என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருமணமாகாத பெண்கள் இங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு, விநாயகரைத் தரிசித்து மாங்கல்யச்சரடு பெற்றுக்கொண்டால் விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    இக்கோவில் வெள்ளை விநாயகர் கோவில் என்று அறியபட்டாலும் இங்குள்ள விநாயகர் வல்லபை விநாயகராவார். இந்தக் கோயிலில் விநாயகருக்குள் வல்லபா தேவி ஐக்கியமாகி அரூபமாகக் காட்சி தருவதாக ஐதீகம். அதேநேரம் உற்சவர் மனைவி சகிதமாகக் காட்சி தருகிறார். வல்லபை என்பவள் சாபத்தால் அரக்கியாக மாறி முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள்.

    அனைவரும் சேர்ந்து சிவனிடம் முறையிட்டனர். அவர் முருகனை அனுப்பி வைத்தார். அரக்கியைக் கண்டு பயப்படுவதுபோல் நடித்த முருகன் அண்ணனை அனுப்பி வைத்தார். தனக்கு எதிரே தைரியமாக நின்ற விநாயகரைக் கண்டு சிலிர்த்தாள் வல்லபை. அவளை அப்படியே துதிக்கையால் தூக்கி தனது மடியில் அமர்த்திக் கொண்டார் கணபதி.

    மனித உடலும் மிருக முகமும் கொண்டவரால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்று அறிந்திருந்த வல்லபை அந்த நிமிடமே பழைய உருவத்தைப் பெற்றாள். விநாயகரையே திருமணம் செய்து கொண்டாள். இத்திருமணம் நடந்த இடம் இதுவேயாகும். வியாழக்கிழமைகளில் இக்கோயிலிலுள்ள பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடை பெறுகின்றன.

    விநாயக சதுர்த்தியன்று இந்த விநாயகருக்கு சந்தனக் காப்பு கிடையாது. அன்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து அபிஷேகங்கள் நடைபெறும். மூன்றாம் நாள் சந்தனகாப்பு அலங்காரத்துடன் காட்சி தருவது சிறப்பாகும்.

    பலன்கள்:

    திருமணமாகாத பெண்கள் இங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு, விநாயகரைத் தரிசித்து மாங்கல்யச்சரடு பெற்றுக்கொண்டால் விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

    தஞ்சாவூர் கீழவாசலில் இக்கோவில் அமைந்துள்ளது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ செல்லலாம்.

    கோவில் திறந்திருக்கும் நேரம்:

    காலை 6.00 – 10.00 மற்றும் மாலை 5.00 – 8.00

    கோயிலின் முகவரி:

    அருள்மிகு வெள்ளை விநாயகர் கோவில்,
    கீழவாசல்,
    தஞ்சாவூர் – 613001.
    மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வியூக சுந்தரராஜ பெருமாள் குதிரை வாகனத்திலும், கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர்.
    மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த வருடம் மிகவும் எளிமையான முறையில் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது.

    கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வியூக சுந்தரராஜ பெருமாள் குதிரை வாகனத்திலும், கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர். மேலும் மதுரை திருப்பாலை கிராமத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் நேற்று கருட வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் எழுந்தருளினார். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.
    நாம் இறைவனின் பிள்ளைகள் என்பதையும், உலகில் நேர்மையுடன் வாழ்ந்து, நிலைவாழ்வைப் பெறுவதற்கே உலகில் பிறந்துள்ளோம் என்பதையும் அறிகிறோம்
    கலிலேயக் கடற்கரையில் திரளான மக்களுக்கு முன் இயேசு கூறிய விண்ணரசின் உவமைகளில் கடுகு விதை உவமையும் ஒன்று.

    உவமை

    இயேசு, “இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்” என்று கூறினார்.

    உவமை கருத்து

    உலகில் செல்வம், கல்வி, பதவி போன்றவையே நம் வாழ்வின் முக்கிய நோக்கமாக இருக்கின்றன. உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக, நாம் இவைகளை நாடித் தேடி ஓடுகிறோம். இவைகளுக்கு நடுவே, இயேசுவின் நற்செய்தி கடுகு விதை போன்று சிறிதாக இருக்கிறது. இறையாட்சியை வாழ்வின் இலக்காக எவரும் கொள்வதில்லை. அதற்கு நாம் முன்னுரிமை அளிப்பதில்லை. அதனால் நற்செய்தி நம் உள்ளத்தில் பதிவதில்லை. ஆனால், சிறிய கடுகு விதையாக நம் மனதிற்குள் விழும் நற்செய்திதான், நமக்கு நிலை வாழ்வை வழங்கக்கூடியது.

    ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். நமது உள்ளமே வயல். இயேசுவின் நற்செய்தியே கடுகு போன்ற விதை. உலக தேவைக்காக வாரம் முழுக்க வேறு பணிகளில் ஈடுபடும் நாம், ஓய்வு நாட்களில் மட்டும் இயேசுவின் நற்செய்தியைக் கேட்கிறோம் அல்லது வாசிக்கிறோம். இயேசுவின் வார்த்தை நம் உள்ளத்திலுள்ள ஒரு சிறு இடத்தில், கடுகு விதையை போல பதிவாகிறது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து, எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகிறது. இயேசுவின் வார்த்தை உள்ளத்தில் பதிவாகி இருப்பதால், செயல்படத் தொடங்குகிறது.

    நாம் இறைவனின் பிள்ளைகள் என்பதையும், உலகில் நேர்மையுடன் வாழ்ந்து, நிலைவாழ்வைப் பெறுவதற்கே உலகில் பிறந்துள்ளோம் என்பதையும் அறிகிறோம். உலகின் மற்ற தேவைகளும் அவற்றின் மீது கொண்ட நாட்டமும் குறைகின்றன. நற்செய்தியை கடைப்பிடித்து இறையாட்சியைப் பெறுகிறோம்.

    வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும். அதுபோல நம் உள்ளத்தில் இயேசுவின் வார்த்தை வளர்ந்து, அதன் வாயிலாக அன்பு, பரிவு, தன்னடக்கம் பணிவு போன்ற தூய ஆவியின் கனிகள் நம் வாழ்வில் வெளிப்படுகின்றன. துன்பத்தில் தவிப்போருக்கும் தன்னலமின்றி உதவுகிறோம். இதனால், நம் வாழ்வு நம்மை சுற்றியுள்ளோருக்கும் பயனுள்ளதாக அமைகிறது. நம் வாழ்வு 30, 60, 100 என்ற அளவில் இறையாட்சியாக நிறைவு பெறுகிறது.

    இந்த உவமையை கூறி முடித்த இயேசு, தம் சீடரிடம் “உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம் மலையைப் பார்த்து “இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ” எனக் கூறினால் அது பெயர்ந்து போகும்” என்றும், “இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்” என நம்பிக்கையினால் உலக இச்சைகளை விலக்க முடியும் என்று வலியுறுத்தினார்.
    திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி கோவில் கிரிபிரகாரத்தில் உலா வந்து கோவிலுக்குள் செல்கின்றனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 27-ந் தேதி ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் 10-ம் திருநாள் (5-ந்தேதி) வரை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளியம்பாளும் காலை மற்றும் மாலையில் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் உலா வருகின்றனர். அதேபோல் காலை மற்றும் மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி கோவில் கிரிபிரகாரத்தில் உலா வந்து கோவிலுக்குள் செல்கின்றனர்.

    5-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடந்தது. காலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் - வள்ளியம்பாள் எழுந்தருளல், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

    மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி கிரிபிரகாரத்தில் உலா வந்து கோவிலுக்குள் சென்றனர். பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளியம்பாளும் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. எதிரே நின்ற சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர் சேவை தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமியும், வள்ளியம்பாளும் கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
    திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கு உகந்த நட்சத்திரமாகும். அன்றைய தினம் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.
    திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கு உகந்த நட்சத்திரமாகும். இறைவனுக்கு உகந்த நட்சத்திரமாக விளங்குவதால் தான் நட்சத்திரத்திற்கு ‘திரு’ என்று அடைமொழி வழங்கப்பெற்றது.

    திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர். மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும்.

    இக்காலத்தில் வைகறையில் சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர். மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வருவார்.

    சிதம்பரம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முக்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது. சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும்.

    மாதம்தோறும் வரும் திருவாதிரை நட்சத்திரம் அன்று விரதம் இருந்து மாலையில் சிவன் கோவிலுக்கும் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும்.


    கள்ளழகர் கோவிலில் பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு விசேஷ பூஜைகள் தீபாராதனைகளும் உறியடி உற்சவமும் அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் இன்றி நடந்தது.
    மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி நடந்தது. இதை தொடர்ந்து நேற்று உறியடி உற்சவம் நடந்தது. இதில் மூலவர் சன்னதியில் இருந்து கள்ளழகர் பெருமாள், தோளுக்கினியான் பல்லக்கில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வலம் வந்தது.

    பின்னர் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் அருகில் உள்ள உறியடி மண்டபத்தில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கள்ளழகர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    அப்போது பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு விசேஷ பூஜைகள் தீபாராதனைகளும் உறியடி உற்சவமும் நடந்தது. அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் இன்றி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
    திருமாலின் அருவுருவ திருக்கோலமான சாளக்கிராம கல்லை தினமும் வழிபாடு செய்து வருவதனால் ஏற்படும் நன்மைகளையும், பக்தர்கள் அடையும் சிறப்புகளையும் இங்கே பார்க்கலாம்.
    சிவபெருமானின் அருவுருவத் தோற்றமாக எப்படி சிவலிங்கம் இருக்கிறதோ, அதே போல் திருமாலின் அருவுருவ திருக்கோலமாக சாளக்கிராமக் கல் பார்க்கப்படுகிறது. சாளக்கிராம கல்லை, கண்ணனாக நினைத்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்தக் கல்லில் இயற்கையாகவே, திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவம் காணப்படுகின்றன. இதுவும் இந்தக் கல்லை புனிதமாகக் கருத ஒரு காரணமாகும்.

    இந்த சாளக்கிராம கல்லை தினமும் வழிபாடு செய்து வருவதனால் ஏற்படும் நன்மைகளையும், பக்தர்கள் அடையும் சிறப்புகளையும் இங்கே பார்க்கலாம்.

    * சாளக்கிராமத்திற்கு தினமும் பூஜை செய்து வழிபட்டு வந்தால், அவர்களின் மனம் தெளிவடையும். அப்படி தொடர்ந்து பல வருடங்களாக பூஜித்து வரும் ஒருவன், தானே விஷ்ணுவாகவே மாறிப்போவான் என்கிறது புராணம்.

    * சாளக்கிராமத்தில் காணப்படும் உருவங்களின் தரிசனம், கொலை பாவத்தைக் கூட போக்கும் சக்தி படைத்தது. சாளக்கிராம கல்லை தரிசித்தால், பூஜை செய்தால்தான் பலன் என்றில்லை. அந்த கல்லைப் பற்றி நினைத்தாலே, நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகி ஓடும்.

    * இதனை பக்தியே இல்லாமல் ஒருவர் வழிபட்டாலும் சரி, எதிர்பாராத விதமாக திடீரென பூஜை செய்ய நேர்ந்தாலும் சரி, அவருக்கு சாளக்கிராம வழிபாட்டினால் முக்தி உண்டு.

    * சாளக்கிராம பூஜை செய்பவர்களுக்கு எமபயம் கிடையாது. இதற்கு சந்தனம் பூசி, மலர் சூடி, தீப மற்றும் தூப ஆராதனைகள் செய்வதோடு, நைவேத்தியமும் படைத்து வழிபட்டு வந்தால், அவர்களுக்கு விஷ்ணு லோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும்.

    * சாளக்கிராமம் இருக்கும் இடமானது, இறைவன் இருக்கும் இடத்திற்குச் சமமானது. எனவே அங்கிருக்கும் தீவினைகள் எல்லாம் அகன்று விடுவதோடு, சாளக்கிராம பூஜையைச் செய்பவர்கள், சாதாரண மனிதர்களாக கருதப்பட மாட்டார்கள்.

    * சாளக்கிராமத்திற்கு பூஜை செய்தால், யாகமும், தானமும் செய்த பலன் கிடைக்கும். ஆயிரம் ராஜசூய யாகம் செய்தாலும், ஒரு நாள் சாளக்கிராம பூஜை செய்த பலனுக்கு இணையாகாது.

    * 12 சாளக்கிராமங்களைக் கொண்டு வழிபாடு செய்தால், 12 கோடி சிவலிங்கங்களை வைத்து, 12 கல்ப காலம் பூஜை செய்த பலன், ஒரே நாளில் கிடைக்கப்பெறும்.

    * ஒருவர் முக்தி பெற தீர்த்த யாத்திரையும், யாகமும் அவசியம். ஆனால் சாளக்கிராமை வழிபடுபவர்களுக்கு அது தேவையில்லை. சாளக்கிராமத்திற்கு செய்யும் அபிஷேக தீர்த்தத்தை தலையில் தெளித்து, பருகினாலே புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் வந்துசேரும்.

    * விஷ்ணு சகஸ்ரநாமத்தை படித்தபடியே, சாளக்கிராம பூஜை செய்பவர்கள் விஷ்ணுவின் திருவடியை அடைவதாக நம்பிக்கை.
    இரவு 9 மணிக்கு நம்பெருமாள் கருட மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் கருடமண்டப வளாகத்திலேயே உறியடி உற்சவம் கண்டருளுகிறார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் நடைபெறும் கிருஷ்ணர் ஜெயந்தி புறப்பாடு மற்றும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கிருஷ்ணஜெயந்தி, உறியடி உற்சவத்தின் முதல் நாளான நேற்று காலை 9.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு காலை 9.45 மணிக்கு ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார்.

    அங்கு முற்பகல் 11 மணி முதல் மதியம் 1.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுளினார். மதியம் 1.30 மணிமுதல் மதியம் 2.30 மணி வரை அலங்காரம் அமுது கண்டருளுளினார். பின்னர் மாலை 5.30 மணி வரை பொதுஜனசேவை நடைபெற்றது. அங்கிருந்து மாலை 6 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். உறியடி உற்சவத்தின் 2-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு கிருஷ்ணன் புறப்பாடு நடைபெறுகிறது.

    எண்ணெய் விளையாட்டு கண்டருளி காலை 7.30 மணிக்கு கிருஷ்ணன் சன்னதிக்கு வந்து சேர்வார். பின்னர் மாலை 3 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்கள் திருச்சிவிகையில் மற்றும் கிருஷ்ணன் உடன் புறப்பட்டு கருடமண்டபத்திற்கு மாலை 3.30 மணிக்கு வந்து சேர்கிறார். பின்னர் இரவு 9 மணிக்கு நம்பெருமாள் கருட மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் கருடமண்டப வளாகத்திலேயே உறியடி உற்சவம் கண்டருளுகிறார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
    செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில், பண்டிகை முதலான நாட்களில், மனசஞ்சலத்தால் குழம்பித் தவிக்கும் தருணங்களில் காமாட்சி அன்னையின் ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.
    ஸ்ரீகாமாக்ஷி அம்மனைத் துதிக்கும் மிக அற்புதமான ஸ்தோத்திரம் உள்ளது. இந்த ஸ்லோகம்குறித்து, காஞ்சி மகா பெரியவா நமக்கெல்லாம் அருளிச்சென்றுள்ளார். இந்த ஸ்லோகத்தை எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். சொல்லி அம்பாளை வீட்டிலிருந்தே வழிபடலாம்

    செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில், பண்டிகை முதலான நாட்களில், மனசஞ்சலத்தால் குழம்பித் தவிக்கும் தருணங்களில் மூக பஞ்ச சதியில் உள்ள காமாட்சி அன்னையின் ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். துர்விஷயங்கள், கடன் தொல்லைகள், குடும்பத்தில் சஞ்சலங்கள், மனதில் தேவையில்லாமல் தோன்றும் பயம் முதலான தருணங்களில், வீட்டில் விளக்கேற்றி காமாட்சி அம்பாளை ஆத்மார்த்தமாக நினைத்து ஸ்லோகத்தைச் சொல்லி வந்தால், பூரண நலம் பெறுவாள். உலகின் தலைமைப் பீட நாயகியான காஞ்சி காமாட்சி, அகிலத்தையும் அகிலத்து மக்களையும் காத்தருள்வாள்!

    ச்ரியம் வித்யாம்தத்யாத்ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம்
    ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணா
    த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினி
    ப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே
    நாளை முதல் திருப்பதி மலையில் சேவை அடிப்படையில் பணியாற்றும் ஸ்ரீவாரி சேவை தொண்டர்கள் கோசாலையில் இருந்து வெண்ணெயை ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
    திருப்பதி ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை தொடங்கி தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம், வசந்த உற்சவம், அஷ்டதள பாத பத்மாராதனை சேவை உள்ளிட்ட பல சேவைகள் நடத்தப்படுகின்றன.

    இந்நிலையில் ஏழுமலையானுக்கு நவநீத சேவை என்ற பெயரிலான புதிய சேவை ஒன்றை கிருஷ்ண ஜெயந்தியான நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது.

    இந்த சேவையில் நாட்டுப் பசுக்கள் மூலம் பெறப்படும் சுத்தமான வெண்ணை ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும்.

    இதற்காக 33 கீர் பசுக்கள், குஜராத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு, திருப்பதி மலையில் உள்ள கோசாலையில் பராமரிக்கபடுகின்றன. நாட்டு பசுக்களிடம் இருந்து பெறப்பட்ட பாலை தயிராக்கி அதன்மூலம் சம்பிரதாய முறையில் கடைந்தெடுத்த வெண்ணைய் நேற்று பெறப்பட்டது.

    தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி ஆகியோர் உட்பட தேவஸ்தான அதிகாரிகள், கோசாலையில் இருந்து ஏழுமலையான் கோவில் வரை வெண்ணையை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் அந்த வெண்ணைய், கோவில் அர்ச்சகர்களிடம் வழங்கப் பட்டது. அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி ஏழுமலையானுக்கு வெண்ணைய் சமர்ப்பித்தனர்.

    நாளை முதல் திருப்பதி மலையில் சேவை அடிப்படையில் பணியாற்றும் ஸ்ரீவாரி சேவை தொண்டர்கள் கோசாலையில் இருந்து வெண்ணெயை ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பிக்க உள்ளனர். வெண்ணை தயாரிக்கும் பணியிலும் ஈடுபடுவார்கள்.

    இதன்மூலம் பக்தர்கள் தயாரித்த வெண்ணையும் ஏழுமலையானுக்கு தினமும் நவநீத சேவை மூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
    ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து, 2,4,5,7,8,12வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும்.
    1. நாகதோஷம் ஆண்/பெண் இருவர் ஜhதகங்களில் இருந்தாலும் பொருத்தலாம். இல்லாவிட்டாலும் பொருத்தலாம்.

    2. ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் இருந்து, மற்றவருக்கு நாகதோஷம் இல்லாவிட்டால் பொருத்தக்கூடாது.

    3. ஆண், பெண் இருவருக்கும்; சுபர் பார்வையினால் நாகதோஷம் நீங்கினால் சேர்க்கலாம். ஒருவருக்கு மட்டும் நீங்கினால் போதாது.

    4. ஆண் ஜாதகங்களில் 2, 4, 5, 7, 8. 12 வது இடங்களில ராகு அல்லது கேது சுபர் பார்வையுடன் இருக்கும்போது, பெண் ஜாதகத்தில் நாகதோஷம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திருமணம் செய்தால் அது மத்யம பலனைக் கொடுக்கும். இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கை அமையும்.

    5. பெண் ஜாதகத்தில் ராகு அல்லது கேது உள்ள அதே இடத்திலேயே ஆண்; ஜாதகத்திலும் இருக்கவேண்டும் என்று ஒரு அபிப்ராயம் ஜோதிடர்களிடையே உள்ளது. அவ்வாறு அமைந்தாலும் நல்லதே. தோஷசாம்யம் ஏற்படும்.

    6. அசுவினி, மகம், மூலம், நத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, கேது தசை ஜன்ம நட்த்திர தசையாக வருவதால், இந்த ஜாதகங்களில் கேது பகவான் லக்னத்திலோஅல்லது 2வது வீட்டிலோ இருப்பதால் பாதிப்பு ஏற்படாது.

    7. அதே போல் திருவாதிரை, சுவாதி, சதயம் என்ற மூன்றும் ஜன்மநட்த்திரமாக வரும ஜாதகர்களுக்கும், லக்னத்தில் அல்லது 2வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது தோஷமாகாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.

    8. ஜாதகபலன் கூறும்போது, ராகுவிற்கு சனியின் பலனும், கேதுவிற்கு செவ்வாயின் பலனும் சொல்லுவார்கள்.
    தஞ்சை தெற்கு வீதியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவில் சிதிலமடைந்து வருகிறது. இதனை சீரமைத்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தஞ்சை தெற்கு வீதி- எல்லையம்மன் கோவில் தெரு சந்திப்பில் அமைந்துள்ளது காசிவிஸ்வநாதர் கோவில். இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட கோவில்களுள் ஒன்றாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த கோவில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலுக்கு தெற்கு வீதியில் ஒரு வாயிலும், மற்றொரு வாயில் எல்லையம்மன் கோவில் தெருவிலும் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ராஜகோபுரம், மண்டபம், கருவறை, விமானகோபுரம் ஆகியவை உள்ளது. இங்கு காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், நந்தி பலி பீடத்துடன் கூடிய சித்தி விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், பைரவர், நால்வர் சன்னதி, தட்சிணாமூர்த்தி, நாகலிங்கம், ஆஞ்சநேயர், சண்டிகேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உள்ளன.

    இந்த கோவிலில் பங்குனி உத்திர விழா விமரிசையாககொண்டாடப்படும். மேலும் ஒவ்வொரு பிரதோசத்தன்றும் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். ஆடி கிருத்திகையன்றும் விழா விமரிசையாக நடைபெறும். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டமும் அதிக அளவில் காணப்படும்.

    இந்த கோவிலுக்கு தெற்கு வீதியில் இருந்து நுழைவு வாயிலின் மேற்பகுதி கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆங்காங்கே மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்த வண்ணம் உள்ளது. மேலும் வாசலின் மேற்குபகுதியில் ஏராளமான வெடிப்புகளும் உள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே கோவிலுக்குள் செல்லும் நிலை தான் காணப்படுகிறது.

    இதே போன்று கோவிலின் சுற்றுச்சுவரின் வடக்குப்பகுதியும் உடைந்து விழுந்த வண்ணம் உள்ளது. கோவிலின் மேல்பகுதியில் ஆங்காங்கே செடிகள் முளைத்து கட்டிடத்தில் விரிசலும் காணப்படுகிறது. இந்த கோவிலுக்குள் அபிஷேகம் செய்வதற்கு கூட தண்ணீர் வசதி கிடையாது. அருகில் உள்ள ஒரு கட்டிடத்தின் இருந்து சாலையின் மேல் பகுதி வழியாக குழாய் மூலம் கொண்டுசெல்லப்படுகிறது.

    எனவே மிகவும் ஆபத்தான நிலையில் கள்ள கட்டிடத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுப்பதோடு, கோவில் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வசதியும் செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×