என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1-ந் தேதியில் இருந்து நேற்று வரை 3 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது.
    ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் கோவில்களில் கூழ், கஞ்சி உள்ளிட்டவை காய்ச்சி அம்மனுக்கு படைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

    அதே போல இந்த ஆண்டும் ஆடி மாதம் முதல் மற்றும் 2-வது செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    நேற்று ஆடி மாத 3-வது செவ்வாய்க்கிழமை ஆகும். அதோடு ஆடி பெருக்கும் சேர்ந்தே வந்தது. இதனால் அதிகாலையில் இருந்தே அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் கூட தொடங்கியது. பக்தர்கள் குடும்பம் குடும்பமாக கோவில்களில் திரண்டனர்.

    ஆனால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1-ந் தேதியில் இருந்து நேற்று வரை 3 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் கோவில்களில் திரண்ட பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் எப்படியேனும் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கோவிலுக்கு வெளியே நின்றபடி அம்மனை தரிசனம் செய்தனர்.

    அதே சமயம் கோவிலில் வழக்கமான பூஜை, அபிஷேகங்கள் நடந்தன. இந்த பூஜை மற்றும் அபிஷேகத்தை கோவிலின் நுழைவு வாயிலில் நின்றபடி பக்தர்கள் பார்த்து வணங்கினர். அந்த வகையில் நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவில், வடசேரி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம், புலவர்விளை முத்தாரம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வெளியே நின்றபடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். ஆனால் தற்காலிக தடையால் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் கோவிலில் வெளியே நின்று அம்மனை வழிபட்டனர். நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் மண்டைக்காடு கோவில் பகுதி களைக்கட்டியது.

    வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட உள்ளது. வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக வருவதை தவிர்க்க வேண்டும்.
    வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் வேளாங்கண்ணியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, கீழ்வேளூர் தாசில்தார் மாரிமுத்து, வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த்குமார், வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, தீயணைப்புத்துறை அலுவலர் அம்பிகாபதி, தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர், உணவக உரிமையாளர் சங்கத்தினர், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள், ஆட்டோ உரிமையாளர் சங்கத்தினர், கார் உரிமையாளர் சங்கத்தினர், மருந்து கடை உரிமையாளர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் அருண்தம்புராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணியில் உள்ள வணிகர் சங்கத்தினரை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நாகை, வேளாங்கண்ணி, நாகூர் உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் கூட்டம் கூடுவதை தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என மதத்தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கொரோனா 3-வது அலையை தடுக்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

    வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக வருகிற 6-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மதத்தலைவர்கள், அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதன்பிறகு எந்த மாதிரியான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து அறிவிக்கப்படும். வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக வருவதை தவிர்க்க வேண்டும் ..வணிக நிறுவனங்கள் தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
    ஆடிச்செவ்வாயன்று விழாக்கோலத்துடன் காணப்படும் அகரம்பள்ளிபட்டு கோவில் பூட்டப்பட்டதால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். தென்பெண்ணை ஆற்றில் ஆடு, கோழி பலியிட்டு பொங்கலிட்ட பக்தர்கள் கோவில் முன் வைத்து வழிபட்டு சென்றனர்.
    தமிழகம் முழுவதும் கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனையொட்டி பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவில் விழாக்கள் தடைசெய்யப்பட்டு தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டு கோவில்கள் மூடப்பட்டுள்ளன.

    வாணாபுரம் அருகே அகரம்பள்ளிபட்டில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. அரசின் தடை உத்தரவு காரணமாக 3-வது செவ்வாய் கிழமையான நேற்று திடீரென கோவில் நடை பூட்டப்பட்டது.ஆனால் இதனை அறியாத பொதுமக்கள் ஏராளமானோர் கோவிலுக்கு திரண்டு வந்ததால் வேதனை அடைந்தனர்.

    கூட்டத்தை போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் பக்தர்கள் அப்பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு ஏராளமான பக்தர்கள் கிடா, கோழி உள்ளிட்டவைகளுடன் வேன், கார், மாட்டுவண்டிகளில் திரண்டு வந்தனர்.்

    அவர்கள் ஆற்றுக்குள் ஆடு, கோழி பலியிட்டு பொங்கல் வைத்தனர். பின்னர் அதனை அகரம்பள்ளிபட்டு கோவில் முன் பகுதியில் கொண்டு வந்து வைத்து பூஜை செய்து பிறகு எடுத்துச் சென்றனர்.

    இதேபோல் வரகூரில் உள்ள ஸ்ரீ பிடாரி காளியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பதினெட்டு திருவிழாவை முன்னிட்டு தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா நடைபெறவில்லை.

    கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோமாசிப்பாடி பாலசுப்பிரமணியர் கோவிலில் முக்கிய விழாவான ஆடிக்கிருத்திகையன்று அரசின் தடை உத்தரவால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    பக்தர்கள் பலரும் தடை செய்யப்பட்ட பகுதியில் கோவிலை பார்த்தவாறு கற்பூரம் ஏற்றி வைத்து வணங்கிச் சென்றனர்.

    கண்ணமங்கலத்தில் கிராம தேவதை பிடாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
    பரிவர்த்தன ஏகாதசி அன்று லட்சுமி பூஜையையும் மக்கள் செய்கிறார்கள், ஏனெனில் இது லட்சுமி தேவியைப் பிரியப்படுத்த ஒரு சிறந்த சந்தர்ப்பமாக கருதப்படுகிறது.
    விஷ்ணுவின் வாமன அவதாரம் பரிவர்த்தன ஏகாதசி நாளில் வணங்கப்படுகிறது. இந்த நாளில் தூங்கும் போது ஸ்ரீ விஷ்ணு வளைவு போல, எனவே இது பரிவர்த்தன ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இது பத்ம ஏகாதசி என்ற பெயரிலும் அறியப்படுகிறது.

    இந்த நாளில் விஷ்ணுவின் வாமன அவதாரத்தை வணங்கும் மனிதர்கள் வாஜ்பாய் யாகத்திற்கு சமமான பழங்களை அறுவடை செய்கிறார்கள், மேலும் அவர்களின் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. இந்த நாளில் லட்சுமி பூஜையையும் மக்கள் செய்கிறார்கள், ஏனெனில் இது லட்சுமி தேவியைப் பிரியப்படுத்த ஒரு சிறந்த சந்தர்ப்பமாக கருதப்படுகிறது.

    பரிவர்த்தன ஏகாதசி விரத் பூஜா விதி

    பரிவர்த்தன ஏகாதசி வ்ரதமும் பூஜையும் பிரம்மா, விஷ்ணு மற்றும் மூன்று உலகங்களையும் வணங்குவதற்கு சமம். இந்த உண்ணாவிரதத்தின் பூஜா விடி பின்வருமாறு:

    * இந்த ஏகாதஷிக்கான மனித உண்ணாவிரதம் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தசாமியில் ஒரு நாள் முன்னதாகவே உட்கொள்ளக்கூடாது. இரவில், அவர்கள் தூங்கும் போது விஷ்ணுவின் பெயரை பரிந்துரைக்க வேண்டும்.

    * ஏகாதசி நாளில், அதிகாலையில் எழுந்து கடவுளின் பெயரை இணைக்கவும். நோன்புக்காக குளிக்கும் சபதம் எடுத்த பிறகு. பின்னர், விஷ்ணுவின் வெண்கலத்தின் முன் ஒரு நெய் விளக்கை ஏற்றி வைக்கவும்.

    * விஷ்ணுவை வழிபடுவதற்கு துளசி இலைகள், பருவகால பழங்கள் மற்றும் எள் விதைகளைப் பயன்படுத்துங்கள். இந்த நாளில் ஒருவர் உணவை உட்கொள்ளக்கூடாது, ஆனால் கடவுளை வணங்கிய பின்னர் மாலையில் பழங்களைப் பெறலாம்.

    * நோன்பு நாளில் மற்றவர்களை விமர்சிப்பதையும், இடுவதையும் தவிர்க்கவும். அது தவிர, காப்பர் பாத்திரங்கள், தயிர் மற்றும் அரிசி ஆகியவற்றை தானம் செய்யுங்கள்.

    * அடுத்த நாள் த்வாதாஷியில், சூரிய உதயத்திற்குப் பிறகு உண்ணாவிரதத்தைத் திறந்து, ஏழை நபர்கள் அல்லது பிராமணருக்கு உணவு மற்றும் நன்கொடை வழங்குங்கள்.
    ஏழுமலையானின் சீர் வரிசை பொருட்களை திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஒரு தட்டில் வைத்து, தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து சமர்ப்பணம் செய்தார்.
    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நேற்று நடந்தது. திருத்தணி முருகனுக்கு, திருப்பதி பெருமாள் சீர் கொடுக்கும் சிறப்பு வைபவம் நேற்று நடந்தது. இதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி மற்றும் அதிகாரிகள் பலர் திருததணிக்குச் சென்றனர்.

    அவர்கள், பெருமாள் சார்பில் பட்டு வஸ்திரம் மற்றும் தட்டுகளில் பல விதமான பழங்கள், மங்கள பொருட்கள் ஆகியவற்றை எடுத்து வந்தனர். அவர்களுக்கு, திருத்தணி
    முருகன் கோவில் தேர் வீதியில் மேள தாளம் முழங்க சிறப்பு மரியாதை செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பெருமாளின் சீர் வரிசை பொருட்களை திருமலை-திருப்பதி  தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஒரு தட்டில் வைத்து, தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து சமர்ப்பணம் செய்தார்.

    திருப்பதி ஏழுமலையான் சார்பாக கொடுக்கப்பட்ட பட்டு வஸ்திரம், பழம் மற்றும் மங்கள பொருட்கள் ஆடிக்கிருத்திகை அன்று இரவு திருத்தணி முருகனுக்கு வைக்கப்பட்டது.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நேற்று திருவாடிப்பூர உற்சவம் தொடங்கியது. வருகிற 11-ந்தேதி வரை திருவாடிப்பூர உற்சவம் நடக்கிறது.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நேற்று திருவாடிப்பூர உற்சவம் தொடங்கியது.

    அதையொட்டி கோவிலில் நேற்று காலை ஆண்டாள் தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    மாலை திருச்சி வாகனத்தில் கோவில் உள் பிரகாரத்தில் உற்சவர் ஆண்டாள் தாயார் எழுந்தருளி உலா வந்தார். வருகிற 11-ந்தேதி வரை திருவாடிப்பூர உற்சவம் நடக்கிறது.
    கோவில் சுற்றும் போது நாம் தூவிய பச்சரிசியை எறும்புகள் இழுத்து சென்று மழைக்காலத்தில் சாப்பிடும். அந்த உணவை எறும்பு சாப்பிடுகிறதா என முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக்கொண்டே இருப்பார்களாம்.
    நம் முன்னோர்கள் எத்தனை செய்தாலும் அதற்கு பின் ஒரு அறிவியல் உண்மை இருக்கும் என்பதை கண்கூடாக பார்க்க முடியும் ஏழு ஜென்ம பாவங்களையும் கூட பச்சரிசி கொண்டு தீர்க்க முடியும் என்கிறது ஐதீகம்.

    சனிக்கிழமை நாம் செய்ய வேண்டியது:

    சனிக்கிழமையன்று விடியற்காலை எழுத்து குளித்து விட்டு தூய்மையாக கையில் கொஞ்சம் பச்சரிசியை எடுத்துக்கொண்டு , அப்படியே சூரிய பகவானை பார்த்து வணங்கிவிட்டு, பின்னர் அதே அரிசியை கையில் வைத்துக்கொண்டு விநாயகரை மூன்று முறை சுற்றி வர வேண்டும். அப்போது கையில் இருக்கும் பச்சரிசியை தூவி விட அதனை எறும்பு முழுவதுமாக எடுத்து சென்று விட்டால் நம்முடைய ஏழு ஜென்ம பாவங்கள் அனைத்தும் தீர்ந்து விடும் என்கிறது ஐதீகம்.

    எறும்புகள் என்ன செய்யும் தெரியுமா ..?

    கோவில் சுற்றும் போது நாம் தூவிய பச்சரிசியை எறும்புகள் இழுத்து சென்று மழைக்காலத்தில் சாப்பிடும். இந்த உணவை சாப்பிட்டு முடிக்கவே எறும்புகளுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஆகுமாம். இந்த காலத்தில் எறும்பகளின் செயல்பாடும் அந்த உணவை எறும்பு சாப்பிடுகிறதா என முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக்கொண்டே இருப்பார்களாம்.

    அதாவது எறும்பின் எச்சில் அந்த பச்சரிசி மீது படும் போதே அந்த அரிசி கெடாமல் சில ஆண்டுகள் இருக்கும் . இதன்மூலம் மிகக்கொடுமையான விளைவுகளைத் தரக்கூடிய அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஏழரைச்சனி, கண்ட சனி ஆகியவற்றால் உண்டாகும் எந்த ஒரு தீங்கும் நம்மை அண்டாமல் இருக்குமாம். அதனால் தான் நம் முன்னோர்கள் எறும்புகளுக்கு அவ்வப்போது தேவையான அரிசி மற்றும் சில உணவு வகைகளை தூவி விடுவார்கள்.
    ஆண்டுதோறும் ஆடித்தபசு அன்று நடைபெறும் சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியானது ராமர்தீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டகப்படியில் வைத்து நடைபெறுவது வழக்கம்.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 17-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    திருவிழாவின் முதல் நாளில் அம்மன் சன்னதி பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 11-ந்தேதி ஆடி தபசு வழிபாடும், 12-ந்தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

    அதுபோல் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் உள்ள காரணத்தால் இந்த ஆண்டும் ஆடித்திருக்கல்யாண திருவிழாவின்போது சாமி ரத வீதிகளில் சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறாது. அவை கோவிலில் உள்பகுதி பிரகாரத்தில் நடைபெறும் என்றும் திருக்கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறாது என்பதுடன் திருவிழாவின் அனைத்து நாட்கள் நிகழ்ச்சியும் கோவிலின் உள் பகுதி மூன்றாம் பிரகாரத்திலேயே வைத்து நடைபெறும்.

    மேலும் வழக்கமாக ஆண்டுதோறும் ஆடித்தபசு அன்று நடைபெறும் சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியானது ராமர்தீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டகப்படியில் வைத்து நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா தடுப்பு கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டும் கோவிலின் உள்ளேயே வைத்து சாமி அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அதுபோல் திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக சாமி, அம்பாள் ராமர் பாதம் செல்லும் மண்டகப்படி நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு அந்த நிகழ்ச்சியும் கோவிலின் உள்ளேயே நடைபெறுகின்றது.
    கிட்டத்தட்ட 600 ஆண்டுகால பழமை வாய்ந்த வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள வரலாற்று அற்புதங்களை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.
    வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் ஆனது விஜயநகர பேரரசின் கீழ் வேலூர் இருந்தபோது கட்டப்பட்ட திருகோவில் ஆகும். கிட்டத்தட்ட 600 ஆண்டுகால பழமை வாய்ந்தது இக்கோவில்.  இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை வேலூர்க்கோட்டை மட்டுமே ஆகும். இதன் எழிலார்ந்த அமைப்பு கண்ணையும் கருத்தையும் கவர்வதாக அமைந்துள்ளது.

    இத்தலத்து சிவன் பத்ம விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதியின் பின்புறம் திருப்பதி அமைப்பில் வேங்கடேசப்பெருமாள் காட்சி தருகிறார்.புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு மகாபிஷேகம் நடைபெறும்.

    சூரியன், சந்திரனை விழுங்கும் ராகு, கேது மற்றும் தங்க, வெள்ளி பல்லிகள் பிரகாரத்தில் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்களும், பல்லி தொடர்பான தோஷம் இருப்பவர்களும் சிவனை வணங்கி இவற்றையும் வணங்கிச் செல்கிறார்கள். ஆதிசங்கரர், பிரகாரத்தில் இருக்கிறார். சித்திரையில் இவருக்கு சங்கர ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இத்தலத்து விநாயகர் செல்வ விநாயகர் எனப்படுகிறார்.

    பிரம்மா, திருமால் இருவரின் அகந்தையை அடக்குவதற்காக சிவன், ஜோதி சொரூபனாக காட்சி தந்த நாள் கார்த்திகை. இந்நாளில் மும்மூர்த்திகளும் ஒன்றாக காட்சி தந்ததன் அடிப்படையில், இங்கு மும்மூர்த்திகளும் ஒரே பல்லக்கில் எழுந்தருளுகின்றனர்.

    அன்று மாலையில் ராஜகோபுரத்தில் தீபமேற்றி, மும்மூர்த்திகளுக்கும் விசேஷ அபிஷேகம் செய்து, பின்பு வீதியுலா செல்கின்றனர். இந்த ஒருநாளில் மட்டுமே மும்மூர்த்திகளையும் ஒரு சேர தரிசிக்க முடியும். கார்த்திகை கடைசி சோமவாரத்தன்று  சிவனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

    அம்பாள் அகிலாண்டேஸ்வரி சன்னதி எதிரில்,அணையா நவசக்தி ஜோதி தீபம் அமைந்துள்ளது. அம்பிகை தீபத்தின் வடிவில் நவசக்திகளாக அருளுகிறாள். வெள்ளிக்கிழமைகளில் இந்த விளக்கிற்கு மேளதாளத்துடன்,சுத்தமான நைவேத்யம் படைத்து விசேஷ பூஜை நடைபெறுகிறது. அம்பாள் சன்னதி முன்மண்டபத்தில் சரஸ்வதி, மகாலட்சுமியாக காட்சி தருகின்றனர்.

    மும்மூர்த்திகளைப் போல முப்பெரும் தேவியரையும் இங்கு தரிசிக்கலாம் என்பது மேலும் விசேஷம். இஙகுள்ள நந்தியின் முன்பு, பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற, தீபம் ஏற்றாத அகல்விளக்கை வைப்பது வித்தியாசமான பிரார்த்தனை.

    இவருக்கு மாட்டுப்பொங்கலன்று விசேஷ பூஜை உண்டு. ஜுரகண்டேஸ்வரர் ஆகிய சிவன் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். நோய் நீக்குபவராக அருளுவதால் ஜுரகண்டேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க, அவர்கள் அணிந்திருக்கும் திருமாங்கல்யத்தை காணிக்கையாக செலுத்தி வணங்கும் வழக்கமும் இக்கோவிலில் இருக்கிறது.

    இவரை வேண்டி அதிகளவில் அறுபது, எண்பதாம் திருமணங்கள் செய்து கொள்கிறார்கள்.ஐப்பசி பௌர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேகம், அம்பிகைக்கு காய்கறி, பழங்களால் அலங்கரிக்கும் சாகம்பரம் உற்சவமும் நடைபெறுகிறது. இவ்வேளையில் சிவன், அம்பிகையை தரிசித்தால் அன்னத்திற்கும், விளைபொருட்களுக்கும் குறையில்லாத நிலை ஏற்படும் என்பர்.

    சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி இத்தலத்தில் லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். பிற்காலத்தில் லிங்கம் இருந்த பகுதி வேலமரக் காடானது. லிங்கத்தை புற்று மூடிவிட்டது.பொம்மி என்னும் சிற்றரசர் இப்பகுதியை ஆண்டபோது, அவரது கனவில் தோன்றிய சிவன், புற்றால் மூடப்பட்டுள்ள லிங்கத்தை சுட்டிக்காட்டி கோவில் எழுப்பும்படி கூறினார்.

    பொம்மியும் பயபக்தியுடன் கோவில் எழுப்பினார். இந்த சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே சுவாமிக்கு ஜலகண்டேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. வேலூரில் காசி பிரகாரத்தில் கங்கை நதி, கிணறு வடிவில் இருக்கிறது. இதற்கு அருகில் சிவன்,கங்கா பாலாறு ஈஸ்வரர் என்ற பெயரில் காட்சி தருகிறார்.

    இவர் இந்த கிணற்றில் கிடைக்கப்பெற்ற மூர்த்தியாவார். கங்கை நதியே இங்கு பொங்கியதாகச் சொல்கிறார்கள். இந்த லிங்கம், சற்றே கூம்பு போல காட்சியளிக்கிறது. இந்த சிவனுக்கு பின்புறத்தில் பைரவர் இருக்கிறார்.

    இந்த கோவில் பராமரிப்பு பணிகளை தற்பொழுது தொல்பொருள் ஆராய்ச்சியாளர் செய்துவருகின்றனர்.இக்கோவிலின் விமானம் ஆகமவிதிப்படி செய்யப்பட்டுள்ளது . இந்த விமானமானது பத்ம விமானம் என்று அழைக்கபடுகிறது .

    விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.
    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், பக்தர்கள் தரிசனத்துக்கு ஆடிப்பெருக்கான இன்று (செவ்வாய்க்கிழமை) வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

    பக்தர்கள் கோவிலுக்கு செல்லாமல் இருப்பதற்காக மந்தைவெளி, பெரிய தெரு, கொடுக்கன்குப்பம் சாலை ஆகிய பகுதியில் போலீசார் தடுப்புகள் ஏற்படுத்தி இருந்தனர்.

    மேலும், செஞ்சி போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கோவிலுக்கு வந்த பக்தர்களை திரும்பி அனுப்பி வைத்தனர். இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேபோல் மயிலம் முருகன் கோவிலிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்து சென்றனர்.

    திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி தினந்தோறும் இரவு கோவில் உள்பிரகாரங்களில் பெருமாள் மற்றும் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தையொட்டி 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி தினந்தோறும் இரவு பெருமாளும், ஆண்டாளும் பல்வேறு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். 10-ம் திருவிழா அன்று மாலை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் விழா தொடங்கி உள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை பூர்வாங்க நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை கருடாழ்வார் எதிர்சேவையுடன் கோவில் கல்யாண மண்டபத்தில் சவுமிய நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாளுடன் அருள்பாலித்தார்.

    தொடர்ந்து கொடிமரத்தில் சிறப்பு தீபாராதனையுடன் கொடியேற்றப்பட்டு பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் பெருமாள் மற்றும் ஆண்டாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக நேற்று முன்தினம் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தமிழக அரசு அனுமதி ரத்து செய்து இருந்தது.

    இதனால் கோவிலில் பக்தர்கள் இன்றி இந்த கொடியேற்ற விழா எளிமையான முறையில் நடைபெற்றது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு கோவில் உள்பிரகாரங்களில் பெருமாள் மற்றும் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொரோனா விதிமுறைகளின்படி 10-ம் நாள் நடைபெற இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் உகப்படிப்பு பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பு பணிவிடையும் நடந்தது.
    திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 189-வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 11 நாட்கள் நடந்த விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் உகப்படிப்பு பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பு பணிவிடையும் நடந்தது.

    தினமும் மாலையில் புஷ்ப வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகனங்களில் அய்யா எழுந்தருளி பதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 3 வேளையும் பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது.

    விழாவின் சிகர நாளான நேற்று மாலையில், சிறிய தேரில் அய்யா எழுந்தருளி, பதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று முன்தினம் மாலையில் அய்யா புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி, பதியை சுற்றி வலம் வந்தபோது, அங்கு பறந்து வந்த மயில் புஷ்ப வாகனத்தின் மீது அமர்ந்தது. இதனால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மனமுருக வேண்டினர்.
    ×