என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஜாதகத்தில் சந்திரனின் நிலை சரியில்லாத போதோ கோட்சார ரீதியாகவோ கெட்டிருக்கும் போது சந்திர தோஷம் ஏற்படுகிறது. இந்த சந்திர தோஷத்தை போக்குவதற்கான பரிகாரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    சந்திர பகவான் ஒரு ஜாதகரின் தாய், ஜாதகரின் மனநிலை, ஞாபகத்திறன், வெளிநாட்டு பயணம், திரவம் சம்பந்தமான தொழில்கள் போன்றவற்றிற்கு காரகனாக இருக்கிறார். ஜாதகத்தில் ஒருவருக்கு சந்திரனின் நிலை கெட்டிருந்தால் அவருக்கு மனநிலை கோளாறுகள், தாயுடன் மனஸ்தாபம், நீரில் கண்டம், வெளிநாட்டு பயணத்தடை போன்றவை ஏற்படும்.

    ஜாதகத்தில் சந்திரன் நிலை சரியில்லாத நிலையில் இருப்பவர்கள், சந்திரனின் கோட்ச்சாரம் சரியில்லாமல் இருப்பவர்கள் ஒரு திங்கட்கிழமை அன்று ஏதேனும் ஒரு புண்ணிய நதியில் ஒரு சொம்பு தூய்மையான பசும்பாலை ஊற்றி வழிபட வேண்டும். சந்திர கிரகத்தால் தோஷம் அடைந்தவர்கள் திங்கட்கிழமைதோறும் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு, ஐந்து விளக்குகளில் நெய் ஊற்றி, தீபமேற்ற வேண்டும். பின்பு சிவபெருமானையும் சந்திர பகவானை அவருக்குரிய மந்திரங்களை கூறி வணங்க வேண்டும்.

    சந்திரன் மாத்ருகாரகன், அதாவது ஒரு மனிதனின் தாய்க்கு காரகனாகிறார். எனவே தனது தாயாரை வாழ்நாள் முழுவதும் நன்கு கவனித்து வருபவர்களுக்கும், தாயாரிடம் ஆசி பெறுபவர்களுக்கும் சந்திர தோஷங்களால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது. சிவன் கோவில்களில் சிவனுக்கு பாலாபிஷேகத்திற்கு பசும் பாலும், பௌர்ணமி தினங்களில் கோவில்களில் நடைபெறும் அன்னதானத்திற்கு அரிசியையும் தானம் வழங்குவது போன்ற செயல்களால் நாம் சந்திரனின் நல்லாசிகளை பெற முடியும் அதோடு தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
    ‘ரமலான் மாதம் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது’. (திருக்குர்ஆன் 2:185)
    புனித ரமலானுக்கு ‘ஷஹ்ரு நுஸூலுல் குர்ஆன்’ - திருக்குர்ஆன் இறங்கிய மாதம் எனும் தத்துவப் பெயரும் உண்டு. ரமலான் மாதம் புனிதமானது. புனிதத்திற்கு புனிதம் சேர்க்கும் வகையில் ரமலான் மாதத்தில் தான் அகிலத்தாருக்கு நேர்வழி காட்டும் திருக்குர்ஆன் இறங்கியது.

    ‘ரமலான் மாதம் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது’. (திருக்குர்ஆன் 2:185)

    புனித ரமலானுக்கு மேலும் ஒரு கூடுதல் சிறப்புண்டு. அது யாதெனில், அனைத்து இறைவேதங்களும் ரமலானில் தான் இவ்வுலகில் இறங்கியது.

    ரமலான் முதல் நாளில் இப்ராகீம் (அலை) அவர்களுக்கு இறைவனின் ஏடுகள் இறங்கின; ரமலானின் ஆறாம் நாளன்று மூஸா (அலை) அவர்களுக்கு ‘தவ்ராத்’ வேதம் இறங்கியது; ரமலானின் பனிரெண்டாம் நாளில் தாவூத் (அலை) அவர்களுக்கு ‘ஸபூர்’ வேதம் இறங்கியது. ரமலான் பதினெட்டாம் தினத்தில் தான் ஈஸா (அலை) அவர்களுக்கு ‘இன்ஜில்’ எனும் வேதம் வழங்கப்பட்டது. புனித ரமலானின் ‘லைலத்துல் கத்ர்’ அன்று தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் வேதம் இறங்கியது.

    ‘நிச்சயமாக நாம் திருக்குர்ஆனை கண்ணியமிக்க (லைலத்துல்கத்ர்) எனும் இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?, கண்ணியமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானது. அதில் வானவர்களும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி இறங்குகின்றனர். சாந்தி அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.’ (திருக்குர்ஆன் 97:1-5)

    ‘ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

    ‘அல்லாஹ்வின் தூதரே, லைலத்துல் கத்ர் எந்த இரவு என்பதை நான் அறிந்தால், அதில் நான் என்ன கூறவேண்டும்? என்று நீங்கள் நினைக்கிறீர்கள்’ என நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) ‘இறைவா, நீ மன்னிப்பவன், மன்னிப்பை விரும்புபவன். எனவே, என்னை மன்னித்துவிடு என்று கூறுவீராக’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

    திருக்குர்ஆன் மூன்று கட்டங்களாக அருளப்பட்டது. முதல் கட்டமாக திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் பதிவிறக்கம் செய்யப்பட்டது. அந்த பதிவேட்டிலிருந்து முழுக்குர்ஆனும் புனித லைலத்துல் கத்ர் இரவு அன்று கண்ணியம் நிறைந்த இடத்தில் இறைவனால் இறக்கப்பட்டது.

    பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மக்காவில் 10 ஆண்டுகளும், மதீனாவில் 13 ஆண்டுகளுமாக கிட்டத்தட்ட 23 ஆண்டுகளில் திருக்குர்ஆன் அருளப்பெற்று, நிறைவு பெற்றது. இதுகுறித்து திருக்குர்ஆன் குறிப்பிடுகையில், ‘இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக இறக்கியருளப்படக்கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே) இப்படித்தான் இதன்மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்’ (25:32) என்று தெரிவிக்கின்றது.

    சிறப்புகள் நிறைந்த திருக்குர்ஆனை இந்த ரமலானில் அதிகம் ஓதிடுவோம். நோன்பின் பலனுடன், திருக்குர்ஆன் ஓதிய பலனையும் பெற்றிடுவோம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், தர்ப்பண பூஜை செய்யவும் தடை உள்ளதால் சித்திரை மாத அமாவாசைக்கு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் யாரும் புனித நீராட வரவில்லை. இதே போல் திதி, தர்ப்பண பூஜையும நடைபெறவில்லை.
    ராமேசுவரம் :

    தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாதம் 26-ந் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை அமலில் இருந்து வருகிறது.

    இதே போல் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், தர்ப்பண பூஜை செய்யவும் தடை உள்ளதால் சித்திரை மாதத்தின் அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் யாரும் புனித நீராட வரவில்லை. இதே போல் திதி, தர்ப்பண பூஜையும நடைபெறவில்லை.

    இதனால் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் முழுமையாக வெறிச்சோடி காணப்பட்டது. ராமநாதசுவாமி கோவில் ரத வீதி சாலைகள், சன்னதி தெரு உள்ளிட்ட இடங்களும் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ் வழக்கமாக இது போன்ற அமாவாசை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ராமேசுவரத்துக்கு பக்தர்கள் வந்து குவிந்து, கடலில் புனித நீராடி தர்ப்பண பூஜை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    முருகப்பெருமானின் பூரண அருட்கடாட்சத்தை தரும் ஒரு தினமாக சித்திரை கிருத்திகை தினம் வருகிறது. இத்தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    வைகாசி, ஐப்பசி மாதங்களை போல முருகப் பெருமானை வழிபடுவதற்குரிய சிறப்பான மாதமாக சித்திரை மாதம் இருக்கிறது. இந்த மாதத்தில் வரும் கிருத்திகை தினத்தன்று முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது நன்மை தரும். கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். எனவே இந்த சித்திரை மாதத்தில் வருகின்ற கிருத்திகை தினத்தில் விரதம் மேற்கொள்வதால் நவகிரகங்களில் சூரிய பகவானின் தோஷங்கள் நீங்கி அவரின் முழுமையான அருளும் கிடைக்கப் பெறுகிறது.

    முருகனின் அருளாற்றல் அனைவருக்கும் கிடைக்கும் இத்தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்ட பின்பு பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடிக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், முருக மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். வீட்டில் மாலை வேளைகளில் தீபமேற்றி, முருகப்பெருமானின் படத்திற்கு, செந்நிற மலர்களை சாற்றி, தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

    இப்படியான முறைகளில் முருகனை சித்திரை மாத கிருத்திகை தினத்தில் வழிபட்டு வசதியற்ற ஏழை மக்களுக்கு தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றை இந்த தினத்தில் அன்னதானம் செய்தால் உங்களுக்கு ஏற்படுகின்ற சூரிய கிரக தோஷங்கள் நீங்கும். எதிரிகளின் தொல்லை, கொடிய நோய்கள்,காரியங்களில் ஏற்படும் தடை, தாமதங்கள் நீங்கும். பூமி லாபம் ஏற்படும். சொந்த வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் நீங்கும்.
    இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து போகும் வழிபாட்டுத் தலமாக ‘திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்’ விளங்குகிறது.
    இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து போகும் வழிபாட்டுத் தலமாக ‘திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்’ விளங்குகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள இந்தக் கோவில், மிகவும் பிரசித்திபெற்றது. திருப்பதி என்பது மலையின் அடிவாரப் பகுதியையும், திருமலை என்பது வெங்கடாஜலபதி கோவில் கொண்டிருக்கும் மலையின் மேல் பகுதியையும் குறிக்கும். இந்த திருப்பதி ஏழுமலையானைப் பற்றிய சில சுவாரசியமான தவல்களை இங்கே பார்க்கலாம்.

    * திருமலையில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதிக்கு தினமும் செய்யப்படும் பூஜைகளுக்கான விதிமுறைகளை வரையறுத்துக் கொடுத்தவர், ராமானுஜர்.

    * திருப்பதி ஏழுமலையானுக்கு நைவேத்தியமாக தயிர் சாதம் படைக்கப்படுகிறது. அந்த தயிர் சாதத்தை மண் சட்டியில் வைத்து படைக்கிறார்கள்.

    * திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தை அங்குள்ளவர்கள் ‘மனோகரம்’ என்று அழைக்கிறார்கள். 1715-ம் ஆண்டு முதலே ஏழுமலை யானுக்கு லட்டு படைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் 1803-ம் ஆண்டு முதல்தான், அந்த லட்டை பூந்தியாக பக்தர்களுக்கு வினியோகம் செய்திருக்கிறார்கள். காலப்போக்கில்தான் லட்டு வடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.

    * திருமலை ஏழுமலையான் கோவிலில், ஆனி மாதம், தெலுங்கு வருடப் பிறப்பு, தீபாவளி நாள் என மூன்று முறை தர்பார் நடத்தப்படும். இதில் ஆனி மாதத்தில் நடைபெறும் தர்பாரின் போது, கோவில் குறித்த வரவு-செலவு கணக்குகள் ஏழுமலையானிடம் சமர்ப்பிக்கப்படும். பிறகு, ஏழுமலையானின் ஒப்புதல் பெற்றதாகப் பாவித்து, கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் புதிதாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.

    * திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் உடையானது, 21 முழ நீளமும், 5 கிலோ எடையுமுள்ள பட்டு பீதாம்பரமாகும். இதை தயாரிப்பதற்கென்றே சென்னையில் தனிக்கடையே இயங்குகிறதாம். இந்த ஆடை, ஏழுமலையான் கோவில் அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும்.

    * திருமலை 3 ஆயிரம் அடி உயரத்திலுள்ள குளிர் பிரதேசமாகும். ஆனால், ஏழுமலையான் சிலையின் வெப்பம் மட்டும், 110 டிகிரிக்கு குறைவதே கிடையாது என்கிறார்கள். இது அதிகமான நகைகளை, இறைவன் தன் உடலில் அணிந்திருப்பதால் ஏற்படுவதாக சொல்கிறார்கள்.

    * ஏழுமலையானின் சாளக்கிராம தங்க மாலை 12 கிலோ எடை கொண்டதாம். இதை ஏழுமலையானுக்கு சாற்ற 3 அர்ச்சகர்கள் தேவைப்படுவார்களாம். சூரியகடாரி என்ற ஆபரணம் 5 கிலோ எடை கொண்டது. இவை போல அரிதான பல நகைகள், ஏழுமலையானுக்குக் குவிந்துள்ளன.

    * ஏழுமலையானுக்கு தினசரி செய்யப்படும் அபிஷேகங்களில், ஒரு முறை செய்யப்படும் அபிஷேகத்திற்கு மட்டும் குறைந்த பட்சமாக ரூ.1 லட்சம் வரை செலவு ஆவதாக கூறப்படுகிறது.
    கும்ப ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் மிகுதியான செல்வத்தையும், யோகங்களையும் மற்றும் அதிர்ஷ்டங்களையும் பெறுவதற்கு செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    சனிபகவானுக்குரிய ஒரு ஒரு ராசியாக கும்ப ராசி இருக்கிறது. 12 ராசிகளில் பதினோறாவது ராசியாக வருவது கும்பம் ராசி. கும்பம் ராசி சனி பகவானின் ராசியாகும். கும்பம் ராசிக்காரர்கள் மற்ற எந்த ராசிக்காரர்களை விடவும் மனஉறுதி அதிகம் கொண்டவர்கள். ஆயுள்காரகனான சனி பகவானின் ராசி என்பதால் நீண்ட ஆயுளையும் பெற்றவர்களாக இருக்கின்றனர். கும்பம் ராசியினர் வாழ்வில் செல்வ நிலை உயரவும், அதிர்ஷ்டங்களை அதிகம் பெறவும் கீழ்கண்ட பரிகாரங்களை திட சித்ததோடு செய்ய வேண்டியது அவசியம்.

    கும்ப ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி, வெண்ணெய் தடவி, பழம் நைவேத்தியம் வைத்து, தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை வாழ்நாள் முழுவதும் செய்பவர்களுக்கு பாதகமான பலன்கள் ஏற்படும் நிலை நீங்கி நன்மைகள் அதிகமுண்டாகும். வளர்பிறை சனிக்கிழமை தினத்தில் திருப்பதி திருமலை கோவிலுக்கு சென்று வெங்கடாசலபதியை வழிபடுவது மிகவும் சிறந்த பலன்களை ஏற்படுத்தவல்ல பரிகாரமாகும். வருடத்திற்கு ஒருமுறை திருநள்ளாறு கோவிலுக்கு சென்று அங்கிருக்கும் சனீஸ்வர பகவானை வழிபடுவது நல்லது.

    புதிய முயற்சிகளையும், பணம் சம்பந்தமான விவகாரங்களையும் வெள்ளிக்கிழமைகளில் மேற்கொள்வது கும்ப ராசியினருக்கு அதிர்ஷ்டங்களை ஏற்படுத்தும். தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்பாக காகங்களுக்கு உணவு வைத்த பின் சாப்பிடுவதால், சனிபகவானின் பூரணமான ஆசிகள் கிடைக்கப்பெறுவார்கள். சனிக்கிழமைகளில் கோயில்களில் இருக்கின்ற அரச மரத்தை சுற்றி வந்து வழிபாடு செய்வது யோகங்களையும், அதிர்ஷ்டங்களையும் அதிகரிக்கச் செய்யும். உங்கள் கழுத்து அல்லது வலது கையில் ஏழு முக ருத்ராட்சத்தை கருப்பு கயிற்றில் கோர்த்து அணிந்து கொள்வது சிறந்த பரிகாரமாகும்.
    ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த வாகனம் இருக்கும். அந்த வகையில் எந்த தெய்வத்திற்கு எந்த வாகனம் என்று விரிவாக இங்கே அறிந்து கொள்ளலாம்.
    * மஹா கணபதி - மூஞ்சுறு

    * முருகன் - மயில்

    * சிவபெருமான் - காளை

    * பிரம்மா - அன்னம்

    * அம்மன் - சிம்மம்

    * மகா விஷ்ணு - கருடன்

    * பைரவர் - நாய்

    * சாஸ்தா - குதிரை

    * ஐயப்பன் - புலி

    * சனீஸ்வரன் - காகம்

    * இந்திரன் - ஐராவதம் யானை

    * லட்சுமி - ஆந்தை

    * சரஸ்வதி - அன்னம்

    * கங்காதேவி - முதலை

    * மன்மதன் - கிளி

    * ரதி - புறா

    * குபேரன் - மனிதன், கிளி, கீரி, குதிரை,

    * வருணன் - மகரம்

    * அக்னி - ஆடு

    * துர்க்கை - கலைமான்

    * சூரியன் - ஏழு குதிரைகள்
    நம் வாழ்வில் இருக்கும் இன்னல்கள் யாவும் நீங்க ஒவ்வொரு அமாவாசையும் தவறாமல் வீட்டிலேயே கூட எளிய முறையில் தர்ப்பணம் செய்து இந்த நாமாவளிகளை உச்சரித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
    அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் விசேஷ அமாவாசைகளில் மட்டும் கோவில்களில் திதி கொடுப்பது உண்டு. ஆனால் ஒவ்வொரு அமாவாசையும் வழிபட்டால் அதற்குரிய பலன்கள் அபரிமிதமாக இருக்கும். நம் வாழ்வில் இருக்கும் இன்னல்கள் யாவும் நீங்க ஒவ்வொரு அமாவாசையும் தவறாமல் வீட்டிலேயே கூட எளிய முறையில் எள்ளும், தண்ணீரும் முறையாக இறைத்து பித்ரு தர்ப்பணம் செய்து கொள்ளலாம். அப்பொழுது இந்த நாமாவளிகளை உச்சரித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

    1. ஓம் ஸ்ரீ சூரிய நாராயண தேவதா மூர்த்தி போற்றி
    2. ஓம் ஸ்ரீ வசுபித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    3. ஓம் ஸ்ரீ ருத்ரப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    4. ஓம் ஸ்ரீ ஆதித்யப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    5. ஓம் ஸ்ரீஜெய க்ஷீராஸ் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    6. ஓம் ஸ்ரீதரணி பந்து பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    7. ஓம் ஸ்ரீ ஸரயு பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    8. ஓம் ஸ்ரீ கும்ப சோபித பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    9. ஓம் ஸ்ரீச்ரவண பாத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    10. ஓம் ஸ்ரீ ருத்ர தரணி பந்து பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    11. ஓம் ஸ்ரீவலம்பரப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    12. ஓம் ஸ்ரீதன்வந்த்ரீ லோக சடாட்சர ஸ்ரீவாரி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    13. ஓம் ஸ்ரீசுதவாணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    14. ஓம் ஸ்ரீகஜபுஜ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    15. ஓம் ஸ்ரீபிரமாம்புல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    16. ஓம் ஸ்ரீரீதாம்பரப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    17. ஓம் ஸ்ரீகடாட்ச வாணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    18 ஓம் ஸ்ரீசதவேத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    19 ஓம் ஸ்ரீமேத விதான பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    20. ஓம் ஸ்ரீஸ்கந்த கோஷ்ட பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    21. ஓம் ஸ்ரீஸ்கந்த லோக பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    22. ஓம் ஸ்ரீபார்திப ப்ரித்விக் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    23. ஓம் ஸ்ரீபருதி பவித்ரப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    24 ஓம் ஸ்ரீகோதாயன பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    25 ஓம் ஸ்ரீஸ்வர்ண மாதவ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    26. ஓம் ஸ்ரீகோமதி லோக கோதாயன பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    27. ஓம் ஸ்ரீமங்கள தேவ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    28. ஓம் ஸ்ரீ வரிவஸ்யப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    29. ஓம் ஸ்ரீஹரி கடாட்ச வாணி பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    30. ஓம் ஸ்ரீபகுள சோபித பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    31. ஓம் ஸ்ரீபூவர்த்தன காயத்ரீ மண்டல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    32. ஓம் ஸ்ரீவேதராஜ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    33. ஓம் ஸ்ரீஔஷத தண்டுல பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    34. ஓம் ஸ்ரீஔஷத லோகப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    35. ஓம் ஸ்ரீபிரசன்ன பாத பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    36. ஓம் ஸ்ரீபந்து தரணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    37. ஓம் ஸ்ரீகாரணீய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    38. ஓம் ஸ்ரீ ச்ராவண பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    39. ஓம் ஸ்ரீவாமன கண பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    40. ஓம் ஸ்ரீ சாண்டில்யப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    41. ஓம் ஸ்ரீசந்தான உதக கும்ப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    42. ஓம் ஸ்ரீதச பூர்வபித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    43. ஓம் ஸ்ரீவாயு பித்ரு தேவதேவதா மூர்த்திகள் போற்றி
    44. ஓம் ஸ்ரீசூரிய லோக பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    45. ஓம் ஸ்ரீசாந்த ருத்ர குண பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    46. ஓம் ஸ்ரீஜல த்வீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    47. ஓம் ஸ்ரீசப்த த்வீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    48. ஓம் ஸ்ரீஅஷ்ட சுத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    49. ஓம் ஸ்ரீசூரிய வம்ச பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    50. ஓம் ஸ்ரீக்ஷீர அம்ருத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    51. ஓம் ஸ்ரீ வாதுல்ய தரணிப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    52. ஓம் ஸ்ரீஅதிதி லோக பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    53. ஓம் ஸ்ரீஅங்காரக லோக பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    54. ஓம் ஸ்ரீமார்க விதான பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    55. ஓம் ஸ்ரீகாச்யப தரண பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    56. ஓம் ஸ்ரீஜெய மார்த்தாண்ட பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    57. ஓம் ஸ்ரீமுகுந்தா வர்தன பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    58. ஓம் ஸ்ரீபுரவாஸ பித்ருதேவதைகள் போற்றி
    59. ஓம் ஸ்ரீகஜோ புத பித்ருதேவதைகள் போற்றி
    60. ஓம் ஸ்ரீபிரகத பித்ருதேவதைகள் போற்றி
    61. ஓம் ஸ்ரீதண்டுலப் பித்ருதேவதைகள் போற்றி
    62. ஓம் ஸ்ரீசகரப் பித்ருதேவதைகள் போற்றி
    63. ஓம் ஸ்ரீபித்ரு அதிகார பூஷண பித்ருதேவதைகள் போற்றி
    64. ஓம் ஸ்ரீபித்ரு சண்டேஸ்வரர் தேவதைகள் போற்றி
    65. ஓம் ஸ்ரீபித்ரு துவார பாலக தேவதைகள் போற்றி
    66. ஓம் ஸ்ரீநாகப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    67. ஓம் ஸ்ரீகுசஸ்பதி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    68. ஓம் ஸ்ரீசந்தான மாத்ரயப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    69. ஓம் ஸ்ரீபரிபாலய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    70. ஓம் ஸ்ரீசந்தன சந்திராதித்ய பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
    71. ஓம் ஸ்ரீகல்பித பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    72. ஓம் ஸ்ரீவாரிலோக பித்ருதேவதா போற்றி
    73. ஓம் ஸ்ரீகுரு மஹாதேவ தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    74. ஓம் ஸ்ரீஜீவ சௌபாக்ய தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    75. ஓம் ஸ்ரீமதுலித முராரி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    76. ஓம் ஸ்ரீஆயுஷ்யதன பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    77. ஓம் ஸ்ரீதிட தீர்க தரிசி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    78. ஓம் ஸ்ரீப்ரவேச தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    79. ஓம் ஸ்ரீகர்ம பரிபாலன தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    80. ஓம் ஸ்ரீகாருண்ய தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    81. ஓம் ஸ்ரீதவபர ஔஷத பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    82. ஓம் ஸ்ரீமாளா சாங்க்ய பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    83. ஓம் ஸ்ரீஸ்வர்ணவதி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    84. ஓம் ஸ்ரீஜல தீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    85. ஓம் ஸ்ரீஜல மண்டல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    86. ஓம் ஸ்ரீகடக தேவதை பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    87. ஓம் ஸ்ரீபவதாரண்ய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    88. ஓம் ஸ்ரீபுண்டரீக மண்டல பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    89. ஓம் ஸ்ரீகாயத்ரீ சவிதா மண்டல பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    90. ஓம் ஸ்ரீசந்தான உதக கும்ப பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    91. ஓம் ஸ்ரீசப்த தீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    92. ஓம் ஸ்ரீஅஷ்ட சுத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    93. ஓம் ஸ்ரீகாருண்ய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    94. ஓம் ஸ்ரீபிரசன்ன பரசத் விக பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    95. ஓம் ஸ்ரீ கர்த்தம பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    96. ஓம் ஸ்ரீதரணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    97. ஓம் ஸ்ரீபித்ரு மஹா தேவதைகள் போற்றி
    98. ஓம் ஸ்ரீஜெய மாங்கல்ய பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    99. ஓம் ஸ்ரீஜீவ சௌபாக்ய பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    100. ஓம் ஸ்ரீவாராஹி வரவாரண பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
    101. ஓம் ஸ்ரீபுருஷோத்தம மண்டல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
    102. ஓம் ஸ்ரீபித்ரு கணதேவதைகளே போற்றி
    103. ஓம் ஸ்ரீபித்ரு நட்சத்திர தேவதா மூர்த்திகள் போற்றி
    104. ஓம் ஸ்ரீபித்ரு ஹோம தேவதா மூர்த்திகள் போற்றி
    105. ஓம் ஸ்ரீபித்ரு யக்ஞ தேவதா மூர்த்திகள் போற்றி
    106. ஓம் ஸ்ரீதர்ப்பண தேவதா மூர்த்திகள் போற்றி
    107. ஓம் ஸ்ரீபித்ரு தேவக்ரஹங்கள் போற்றி
    108. ஓம் ஸ்ரீபித்ருபத்னிகள்தேவதா மூர்த்திகள் போற்றி.
    அம்மையப்பனை வழிபடும் தீவிர பக்தர்களான அடியார்களை வழிபட்ட பின்னரே சிவபெருமானை வழிபடவேண்டும் என்கிறார்கள். அந்த அளவுக்கு சிவசக்தி வழிபாட்டில் தொண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
    ‘இறைவனின் தொண்டர்களுக்கு நாம் பணி செய்யும் பாக்கியம் கிடைத்துவிட்டால், மோட்சத்தைத் தேடிச் செல்லவேண்டிய அவசியம் இல்லை. அது தானாக அமைந்துவிடும்’ என்கிறார், தாயுமானவர்.

    சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் இருந்த காலங்களில் எல்லாம், அங்குள்ள தேவாசிரியன் மண்டபத்தை முதலில் வலம் வந்து, அங்கிருக்கும் அடியவர்களை வணங்கிய பிறகுதான், தன்னுடைய தோழரான திருவாரூர் ஈசனை வழிபடச் செல்வார். ஒருமுறை சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஈசனை நினைத்தவாறே, தேவாசிரிய மண்டபத்தை வலம் வராமலும், அங்கிருந்த அடியவர்களை வணங்காமலும் நேராகத் தியாகராஜர் சன்னிதிக்குச் சென்றுவிட்டார்.

    அப்போது அடியார் மண்டபத்தில் இருந்த அடியவர்களில் ஒருவரான விறன்மிண்டர், கோபம் கொண்டார். “அடியாரை வணங்கி விட்டுதான் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது மரபு. அப்படிப்பட்ட அடியவர்களை மதிக்காத சுந்தரரை, இப்போதே சைவ நெறியில் இருந்து தள்ளி வைக்கிறேன்” என்றார்.

    இதனைக்கண்டு மனம் பதறிய பிற அடியவர்கள் விறன்மிண்டரிடம், “சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூர் தியாகேசனின் அருள் நிரம்பப் பெற்றவர். அதனால் அவர் மீது இவ்வளவு கோபம் வேண்டாம்” என்று தடுத்தனர்.

    இதனால் மீண்டும் கோபம் கொண்ட விறன்மிண்டர், “திருவாரூரில் இனிமேல் காலடி எடுத்து வைக்க மாட்டேன்” என சபதம் செய்து வெளியேறிவிட்டார். இதனை அறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூர் ஈசனிடம் வேண்டினார். அப்போது இறைவன், “சுந்தரா! நம் தொண்டர்களைப் போற்றி திருத்தொண்டத் தொகைப் பாடிடுக” எனக் கூறினார். அதோடு ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என்று சுந்தரருக்குப் பாட அடியெடுத்தும் கொடுத்தார்.

    ஈசனின் திருவிளையாடல் மூலம் மீண்டும் திருவாரூர் வந்துசேர்ந்தார், விறன்மிண்டர். அப்போது சுந்தரரின் திருத்தொண்டத் தொகையைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். சுந்தரருடைய உள்ளம் அடியாரிடத்தில் பதிந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு இன்பம் அடைந்தார். அவரது பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், அவரை சிவகணங்களுக்குத் தலைவராகத் திகழுமாறு அருளினார். இப்படிப்பட்ட அப்பழுக்கற்ற பரிசுத்தமான அன்புள்ளமும், தொண்டுள்ளமும், பக்தி உணர்வும் கொண்ட சிவனடியார்களே, அறுபத்து மூன்று நாயன்மார்களாகத் திகழ்ந்தனர்.

    இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் வகையில், திருவாரூர் தியாகேசன் அருளால் திருவாரூரில் வைத்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடி அருளியதுதான் ‘திருத்தொண்டத் தொகை.’ அம்மையப்பனை வழிபடும் தீவிர பக்தர்களான அடியார்களை வழிபட்ட பின்னரே சிவபெருமானை வழிபடவேண்டும் என்கிறார்கள். அந்த அளவுக்கு சிவசக்தி வழிபாட்டில் தொண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
    இந்தக் கதையை நாம், நம் வாழ்வோடு பொருத்திப் பார்க்க வேண்டியதிருக்கிறது. இறைவன் நமக்கு அளித்த வளங்களை பெருக்க வேண்டுமே தவிர, அழிக்கக்கூடாது. அதுவே உங்களை வெற்றியாளனாக்கும்.
    இயற்கை எழில் சூழ்ந்த நகரம் அது. படர்ந்து விரிந்திருந்த வனமும், அதன் ஒரு பகுதியாக இருந்தது. நகரத்தைச் சுற்றிலும் ஆளில்லாத தீவுகள் ஏராளமாக இருந்தன. அந்த நகரத்திற்கு தலைவராக இருந்தவர், வயோதிகம் காரணமாக அடுத்த தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அங்கு வாரிசு அரசியல் இல்லாததால், வீரத்திலும், மன வலிமையிலும், புத்திக்கூர்மையிலும் சிறந்த ஒருவரை நகரத்தில் இருந்தே தேர்வு செய்ய வேண்டியதிருந்தது.

    தலைவருக்கான போட்டி வைக்கப்பட்டதில் அங்கு வசித்த பல இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அதில் அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருவர் தேர்வானார்கள். அவர்கள் இருவரும் ஏற்கனவே வீரத்தை வெளிப்படுத்தி இருந்ததால், மீண்டும் அவர்களுக்குள் போட்டி வைத்து, அவர்களில் ஒருவர் பெருங்காயத்தை அடைய தலைவருக்கு விருப்பம் இல்லை. அதனால் வேறு ஒரு போட்டியை வைக்க அவர் முன் வந்தார்.

    ஊர் முன்பாக இரண்டு வீரர்களையும் அழைத்த தலைவர், போட்டியை விவரித்தார்.

    “வீரர்களே.. இதுவரை நடந்த போட்டிகளில் அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்திவிட்டீர்கள். அதில் உங்களுக்கு நிகரானவர் இல்லை என்று நிரூபித்து விட்டீர்கள். இப்போது நடக்கப்போவது இறுதிப்போட்டி. தலைவர் யார் என்பதை முடிவு செய்யும் போட்டி. இதில் வெற்றிபெறுபவர்தான் அடுத்த தலைவராக முடிசூட்டப்படுவார். உங்கள் இருவருக்கும் சில ஆயுதங்களும், சில சமையல் பாத்திரங்களும், நம்முடைய உணவு தானியமாக இருக்கும் சோளம் ஒரு முட்டையும் கொடுக்கப்படும். நம் நகரைச் சுற்றி இருக்கும் தீவுகளில், ஏதாவது இரண்டு தீவுகளில் ஆளுக்கு ஒருவராக விட்டு விடுவோம். உங்களிடம் இருக்கும் தானியத்தை வைத்துக் கொண்டு அது தீரும்வரை அந்த காட்டிலேயே தங்கி இருங்கள். தானியம் தீர்த்த பிறகு, காட்டில் இருக்கும் மரத்தின் கிளைகளை ஒடித்து கடற்கரையில் தீ மூட்டுங்கள். அந்த புகையை வைத்து, நம் ஆட்கள் அங்கு வந்து உங்களை மீட்பார்கள். உங்கள் இருவரில் யார் தானியத்தை பயன்படுத்தி, அந்தத் தீவில் அதிக நாட்கள் தாக்குப்பிடிக்கிறீர்களோ, அவர்தான் அடுத்த தலைவன்.”

    நிபந்தனைகளை இரண்டு வீரர்களும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் படகு மூலமாக ஆளுக்கொரு தீவில், அவர்களுக்கான பொருட்களுடன் இறக்கிவிடப்பட்டனர். மூன்று மாதத்திற்கு தேவையான சோளம் அவர்களிடம் இருந்தது. போட்டி ஆரம்பமாகிவிட்டது. இரு வீரர்களும், ஆளில்லாத தீவுகளில் வசிக்கத் தொடங்கினர். ‘இரண்டு தீவுகளிலும் எங்கேனும் புகை எழும்புகிறதா?’ என்று பார்த்தபடி எந்நேரமும் படகை எடுத்துச் செல்ல ஆயத்தமாக ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள்.

    நாட்கள் ஓடின. மூன்று மாதம் முடிந்து, பல நாட்கள் கடந்துவிட்டது. ஒரு நாள் ஒரு தீவின் கடற்கரையில் இருந்து புகை எழும்பியது. உடனே ஒரு படகு புறப்பட்டுப் போய் அங்கே எலும்பும் தோலுமாக இருந்த இளைஞனை அழைத்து வந்தது. அவன் கரைக்கு வந்ததும், மற்றொருவன் இன்னும் வந்துசேரவில்லை என்பதை தெரிந்து கொண்டான். பின்னர் தலைவரிடம், “தலைவரே.. எங்களுக்கு கொடுக்கப்பட்ட சோளம், இரண்டு மாதங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இவ்வளவு நாள் தாக்குப்பிடித்தது என்னுடைய சாமர்த்தியம்தான். என் சகப் போட்டியாளன், என்னைப் போலவே புத்திசாலியாக இருப்பான் என்ற நம்பிக்கை இல்லை. எனவே இன்னும் சில நாட்கள் பார்த்து விட்டு, எனக்கே தலைவர் பதவியைத் தர வேண்டுகிறேன்” என்றான்.

    அதைக்கேட்டதும் தலைவருக்கு அச்சம் வந்தது. ‘மற்றொரு வீரன் என்ன ஆனானோ?’ என்று நினைத்தவர், சில நாட்கள் காத்திருந்தார். 4 மாதத்தை கடந்து விட்டதால், பயம்கொண்ட அவர் உடனடியாக மற்றொரு வீரன் விடப்பட்ட தீவுக்கு ஆட்களுடன் சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு பலவித சிந்தனை. ‘அந்த வீரனை, விலங்குகள் ஏதாவது கொன்றிருக்குமா?, தனிமை பயத்தில் மனம் பேதலித்து விட்டானா?, இல்லை பசியால் இறந்து போயிருப்பானா?’ என்றெல்லாம் நினைத்தபடியே பயணித்தவர், அந்த இடத்தை அடைந்துவிட்டார்.

    தீவில் இறங்கி காட்டில் சிறிது தூரம் நடந்தவருக்கு, மூங்கிலாலும், ஓலைகளாலும் கட்டப்பட்ட வீடு ஆச்சரியத்தை அளித்தது. காட்டிற்குள் சலசலப்பு கேட்டு, அந்த வீட்டிற்குள் இருந்த இளைஞன் ஓடிவந்தான். முன்பைவிட திடகாத்திரமாக இருந்தான். தலைவரை வணங்கி வரவேற்றான். வீட்டிற்குள் அழைத்துச் சென்று, வந்தவர்கள் அனைவருக்கும் சோள அடையும், மீனும் கொண்டு வந்து கொடுத்தான். தலைவருக்கு ஒன்றும் புரியவில்லை.

    “உனக்கு கொடுக்கப்பட்ட சோளம் மூன்று மாதத்திற்குள் முடிந்திருக்குமே. நீ என்னவென்றால் சோள அடையால் எங்களை வரவேற்கிறாய். நீயும் நன்கு சாப்பிட்டு திடகாத்திரமாய் மாறியிருக்கிறாய். இது எப்படி சாத்தியம் ?” என்றார், ஆவல் குறையாமல்.

    உடனே அந்த இளைஞன், “என்னோடு வாருங்கள் தலைவரே..” என்று வீட்டின் பின்புறப் பகுதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே அழகான சோளக் கொல்லை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.

    இளைஞன் தொடர்ந்தான். “தலைவரே.. நான் வந்த அன்றே, எனது தானியத்தில் இருந்து ஒரு பங்கை எடுத்து விதைத்து வைத்து விட்டேன். இரண்டு மாதங்களிலேயே அது அறுவடைக்குத் தயாராகிவிட்டது. நான் எந்தக் கவலையுமில்லாமல் நிறைவாக சாப்பிட்டேன். இந்த நான்கு மாதம் மட்டுமல்ல. இன்னும் எத்தனை வருடம் வேண்டுமென்றாலும், என்னால் இங்கே சந்தோஷமாய் வாழ முடியும்” என்றான்.

    அவனை மகிழ்வோடு அனைத்துக் கொண்டார், ஊர் தலைவர். “தடுமாறிப்போவாய் என்று நினைத்து இந்தப் போட்டியை வைத்தேன். நீயோ உன் அறிவாலும், உழைப்பாலும் என்னை ஆச்சரியப்படுத்திவிட்டாய்” என்று கூறி, தலைவனாக அவனுக்கு முடிசூட்டினார்.

    இந்தக் கதையை நாம், நம் வாழ்வோடு பொருத்திப் பார்க்க வேண்டியதிருக்கிறது. இந்த உலகத்திற்குள் நம்மை அனுப்பி வைக்கும், இறைவன் நாம் வாழ்வதற்கான அனைத்து அடிப்படை தேவைகளையும், இயற்கை வளங்களாக கொடுத்து அனுப்பி வைக்கிறார். ஆனால் நம்மில் பலரும் பிற்காலத்தைப் பற்றிய சிந்தனை இல்லாமல், நமக்குப் பிறகான சந்ததியினரைப் பற்றி கவலைகொள்ளாமல், இருக்கும் வளங்களையெல்லாம் அழித்து, நம் சந்ததியினரையும் சங்கடத்தில் ஆழ்த்திவிடுகிறோம். இறைவன் நமக்கு அளித்த வளங்களை பெருக்க வேண்டுமே தவிர, அழிக்கக்கூடாது. அதுவே உங்களை வெற்றியாளனாக்கும். உங்கள் சந்ததியினர் உங்களைக் கொண்டாட வழிவகுக்கும்.
    கொரோனா பரவலால் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியின்றி வருடாந்திர வசந்தோற்சவம் வருகிற 25-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை 3 நாட்கள் ஏகாந்தமாக நடக்கிறது.
    திருமலை :

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் வருகிற 25-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 24-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது. கொரோனா பரவலால் வசந்தோற்சவம் கோவில் உள்ளே பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது. 26-ந்தேதி தங்க ரதத்துக்கு பதிலாக திருச்சி உற்சவம் நடத்தப்படும்.

    3 நாட்களில் மதியம் 2.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை கோவிலில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை கோவில் வளாகம் உள்ளே சாமி ஊர்வலம் நடக்கிறது. இதனால் 24-ந்தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்படுகிறது. 25-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை 3 நாட்களுக்கு கல்யாண உற்சவம் மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நடப்பதை முன்னிட்டு 18-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. 18-ந்தேதி அதிகாைல தாயாரை துயிலெழுப்பி சுப்ரபாத சேவை நடக்கிறது. காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை கோவில் ஆல்வார் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

    அப்போது கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, தூண்கள் மற்றும் பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் பித்தளை, தாமிர பொருட்கள் அனைத்தும் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்படுகிறது.

    இதையடுத்து நாமகொம்பு, ஸ்ரீ சூரணம், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், பச்ைச கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிகட்டை ஆகிய சுகந்த பொருட்களுடன் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது. அதன் பின்னர் கோவிலில் பக்தர்கள் காலை 10.30 மணியில் இருந்து பத்மாவதி தாயாரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தால் 18-ந்தேதி சாதாரண பக்தர்களுக்கான தரிசனம், காலை மற்றும் மாலை பிரேக் தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது, என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    கும்பகோணம் அருகில் தேப்பெருமாநல்லூர் என்ற இடத்தில் உள்ள விஸ்வநாதர் ஆலய மூலவருக்கு 22 ஆயிரம் ருத்ராட்சம் கொண்டு ஆவுடை, பாணம், நாகம் ஆகியவற்றுக்கு கவசம் அணிவிக்கிறார்கள்.
    கும்பகோணம் அருகில் தேப்பெருமாநல்லூர் என்ற இடத்தில் விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள மூலவருக்கு 22 ஆயிரம் ருத்ராட்சம் கொண்டு ஆவுடை, பாணம், நாகம் ஆகியவற்றுக்கு கவசம் அணிவிக்கிறார்கள்.

    பிரதோஷம், சிவராத்திரி தினங்களில் இந்த அலங்காரத்தில் இறைவனை தரிசித்தால், விசேஷ பலன் கிடைக்கும் என்கிறார்கள். சூரியன் தன் ஒளிக் கதிர்களால் தினமும் இறைவனை வழிபடும் தலம் இதுவாகும்.
    ×