என் மலர்

  ஆன்மிகம்

  மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு யானை மீது களப பவனி வந்த போது எடுத்த படம்.
  X
  மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு யானை மீது களப பவனி வந்த போது எடுத்த படம்.

  மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை வலியபடுக்கை பூஜை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.
  மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் 4-ம் நாளான நேற்று வெட்டுமடை இசக்கி அம்மன் கோவில், கொத்தனார்விளை மிடாலமுத்து கோவில் மற்றும் மேற்கு நெய்யூர் ஊரம்மன் கோவிலில் இருந்து சந்தனகுடம் பவனி நடந்தது.

  5-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறப்பு, 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, பகல் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4.15 மணிக்கு மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் இருந்து சந்தன குடம் பவனி, 6.15 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி நடக்கிறது.

  நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.

  9-ம் நாள் இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டியுடன் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, 10-ம் நாள் அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து களப பவனி, 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, 5 மணிக்கு திருநடை அடைப்பு, 5.30 மணிக்கு பூமாலை, பகல் 12 மணிக்கு குத்தியோட்டம், மாலை 5 மணிக்கு நடைதிறப்பு, இரவு 9.30 மணிக்கு அம்மன் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனி, தொடர்ந்து 1 மணிக்குள் ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
  Next Story
  ×