என் மலர்tooltip icon

    வழிபாடு

    சென்னிமலை முருகன் கோவில்
    X
    சென்னிமலை முருகன் கோவில்

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் அபிஷேக பொருட்கள் வழங்க அனுமதி இல்லை

    சென்னிமலை முருகன் கோவிலில் இனி மேல் பக்தர்கள் கொண்டு வரும் பால், பஞ்சாமிர்தம், தயிர் உட்பட அபிஷேகப் பொருட்களில் ஆறு கால பூஜை நேரத்தில் கூட மூலவருக்கு அபிஷேகம் கிடையாது.
    சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில், மூலவர் திருமேனி பாதுகாப்பையொட்டி, தினமும் ஆறு கால பூஜைகளில் மட்டும் பாலாபிஷேகம், சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

    மற்ற நேரங்களில் உற்சவ மூர்த்திக்குதான் அபிஷேகம் நடக்கிறது. பூஜை நேரம் அறிவிக்கப்பட்டு நடை முறையில் உள்ளது. ஆறு கால பூஜையில் காலை விளா பூஜை காலை, 6.40 மணிக்கும், காலசாந்தி, 7:40 மணிக்கும், உச்சிகால பூஜை, 11:40 மணிக்கும், சாயரட்சை 4:40 மணிக்கும், ராக்கால பூஜை, 6:40 மணிக்கும், அர்த்தசாம பூஜை, இரவு, 7:40 மணிக்கும் நடக்கிறது. தற்போது இது நடை முறையில் உள்ளது.

    இந்த ஆறு கால பூஜை நேரத்தில் பக்தர்கள் கொண்டு வரும் பால், தயிர், இளநீர், உட்பட அபிஷேகப் பொருட்களில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வந்தது.பக்தர்கள் பால், தயிர் உட்பட அபிஷேக பொருட்கள் எந்த நேரத்தில் கொண்டு வந்தாலும் அபிஷேகம் செய்ய வேண்டும் என ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.

    பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அதிக அளவில் பால், தீர்த்தங்கள் கொண்டு வந்து மூலவருக்கு அபிஷேகம் செய்து வருகிறார்கள். இதனால், மூலவர் திருமேனி பாதிக்கப்படுகிறது என ஒரு தரப்பினரும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

    இது குறித்து இரு தரப்பினரும் அமைச்சர் முத்துசாமியிடம் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் நேரில் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்த அமைச்சர் முத்துசாமி இரு தரப்பினர் மற்றும் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் என அனைவரிடமும் கருத்து கேட்டடார். மேலும், திருக்கோவில் இணை ஆணையரின் கருத்தும் கேட்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) முதல்திருக்கோவில் நிர்வாகம் சார்பாக கால பூஜை நேரத்தில் கால பூஜை அளவின் படி பால், தயிர், பஞ்சாமிரதம் என அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு அதில் மட்டும் மூலவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். திருக்கோவில் சார்பாக தரும் மாலை மட்டும் மூலவருக்கு அணிவிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இனி மேல் பக்தர்கள் கொண்டு வரும் பால், பஞ்சாமிர்தம், தயிர் உட்பட அபிஷேகப் பொருட்களில் கால பூஜை நேரத்தில் கூட மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. உற்வருக்கு மட்டும் காலபூஜை நேரம் தவிர மற்ற நேரத்தில் செய்யப்படும்.

    பக்தர்கள் கொண்டு வரும் மாலை, பூ, என அனைத்தும் மூலவர் பாதத்தில் சமர்பணம் செய்வது அல்லது உற்வருக்கு அணிவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மூலவருக்கு அபிஷேகம்செய்யப்படாது. உற்சவருக்கு மட்டும் பால் அபிஷேகம் செய்யப்படும். இதற்கு ரூ.25 என்ற பழைய கட்டணம் வசூலிக்கப்படும்.

    இந்த புதிய உத்ததரவுகள் அனைத்தும் இன்று முதல் கடைபிடிக்கப்படும். இது குறித்து திருக்கோவில் தலைமை குருக்கள், குருஸ்தானீகம் உட்பட 17 அர்ச்சகர்களுக்கும் திருக்கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்துபக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விரைவில் அறிவிப்பு பலகை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×