என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மாயமாய் திரையின் பின்னால் நிற்பது போல் மறைந்து நிற்கிறாய் கண்ணா... உன்னை இரகசியமான மறைப்பொருளை அறிந்த ஞானியர் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனி போல் காண்கிறார்
கண்ணன் குந்தி தேவிக்கிட்ட என்ன வரம் வேணும்ன்னு கேட்டப்ப, ‘எனக்கு எப்பவும் ஏதாவது கஷ்டம் இருக்கணும்‘ன்னு வரம் கேட்டாங்களாம். கண்ணன் ஆச்சரியமாய் ‘ஏம்மா...எல்லாரும் கஷ்டமே வரக்கூடாதுன்னுதான் வரம் கேப்பாங்க...நீங்க கஷ்டம் வேணும்ன்னு கேக்கறீங்களே’ன்னு கேட்டதுக்கு, ‘கண்ணா, கஷ்டம் வருகிறபோது தான் மக்களுக்கு உன் நினைப்பே வரும். நான் எப்பவும் உன் நினைப்பாகவே இருக்கணும்ன்னு நினைக்கறேன். அதான் அந்த வரம் கேட்டேன்’னு சொன்னாங்களாம்.
இந்தப் பாட்டுல ‘நீயிருக்கிறப்ப எனக்கு எந்த குறையும் இல்ல’ அப்படின்னு ராஜாஜி எழுதியிருக்கார். வரிகளும் வரிகளோட அர்த்தமும் இதோ .
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (2)
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வெங்கடேஸன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் (2)
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா (2)
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா (2)
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கல்லிலார்க்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா (2)
குறை ஒன்றும் இல்லை
யாதும் மறுக்காத மலையப்பா (2)- உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு (2)
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)
மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா (3)
வேத உருவானவனே (மறைமூர்த்தி) கண்ணா... எனக்கு எந்தக் குறையும் இல்லை. பசுக்களை (உயிர்களை, எங்களை) மேய்ப்பவனாய் (காப்பவனாய்), கோவிந்தனாய் நீயிருக்கும் போது எனக்கு எந்தக் குறையும் இல்லை.
எல்லா இடத்திலும் நீ நிறைந்து ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறாய் கண்ணா... அதனால் என்ன... நீ எங்கும் இருக்கிறாய் என்னைக் காப்பதற்கு... அது போதும் எனக்கு. எந்தக் குறையும் இல்லை எனக்கு. நான் எது கேட்டாலும் கொடுப்பதற்குத் தயாராய் வேங்கடேசன் ஆகிய நீயிருக்கும் போது எனக்கு வேறு என்ன வேண்டும் உன்னைத் தவிர... வேதங்கள் சொல்லும் மெய்ப்பொருளே கண்ணா... நீலமணி போன்ற மேனி வண்ணம் கொண்டவா...திருமலையில் நிற்கும் என் அப்பா...என்னைக் காப்பவனே கோவிந்தா...
மாயமாய் திரையின் பின்னால் நிற்பது போல் மறைந்து நிற்கிறாய் கண்ணா... உன்னை இரகசியமான மறைப்பொருளை அறிந்த ஞானியர் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனி போல் காண்கிறார்... என்றாலும் எனக்கு எந்தக் குறையும் இல்லை கண்ணா... நீ திருமலையின் மேல் கல்லாய் நிற்கின்றாய்...அது போதும் எனக்கு... நான் உன்னை நன்றாக தரிசனம் செய்து கொள்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா...
வேறு யுகங்களில் மக்கள் உன்னை தவம், தியானம், யாகம் போன்ற பலவற்றைச் செய்து கண்டனர். இந்த கலியுகத்திலோ மக்களால் அதையெல்லாம் எளிதாய் செய்யமுடியாது... அதனால் எங்களுக்கு இரங்கி நீ கற்சிலையில் இறங்கி நிலையாக திருமலைக் கோவிலிலே காட்சி தருகிறாய்... அழகிய சுருள்முடியை உடைய கேஸவா... மலையப்பா...நீ எது கேட்டாலும் இல்லை என்று சொல்வதில்லை...உன் மார்பில் எது கேட்டாலும் கொடுப்பதற்கு நிற்கும் கருணைக்கடலாகிய அன்னை மகாலட்சுமி இருக்கும் போது...நான் செய்த புண்ணிய பாபங்களைப் பார்த்து நீ கூட சில நேரம் நான் கேட்பதைத் தர யோசிக்கலாம்...ஆனால் அன்னையோ அப்படி அல்ல...அவள் கருணைக்கடல்...என் தகுதியையும் பாராமல் எது கேட்டாலும் தருவாள்...அப்படி இருக்கும் போது எனக்கு என்ன குறை இருக்க முடியும். எந்தக் குறையும் இல்லை கண்ணா... மணிவண்ணா... மலையப்பா... கோவிந்தா...கோவிந்தா....
“ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்”

ராமேசுவரம் கோவிலில் நேற்று அக்னி தீர்த்த கடற்கரை, கோவிலின் நான்கு ரத வீதி, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டி காணப்பட்டது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களிலும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த 3 நாள் தடை முடிந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் வழக்கம்போல் நேற்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை நாள் என்பதால் ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்து குவிந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் பூஜை செய்து பலர் வழிபட்டனர்.
கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து வடக்கு ரத வீதி வரையிலும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் நேற்று தான் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அக்னி தீர்த்த கடற்கரை, கோவிலின் நான்கு ரத வீதி, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டி காணப்பட்டது.
இதேபோல் தனுஷ்கோடி கடற்கரையிலும் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

திருவிசநல்லூர் பஞ்சமுக மகா மங்கள பிரத்தியங்கிராதேவி கோவிலில் அமாவாசை ஆவணி மாத செவ்வாய்க்கிழமையான இன்று மாலை ராகுகால நேரத்தில் சாகம்பரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார்.
கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் பஞ்சமுக மகா மங்கள பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை தோறும் நடைபெறும் மிளகாய் யாகம் பிரசித்தி பெற்றது. ஆவணி மாத செவ்வாய்க்கிழமையான இன்று மாலை ராகுகால நேரத்தில் சாகம்பரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார்.
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் அம்மனை வழிபடுவதால் திருமண தடை, தொழில் நஷ்டம், கிரக கோளாறுகள், பொருளாதார நெருக்கடி, விலகும் என கூறப்படுகிறது. சாகம்பரி அலங்கார சிறப்பு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி நந்தினி கணேஷ்குமார்குருக்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், கஜமுக சூரசம்ஹாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இங்கு வருடம் தோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெறும்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பக்தர்களின்றி கட்டுப்பாடுகளுடன் நடந்தது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
காலை 9 மணிக்கு மேல் கோவில் கொடிமரத்திற்கு அருகில் உற்சவ விநாயகரும், சண்டிகேஸ்வரரும் எழுந்தருள்வார்கள். அதன்பின் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெறும்.
வருகிற 10-ந் தேதி வரை நடக்கும் சதுர்த்தி திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் உற்சவர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பிரகாரத்தை வலம் வருவார்.
இந்த நிகழ்வுகளில் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
மற்ற நேரங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள்.
சதுர்த்தி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம், கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு கிழமையிலும் கடைபிடிக்கும் விரதத்திற்கு ஒரு பலன் உண்டு. அந்த வகையில் எந்த கிழமையில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
சந்திராம்ச விரதம் என்ற ஒரு வகை விரத முறையும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, சந்திரனின் பிறை வளர்வதற்கு ஏற்ப உணவின் அளவை முறைப்படுத்தி விரதம் இருப்பதாகும். இந்த முறையின்படி அமாவாசை அன்று எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்.
அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து ஒவ்வொரு கவளமாக படிப்படியாக உணவின் அளவு கூட்டப்பட்டு, பவுர்ணமியில் முழு உணவாக உண்பது முறை. பின்னர், படிப்படியாக குறைத்துக்கொண்டே வந்து அமாவாசையன்று விரதத்தில் முடிவு பெறும்.
கிழமைகளுக்கான பலன்கள்
ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறுவதுடன், நோய்கள் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
திங்கட்கிழமை விரதம் இருப்பதன் மூலம் குடும்பத்தில் பரஸ்பர அன்பும், அமைதியும் நிலவும்.
செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதன் மூலம் குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும்.
புதன்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் கல்வி, கேள்விகளில் தேர்ச்சி ஏற்படும்.
வியாழக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கிய தடைகள் நீங்கி சத்புத்திர பாக்கியம் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் தம்பதியர்களுக்கு ஆயுள் தோஷங்கள் விலகப்பெறும்.
சனிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் வேலை, தொழில் ஆகியவை விருத்தி பெற்று செல்வம் பெருகும்.
-ஸ்ரீஜானகிராம்
கொரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பணிவிடை மற்றும் வாகன பவனி ஆகிய நிகழ்ச்சிகளில் குறைவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது.
கொரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பணிவிடை மற்றும் வாகன பவனி ஆகிய நிகழ்ச்சிகளில் குறைவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆவணி திருவிழாவின் 11-ம் நாளன்று தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த வருடம், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் அறிவுரையின்படி நேற்று தேர் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.
அதாவது காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், காலை 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு பல்லக்கு வாகனத்தில் தலைமைப்பதியில் இருந்து அய்யா வைகுண்டசாமி அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளினார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) அய்யாவுக்கு பணிவிடையும், தொடர்ந்து கொடியிறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஆனால் தேர் அதே இடத்திலேயே நின்றது. அங்கேயே காவிஉடை அணிந்து, தலைப்பாகை அணிந்த அய்யா வழி பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று அய்யாவுக்கு பன்னீர், பழம், வெற்றிலை, பாக்கு, பூ ஆகிய பொருட்களை சுருளாக படைத்து வழிபட்டனர். அவர்களுக்கு அய்யா வைகுண்டசாமி ஆசி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பால.ஜனாதிபதி தலைமை தாங்கினார். ராஜவேல், பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நண்பகல் முதல் மாலை 6 மணி வரை பக்தர்களின் சுருள் ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 9 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் வீதியில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்ட நாளன்று பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா.வைகுந்த், பையன் நேம்ரிஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) அய்யாவுக்கு பணிவிடையும், தொடர்ந்து கொடியிறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பூண்டிமாதா பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம்( செப்டம்பர்) 9-ந் தேதி விழா நடக்கிறது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டியில் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம்( செப்டம்பர்) 9-ந் தேதி விழா நடக்கிறது.
கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் சாம்சன், உதவி பங்குத்தந்தையர்கள் இனிகோ, ஜான்சன், ஆன்மிகதந்தை அருளானந்தம் மற்றும் பேராலய பணியாளர்கள் இணைந்து ஜெபமாலை பாடல்களுடன் திருக்கொடியை பேராலயத்தை சுற்றி எடுத்து வந்தனர்.
பின்னர் கொடியை புனிதம் செய்து ஏற்றி பேராலய அதிபர் பாக்கியசாமி ஏற்றினார். வழக்கமாக பூண்டி மாதா பேராலய வளாகத்தில் திருவிழாவின் போது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று பூண்டி மாதா பேராலய வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. பேராலய வளாகத்தில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமோகன், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி, சப் இன்ஸ்பெக்டர் சார்லிமேன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பேராலயத்துக்கு வந்த பக்தர்களை திருப்பி அனுப்பினர்.

மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்திற்கும் நாடு முழுவதும் பல திருக்கோவில்கள் இருக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் கிருஷ்ணனுக்காக அமைந்த சில கோவில்களைப் பார்ப்போம்.
மகாவிஷ்ணு என்று அழைக்கப்படும் பெருமாளுக்கு, நாடு முழுவதும் ஏராளமான திருக்கோவில்கள் அமைந்திருக்கின்றன. அவரது அவதாரங்க ளாக இருக்கும், ராமர், கிருஷ்ணர், நரசிம்மர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் பரவலாக ஆலயங்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். அதே போல் மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்திற்கும் நாடு முழுவதும் பல திருக்கோவில்கள் இருக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் கிருஷ்ணனுக்காக அமைந்த சில கோவில்களைப் பார்ப்போம்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மயிலாடி என்ற ஊரில் கிருஷ்ணன் கோவில் ஒன்று உள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த ஆலயத்தில் இருக்கும் மூலவர் விக்கிரகம், சுயம்புவாக தோன்றியது. இந்த கிருஷ்ணருக்கு, அவல், பால், வெண்ணெய், சர்க்கரைப் பொங்கல் ஆகியவை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. திருமண வரம், குழந்தை வரம் வேண்டி இங்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். மேலும் குடும்ப ஒற்றுமைக்காகவும், நினைத்த காரியம் நிறைவேறவும் இத்தல இறைவன் நல்வழி காட்டுவதாக பலரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மதுரை நவநீத கிருஷ்ணன்
மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ளது, நவநீத கிருஷ்ணன் கோவில். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆலயம் இது. மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வடக்கு கோபுர திசையில் இருப்பதால் ‘வடக்கு கிருஷ்ணன் கோவில்’ என்றும், ஆரம்பத்தில் கம்பத்தின் கீழ் வீற்றிருந்ததால் ‘கம்பத்தடி கிருஷ்ணன் கோவில்’ என்றும் இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. இத்தல இறைவன் இரு கரங்களிலும் வெண்ணெய் ஏந்திய கோலத்தில் அருள்கிறார். அருகில் சத்தியபாமா, ருக்மணி தாயார் வீற்றிருக்கின்றனர். கேரளாவில் உள்ள குருவாயூரப்பனுக்கு வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனை, அங்கு செல்ல முடியாதவர்கள் இத்தலத்தில் செலுத்தினாலே போதும் என்கிறார்கள்.
கோகுல கிருஷ்ணன்
திருச்சியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருவானைக்காவல் திருத்தலம். இங்கு கோகுலகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. இத்தல இறைவனை வேணுகோபால சுவாமி என்றும் அழைக்கிறார்கள். 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஆலயம், திருவானைக்காவல் அக்ரஹாரத்தில் கிழக்கு நோக்கி இருக்கிறது. கருவறையில் கையில் புல்லாங்குழலுடன் ஒரு காலை மடக்கி வைத்தபடி நின்ற கோலத்தில் கோகுல கிருஷ்ணன் காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும், ருக்மணி மற்றும் சத்தியபாமா இருக்கிறார்கள். திருமணத்தடை நீங்க இங்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். தவிர குழந்தைப்பேறு வேண்டியும் வழிபாடு செய்கிறார்கள்.
தொட்டிலில் தூங்கும் கிருஷ்ணர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ளது, வடசேரி. இதன் அருகே கிருஷ்ணன் கோவில் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கிருஷ்ணன் கோவிலை அடிப்படையாக வைத்துதான், இந்த ஊரும் அதே பெயரில் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. 13-ம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த ஆதித்தவர்மன் என்ற மன்னனால், இந்த ஆலயம் கட்டப்பட்டதாக, கோவிலில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்கு மூலவரான பாலகிருஷ்ணன், குழந்தை வடிவில் நின்ற கோலத்தில் அருள்கிறார். இரு கரங்களிலும் வெண்ணெயை ஏந்தி நிற்கும் இவரை, இரவு நேர பூஜையின் போது, வெள்ளித் தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடி தூங்க வைக்கும் வைபவம் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக பாலகிருஷ்ணனுக்கு படைக்கப்பட்ட வெண்ணெய் மற்றும் நைவேத்திய பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப் படுகிறது. இத்தல இறைவனை தொடர்ச்சியாக மூன்று அஷ்டமி தினங்கள் அல்லது ரோகிணி நட்சத்திர நாளில் வணங்கி வந்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சுயம்பு மூர்த்தி

காலபைரவர் செவ்வரளி மலர் அலங்காரத்தில் வடை மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் வரலாற்று சிறப்பு மிக்க பழமையும் பெருமையும் வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தென்திசை நோக்கி காலபைரவருக்கு மாதந்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி திதியையொட்டி 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகள் செய்யப்பட்டது.
இதில் காலபைரவர் செவ்வரளி மலர் அலங்காரத்தில் வடை மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் குட்லாடம்பட்டி கண்மாய் அருகில் 36 அடி உயர அண்ணாமலையார் கோவிலில் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் காலபைரவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் கலந்து கொண்டனர். பின் அன்னதானம் நடந்தது. இதன் ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் கோபிநாத் மற்றும் அண்ணாமலையார் அறக்கட்டளையினர் செய்தனர்.
சோழவந்தான் பிரளயநாத விசாக நட்சத்திர கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு அர்ச்சனை நடந்தது. அப்போது பக்தர்கள் காலபைரவருக்கு, தீபம் ஏற்றி வழிபட்டனர். சிலர் பூசணிக்காய், தேங்காயில் நெய் விளக்கு ஏற்றி, கால பைரவரை வழிபட்டனர்..இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தேய்பிறை அஷ்டமியையொட்டி மதுரை எஸ்.ஆலங்குளம் கற்பக விநாயகர் கோவிலில் உள்ள கால பைரவரும், தெற்குமாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் கால பைரவரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 27-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை. இதனால் கோவிலின் கோபுர வாயில்கள் அடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டதில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று பகவான் கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 9.15 மணிக்கு பகவான் கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து செப்டம்பர் 1-ந்தேதி காலை 7 மணிக்கு பகவான் கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் கவெனிதா செய்து வருகிறார்.
அதேபோல் சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோவிலில் நேற்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு ஸ்ரீராதா கிருஷ்ணனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 11.30 மணிக்கு நள்ளிரவில் கிருஷ்ணரின் தெய்வீக தோற்றத்தை நினைவுகூரும் தரிசனம் மற்றும் ஆரத்தி நடைபெற்றது.
தொடர்ந்து 31-ந்தேதி(இன்று) இஸ்கான் உலகம் முழுவதும் நிறுவனர் ஆச்சார்யாவின் 125-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் வீடுகளில் இருந்தபடி இணையதளம் மூலம் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம் என்று கோவில் தலைவர் சுமித்ரா கிருஷ்ணதாஸ் தெரிவித்து உள்ளார்.

இறைவன் காட்டிய வழியில் மனிதன் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் இம்மையிலும், மறுமையிலும் நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். உலகமும் சமாதான பூங்காவாக திகழும்.
யாரோ செய்த தவறு கொரோனாவாக வளர்ந்து உலகத்தை துவேஷம் செய்துகொண்டிருக்கிறது. தீயவர்கள் செய்த தவறுகளுக்கு உலக மக்கள் விலை கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
தவறு செய்தால் இறைவன் தண்டிப்பான் என்ற பயம் இல்லாமை, செல்வங்களைத் தர்மங்கள் செய்யாமல் சுயநலமாக செயல்படுவது, பணபலத்தில் ஏழைகளை உதாசீனம் செய்தல், குலப்பெருமை பேசி சண்டையிட்டுக் கொள்ளுதல், மனிதர்களுக்கு மட்டுமே இந்த பூமி படைக்கப்பட்டது போன்று, இயற்கை மற்றும் பிற உயிரினங்களை அழித்தல், முறையற்ற வருமானம் ஈட்டுதல்... இப்படி மனிதன் செய்த பல்வேறு தவறுகளால் உலகத்தில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. பாவங்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்து இவ்வாறு இறைவன் எச்சரிக்கை செய்கின்றான்:
“மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும், தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்”. (திருக்குர்ஆன்30:41)
அதுபோல மறுமை நாளில் இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதையும் திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டி எச்சரிக்கிறது:
“அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான். தன் சகோதரனை விட்டும், தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும். அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். (திருக்குர்ஆன் 80:34-37).
இறைவன் முன்பு நிற்கும் அந்த மறுமை நாளில் உங்களது அதிகாரம், பதவி, செல்வம் எதுவும் உதவாது. அப்போது அந்த மனிதன் நிலை எப்படி இருக்கும் என்பதை இந்த திருக்குர்ஆன் வசனங்கள் குறிப்பிட்டுகின்றன.
“என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே. என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே” (என்று அரற்றுவான்). (திருக்குர்ஆன் 69:28, 29)
இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. இந்த நேரத்தில், நாம் எங்கு? எப்போது? என்ன தவறு செய்தோம்? என்று யோசிப்போம். தவறுகளில் இருந்தும், பாவங்களில் இருந்தும் விலகி இருப்போம். செய்த தவறுகளுக்கும், பாவங்களுக்கும் இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்போம்.
இறைவன் காட்டிய வழியில் மனிதன் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் இம்மையிலும், மறுமையிலும் நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். உலகமும் சமாதான பூங்காவாக திகழும்.
ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.