search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எறும்புக்கு உணவு
    X
    எறும்புக்கு உணவு

    7 தலைமுறை பாவங்களை போக்கும் பச்சரிசி

    கோவில் சுற்றும் போது நாம் தூவிய பச்சரிசியை எறும்புகள் இழுத்து சென்று மழைக்காலத்தில் சாப்பிடும். அந்த உணவை எறும்பு சாப்பிடுகிறதா என முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக்கொண்டே இருப்பார்களாம்.
    நம் முன்னோர்கள் எத்தனை செய்தாலும் அதற்கு பின் ஒரு அறிவியல் உண்மை இருக்கும் என்பதை கண்கூடாக பார்க்க முடியும் ஏழு ஜென்ம பாவங்களையும் கூட பச்சரிசி கொண்டு தீர்க்க முடியும் என்கிறது ஐதீகம்.

    சனிக்கிழமை நாம் செய்ய வேண்டியது:

    சனிக்கிழமையன்று விடியற்காலை எழுத்து குளித்து விட்டு தூய்மையாக கையில் கொஞ்சம் பச்சரிசியை எடுத்துக்கொண்டு , அப்படியே சூரிய பகவானை பார்த்து வணங்கிவிட்டு, பின்னர் அதே அரிசியை கையில் வைத்துக்கொண்டு விநாயகரை மூன்று முறை சுற்றி வர வேண்டும். அப்போது கையில் இருக்கும் பச்சரிசியை தூவி விட அதனை எறும்பு முழுவதுமாக எடுத்து சென்று விட்டால் நம்முடைய ஏழு ஜென்ம பாவங்கள் அனைத்தும் தீர்ந்து விடும் என்கிறது ஐதீகம்.

    எறும்புகள் என்ன செய்யும் தெரியுமா ..?

    கோவில் சுற்றும் போது நாம் தூவிய பச்சரிசியை எறும்புகள் இழுத்து சென்று மழைக்காலத்தில் சாப்பிடும். இந்த உணவை சாப்பிட்டு முடிக்கவே எறும்புகளுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஆகுமாம். இந்த காலத்தில் எறும்பகளின் செயல்பாடும் அந்த உணவை எறும்பு சாப்பிடுகிறதா என முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக்கொண்டே இருப்பார்களாம்.

    அதாவது எறும்பின் எச்சில் அந்த பச்சரிசி மீது படும் போதே அந்த அரிசி கெடாமல் சில ஆண்டுகள் இருக்கும் . இதன்மூலம் மிகக்கொடுமையான விளைவுகளைத் தரக்கூடிய அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஏழரைச்சனி, கண்ட சனி ஆகியவற்றால் உண்டாகும் எந்த ஒரு தீங்கும் நம்மை அண்டாமல் இருக்குமாம். அதனால் தான் நம் முன்னோர்கள் எறும்புகளுக்கு அவ்வப்போது தேவையான அரிசி மற்றும் சில உணவு வகைகளை தூவி விடுவார்கள்.
    Next Story
    ×