேதி காலை 9 மணிக்கு மூன்றாம் ஜியாரத் நேர்ச்சை வழங்குதல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திட்டுவிளை, உதுமான்லெப்பைசாகிபு, சுன்னத், ஜமாத் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தர்கா நிர்வாக பொறுப்பாளர்களான முகம்மது ரபீக், ஷேக் முகம்மது, பக்கீர் மைதீன் மற்றும் பொறுப்பாளர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் நாராயணசுவாமி நிழல் தாங்கலில் அய்யாவின் 189-வது அவதார தின விழா மற்றும் வருடாந்திர திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் நாராயணசுவாமி நிழல் தாங்கலில் அய்யாவின் 189-வது அவதார தின விழா மற்றும் வருடாந்திர திருவிழா நடக்கிறது. அவதார தின விழாவையொட்டி நேற்று இரவு 7 மணிக்கு அன்னதானம் நடந்தது.
வருடாந்திர திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 15-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினசரி காலை 5 மணிக்கும், இரவு 7 மணிக்கும் அய்யாவுக்கு பணிவிடையும், மாலை 4 மணி முதல் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு அன்னதர்மமும் நடக்கிறது.
12-ந் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண ஏடு வாசிப்பும், அதைத்தொடர்ந்து 8 மணிக்கு திருக்கல்யாண விருந்தும் நடைபெற உள்ளது.
14-ந்தேதி பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், 2 மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு அய்யாவுக்கு பட்டாபிஷேகமும், 8 மணிக்கு அய்யா கருடவாகனத்தில் நையாண்டி மேளம், செண்டை மேளம், சிங்காரி மேளம் முழங்க பவனியும் நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது.15-ந்தேதி பகல் 12 மணிக்கு பார்ப்பானை வைத்து பணிவிடை நிகழ்ச்சியும், தொடர்ந்து 2 மணிக்கு அய்யா ஊர்வலமும், மாலை 4 மணிக்கு இனிப்பு வழங்குதலும் நடைபெறுகிறது.

கிருத்திகை நட்சத்திரத்தன்று இந்த கடவுளை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் கடவுளின் முழுஅருளும் கிடைக்கும், நினைத்த காரியங்கள் உடனே நிறைவேறும் என்பது ஐதீகம்.
அழகு முருகனின் நட்சத்திரம் விசாகம் என்றாலும், அவரை பாராட்டி, சீராட்டி வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் விதமாக கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்தால், முருகனின் முழுஅருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும்.
வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவர் குமரன். கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.
இன்று முருகக் கடவுளுக்கு, செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல், கேசரி அல்லது எலுமிச்சை சாதம் அல்லது பால் பாயாசம் நைவேத்தியம் செய்து, விநியோகியுங்கள். நினைத்த காரியங்கள் நடக்கும். காரியம் யாவிலும் துணையிருந்து வெற்றியைத் தருவார் வேலவன்.

புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் தேர் திருவிழாவில் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் சாற்றி வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் இன்று(வியாழக்கிழமை) புத்தூர் மந்தையில் நடைபெற உள்ளது.
திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த 1-ந்தேதி மறு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
காளியாவட்டம் நிகழ்ச்சியையொட்டி பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு அம்மனை உய்ய கொண்டான் வாய்க்கால் கரையில் இருந்து புத்தூர் மந்தைக்கு மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று காலை சுத்த பூஜை நடந்தது. அதன் பின்னர் அம்மன் ஓலைப்பிடாரி அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. அப்போது பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் சாற்றி வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் இன்று(வியாழக்கிழமை) காலை புத்தூர் மந்தையில் நடைபெற உள்ளது. அப்போது பக்தர்கள் நேர்த்தி கடனாக வழங்கும் ஆட்டு குட்டிகளின் ரத்தத்தை சாமி அருள் பெற்ற மருளாளி உறிஞ்சி குடித்து பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்குகிறார். குழுமாயி கோவில் திருவிழாவையொட்டி புத்தூர் பகுதி முழுவதும் விழா கோலம் பூண்டு உள்ளது.

நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு வைகுண்டசாமி அவதார தின ஊர்வலம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு முதலே நாகராஜா திடலுக்கு அய்யாவழி பக்தர்களை வரத்தொடங்கினர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி ஜெயந்தி நாளான மாசி 20-ந்தேதியை அய்யாவழி மக்கள் அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி நேற்று இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திருமண மண்டபத்தில் மாசி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திருச்செந்தூரில் இருந்து வாகன பேரணியாக வந்த பக்தர்கள் மற்றும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து நடைபயணமாக ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்த பக்தர்களும் கலந்து கொண்டனர்.
நேற்று பிற்பகல் 3 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதியின் முன்பு இருந்து ஆதலவிளை மாமலையில் மகா தீபம் ஏற்றுவதற்காக, மகாதீபம் கொண்டுசெல்லும் ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்துக்கு பையன் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம் பொற்றையடி, மயிலாடி வழியாக ஆதலவிளையில் உள்ள மலையை சென்றடைந்தது. பின்னர் அங்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அய்யா வைகுண்டரின் அவதார தினமான இன்று (வியாழக்கிழமை) காலை நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அவதார தின ஊர்வலம் தொடங்குகிறது.
அலங்கரிக்கப்பட்ட வாகனம் முன்செல்ல தொடர்ந்து முத்து குடைகளும், மேள தாளங்களும், பக்தர்களும் செல்கின்றனர். இந்த ஊர்வலத்திற்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்குகிறார். ஊர்வலம் இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமி தோப்பு தலைமைபதியில் முடிவடைகிறது.
ஊர்வலம் செல்லும் வழிகளில் அப்பகுதியில் உள்ளவர்கள் ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுக்கின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.