என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    சென்னிமலை முருகன் கோவிலில் இனி மேல் பக்தர்கள் கொண்டு வரும் பால், பஞ்சாமிர்தம், தயிர் உட்பட அபிஷேகப் பொருட்களில் ஆறு கால பூஜை நேரத்தில் கூட மூலவருக்கு அபிஷேகம் கிடையாது.
    சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில், மூலவர் திருமேனி பாதுகாப்பையொட்டி, தினமும் ஆறு கால பூஜைகளில் மட்டும் பாலாபிஷேகம், சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

    மற்ற நேரங்களில் உற்சவ மூர்த்திக்குதான் அபிஷேகம் நடக்கிறது. பூஜை நேரம் அறிவிக்கப்பட்டு நடை முறையில் உள்ளது. ஆறு கால பூஜையில் காலை விளா பூஜை காலை, 6.40 மணிக்கும், காலசாந்தி, 7:40 மணிக்கும், உச்சிகால பூஜை, 11:40 மணிக்கும், சாயரட்சை 4:40 மணிக்கும், ராக்கால பூஜை, 6:40 மணிக்கும், அர்த்தசாம பூஜை, இரவு, 7:40 மணிக்கும் நடக்கிறது. தற்போது இது நடை முறையில் உள்ளது.

    இந்த ஆறு கால பூஜை நேரத்தில் பக்தர்கள் கொண்டு வரும் பால், தயிர், இளநீர், உட்பட அபிஷேகப் பொருட்களில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வந்தது.பக்தர்கள் பால், தயிர் உட்பட அபிஷேக பொருட்கள் எந்த நேரத்தில் கொண்டு வந்தாலும் அபிஷேகம் செய்ய வேண்டும் என ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.

    பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அதிக அளவில் பால், தீர்த்தங்கள் கொண்டு வந்து மூலவருக்கு அபிஷேகம் செய்து வருகிறார்கள். இதனால், மூலவர் திருமேனி பாதிக்கப்படுகிறது என ஒரு தரப்பினரும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

    இது குறித்து இரு தரப்பினரும் அமைச்சர் முத்துசாமியிடம் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் நேரில் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்த அமைச்சர் முத்துசாமி இரு தரப்பினர் மற்றும் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் என அனைவரிடமும் கருத்து கேட்டடார். மேலும், திருக்கோவில் இணை ஆணையரின் கருத்தும் கேட்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) முதல்திருக்கோவில் நிர்வாகம் சார்பாக கால பூஜை நேரத்தில் கால பூஜை அளவின் படி பால், தயிர், பஞ்சாமிரதம் என அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு அதில் மட்டும் மூலவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். திருக்கோவில் சார்பாக தரும் மாலை மட்டும் மூலவருக்கு அணிவிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இனி மேல் பக்தர்கள் கொண்டு வரும் பால், பஞ்சாமிர்தம், தயிர் உட்பட அபிஷேகப் பொருட்களில் கால பூஜை நேரத்தில் கூட மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. உற்வருக்கு மட்டும் காலபூஜை நேரம் தவிர மற்ற நேரத்தில் செய்யப்படும்.

    பக்தர்கள் கொண்டு வரும் மாலை, பூ, என அனைத்தும் மூலவர் பாதத்தில் சமர்பணம் செய்வது அல்லது உற்வருக்கு அணிவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மூலவருக்கு அபிஷேகம்செய்யப்படாது. உற்சவருக்கு மட்டும் பால் அபிஷேகம் செய்யப்படும். இதற்கு ரூ.25 என்ற பழைய கட்டணம் வசூலிக்கப்படும்.

    இந்த புதிய உத்ததரவுகள் அனைத்தும் இன்று முதல் கடைபிடிக்கப்படும். இது குறித்து திருக்கோவில் தலைமை குருக்கள், குருஸ்தானீகம் உட்பட 17 அர்ச்சகர்களுக்கும் திருக்கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்துபக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விரைவில் அறிவிப்பு பலகை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்க தேவையான செல்வத்தையும், நிலையான சந்தோஷத்தையும் நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தா..! என்று குபேரனை மனதுக்குள் நினைத்து வேண்டி கொள்ள வேண்டும்.
    ஓம் ஸ்ரீம் ஹரீம் ஐம் குபேர லக்ஷ்ம்யை
    கமல தாரிண்யை தனாகர்ஷிண்யை ஸ்வாஹா!

    இதை தினமும் தொழில் தொடங்கும் முன்பு 108 முறை சொன்னால் செல்வம் பெருகும்.
    பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளியவுடன், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வாரும் எழுந்தருளி மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3-வது திதியான அட்சய திருதியை தினத்தில் கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோவில்களிலிருந்து 12 கருட வாகனங்களின் உற்சவர் பெருமாள் புறப்பட்டு, ஒரே இடத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
    அதேபோல இந்த ஆண்டு கும்பகோணம், டி.எஸ்.ஆர். பெரிய தெருவில், காசிக்கடை வர்த்தகர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அலங்காரப் பந்தலில் 12 கருடசேவை நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது..

    இதில் கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி, சக்கரபாணிசுவாமி, ராமசுவாமி, ஆதிவராக சுவாமி, ராஜகோபாலசுவாமி, பாட்சாரியார் தெரு கிருஷ்ணசுவாமி, வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமசுவாமி, சோலையப்ப முதலியார் அக்ரகாரம் ராமசுவாமி மற்றும் மல்லுகச்செட்டித்தெரு சந்தான கோபாலகிருஷ்ணசுவாமி, அகோபிலமடம் லட்சுமி நரசிம்ம சுவாமி, சீனிவாச பெருமாள், நவநீதகிருஷ்ணன் சுவாமிகளின் 12 உற்சவர்கள், கருட வாகனத்தில் எழுந்தருளி நேர் எதிரே ஆஞ்சநேயருடன் காட்சியளித்தனர்.

    பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளியவுடன், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வாரும் எழுந்தருளி மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கருட சேவையை யொட்டி கும்பகோணம் பெரிய தெருவில் அதிகாலையிலேயே பக்தர்கள் அதிக அளவில் திரண்டதால் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    புஷ்கரணியையொட்டி சங்கராபரணி ஆற்றின் கரையில் 64 அடி உயர சிவன் சிலை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை வைகாசி மாதம் பிறந்ததும் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
    குருபகவான் பெயர்ச்சியடையும்போது அந்த ராசிக்குரிய நதியில் புஷ்கரணி விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் இடம்பெறுகிறார்.

    இதையொட்டி கங்கை நிதிக்கு இணையானதாக கருதப்படும் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் அருகே சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இதற்காக பல்வேறு நதிகளில் இருந்தும் புனிதநீர் எடுத்து வரப்பட்டு சங்கராபரணி ஆற்றில் கலக்கப்பட உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புஷ்கரணியையொட்டி சங்கராபரணி ஆற்றின் கரையில் 64 அடி உயர சிவன் சிலை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை வைகாசி மாதம் பிறந்ததும் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் புஷ்கரணி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்ட செயற்பொறியாளர் மணவாளன், இந்து அறநிலையத்துறை அதிகாரி தங்கமணி, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் ரங்கமன்னார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அப்போது திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும் புஷ்கரணி விழாவுக்குவரும் பக்தர்களுக்கானஅடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.திருக்காஞ்சியில் புஷ்கரணி விழா நடத்தப்படுவதையொட்டி 64 அடி உயர சிவன் சிலை அமைக்கப்பட உள்ளது.

    குருபகவான் பெயர்ச்சியடையும்போது அந்த ராசிக்குரிய நதியில் புஷ்கரணி விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் இடம்பெறுகிறார்.

    இதையொட்டி கங்கை நிதிக்கு இணையானதாக கருதப்படும் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவில் அருகே சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இதற்காக பல்வேறு நதிகளில் இருந்தும் புனிதநீர் எடுத்து வரப்பட்டு சங்கராபரணி ஆற்றில் கலக்கப்பட உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்கரணியையொட்டி சங்கராபரணி ஆற்றின் கரையில் 64 அடி உயர சிவன் சிலை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை வைகாசி மாதம் பிறந்ததும் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் புஷ்கரணி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்ட செயற்பொறியாளர் மணவாளன், இந்து அறநிலையத்துறை அதிகாரி தங்கமணி, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் ரங்கமன்னார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அப்போது திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும் புஷ்கரணி விழாவுக்குவரும் பக்தர்களுக்கானஅடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
    கிறிஸ்தவத்தை தழுவிய பின்னர் தேவசகாயமும், அவரது மனைவியும் ஏழைகளின் வாழ்வு முன்னேறவும், சாதிய கொடுமைகளை கண்டித்தும், மூட நம்பிக்கைகளை எதிர்த்தும் குரல் கொடுத்தனர்.
    உலகம் முழுவதும் கிறிஸ்தவ மறைபரப்பு பணியில் ஈடுபடுவோர், கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி உலக மக்களின் நன்மைக்காகவும் பாடுபட்டனர்.

    இறப்பிற்கு பிறகும் அவர்கள் மக்களின் மனதில் இடம்பிடித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வந்தனர். அந்த வகையில் மக்களால் பெரிதும் போற்றப்படும் நபர்களுக்கு உலக கத்தோலிக்கர்களின் தலைமையகமான வாடிகன், புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கும்.

    இந்த பட்டம் வழங்கப்படுவதற்கு முன்பு பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படும். அந்த நடைமுறைகளுக்கு பிறகு போப்பாண்டவர் இந்த பட்டத்தை வழங்குவார்.

    அந்த வகையில் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் மக்கள் பணியாற்றிய அன்னை தெரசா, கேரளாவில் கன்னியாஸ்திரியாக இருந்து மறைந்த அல்போன்சம்மாள் ஆகியோருக்கு ஏற்கனவே புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தேவசகாயத்திற்கு வருகிற 15ந்தேதி வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.

    தேவசகாயம், கன்னியா குமரி மாவட்டம் நட்டாலம் பகுதியில் 23.4.1712-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் நீலகண்டன். தமிழ், மலையாளம், வடமொழிகளை கற்ற நீலகண்டன், சிலம்பம், மல்யுத்தம், குதிரையேற்றம், அம்பு எய்தல், அடி முறைகள் ஆகியவற்றையும் கற்று தேர்ந்தார்.

    ஆயுத பயிற்சியும், போர் பயிற்சியும் பெற்ற நீலகண்டன், திருவிதாங்கூர் மன்னராக இருந்த மார்த்தாண்ட வர்மா படையில் வீரராகவும் இருந்தார். அப்போது அவருக்கு திருமணமும் நடந்தது.

    அதன்பின்பு நீலகண்டனை தனது அரசவை அலுவலராக மன்னர் நியமித்தார். அப்போது நடந்த குளச்சல் போரில் டச்சு படைதளபதியாக இருந்த டிலனாய் என்பவரை மன்னர் மார்த்தாண்ட வர்மா சிறைபிடித்தார்.

    கத்தோலிக்கரான டிலனாய், சிறைக் கைதியாக இருந்தாலும் மன்னரின் அன்பை பெற்றதால் அவரது படைதளபதியாக நியமிக்கபட்டார்.

    அப்போது டிலனாயுடன் நீல கண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. நீலகண்டன் தொடர் பணிகளால் துயருறும் போது டிலனாய் அவருக்கு ஆறுதல் கூறினார். அதோடு ஏசுவின் போதனைகளையும் அவருக்கு எடுத்து கூறினார். இதனை கேட்க, கேட்க நீலகண்டன் மனதில் மாற்றம் ஏற்பட்டது. அவர் கிறிஸ்தவத்தை தழுவ முடிவு செய்தார்.

    அதன்படி 1745ம் ஆண்டு மே மாதம் 14ம் நாள் இப்போதைய நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தில் உள்ள திருக்குடும்ப ஆலயத்தில் நீலகண்டன் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவராக மதம் மாறினார். அதன்பிறகு அவரது பெயர் தேவசகாயம் என அழைக்கப்பட்டது அவரது மனைவியும் பெயரை ஞானப்பூ என மாற்றி கொண்டார்.

    கிறிஸ்தவத்தை தழுவிய பின்னர் தேவசகாயமும், அவரது மனைவியும் ஏழைகளின் வாழ்வு முன்னேறவும், சாதிய கொடுமைகளை கண்டித்தும், மூட நம்பிக்கைகளை எதிர்த்தும் குரல் கொடுத்தனர்.

    தேவசகாயத்தின் நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த மன்னர் தரப்பினர் அவரை அழிக்க முடிவு செய்தனர். இதையடுத்து அவரது பதவிகள் பறிக்கப்பட்டன. 1749ம் ஆண்டு தேவசகாயம் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் அவரை கொன்று விட முடிவு செய்து ஊர், ஊராக அழைத்து செல்லப்பட்டார். 1752ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ந்தேதி ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடி மலைக்கு அவரை அழைத்து சென்ற வீரர்கள் அங்கு வைத்து அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். தேவசகாயத்தின் உடலில் 5 குண்டுகள் பாய்ந்தது. பின்னர் அவரது உடலை வீரர்கள் பாறையில் இருந்து உருட்டி விட்டனர்.

    தேவசகாயத்தின் உடலில் எஞ்சிய பாகங்களை கண்டுபிடித்து சேகரித்த கிறிஸ்தவர்கள், அதனை கோட்டார் சவேரியார் பேராலயத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு ஆலய பீடத்தின் முன்பு அவை அடக்கம் செய்யப்பட்டது.

    மறைந்தாலும் அவர் தன்னை தேடி வரும் மக்களின் இன்னல் போக்க இறைவனிடம் வேண்டி அவர்கள் கேட்ட வரங்களை பெற்று கொடுத்தார். இதனால் தேவசகாயம் புகழும், அவரது புதுமைகளும் பலராலும் பரவசத்துடன் பேசப்பட்டது.

    அன்று முதல் தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று போப்பாண்டவருக்கு கோரிக்கை விடப்பட்டது. அதன்படி முதலில் மறைசாட்சியாக அறிவிக்கப்பட்ட தேவசகாயம், வருகிற 15ந் தேதி வாடிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் நடக்கும் விழாவில் புனிதராக அறிவிக்கப்பட உள்ளார்.

    இந்தியாவில் இருந்து இதுவரை புனிதராக அறிவிக்கப்பட்ட யாரும் இல்லற வாழ்வில் ஈடுபட்டு புனிதர் பட்டம் பெறவில்லை.

    ஆனால் தேவசகயாம் மட்டும் குடும்ப வாழ்வில் இருந்து இறைப்பணிக்கு திரும்பி இப்போது புனிதராகவும் உயர்த்தப்பட்டு உள்ளார். இதனால் அவர் இந்தியாவின் முதல் இல்லற புனிதர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    தேவசகாயம் புனிதர்பட்டம் பெற்றமைக்கான நன்றி பெருவிழா வருகிற ஜுன் மாதம் 5-ந்தேதி அவர் கொல்லப்பட்ட காற்றாடி மலையில் வைத்து நடக்க உள்ளது.

    இந்த விழாவில் கர்டினால்கள், பேராயர்கள், ஆயர்கள் என பலரும் கலந்து கொள்கிறார்கள்.

    இதையும் படிக்கலாம்...குபேரனுக்கு விரதம் இருந்து யந்திர வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள்
    சங்கராபுரம் அருகே புனித அடைக்கல அன்னை ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தில் பழமை வாய்ந்த புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்பவனி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர் பவனி நடைபெறவில்லை.

    இந்த ஆண்டுக்கான விழா கடந்த 22ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் மாலை நேரத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. முன்னதாக பங்குதந்தை சகாயசெல்வராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    பின்னர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் காவல் சம்மனசு, சூசையப்பர், அந்தோணியார், புனித அடைக்கல அன்னை, புனித ஜெபஸ்தியார் ஆகிய சொரூபங்கள் வைக்கப்பட்டன. தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது. இந்த தேர்பவனியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

    தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் விரியூர், பழையனூர், சோழம்பட்டு, அருளம்பாடி, மைக்கே ல்புரம், சவேரியார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    தஞ்சை மகர்நோன்பு சாவடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சித்திரை சிறப்பு திருவிழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தஞ்சை மகர்நோன்பு சாவடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் 96-ம் ஆண்டு சித்திரை சிறப்பு திருவிழா நேற்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு பெருமாள் கருட சேவை புறப்பாடு நடைபெற்றது. பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவில் 5-ந் தேதி வெண்ணைத்தாழி புறப்பாடு, 8-ந் தேதி திருக்கல்யாண வைபவம், இரவு சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து 9 ஆம் தேதி வசந்த உற்சவம் இரவு புறப்பாடு, 11-ந் தேதி ராஜகோபால சுவாமி புறப்பாடு, 13-ந் தேதி அனுமந்த வாகனம் இரவு புறப்பாடு, 15-ந் தேதி குதிரை வாகனம் இரவு புறப்பாடு நடைபெற உள்ளது. 18-ந் தேதி விடையாற்றி விழாவுடன் விழா நிறைவடைய உள்ளது.
    வெளிநாடுகளில் இந்தியாவைப் போல ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, போன்ற நாடுகளில் குபேரனை ‘சிரிக்கும் கடவுளாக’ வணங்குகின்றனர்.
    செல்வத்திற்கும் தன தான்யத்திற்கும் அதிபதியான குபேரரை விரதம் இருந்து வணங்கினால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. குபேர வழிபாட்டின் போது லட்சுமியையும் வணங்கவேண்டும். இதனால் வழிபாட்டின் முழு பலனும் கிடைக்கும். குபேரர் நிலத்தில் விளையும் தானியங்களுக்கு அதிபதியாக திகழ்கிறார். இதனால் விவசாயிகள் தங்கள் விவசாய விளை பொருட்களை குபேரர் முன் வைத்து வழிபடலாம். அறுவடை காலங்களில் குபேரனுக்கு காணிக்கையாக விளை பொருட்களை படைக்கின்றனர்.

    வெளிநாடுகளில் இந்தியாவைப் போல ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, போன்ற நாடுகளில் குபேரனை ‘சிரிக்கும் கடவுளாக’ வணங்குகின்றனர். புத்த மதத்திலும் குபேர வழிபாடு உள்ளதால் சீனர்களும் குபேர வழிபாடு செய்கின்றனர். மதங்கள் வேறுபட்டாலும் குபேர அம்சம் ஒன்றுதான். குபேரரைப் போல குள்ளமான உருவம், தொப்பை, கையில் கலசம், பொன்முட்டை ஆபரணங்கள் என சிரிக்கும் புத்தருக்கும் உள்ளது. அட்சய திருதியை அன்று குபேர அம்சத்தை வணங்கினால் வேண்டிய அளவிற்கு செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

    அதிர்ஷ்டம் தரும் குபேர யந்திரத்தை புரசு இலையில், தாமிரம் அல்லது வெள்ளி அல்லது தங்கத்திலான 3+3 அளவுள்ள தகடை ஒன்பது கட்டங்களாக்கி எப்படி கூட்டினாலும் 72 வருகிற மாதிரி எழுதி, தாமரை மலர் கொண்டு துடைத்து, பால், பன்னீரால் கழுவி சிவப்பு நிற பட்டுத் துணியின் மீது வைத்து ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கில் நெய் தீபம் ஏற்றி குபேர படத்திற்கும் தாமரை மலரால் அர்ச்சித்து 72 நாட்கள் கீழே உள்ள மந்திரத்தை ஜபித்து வந்தால் பெரும் செல்வம் சேரும் . பிரபுக்களும், செல்வந்தர்களும் தேடி வந்து உதவுவார்கள். இந்த யந்திர பூஜைக்கு கைமேல் பலன் உண்டு.

    இந்த யந்திரன் சிறப்பம்சம் இதில் குறிப்பிட்டுள்ள எண்களை எந்த முறையில் கூட்டினாலும் அது 72 ஆக வரவேண்டும். இந்த 72-ன் கூட்டுத் தொகை ஒன்பதாக வரும்.
    இந்த ஆண்டு அட்சய திருதியை தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இன்று நாம் எந்த செயலைத் தொடங்கினாலும் அது குறைவே இல்லாமல் பெருகும் என்பது ஐதீகம்.
    கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் யார் ஒருவருக்கு முழுமையாக கிடைக்கிறதோ, அவர்களது வாழ்க்கையும் நிறைவானதாக இருக்கும். இந்த மூன்றில் எந்த ஒன்று குறைந்தாலும் வாழ்க்கை பூரணத்துவம் பெறாது.

    செல்வம் இருந்து கல்வியும் வீரமும் இல்லாவிட்டால் எந்த பிரயோஜனமும் இல்லை. சிலரிடம் கல்வி இருக்கும். ஆனால் செல்வமும், துணிச்சலான வீரமும் இல்லாமல் தவிப்பார்கள். எனவே கல்வி, செல்வம், வீரம் மூன்றும் வேண்டும்.

    இந்த மூன்றையும் பெற்றுத் தரும் அரிய திருநாளாக அட்சய திருதியை தினம் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாவது நாள் அட்சய திருதியை தினமாகும்.

    அதன்படி இந்த ஆண்டு அட்சய திருதியை தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இன்று நாம் எந்த செயலைத் தொடங்கினாலும் அது குறைவே இல்லாமல் பெருகும் என்பது ஐதீகம்.

    அதனால்தான் நிறைய பேர் அட்சய திருதியை தினத்தன்று புதிய பொருட்களையும், தங்கத்தையும் போட்டி போட்டு வாங்குவார்கள். இன்று எது வாங்கினாலும அது இரட்டிப்பு பலன்களைத் தரும் என்பதால்தான் மக்கள் தங்களுக்கு விருப்பமானவற்றை வாங்குவார்கள்.

    ஆனால் ஒன்றை நாம் மறந்து விடக்கூடாது. இன்றுய தினம் நாம் எந்த செயல் செய்தாலும் அது உங்களுக்கே இரட்டிப்பாக திரும்பி வந்து விடும். நீங்கள் ஒருவரை இன்று வஞ்சனை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வஞ்சனை உங்களுக்கு 2 மடங்காக திரும்பி வந்து விடும்.

    அதே சமயத்தில் இன்று நீங்கள் தானம் செய்து பாருங்கள். அந்த தான பலன் உங்கள் மனதை குளிர்விக்கும் வகையில் இரண்டு மடங்காக உங்களுக்கே புண்ணியமாக திரும்பி வந்து விடும். புண்ணியம் வேண்டாம் என்று யாருமே சொல்ல மாட்டார்கள். புண்ணியத்தை தேடிக் கொள்ள இன்று அருமையான நாளாகும்.

    “நானே மாதச் சம்பளம் வாங்கி விட்டு, மாதக் கடைசியில் அல்லாடிக்கிட்டு இருக்கிறேன். இதுல எதை தானம் செய்வது?” என்று பலர் நினைக்கக் கூடும். தானம் செய்வதற்கு பணக்காரராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நல்ல மனசு இருந்தால் போதும்.

    தாகத்தில் தவித்து, நா வறண்டு, யாராவது ஒரு தம்ளர் தண்ணீர் தர மாட்டார்களா என்ற நிலையில் இருக்கும் ஒரு ஏழைக்கு 10 ரூபாய் கொடுத்து ஒரு கூல்டிரிங்ஸ் வாங்கிக் கொடுப்பது கூட தானம்தான். கொஞ்சம் வசதி இருந்தால் ஒரு ஏழைக்கு குடை வாங்கி கொடுக்கலாம். வெயில் வாட்டி வதைக்கும் தற்போதைய நிலையில் ஏழை எளியவர்களுக்கு செருப்பு வாங்கிக் கொடுக்கலாம்.

    இன்னும் கொஞ்சம் கூடுதல் வசதி இருப்பவர்கள் இன்றுய தினம் 5 ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் கொடுக்கலாம். ஒரு வேளையாவது அவர்கள் வயிறார சாப்பிட்டு விட்டு உங்களை வாழ்த்தினால், அது அட்சயமாக பெருகி உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் பிள்ளை, குட்டிகளுக்கும் புண்ணியத்தைத் தேடி கொடுக்கும்.

    எனவே இன்று அட்சய திருதியை தினத்தன்று புதிய பொருட்கள் வாங்குவதற்கு எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகிறீர்களோ... அதே அளவு ஆர்வத்தை தானம் செய்வதற்கும் காட்டுங்கள்.

    அட்சய திருதியை தினத்தன்று செய்யும் தானம் உங்கள் குடும்பத்தை செழிக்க வைக்கும். அந்த செழிப்பே நாளடைவில் உங்களுக்கு கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் பெற்றுத் தருவதாக மாறும். இன்று தானம் செய்யும் முன்பு மகாலட்சுமியையும், குபேரனையும் மனம் உருகி வழிபடுங்கள். “நீங்கள் எனக்கு தந்த செல்வத்தை ஏழைகள் மனம் மகிழும் வகையில் நான் செலவிடுகிறேன். என்னை ஆசீர்வதியுங்கள்” என்று மகாலட்சுமியிடமும் குபேரனிடமும் மனதார சொல்லுங்கள்.

    உங்கள் பிரார்த்தனையை ஏற்று மகாலட்சுமியும் குபேரனும் மகிழ்ச்சி அடைந்து உங்கள் மீது அருள் மழை பொழிவார்கள். செல்வத்துக்கு அதிபதிகளான லட்சுமி, குபேரன் இருவரது பார்வையும் ஒருங்கே உங்களுக்கு கிடைத்தால் பிறகு கேட்கவா வேண்டும்.

    உங்கள் வாழ்வு வளமாகும். அமைதி பெறும். அது மட்டுமின்றி ஆனந்தமாக வாழ்வீர்கள். இன்று நீங்கள் செய்யும் தான-தர்மங்களை பொருத்தே இந்த செல்வங்கள் எல்லாம் குன்றாத அருவியாக உங்களுக்கு வெள்ளமாக வரும். எனவே இன்று தானம் செய்யுங்கள். தரணி போற்றும் புண்ணியத்தைப் பெறுங்கள்.
    விபத்துகள், துர்மரணங்கள் ஏற்படாமல் இருக்கவும், எம பயம் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும், எதிரிகளால் ஏற்படும் அச்சங்கள், தொந்தரவுகள் நீங்கவும் அருள்புரியும் உத்தம மூர்த்தியாக இத்தலத்து சனிபகவான் கருதப்படுகிறார்.
    சூரிய தேவனின் மகன், சனிபகவான், இன்னொரு மகன் எமதர்மன். அண்ணன் தம்பியாக இருந்தபோதும் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டனர். அப்படி ஒரு சமயம் வந்த சண்டையில் அண்ணன் எமதர்மன் கோபத்தோடு தம்பி சனிபகவானின் காலில் ஓங்கி அடிக்க, தம்பியின் கால் ஊனமானது.

    மனவருத்தத்துடன் புறப்பட்ட சனி, மனித உருவத்தில் பூவுலகில் சிவதரிசனம் செய்தபடியே பல தலங்களுக்கும் சென்றார். வழியில் பிச்சை எடுத்து கிடைத்ததை சமைத்து ஏழைகளுக்கும், முதியவர்களுக்கும் அளித்து தாமும் உண்டு வந்தார்.

    ஊர் ஊராகச் சுற்றி வந்த சனிபகவான், விளா மரங்கள் நிறைந்த ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். நடந்து போகும் வழியில், ஒரு பாதையைக் கடந்தபோது ஓரிடத்தில் விளாமரத்தின் வேரில் தடுக்கி நிலை தடுமாறி, அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தார்.

    அவர் கீழே விழுந்த அதே சமயத்தில், அந்தப் பள்ளத்தில் இருந்து குபீரென்று ஒரு நீரூற்று தோன்றியது. அந்த நீர் சனிபகவானின் மேனியில் பட்ட மறுநொடி, அவரது ஊனம் மறைந்தது. கூடவே ஓர் அசரீரி எழுந்தது. சனிபகவானே... பல கோடி யுகங்களாக மறைந்திருந்த பூச ஞான வாவி என்ற ஞான தீர்த்தம் இது.

    சித்திரைத் திங்கள், வளர்பிறை திருதியையும், பூச நட்சத்திரமும், சனி வாரமும் சேர்ந்த இந்தப் புனித நன்னாளில் இத்தீர்த்தம் உன்னால் மீண்டும் சுரந்துள்ளது.
    விளாவேர் தடுக்கி நீ விழுந்ததால் சுரந்த ஞான வாவி, இத்தலத்தில் புனித தீர்த்தக்குளமாக விளங்கும். அதனால் இந்தக் கிராமம் விழக்குளம் என்று அழைக்கப்படும்! என்றது அந்த அசரீரி.

    தற்போது மருவி விளங்குளம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வரும் அத்தலத்தில்தான், சனிபகவானுக்கு அருளிய ஈசன், அட்சயபுரீஸ்வரராக கோவில் கொண்டு அருள்கிறார். கி.பி.13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம். முதலாம் மாறவர்மன் பராக்ரம பாண்டியன் இவ்வாலய இறைவனை வழிபட்ட தகவல், கல்வெட்டு மூலம் காணக் கிடைக்கின்றது.

    ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய கோபுரம். பெரிய பிராகாரத்தை அடுத்து உள்ளது வசந்த மண்டபம். இந்த மண்டபத்தின் வலதுபுறம் அன்னை அபிவிருத்தி நாயகியின் சன்னதி உள்ளது. அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் தண்டத்தையும், தாமரையையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் புன்னகை தவழ தென்திசை நோக்கி அருள்பாலிக்கின்றாள்.

    மகா மண்டபத்தை அடுத்து உள்ள அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் இரட்டை விநாயகரும் வலதுபுறம் மாரியம்மன், பிரதோஷ நாயகர் திருமேனிகளும் உள்ளன. அடுத்துள்ள கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியராக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இவர், சனி பகவானுக்கு அருளிய தினம் ஓர் அட்சய திருதியை நாள். எனவே இறைவன், அட்சயபுரீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார்.

    அட்சயம் என்றால் வளர்வது என்று அர்த்தம். இத்தலத்திற்கு ஒருமுறை வந்து போனாலே பக்தர்களின் இல்லத்தில் செல்வம் உள்ளிட்ட பதினாறு பேறுகளும் தழைத்து வளரும் என்பது ஐதீகம். அது மட்டுமல்ல, அம்பிகையின் திருப்பெயரும் ‘அபிவிருத்தி’ நாயகி என அமைத்து, மேலும் மேலும் செல்வங்கள் வளரும் என்பதையே உறுதிப்படுத்துகிறது.

    செல்வங்கள் அனைத்துக்கும் அதிபதியான குபேரன், ஈசனை வழிபட்டே சங்கநிதி, பதுமநிதிகளைப் பெற்றான் என்கிறது புராணம். அப்படி குபேரன் செல்வங்களைப் பெற்று அளகாபுரிக்கு அரசனானதும், அட்சயபுரீஸ்வரரின் அருளால்தான் என்பதால் இத்தலம் அட்சய திருதியைக்கு உரிய தனிச்சிறப்புத் தலமாகக் கூறப்படுகிறது.

    தேவ கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, சிவதுர்க்கை, மகாலட்சுமி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.திருச்சுற்றில் வன்னி மரம் தழைத்து நிற்கிறது. தென்திருச்சுற்றில் ஆலயத்திருக்குளமான பூச ஞான வாவியின் நுழைவாயில் உள்ளது.வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், விநாயகர், நாகர் சன்னதிகள் உள்ளன. சண்டீஸ்வரர், காலபரவர், சூரியன் ஆகியோரும் காட்சி அளிக்கின்றனர்.

    இத்தலத்தில் சிவபெருமான் அருளால் சனி பகவானுக்கு திருமணமாகும் பாக்கியமும் கிடைத்ததாம். எனவே இத்தலத்தில் மந்தாதேவி, ஜேஷ்டா தேவி என்ற இரு பத்தினிகளுடன் ஆதி பிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரோடு தனிச் சன்னதியில் அமைந்திருக்கிறார் சனிபகவான்.

    இவரது ஊனத்தை காகம் வந்து பெற்றுக் கொண்டதாம். சனிபகவான் அந்தக் காலத்தையே தன் வாகனமாக ஏற்றார் எனவும் தலபுராணம் சொல்கிறது. விபத்துகள், துர்மரணங்கள் ஏற்படாமல் இருக்கவும், எம பயம் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும், எதிரிகளால் ஏற்படும் அச்சங்கள், தொந்தரவுகள் நீங்கவும் அருள்புரியும் உத்தம மூர்த்தியாக இத்தலத்து சனிபகவான் கருதப்படுகிறார்.

    தசாபுக்தியாலோ, ஜாதக ரீதியாகவோ சனியின் பாதிப்புக்கு ஆளானவர்கள், இத்தலம் வந்து சனி பகவானுக்கும், இறைவன், இறைவிக்கும் அர்ச்சனை செய்து விட்டு, பிராகாரத்தில் காக்கைக்கு உணவு படைக்கின்றனர். இதனால் சனிதோஷம் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும் என்பத நிச்சயம்.

    தல விருட்சமான விளாமரம், கோவிலின் வடதிசையில் உள்ளது. பூச நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஆலயம் இது என்கிறார்கள். தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளிலும், நந்தி பகவானுக்கு பிரதோஷ காலங்களிலும், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    ஆலயத்தின் எதிரே தனிக்கோவிலில் விஜய விநாயகர், தன் தந்தையை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார். அட்சய திருதியை அன்று சனிபகவான் ஸ்தூல சூட்சும வடிவங்களில் அட்சயபுரீஸ்வரரை முழுவதும் வழிபடுவதாக ஐதீகம் நிலவுகிறது.
    லட்சுமி குபேரர் பூஜை அறையில் மகாலட்சுமி, குபேரர் படங்கள் இருந்தால் மஞ்சள் மலர்கள், அல்லது மல்லிகை மலர்களால் அலங்கரித்து அந்த படத்தின் முன் படியில் குத்தரிசியை நிரப்பி வைக்கலாம்.
    அட்சய திருதியை வீட்டு அலங்காரம் அட்சய திருதியை என்பது செல்வ வளம் தரும் நாளாக போற்றப்படுகிறது. அன்றைய தினம் மகாலட்சுமி அனைவரின் வீட்டிற்கும் வருகிறாள் என்பது ஐதீகம்.

    அட்சய திருதியை அன்று வீட்டை சுத்தம் செய்து, மாவிலை தோரணங்களால் அலங்கரித்து, பூஜை அறையை அலங்கரித்து தானம் செய்ய வேண்டும். அன்றைய தினம் முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது. கைக்குத்தல் அரிசி தான் முனை முறியாத அரிசி. அந்த முனை முறியாத அரிசியை புடைத்து எடுத்து, பணப் பெட்டியில், பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது.

    லட்சுமி குபேரர் பூஜை அறையில் மகாலட்சுமி, குபேரர் படங்கள் இருந்தால் மஞ்சள் மலர்கள், அல்லது மல்லிகை மலர்களால் அலங்கரித்து அந்த படத்தின் முன் படியில் குத்தரிசியை நிரப்பி வைக்கலாம். இதனால் வீட்டில் செல்வம் பெருகும்.

    மஞ்சள் மகிமை மங்களகரமானது மஞ்சள். இதில் அனைத்து மகிமையும் உள்ளது. இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம். மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம். தங்கம் என்பது லட்சுமியின் ஒரு அம்சம் என்றாலும் வெள்ளியால் பூஜை அறையை அலங்கரிக்கலாம். தங்கம் வாங்கினால்தான் நல்லது என்பது தவறு. அதற்குப் பதிலாக முனை முறியாத பச்சரிசி, மஞ்சள், வெள்ளி போன்ற பொருட்களெல்லாம் பூஜை அறையில் வாங்கி வைக்கும் போது நிச்சயம் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

    அட்சய திருதியை நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும், செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் கூறுகிறது.
    அட்சய திருதியை நாளில் கோவிலுக்குச் சென்று லட்சுமிதேவியை மனம் உருக வழிபட வேண்டும். “தாயே நீ தரும் செல்வத்தில் ஒரு பகுதியை நிச்சயம் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துவேன். ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்வேன். நோயாளிகளுக்கு உதவுவேன்”என வேண்டிக் கொள்ளுங்கள். மனதார தானம் செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

    குபேர லட்சுமி பூஜை

    செல்வத்திற்கு அதிபதியான கடவுள் குபேரர் ஆவார். அட்சய திருதியை நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும், செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் கூறுகிறது. இந்த நாளில் குபேர லட்சுமி பூஜை நடத்தப்படுகிறது. அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்ஷன குபேர யந்தரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங் கப்படுகிறது.

    பவானியில் புனித நீராடல்

    அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்க மேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண் ணியத் தீர்த்தத்தில் நீராடி னால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.

    இந்த வருட அட்சய திருதியையின் சிறப்பு

    அட்சய திருதியை நாள் ரோகிணி நட்சத்திர நாளில் வரும்போது பல லட்சம் மடங்கு நற்பலன் தரும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த வருடம் இன்று திரிதியை திதி அமைவதோடு அன்றைய தினம் ரோகிணி நட்சத்திரமும் வருகிறது. எனவே இந்த வருடம் அட்சய திருதியை தினம் மிகச் சிறப்பானதாக சொல்லப்பட்டுள்ளது.

    அட்சய திருதியை அமையும் தினம் புதன்கிழமையாக இருந்தால், அதுவே கோடி மடங்கு நற்பலன் தரும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது. இந்த ஆண்டு ஜோதிட சாஸ்திரப்படி 2.5.2022 அன்று 58 நாழிகையிலேயே, அதாவது மறுநாள் அதிகாலை 5.10 மணிக்கே திரிதியை திதி வந்துவிடுகிறது. சூரிய உதயத்துக்கு முன்பு என்பதால் முதல் நாள் கணக்கில் வருகிறது. எனவே 2.5.2022 அன்றும் திரிதியை உள்ளதாகக் கொள்ளலாம். மேலும், 3.5.2022 அன்று அதிகாலையில் தொடங்கி மறுநாள் (4.5.2022) காலை 6.59 வரை திரிதியை திதி தொடர்வதால் அன்றும் காலை வரை அட்சய திருதியை தொடர்வதாகவே சொல்லலாம்.

    16 கருட சேவை

    கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் அட்சய திருதியை தினத்தன்று கருட வாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

    செல்வம் அளித்த பெருமாள்

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள திருக்கோளூரில் நவதிருப்பதி கோவில்களில் ஒரு ஆலயம் உள்ளது. இங்கு பெருமாள் சயன கோலத்தில் உள்ளார். இந்த பெருமாள்தான் குபேரனுக்கு மரக்கால் என்ற அளவை பாத்திரம் கொண்டு செல்வத்தை அளந்து கொடுத்தார். அந்த மரக்காலை தன் தலைக்கு அடியில் வைத்தபடி படுத்திருப்பார். இவருக்கு ‘வைத்தமாநிதி’ என்றும் செல்வம் அளித்த பெருமாள் என்றும் நாமம் சூட்டப்பட்டுள்ளது. அட்சய திருதியை நாளில் இவரைத் தரிசித்தால் வாழ்வில் வளம் சேரும்.

    என்னென்ன செய்யலாம்?

    அட்சய திருதியை அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பற்கான ஏற்பாடுகளை செய்யலாம். அல்லது பாட புத்தகங்கள் வாங்கலாம். புத்தகம் வெளியிடுதல், புண்ணியத்தலங்களுக்குச் செல்லுதல், வீடு, மனை, கிணறு சீர்திருத்தம் செய்தல், இடம் மாறிய அதிகாரிகள் பொறுப்பேற்றல் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுதல், புதிய ஒப்பந்தங்களை செய்தல், நெல், மஞ்சள், கரும்பு பயிரிடுதல் ஆகியவற்றை செய்யலாம். துர்க்கா,கவுரி, லட்சுமி, சிவ பூஜை நடத்தலாம்.
    ×