என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தின்போது சிவபெருமானின் 4 திருவிளையாடல் நிகழ்த்தப்பட்டு உள்ளன. அவை, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், குண்டோதரனுக்கு அன்னமிட்டல், வைகையை அழைத்தல், பதஞ்சலி வியாகரபாதருக்கு ஆனந்த தாண்டவம் காண்பித்தல்.

இது குறித்து ராஜா பட்டர் கூறியதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை திருமணம் செய்து கொண்ட பின்னா் பெண் வீட்டின் சார்பில் மாப்பிள்ளை வீட்டினருக்கு திருக்கல்யாண விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தினா். அப்போது மீனாட்சி அம்மன் சிவபெருமானிடம் தங்கள் வீட்டினர் வடை, பாயசத்துடன் விருந்துக்கு பலமாக ஏற்பாடு செய்துள்ளனா்.
ஆனால் உங்கள் வீ்ட்டினர் சார்பில் யாரும் சாப்பிட வரவில்லையே என்று கேட்டுள்ளார். அப்போது சிவபெருமான் என் வீட்டின் சார்பில் கும்போதரன், குண்டோதரன் ஆகியோர் வந்துள்ளனா்.
அவா்கள் இருவரும் எனக்கு குடைபிடிப்பவா்கள். இவா்களுக்கு முதலில் சாப்பாடு போடுங்கள் என்று சுவாமி கூறியுள்ளார்.
அவா்களுக்கு நல்ல பசி. எனவே அவா்கள் சமைத்த அனைத்தையும் கும்போதரன், குண்டோதரன் சாப்பிட்டு விட்டு, தங்களுக்கு பசி அடங்கவில்லை இன்னும் வேண்டும் என்று கூறியுள்ளனா். இதை கண்ட அம்மன் மற்றும் பெண் வீட்டினர் திகைத்து விட்டனா். உடனே அவா்கள் சுவாமியிடம் சென்று முறையிட்டனா்.
அவா் உடனே அன்னபூரணியை அழைத்து அவா்களுக்கு சாப்பாடு கொடுக்குமாறு கூறினார். அன்னபூரணி அவா்களுக்கு தயிர் சாதம் வழங்கினார். அதை சாப்பிட்ட பின்னா் அவா்களுக்கு பசி அடங்கியது.
அதன்பின்னா் அவா்கள் தங்களின் தாகத்தை போக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டனர். பெண் வீட்டினரும் மதுரையில் உள்ள அனைத்து தண்ணீரையும் கொடுத்ததால் தண்ணீர் தீா்ந்து விட்டது.
ஆனாலும் அவா்களுக்கு தாகம் அடங்கவில்லை. மீண்டும் பெண் வீட்டினர் இறைவனிடம் முறையிட, அவா் கங்கையிடம் மதுரைக்கு தண்ணீர் வேண்டும் என்று அழைத்தார்.
அதை தொடா்ந்து இறைவன் தரையில் கையை வைக்க வைகை ஆறு வெளி வருகிறது. அந்த தண்ணீரை குடித்து அவா்கள் தாக்கத்தை தீா்த்து கொண்டனா்.
பதஞ்சலி, வியாகாரபாதா் என்ற இரு முனிவா்கள் திருக்கல்யாணம் முடிந்த பின்னரும் சாப்பிடாமல் இருந்துள்ளனா். இது குறித்து அவா்களிடம் கேட்ட போது தினமும் இறைவனின் தில்லை கூத்து ஆட்டத்தை பார்த்த பிறகு தான் சாப்பிடுவோம்.
ஆனால் இன்று அவா் திருமணம் முடிந்து மணக்கோலத்தில் இருப்பதால் அவரது ஆட்டத்தை நாங்கள் காண முடியாது. ஆகையால் நாங்கள் சாப்பிடாமல் இருப்பதாக கூறினார்கள். இது குறித்து சிவபெருமானிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவா் திருமண கோலத்துடன் மணமகனாக அவா்கள் முன்பு ஆனந்த தாண்டவத்தை ஆடி முனிவா்களின் குறையை போக்கினார்.
இவ்வாறு திருக்கல்யாணத்தின் போது 4 திருவிளையாடல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

முழுஊரடங்கை தொடர்ந்து வழிபாட்டு தலங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டு இருந்தன. இதனால் கிறிஸ்தவ ஆலயங்களில் ஆன்லைன் மூலம் பிரார்த்தனை நடைபெற்றது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். ஆனால் நேற்று முழு ஊரடங்கு என்பதால் பக்தர்கள் இன்றி சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலி நடைபெற்றது. இதனால் கிறிஸ்தவ ஆலயங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
கிறிஸ்தவ ஆலயங்களில் பாதிரியார்கள் மட்டும் கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினர். அது, ஆன்லைன் மூலம் இணையதளத்தில் ஒளிபரப்பப்பட்டது. அதில் கிறிஸ்தவர்கள் வீடுகளில் இருந்தபடியே கலந்து கொண்டனர். நற்செய்தியும் இணையதளம் வழியாக ஒளிபரப்பப்பட்டது.
கோவை காந்திபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் பாதிரியார் டேவிட் பர்னபாஸ் பிரார்த்தனை நடத்தினார். இது இணையதளத்தில் ஒளிப்பரப்பட்டது. இது போல் மசூதிகளும் மூடப்பட்டு இருந்தன. முஸ்லிம்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே தொழுகையில் ஈடுபட்டனர்.

சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப்போல மாக்கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர்.
இவ்வுலகின் பாவ புண்ணி பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் (சித்ரகுப்தன்) சித்ரா பவுர்ணமி தினத்தில் அவதரித்தார். அண்ட சராசரங்களிலுள்ள முன்னாள் கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சித்திர புத்திரனார் கயிலையிலிருந்து கொண்டு கணக்குகளை எழுதிவந்தார்.
ஒரு சமயம் தேவேந்திரன் தனக்கு மக்கட்பேறு வேண்டுமென்று தருமங்கள் பல புரிந்து இறைவனை நோக்கி இந்திராணியுடன் தவம் புரிந்தார். சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் இந்திராணி தவத்தை எடுத்துரைத்துப் பின்னர், சித்திரபுத்திரரை இந்திரனுக்குப் புத்திரனாகப் பிறந்து, அவன் கவலையை தீர்க்குமாறு அருள்புரிந்தருளினார். அங்ஙனமே சித்திரபுத்திரனார் காமதேனுவின் வயிற்றில் உதித்து பாவ புண்ணியங்களைப் பகுத்து வந்தார். இந்த சித்திரபுத்திர நாயனார் கதை சித்ரா பவுர்ணமி அன்று ஆலயங்களில் படிக்கப்பட்டு அன்னதானங்கள் நடைபெற்று வருகின்றன. சித்திரைக் கதை, சித்திரைக் கஞ்சி எனவும் வழங்கப்படும்.
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் முன் - பின்னாக வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் என்று பெயர். சித்திர குப்தனை வேண்டிக்கொண்டு பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப்போல மாக்கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர். பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.
பூஜை
சித்ரா பவுர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும், நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின் தேவதையை ஆவாஹனம் செய்து
சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்
என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பி ரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.

பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்,
'நாளும், கோளும் நலிந்தோருக்கு இல்லை' என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் சென்று மக்கள் எங்களை புறக்கணிக்கின்றனரே என்று கூறி கண்ணீர் விட்டு முறையிட்டனர்.
இதனால் உங்கள் இரு திதிகளையும் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன் என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீராமர் அவதரித்த நவமி ஸ்ரீராமநவமி என்றும், ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமனை ஆஞ்சநேயர், தியாகபிரம்மர், ராமதாசன், துளசிதாசன், கம்பன், வால்மீகி ஆகியோர் பூஜித்து பலன்பெற்றனர்.
ஸ்ரீராமன் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்கள் முன்பத்து எனப்படும். பிறந்த தினத்தில் இருந்து கொண்டாடப்படும் பின்பத்து நாட்கள் பின்பத்து எனப்படும். பல வைணவ ஆலயங்களில் முன்பத்து, பின்பத்து என சிறப்பாக விழா கொண்டாடுவர். ராமாயணம் படிப்பதும் சொற்பொழிவுகளை செய்வதும் உண்டு. ஆஞ்சநேயர் உற்சவமும் செய்து மகிழ்வார்கள்.

கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக உள்ளதால் திருப்பரங்குன்றம் கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சித்ரா பவுர்ணமி கிரிவலமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் :
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் சித்ரா பவுர்ணமி உற்சவ விழா மற்றும் பவுர்ணமி கிரிவலம் விமரிசையாக நடைபெறும்.
ஆனால் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக உள்ளதால் நாளை மறுநாள் (26-ந்தேதி) அன்று சித்ரா பவுர்ணமி உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சித்ரா பவுர்ணமி கிரிவலமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே சித்ரா பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சனியைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. இப்போது ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்க செய்ய வேண்டிய சில பரிகாரங்களைக் காண்போம்.
ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் இடம் பெயர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி. இத்தகைய சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர எடுத்துக் கொள்ளும் காலம் இரண்டரை ஆண்டுகள் ஆகும்.
பொதுவாக சனிபகவான் ஒரு ராசியின் இருக்கிறார் என்றால், அந்த ராசியுடன், அதன் முன் மற்றும் பின் உள்ள ராசிக்கும் ஏழரை சனி என்று பெயர். பொதுவாக ஏழரை சனி என்றாலே பலரும் அஞ்சுவோம். ஆனால் சனி பகவான் ஒரு பாசக்காரர். அதே சமயம் நீதி நாயகனும் கூட. எனவே நீங்கள் நீதி தவறாமல் நடப்பவராயின், சனியைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. இப்போது ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்க செய்ய வேண்டிய சில பரிகாரங்களைக் காண்போம்.
அனுமன் சாலிசா
சனி பகவான் அனுமனின் பக்தர் மட்டுமின்றி, நண்பரும் கூட. சனி பகவான் அனுமனின் பக்தர்களுக்கு மோசமான விளைவுகளைத் தரமாட்டேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். எனவே ஏழரை சனி நடப்பவர்கள், தினமும் அனுமன் சாலிசாவை பாராயணம் செய்வதால், பெரிதும் பயனடையக்கூடும்.
சனி மந்திரம்
சனி பகவானின் அருளைப் பெற தினமும் மாலை வேளையில் சனி மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். சனி சாலிசாவை தினமும் பாராயணம் செய்வதன் மூலமும், ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
“ஓம் ஷாம் சனிச்சாரய நம”
நவகிரக பூஜை
ஏழரை சனியால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு நவகிரக பூஜை நடத்த வேண்டும். நவகிரக பூஜையானது கடவுள்களை சாந்தப்படுத்துவதோடு, ஜாதகத்தில் உள்ள மோசமான கிரக நிலைகளால் சந்திக்கும் எதிர்மறை விளைவுகளைத் தடுத்து, வாழ்வில் நேர்மறை மற்றும் நம்பிக்கையை வழங்கும். மேலும் ஏழரை சனி நடக்கும் நபர்கள் சனிக்கிழமை தோறும் கோவிலுக்கு சென்று, நவகிரகங்களை வணங்கி, செய்த தவறுகளுக்கு மனமார மன்னிப்பு கேட்டு பிராத்தனை செய்தால், சனிபகவான் மகிழ்ச்சியை வழங்குவார்.
எள் எண்ணெய்/கடுகு எண்ணெய் தீபம்
ஏழரை சனி நடக்கும் நபர்கள், சனிக்கிழமை அன்று சனி பகவானுன்னு எள் எண்ணெய்/கடுகு எண்ணெய் தீபம் போட்டு வந்தால், சனி பகவான் சந்தோஷமடைவார். புராணத்தின் படி, கடுகு எண்ணெய் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் அனுமன் சனி பகவானின் காயங்கள் மற்றும் வடுக்களைக் குணப்படுத்த கடுகு எண்ணெயை வழங்கினாராம்.
காகத்திற்கு சாதம்
ஏழரை சனி நடப்பவர்கள், தினமும் சாப்பிடும் முன் வெள்ளை சாதத்தில் கருப்பு எள்ளைப் போட்டு பிசைந்து, அதை காகத்திற்கு வைத்து வந்தால், முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன், காகம் சனி பகவானின் வாகனம் என்பதால், சனியின் அருளும் கிட்டும்.
இரும்பு அல்லது எண்ணெயை வாங்காதீர்கள்
ஏழரை சனி நடக்கும் நபர்கள், சனிக்கிழமை அன்று இரும்புப் பொருட்களை வாங்கவோ அல்லது எண்ணெய்களான கடுகு அல்லது நல்லெண்ணெய் போன்றவற்றையோ வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
ஸ்ரீ/குபேர யந்திரம்
லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஸ்ரீ யந்திரம் அல்லது குபேரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குபேர யந்திரத்தை வீட்டின் வடக்கு திசையில் வைப்பதன் மூலம், செல்வத்தின் பாதுகாவலரான குபேரர் செல்வத்தை அதிகரிக்க உதவுவதோடு, வாழ்வில் வெற்றி அடைய உதவுவார். மேலும் இது ஏழரை சனியின் மோசமான விளைவுகளையும் குறைக்க உதவும்.
நல்லெண்ணெய் குளியல்
சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டியது அவசியம். அதுவும் காலையில் 6-7 மணியளவில் சனி ஹோரையில் நல்லெண்ணெயைத் தேய்த்துக் குளித்தால், சனியின் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் பட்டாபிஷேக விழாயையொட்டி சுப்ரபாதம், தோமாலா சேவா, சஹஸ்ரநாமர்ச்சனை, உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் ஆகியவை நடந்தது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் நேற்று இரவு ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலை சுப்ரபாதம், தோமாலா சேவா, சஹஸ்ரநாமர்ச்சனை, காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் ஆகியவை நடந்தது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ராம பட்டாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக விஸ்வசேனர் பூஜை, புண்யாவதனம், சத்யோ அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், அக்னி பிரதிஷ்டை, யஜ்மணி சங்கல்பம், சாமிக்கு வஸ்திர சமர்ப்பணம், லட்சுமி பிரதிமா பூஜை, சாமிக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டது. சீதா, ராமர், லட்சுமணர், அஞ்சநேயருக்கு பிரத்யேக ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. மேலும் ஆரத்தி, சதுர்வேத பாராயணம், மகா மங்கள ஹாரத்தி, ேத ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. ராமர் பட்டாபிஷேக விழா முடிந்ததும் கோவில் வளாகத்தில் உற்சவர்கள் உலா வந்தனர்.
நிகழ்ச்சியில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்கராஜு, கண்காணிப்பாளர் ஸ்ரீ ரமேஷ், கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மதுரை அழகர் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது, அப்போது கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது சித்திரை பெருந்திருவிழாவாகும்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவில் வளாகத்திலேயே சித்திரை திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் நடும் பணி நடந்தது.
தொடர்ந்து மாலையில் கள்ளழகர் பெருமாள் பல்லக்கில் மேள தாளம் முழங்க வர்ணக் குடை, தீவட்டி பரிவாரங்களுடன் புறப்பாடாகி சென்று அங்குள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு பட்டர்களின் வேத மந்திரங்களுடன் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன. முன்னதாக மூலவருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது பத்தர்கள் யாரும் உள்ளே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.
ஆனால் அரசு வழிகாட்டுதலின்படி கோவிலுக்குள் சென்றும், வெளி பிரகாரத்தில் சுவாமி புறப்பாடகி வரும் போதும் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இன்றும், நாளையும் வழக்கம் போல் சுவாமி புறப்பாடு நடைபெறும். 3 நாட்களும் திருக்கல்யாண மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
மேலும் 26-ந்தேதி காலை 10 மணிக்கு எதிர் சேவை, கள்ளழகர் திருக்கோலம் நிகழ்ச்சியும், 27-ந்தேதி காலை 8 மணிக்கு குதிரை வாகன புறப்பாடும், சுவாமிக்கு ஆண்டாள் மாலை சாற்றுதல் நிகழ்வும், தொடர்ந்து குதிரை வாகனத்தில் ஆடி வீதியில் புறப்பாடும் நடைபெறுகிறது.
28-ந்தேதி காலை 7 மணிக்கு சைத்திய உபசாரம், தொடர்ந்து 10.30 மணிக்கு சேஷ வாகன புறப்பாடு, 29-ந்தேதி காலை 10 மணிக்கு கருட சேவை, புராணம் வாசித்தல், மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல், 30-ந்தேதி காலை 10 மணிக்கு பூப்பல்லக்கு மே 1-ந் தேதி காலை 10 மணிக்கு அர்த்த மண்டப சேவை, 2-ந் தேதி உற்சவ சாந்தி, திருமஞ்சனத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
இதில் வருகிற 30-ந்தேதி வரை காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை திருக்கல்யாண மண்டபத்தில் அந்தந்த நாளுக்குரிய சிறப்பு அலங்காரத்தில் இருக்கும் கள்ளழகர் பெருமாளை தரிசனம் செய்யலாம்.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

பத்தினித் தெய்வமான கண்ணகி அம்மனின் கால் சிலம்புக்கு சின்னம்மை, பெரியம்மை, சின்னமுத்து, கூவக்கட்டு, குக்கல் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் அதிசயமான சக்தி உண்டு என்பது மக்களின் பொதுவான நம்பிக்கையாகும்.
கண்ணகி அம்மன் வழிபாடு கி.பி 171 முதல் கி.பி 193வரை அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த கஜபாகு என்ற அரசனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதென இராஜவாளி என்ற சிங்கள நூல் கூறுகிறது.
கஜபாகு ஆட்சி காலத்தில் சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராகிய வஞ்சியில், இமயமலையில் இருந்து கொண்டுவந்த கல்லில் கண்ணகிக்கு சிலை செய்து கோயில் அமைத்து பெருவிழா எடுத்தான். கி.பி 178ல் நடந்த அவ்விழாவிற்கு செங்குட்டுவனின் அழைப்பையேற்று அவன் நண்பணாகிய கஜபாகு விழாவில் கலந்து கொண்டான்.
இவ்விழாவில் பாண்டிய மன்னன் வெற்றிவேற் செழியனும், சோழ அரசன் பெருநற்கிள்ளியும், கொங்குதெச அரசன் இளங்கோ அடிகளும், மகததேச மன்னரும் கலந்துகொண்டாதாக துரைஜெயநாதன் “ஆதிதிராவிடரும் அழிந்துபொன சங்கங்களும் “என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
விழாவில் கலந்த கஜபாகு கண்ணகியின் அற்பதங்களைக் கண்டு வியந்தான். கஜபாகு, கண்ணகியை செங்குட்டுவனைப்போல் நித்தியபூசை செய்து வலம் வந்து தன் நாட்டிலும் எழுந்தருளி அருள்புரிய வேண்டும் என்று அவன் கேட்டு பிரார்த்தித்தான்.
அவன் விரும்பியபடி எல்லாம் நடக்குமென அசிரீரி கேட்டு கஜபாகு உள்ளம் நெகிழ்ந்து கண்ணகிமேல் கூடிய நம்பிக்கை கொண்டான். இலங்கையில் கண்ணகி வழிபாட்டினை பரப்பப் தன் விருப்பததை செங்குட்டுவனிடம் கஜபாகு தெரிவித்தான்.
செங்குட்டுவன், சந்தன மரத்தால் செய்த கண்ணகி சிலையையும் ஒரு காற்சிலம்பையும் சந்தனமரப்பேழையில் வைத்து கஜபாகுவிடம் கையளித்தான். கஜபாகு கண்ணகி விக்கிரகத்துடன் இலங்கைக்குத் திரும்பும்போது தன்னுடன் பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பல்குடிமக்களையும் அழைத்துச்சென்றான்.
அவன் வந்திறங்கிய சிலையுடன் வந்திறங்கியது மாதகலுக்கருகேயுள்ள ஐம்புகோள துறைமுகம். யானை மேல் சிலையைவைத்து பல யானைகள் பின்னே வர ஊர்வலமாய் பூனகரி ஊடாக தெற்கு இலங்கைக்கு எடுத்துச்சென்றான். ஊர்வலம் நின்றயிடமெல்லாம் கண்ணகி வழிபாடு தோன்றிற்று.
இம்மன்னனால் யாழ்ப்பாணத்தில் முதலாவது கண்ணகி கோயில் ஸ்தாபிக்கப்பட்ட இடம் அங்கனாக்கடவை எனப்படும் இடம். அங்கனா என்பது அம்மனைக் குறிக்கும். சிங்களநாட்டில் பத்தினி தெய்யோ என கண்ணகி அம்மனை அழைக்க ஆரம்பித்தனர். நந்திக்கடல் வற்றாப்பளை அம்மன் கோவிலுக்கு அருகேயுள்ளது.
முல்லைத்தீவில் உள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் நந்திக்கடல் அருகே இருந்து வருகிறது. கஜபாகு அரசனால் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட பழமைவாய்ந்த பத்தாவது கண்ணகியம்மாள் கோயில் எனக்கருதப்படுகிறது. பளையென்பது தங்குமிடத்தைக் குறிக்கும். கண்ணகியம்மாள் வந்தமர்ந்த பத்தாவது இடமாகிய பத்தாம்பளை. என்பது மருவி வற்றாப்பளையாயிற்று என்பது வரலாறு.
முன்பு ஒரு காலத்தில், நந்திக் கடலோரத்தில், ஆட்டிடையர் குலச் சிறுவர்கள் ஒரு முதுமை வாய்ந்த அம்மையார் ஒருத்தி மரத்தின் கீழ இருப்பதைக் கண்டார்கள். தனக்குத் தங்குவதற்கு இடமில்லை என அவ்வம்மையார் சிறுவர்களிடம் முறையிட்ட போது அவர்கள் மரத்திற்கு அருகே ஒரு குடிசை அமைத்து கொடுத்தது மட்டுமன்றி அம்மையாருக்கு உண்பதற்கு பொங்கலும் செய்து கொடுத்தார்கள்.
மாலைப் பொழுதானதும் குடிசைக்குள் விளக்கு ஏரிவதற்கு எண்ணெய் இல்லையே என்று மனம் வருந்தினர். அவர்கள் கவலைப் படுவதைக்கண்ட அம்மூதாட்டியர் “பிள்ளைகளே கடல் நீரை எடுத்து எண்ணையாகப பாவித்து, திரிவைத்து விளக்கேற்றுங்கள் என்றார். இன்றும் கடல் நீரில் அம்மனுக்கு விளக்கு எரிப்பது வழக்கமாய் இருந்து வருகிறது தனக்கு குடிசை அமைத்து விளக்கேற்றி கொடுத்த சிறுவர்களைப் பார்த்து தனது தலை கடிக்கிறது பேன் பார்த்து விடும்படி கேட்டார்.
மூதாட்டியாரின் தலை முடியை வகுத்த சிறுவர்கள், தலையெல்லாம் கணகளாயிருப்பதைக் கண்டு பயந்து அலர, “நான் ஒரு வைகாசித் திங்களன்று திரும்பவும் வருவேன்” எனக் கூறி மறைந்தார். சிறுவர்கள் நடந்ததை ஊர் ஜனங்களுக்கு எடுத்துச்சொன்னபோது அந்த அதிசயம் நடந்த குடிசையிருந்த இடத்தைச் சிறுவர்கள் அவர்களுக்கு காட்டினார்கள்.
அந்த குடில் இருந்த இடத்தில் ஏதோ அதிசயம் இருப்பதாகக் கருதி அவ்விடத்தில் கண்ணகி அம்மனுக்கு கோவில் கட்டி, வைகாசி பௌர்ணமி தினத்தன்று பொங்கல் பொங்கி கடல் நீரில் விளக்கேற்றி வழிபடத் தொடங்கினர். ஆதிகாலத்தில் அம்மன் காட்சி கொடுத்த ஆடு மேய்க்கும் பரம்பரையை சேர்ந்தவர்களே கோவில் பூசை வழிபாட்டில் பிரதான பங்கு வகிக்கிறார்கள்.
வைகாசிப் பொங்கலுக்கு ஒரு கிழமைக்கு முன்பே, கோயில் பூசாரி, பக்தர்கள், கோயில் நிர்வாகிகள், ஒரு பித்தளைக் குடத்தை மேளதாளத்தோடு சிலாவத்தை என்ற கட்றகரைக்கு எடுத்துச் சென்று, கடல் நீரை குடத்தில் நிறப்புவார்கள். கடல் அலை பொங்கி வரும் போது குடத்தை சரித்து, கடல் நீரை ஒரே தடவையில் மொண்டி அள்ளுவது வழமையாக இருந்து வருகிறது. குடத்தை நீரோடு முள்ளியவளையில உள்ள காட்டா விநாயகர் ஆலயத்தில் வைப்பார்கள்.
வைகாசி பொங்கல் தினத்தன்று விநாயகர் கோவிலில் இருந்து கண்ணகி அம்மன் கோவிலுக்கு தண்ணீர்க் குடத்தை எடுத்துச் சென்று, மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் அம்மனுக்கு குடத்தில் உள்ள கடல் நீரில் விளக்கேற்றி வழிபடுவார்கள்.
பொங்கி, நடுச்சாமம், பிராமணர்கள் மந்திரம் ஓத, கட்டாடி உடையார் என வழங்கப்படும் ஒருவர் பொங்கல் பானையை மடியில் வைத்து, அதைச் சுற்றி மாவிலை கட்டி அடுப்பில் வைப்பார். உடையாருக்கு உருவந்து, அடியார்களுக்கு கொடுக்கும் அரிசியை ஒவ்வொரு திசையிலும் வானத்தை நோக்கி உயர வீசுவார்.
அவர் வீசும் அரிசி அம்மனின் தோழிகளைப் போயடையும் என்பது நம்பிக்கை. மேலே எறிந்த அரிசி, மண்ணிலோ அல்லது பக்தர்கள் தலையிலோ விழுவதில்லை. இதுவும் அம்மனின் அற்புதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திருக்குறளில் அனிச்ச மலர் மென்மையான மலராக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவவொரு தலத்துக்கும் தல விருட்சம் என்று ஒன்றுண்டு.
வற்றாப்பளை அம்மனின் மூலஸ்தானத்துக்கருகே அனிச்ச மரம் ஒன்றுண்டு. இந்த மரத்துக்கு ஒரு வரலாறு உண்டு. போர்த்துக்கேயர் தம்மதத்தைத் தவிர வேறு மதங்களை மதிக்காதவர்கள். பல இந்துக் கோவில்களையும், புத்த விகாராக்களையும் இடித்துத் தள்ளியவர்கள் என்கிறது வரலாறு.
போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்டபோது முல்லைத்தீவுப் பகுதியும் அவர்களது ஆட்சிக்கு கீழ் இருந்தது. ஒரு போர்த்துக்கேய அதிகாரி ஒவ்வொரு முறையும் கோவிலை குதிரையில் தாண்டிச் செல்லும் போது, அம்மனை பரிகாசம் செய்வாராம்.
ஒரு நாள் கண்ணகி அம்மன் கோவில அருகே வந்த போது “எங்கே உங்கள் கடவுள் அதிசயங்கள் செய்வதாக கேள்விப்பட்டேன். அது உண்மையானால் எங்கே இப்போது செய்து காட்டட்டும் “என்றார் அனிச்ச மரத்தின் கீழ், குதிரையில் அம்ர்ந்தபடியே அம்மனை அகங்காரத்தோடு தூற்றியவாறு. உடனே தீடிரென அனிச்ச மரம் குளுங்கத் தொடங்கியது. காற்று பயங்கரமாக வீசத்தொடங்கியது.
மரத்தில் இருந்த அனிச்சம் காய்கள், அம்மனைப் பரிகாசம் செய்த அதிகாரி மேல்விழுந்தன. அனிச்சம் காய்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது அதிகாரி காயமடைந்து குதிரையிலிருந்து, மூர்ச்சித்து கீழே விழுந்தான். அவன் அகங்காரம் அடங்கியது. அதன் பின் இன்றுவரை அந்த அனிச்ச மரம் பூப்பதும், காய்ப்பதும் இல்லை. அதுவும் அம்மனின் அதிசயங்களில் ஒன்று.
பத்தினித் தெய்வமான கண்ணகி அம்மனின் காற்சிலம்புக்கு சின்னம்மை, பெரியம்மை, சின்னமுத்து, கூவக்கட்டு, குக்கல் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் அதிசயமான சக்தி உண்டு என்பது மக்களின் பொதுவான நம்பிக்கையாகும்.

கொரோனா பரவலால் சித்திரை திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால் தஞ்சை பெரியகோவில் உள்பிரகாரத்தில் சாமி புறப்பாடு பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.
உலக பிரசித்தி பெற்ற இந்த பெரியகோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பெரியகோவில் சித்திரை திருவிழாவும், தேரோட்டமும் நடைபெறவில்லை. இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், கொரோனா தொற்று 2-வது அலை பரவுவதால் கோவில் விழாக்களுக்கு தமிழகஅரசு தடை விதித்துள்ளது.
இருப்பினும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கோவிலுக்குள் சாமி புறப்பாடு உள்ளிட்ட வைபவங்கள் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் வழக்கம்போல் கடந்த 8-ந் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அரசு விதித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு விழா நாட்களில் தினமும் கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடு, சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்றுகாலை நடைபெற இருந்தநிலையில் கொரோனா பரவலால் ரத்து செய்யப்பட்டது. இதன்காரணமாக கோவில் உள்பிரகாரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், தியாகராஜர், கமலாம்மாள் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளினர். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, கோவில் குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் சாமி புறப்பாடு நடைபெற்றது. ஏற்கனவே பெரியகோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் இன்றி மிக எளிமையாக சாமி புறப்பாடு நடைபெற்றது.
தஞ்சை பெரியகோவிலில் ஏறத்தாழ 100 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று புதிதாக தேர் செய்யப்பட்டு 100 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த 2015-ம் ஆண்டு முதல் தேரோட்டம் நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக தொடர்ந்து 2-வது ஆண்டாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் கவலைஅடைந்தனர். வருகிற 26-ந் தேதி கொடி இறக்கத்துடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன்.
சனி காயத்ரி மந்திரம் :
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ சனைச்சர ப்ரசோதயாத்!
ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!
ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!
சனி பகவான் ஸ்லோகம் :
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்!
கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன் என்று பொருள்.
சனி பரிகார ஸ்தோத்திரம்
பின்வரும் சனி ஸ்தோத்திரத்தை சனிக்கிழமைகளில் சனி பகவானை வணங்கும் போது உச்சரிக்க, சனி பகவானின் அருள் கிடைக்கும்.
“சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!”

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அபிஷேக அம்பாள் மண்டபம் அருகே உள்ள வசந்த மண்டபத்தில் சிறிய அளவில் தண்ணீரை தேக்கி தெப்பம்போல் கோவில் நிர்வாகம் அமைத்திருந்தது. அதில் அம்மன் எழுந்தருளினார்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் தெப்ப உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அன்று கோவிலிலிருந்து சிறப்புஅலங்காரத்தில் அம்மன் புறப்பாடாகி தெப்ப மண்டபத்திற்கு வந்தடைவார். அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தெப்பத்தில் எழுந்தருள்வார்.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று இரவு அபிஷேக அம்பாள் மண்டபம் அருகே உள்ள வசந்த மண்டபத்தில் சிறிய அளவில் தண்ணீரை தேக்கி தெப்பம்போல் கோவில் நிர்வாகம் அமைத்திருந்தது. அதில் அம்மன் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மன் கோவிலை வலம் வந்துஅருள்பாலித்தார்.