என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பழமையான தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூர் நகரின் வடக்கு எல்லையில் வெண்ணாற்றின் தெற்குக் கரையோரம் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தஞ்சை மாநகரில் கி.பி பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் கட்டிய பிரகதீசுவரர் என்னும் பெரு உடையார் கோவில் தொடங்கி, அதன்பின் வந்த நாயக்கர்களும், மராட்டியர்களும் தங்களது பக்தியினையும் கலை உள்ளத்தையும் வெளிப்படுத்த சிறியதும் பெரியதுமான நூற்றுக்கணக்கான சிவ, வைணவ ஆலயங்களை கட்டியுள்ளனர்.
அவற்றுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போல பழமையான தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூர் நகரின் வடக்கு எல்லையில் வெண்ணாற்றின் தெற்குக் கரையோரம் அமைந்துள்ளது. குடந்தை - திருவையாறில் இருந்து தஞ்சைக்கு நுழையும் வழியிலும், தஞ்சை பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 4 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
அதன் நேர் எதிரே திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் ஆகிய ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசமான வீரநரசிம்மர் எழுந்தருளியிருக்கும் தஞ்சை மாமணிக் கோவில் இருப்பது சரித்திரப் புகழுக்குக் சான்றாகும்.
சுவாமி அம்மன்
மூன்று நிலை கொண்ட சிறிய ராஜகோபுரத்தை தரிசித்தபடி உள்ளே நுழைந்தால் பலி பீடம், கொடி மரம், நந்தி, நீண்ட மண்டபத்தைத் தாண்டினால் பெரிய உருவில் துவார பாலகர்கள் இருக்கிறார்கள். கருவறையில் தஞ்சபுரீசுவரர். இவர் மேற்கு நோக்கி காட்சி தருவது சிறப்பானதாகும்.
அதே மண்டபத்தில் தெற்கு நோக்கியவாறு நின்ற கோலத்தில் ஆனந்தவல்லி அம்மன் அருளாட்சி செய்கிறார். அம்மன் சன்னிதி அருகில் ஆடவல்ல பெருமானின் செப்புத் திருமேனி திகழ்கின்றது. சோழர் காலக் கற்றளியாக விளங்கும் இத்திருத்தலத்தில் முன்மண்டபம் மராட்டிய அரசி காமாட்சி பாய் என்பவரால் நிறுவப்பட்டுள்ளது.
தேவகோட்டத்தில் துர்க்கை, லிங்கோத்பவர், பிரம்மன் இருக்கிறார்கள். துர்க்கைக்கு எதிரில் சிறிய கோவிலில் சண்டிகேசுவரர் அமர்ந்திருக்கிறார். வெளிச்சுற்றில் சுவாமிக்கு எதிரே கிழக்கு பார்த்தபடி விநாயகர், வில் ஏந்திய முருகப்பெரு மான், அய்யப்பன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மூர்த்தங்கள் வழிபடப்படுகின்றன.
தட்சணாமூர்த்தி சன்னிதிக்கு எதிரேயும் கொடிமரத்துக்கு அருகேயும் தலவிருட்சமான வன்னிமரங்கள் உள்ளன. அதனடியில் வன்னி லிங்கமும் இருக்கின்றன. பக்கத்தில் நவக்கிரகங்களின் சன்னிதி உள்ளது.
கோவிலின் திருச்சுற்றில் வடக்கு மதில் ஓரம் தெற்கு நோக்கிய படி பஞ்சமுக ஆஞ்சநேயர் இருக்கிறார். எல்லா தோஷங்களையும் போக்கும் வல்லமை படைத்தவராக விளங்குவதால் பக்தர்களை ஈர்த்து அருள் பாலித்து வருகிறார்.
குபேரன் வழிபாடு
இத்திருக்கோவிலில் மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்பு உள்ளது. இது குபேரன் வழிபட்ட தலம். ஆம்.. செல்வத்துக்கு அதிபதியான குபேரன் செல்வங்களை எல்லாம் இழந்து வாடினார். செல்வங்களை மீட்பதற்காக ஒவ்வொரு சிவாலயமாகத் தங்கி வழிபாடு செய்து வந்தார்.
இந்த தஞ்சபுரீஸ்வரிடம் தஞ்சமடைந்து வழிபாடு செய்து வந்தபோது அவருக்கு மீண்டும் அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெற்றதாகவும், அதனால் இந்த இறைவன் 'குபேரபுரீஸ்வரர்' என்று அழைக்கப்படுவதாகவும் வரலாறு சொல்கிறது.
அம்பிகையின் சன்னிதிக்கு எதிரே உள்ள மண்டபம் அஷ்டலட்சுமி மண்டபம் என்றே அழைக்கப் படுகிறது. இதன் சுவர்களில் மூன்று பக்கங்களிலும் வண்ணக்கோலத்தில் எட்டு லட்சுமிகளும் காட்சி தருகின்றனர். அதன் தென்கிழக்கு மூலையில் சிவலிங்கத்தை லட்சுமிதேவியும், குபேரரும் பூஜை செய்யும் காட்சி சிந்தையைக் கவருகிறது. அஷ்டலட்சுமிகளும் வழிபட்டதாலும் செல்வத்துக்கு அதிபதியான குபேரன் பூஜித்ததாலும் இத்தலத்து இறைவன் தன்னை வழிபடுவோருக்கு சகல சம்பத்துகளையும் வாரி வழங்குவதாக ஐதீகம்.
தஞ்சம் அடைந்தவரைக் காக்கும் இறைவன்
தன்னைத் தஞ்சமென்று வரும் அடியார்களைக் காப்பதனால் இறைவன் தஞ்சபுரீஸ்வரர் எனவும் அவர்களுக்கு ஆனந்தத்தை அள்ளித் தருபதால் அம்பிகைக்கு ஆனந்தவல்லி அம்மன் என்ற காரணப் பெயர் விளங்குவதாகவும் பெருமையுடன் சொல்கிறார்கள்.
தஞ்சகன் வதம்
எழில் சூழாத சமீ வனம் எனப்படும் இந்த வன்னிக் காட்டில் பராசர முனிவர் முதலான ரிஷிகள் சிவபூஜை செய்து தவம் இருந்த போது, அவர்களுக்கு அசுரர்கள் இடையூறு செய்து வந்தனர். முனிவர்கள் சிவனை வேண்ட, சிவனின் ஆணைப்படி சிவசக்தியான ஆனந்தவல்லி அம்மன் ஏகவீரா, ஜயந்தி, மர்தினீ, சண்டகாதினி ஆகிய சக்திகளாக உருவெடுத்து, தண்டகன், வீரன், வஞ்சகன், தஞ்சகன் ஆகிய அசுரர்களை அழித்தாள்.
தஞ்சகன் என்னும் அரக்கன் மரணத் தருவாயில் தன்னுடைய பெயரால் இவ்வூர் விளங்க வேண்டும் என்று மனமுவந்து வேண்டினான். அதனால் 'தஞ்சபுரி' என்று பெயர் வந்ததாகவும் இறைவன் தஞ்சபுரீசுவரர் என்றழைக்கப்படுவதாகவும் தஞ்சை நகரின் புகழ் கூறும் 'அளகாபுரி மகாத்மியம்' என்ற நூல் விளக்குகிறது.
'அளகை' என்றால் குபேரன் என்பதனால் அளகாபுரி என்பது குபேரனின் ஊர் என்பது புலனாகிறது. இதன் மூலம் குபேரன் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு பேறு பெற்ற செய்தி உறுதியாகிறது. அருகே உள்ள வெண்ணாறு தீர்த்த நதியாக விளங்குகிறது.
தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இத்திருக்கோவிலில் பிரதோஷம், திருவாதிரை, மகாசிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
'ஆனந்தவல்லி தவழ் தாணுவே போற்றி
ஞானத்து மேலானந்தமே போற்றி
மெய்யாய் போற்றி மேலாய் போற்றி
துய்யாய் தஞ்சபுரீச் சரத்தாய் போற்றி'
என்று போற்றித் திருமாலை புகழ்மாலை சூட்டுகிறது.
டாக்டர்.ச.தமிழரசன்,
தஞ்சாவூர்.

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் மூலவர் காமாட்சி தாயாருக்கு நாளை (வெள்ளிக்கிழமை) குங்கும லட்சார்ச்சனை நடக்கிறது. கொரோனா பரவலால் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் மூலவர் காமாட்சி தாயாருக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியில் இருந்து பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4 மணியில் இருந்து மாலை 6 மணி வரையிலும் குங்கும லட்சார்ச்சனை நடக்கிறது.
கொரோனா பரவலால் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. அர்ச்சகர்கள் ஏகாந்தமாக நடத்துகின்றனர்.

சாய்பாபாவை குருவாக நினைப்பவர்கள் ஏராளம். அதுவும் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் ஏன்பதால் வியாழக்கிழமை அன்று விரதம் இருக்கின்றனர்.
வாரந்தோறும் வியாழக்கிழமையன்று சாய்பாபாவுக்கு பெரும்பாலானோர் விரதமிருந்து வருகின்றனர். அவ்வாறு விரதம் இருப்பதையும் சாய்பாபா பக்தர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
அதற்கெல்லாம் காரணம்... பல அதிசயங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்து இருப்பது மட்டுமே. சாய்பாபாவை குருவாக நினைப்பவர்கள் ஏராளம். அதுவும் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் ஏன்பதால் வியாழக்கிழமை அன்று விரதம் இருக்கின்றனர்.
அவ்வாறு விரதம் இருக்கும்போது 9 வாரங்கள் வியாழக்கிழமையன்று சாய்பாபாவின் நாமத்தை மனதிற்குள் எண்ணி தாங்கள் நினைக்கும் காரியத்தை நினைவுகூர்ந்து தூய எண்ணங்களுடன் வழிபட்டால் கட்டாயம் நிறைவேறும் என்பது ஐதீகம். அவ்வாறு வழிபாட்டில் ஈடுபடும் போது காலையோ அல்லது மாலையோ சாய்பாபாவின் படத்திற்கு முன் அமர்ந்து ஓர் மஞ்சள் துணியை சுத்தமான ஒரு பலகையில் விரித்து வைத்து, அதன் மீது சாய்பாபா படத்தை வைத்து தூய நீரில் சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் மற்றும் திலகமிட வேண்டும்.
பாபாவிற்கு பிடித்த மஞ்சள் நிற மலர்கள் அணிவித்தால் மிகவும் சிறப்பு. பின்னர் ஊதுபத்தி ஏற்றி பாபாவின் விரத கதையையும் படிக்கலாம். பிறகு பூஜை செய்து நைவேத்தியம் அதாவது கற்கண்டு இனிப்பு பழங்கள் என் சாய் பாபாவிற்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபட்டால் எண்ணிய காரியம் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம். அதனால்தான் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று பாபாவின் பக்தர்கள் தொடர்ந்து வழிபாட்டில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக கஜமுக சூரசம்ஹாரம் மற்றும் தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்த விழா பக்தர்கள் அனுமதியின்றி எளிமையாக நடைபெற்றது.
அதேபோல் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாகவும், அரசின் வழிகாட்டுதலின்படி நேற்று காலை தொடங்கியது. முன்னதாக மூலவர் முன்பு உள்ள கொடி மரத்திற்கு கோவில் தலைமை பிச்சைகுருக்கள் தலைமையில் பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உற்சவர் கற்பகமூர்த்தி வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேசுவரர் ரிஷிப வாகனத்திலும் எழுந்தருளினர்.
தொடர்ந்து காலை 11.25 மணிக்கு கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டு விழா தொடங்கியது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவு மூஷிக வாகனத்தில் உற்சவர் எழுந்தருளினார். கொரோனா காலமாக உள்ளதால் தினந்தோறும் காலை மற்றும் இரவு ஆகிய நேரங்களில் உற்சவர் பிரகாரம் சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதன்படி தினந்தோறும் இரவு சிம்மம், பூதம், தாமரை, ரிஷபம், மயில், குதிரை, யானை ஆகிய வாகனங்களில் கற்பக விநாயகர் எழுந்தருளி பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு 6-ம் திருநாள் அன்று கோவில் முன்பு நடைபெறும் கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற உள்ளது. இதே போல் 9-ம் திருநாள் அன்று நடைபெறும் தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
10-ம் திருநாளான வருகிற 10-ந் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி அன்று காலை பக்தர்கள் அனுமதியின்றி தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் இரவு பஞ்ச மூர்த்தி உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவையொட்டி கோவில் முன்பு மின்னொளி அலங்காரம் அமைக்கும் பணிக்காக தற்போது கம்புகள் மூலம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் காரைக்குடி ராமசாமி செட்டியார், வலையப்பட்டி மு.நாகப்ப செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர். மேலும் திருவிழாவை தவிர்த்து மன்ற நேரங்களில் அரசின் வழிகாட்டுதலின்படி பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். கொரோனா தொற்று அதிகம் உள்ள இடங்களில் இருந்து வருபவர்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆகியோர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்த நிலையில் கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கங்கையில் நீராடிய பலனைத் தரும் பல புண்ணியத் தீர்த்தங்கள் நம்முடைய தமிழ்நாட்டிலேயே இருக்கின்றன. அந்த புண்ணிய நதி களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
காசி நகரம், சிவபெருமானே உருவாக்கியது என்று புராணங்கள் சொல்கின்றன. அந்த நகரைச் சுற்றிலும் ஓடும் கங்கை நதியானது, புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதில்நீராடினால் எப்பேர்ப்பட்ட பாவங்களும் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆனால் அனைவராலும் கங்கை நதி பாயும் இடத்திற்குச் சென்று நீராட முடியுமா என்பது கேள்விக்குறிதான். அந்த வகையில் கங்கையில் நீராடிய பலனைத் தரும் பல புண்ணியத் தீர்த்தங்கள் நம்முடைய தமிழ்நாட்டிலேயே இருக்கின்றன. அந்த புண்ணிய நதி களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
* மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் ஆலயத்தின் முன்பாக உள்ள காவிரியின் துலா கட்டத்தில், ஐப்பசி மாதம் முழுவதும் நீராடினால், கங்கையில் நீராடிய முழு பலனும் கிடைக்கும். கார்த்திகை முதல் நாள் நீராடினாலும் அந்தப் பலனைப் பெறலாம்.
* தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது திருவிசநல்லூர் என்ற ஊர். இங்கு ஸ்ரீதரஐயாவாள் திருமடம் இருக்கிறது. இந்த மடத்திற்குள் தீர்த்தக்கிணறு ஒன்று உள்ளது. இதில் கார்த்திகை மாத அமாவாசை நாளில் கங்கை நீர் பொங்கி வெளியேறும். அப்போது நீராடினால் புண்ணிய பலன் கிடைக்கும்.
* ஸ்ரீவாஞ்சியத்தில் குப்த கங்கை என்ற திருக் குளம் உள்ளது. இந்த திருக்குளத்திலும் கார்த்திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடினால், கங்கையில் நீராடிய பலனைப் பெறலாம்.
* முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளில் ஒன்று திருச்செந்தூர் செந்திலாண்டவன் கோவில். இங்குள்ள கடலில் தினமும் நண்பகல் வேளையில் கங்கை வந்து நீராடுவதாக ஐதீகம். இதனால் அந்த நேரத்தில் கோவில் அர்ச்சகர்கள், கடலுக்கு தீபாராதனை காட்டுவார்கள். அப்போது கடலில் நீராடினால், கங்கையில் நீராடிய பலனைக் கொடுக்கும்.
* சிதம்பரம் நடராஜர் கோவில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், தஞ்சை பெரியகோவில் ஆகியவற்றில் சிவகங்கை தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தங்களில் நீராடினாலும், கங்கையில் நீராடிய புண்ணியம் வந்தடையும்.
* திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில், சனி பகவான் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு பெற்றது. இங்குள்ள கங்கா தீர்த்த குளத்தில் நீராடினால், கங்கையில் மூழ்கி எழுந்த பலன் உண்டாகும்.
* திருவாரூர் அருகே உள்ள குருவிராமேஸ்வரம் என்ற இடத்தில் முக்கூடல் தீர்த்தம் என்னும் திருவேணி சங்கமத்திற்கு சமமான தீர்த்தம் உள்ளது. இங்கு நீராடினாலும் கங்கையில் நீராடிய சிறப்பைப் பெற முடியும்.
* சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு சவும்யநாராயணப் பெருமாள் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் மகா கிணறு ஒன்று இருக்கிறது. இங்கு ஐப்பசி அமாவாசை நாளில் நீராடினால், கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.
* திருப்பூர் பஸ்நிலையம் அருகே உள்ளது விஸ்வேஸ்வரர் கோவில். இங்குள்ள தீர்த்தக் கிணறு, கங்கை தேவியே நீராடிய புனிதம் வாய்ந்தது என்று தல வரலாறு சொல்கிறது. எனவே அந்த தீர்த்தத்தில் நாமும் நீராடினால், கங்கையில் நீராடிய பலன் வந்தடையும்.
* திருக்கடையூர் வீரட்டானம் திருத்தலம், எமனிடம் இருந்து மார்க்கண்டேயனை சிவபெருமான் காப்பாற்றிய சிறப்புமிக்கது. இங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் திருக்கடையூர் மயானம் என்ற இடம் உள்ளது. இங்கு காசி தீர்த்தம் ஒன்று இருக்கிறது. அது மார்க்கண்டேயருக்காக கங்கை நதி, தீர்த்தமாக உருவெடுத்த இடமாகும். எனவே இங்கு நீராடினாலும் கங்கையில் நீராடிய பலனைப் பெறலாம்.
* மதுரை அருகே உள்ள அழகர் கோவில் மிகவும் சிறப்புக்குரியது. அதற்கு மேல் உள்ள மலையில் முருகப்பெருமானின் ஆறு படை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது. எங்கிருந்து வருகிறது என்றே கண்டறியப்படாத அந்த தீர்த்தத்தில் நீராடினாலும், கங்கையில் நீராடிய புண்ணியத்தை அடையலாம்.
* புனித நீராடலுக்கு பெயர் பெற்ற திருத்தலங்களில் ஒன்று, ராமேஸ்வரம். இங்கு கோடி தீர்த்தம் உள்ளது. ராமபிரான், இங்கே சிவலிங்க பிரதிஷ்டை செய்தபோது, அதனை நீராட்ட நன்னீர் தேவைப்பட்டது. ஆகையால், அவர் தன்னிடம் இருந்த அம்பை, பூமியில் அழுத்தினார். உடனே, அதில் இருந்து கங்கை பீறிட்டு வெளிவந்தது. அதுவே தற்போது கோடி தீர்த்தம் எனப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடினாலும் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கப்பெறும்.

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் செப்டம்பர் மாதம் நடைபெறும் விழாக்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தனிமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இந்த மாதம் (செப்டம்பர்) நடைபெறும் விழாக்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 3-ந்தேதி சீதாராமர் திருகல்யாணமும், 4,11,18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு மூலவர்களுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடைபெறும். அமாவாசையையொட்டி 7-ந்தேதி காலை 6.30 மணிக்கு சஹஸ்ர கலசாபிஷேகம் நடைபெறும்.
20-ந்தேதி பவுர்ணமியையொட்டி காலை 9 மணிக்கு அஷ்டோத்திர சத கலசாபிஷேகம் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தனிமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடுகர்பேட்டை புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் குறைந்த அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாவட்ட வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் வடுகர்பேட்டை புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை நடைபெற்றது.
கொடியினை சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயர் கொடியினை புனிதப்படுத்தி கொடியேற்றி திருவிழாவினை துவக்கி வைத்தார். விழாவில் பங்கு தந்தை தங்கசாமி உதவி பங்குத்தந்தை அருளப்பன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வியாகுல ஈஸ்வரி ஜெயக்குமார், துணைத்தலைவர் அலெக்ஸ் செல்வராஜ் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் குறைந்த அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடு மற்றும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி புறப்பாடு நேற்று முன்தினம் காலை தொடங்கியது. நேற்று மாலை உறியடி உற்சவம் நடைபெற்றது.
உறியடி உற்சவத்திற்காக காலை 7 மணிக்கு கிருஷ்ணன் புறப்பாடு நடைபெற்றது. எண்ணெய் விளையாட்டு கண்டருளி காலை 7.30 மணிக்கு கிருஷ்ணன் சன்னதிக்கு வந்தார். பின்னர் மாலை 3 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்கள் திருச்சிவிகையில் மற்றும் கிருஷ்ணன் உடன் புறப்பட்டு கருடமண்டபத்திற்கு மாலை 3.30மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் இரவு 9 மணிக்கு நம்பெருமாள் கருட மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் கருடமண்டப வளாகத்திலேயே உறியடி உற்சவம் கண்டருளுளினார்.
உறியடி உற்சவத்திற்காக கருடமண்டபத்தின் மேல் பூக்களால் அலக்கரிக்கப்பட்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதில் அலங்கரிக்கப்பட்ட 3 பானைகளில் பால், தயிர், வெண்ணை நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதன் எதிரில் நம்பெருமாள், கிருஷ்ணன் வந்தவுடன் கீழிருந்து நீண்ட குச்சியில் மூலம் அந்த பானைகள் உடைக்கப்பட்டு உறியடி உற்சவம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து கிருஷ்ணன் மற்றும் நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தனர்.

திருமந்திரம் என்னும் நூல், பக்தி, நீதி, தத்துவம், உளவியல், ஊழியியல், வாழ்வியல், துறவறம், வானசாஸ்திரம் என பல துறைகளை இணைந்து மனிதனுக்கு நன்னெறிகளை சொல்லும் ஒரே நூலாக இருக்கிறது.
மனிதனுக்கு இறைவன் சொன்னது, கீதை. மனிதன் இறைவனுக்கு பாடியது திருமுறைகள். மனிதனே மனிதனுக்கு தந்தது திருக்குறள். மனிதனுக்கு சித்தர் அருளியது திருமந்திரம்.
ஒரு நூல் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லும். சில நூல்கள் பக்தியை உரைக்கும். சில நூல்கள் நீதியை போதிக்கும். சில தத்துவம் பேசும். சில உளவியலைச் சொல்லும். சில வாழ்வியலை கற்பிக்கும். ஆனால் திருமந்திரம் என்னும் நூல், பக்தி, நீதி, தத்துவம், உளவியல், ஊழியியல், வாழ்வியல், துறவறம், வானசாஸ்திரம் என பல துறைகளை இணைந்து மனிதனுக்கு நன்னெறிகளை சொல்லும் ஒரே நூலாக இருக்கிறது.
அந்த நூலில் இருந்து ஒரு பாடலையும் அதற்கான விளக்கத்தையும் இங்கே பார்ப்போம்.
பாடல்:-
அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே
அகம் புகுந்தும் தெரியான் அருள் இல்லோர்க்கு
அகம் புகுந்து ஆனந்தம் ஆக்கி சிவமாய்
அகம் புகுந்தான் நந்தி ஆனந்தியாமே.
பொருள்:-
இறைவன் எளியவர்களின் உள்ளத்தில் நுழைகிறான். அப்படி இறைவன் நுழைந்தாலும், அவன் அருளைப் பெறாதவர்கள், அவனை உணரமாட்டார்கள். நந்தியின் அதிபராக விளங்கும் சிவ வடிவைக் கொண்ட அந்தப் பெருமான், உள்ளத்தில் புகுந்து பேரின்பம் தந்து சிவகரணமாய் ஆனந்திப்பவன்.

கும்பகோணம் மகாமக குளத்தின் அருகில் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள ஈசனை, ராமாயண காலத்தில் ராமபிரானும், லட்சுமணனும் வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது.
* திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில், உள்பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கத்திற்கு தனி சன்னிதி உள்ளது. ‘அப்பு’ என்பதற்கு ‘நீர்’ என்று பொருள். பஞ்சபூதத் தலங்களில் இது நீர் தலமாக விளங்குகிறது. அப்புலிங்கம் தரைமட்டத்திற்கு கீழே உள்ளதால், தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். கடுமையான கோடை காலங்களிலும் இந்த நீர் கசிவு நிற்பதில்லை.
* தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது, திருநல்லூர். இங்குள்ள சிவலிங்கத் திருமேனி தினமும் ஐந்து முறை வெவ்வேறு நிறங்களில் காட்சியளிக்கிறது. இதனால் இத்தல இறைவனை ‘பஞ்சவர்ணேஸ்வரர்’ என்று அழைக்கிறார்கள்.
* கும்பகோணம் மகாமக குளத்தின் அருகில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கு சிவபெருமானுக்கு மட்டுமின்றி, நவ நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா, சரயு ஆகிய புனித நதிகளுக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்தக் கோவிலில் உள்ள ஈசனை, ராமாயண காலத்தில் ராமபிரானும், லட்சுமணனும் வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்தமாதம் (செப்டம்பர்) நடைபெறும் முக்கிய விழாக்கள் குறித்த விவரங்களை கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விழாக்கள் குறித்த விவரங்களை தேவஸ்தானம் அறிவித்து வருகிறது. அதன்படி இந்தமாதம் (செப்டம்பர்) நடைபெறும் முக்கிய விழாக்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (2-ந் தேதி) நாத நீராஜனம் மேடையில் பாலகாண்டா முதல் அகண்ட பாராயணமும், 3-ந் தேதி முதல் 18-ந் தேதிவரை வசந்த மண்டபத்தில் ஷோடா சதினா பாலகாண்ட பாராயண தீட்சையும் நடக்கிறது. 8-ந் தேதி பலராம ஜெயந்தி, 9-ந் தேதி வராஹ ஜெயந்தி, 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி மற்றும் 19-ந் தேதி அனந்த பத்மநாப விரதம் ஆகியவை நடக்கிறது.

நாகை நவநீத கிருஷ்ணன் கோவிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தேர் கோவில் வளாகத்துக்குள் வலம் வந்தது.
நாகை நவநீத கிருஷ்ணன் கோவிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினந்தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடந்தது. இதை தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக நவநீதகிருஷ்ணன், ருக்மணி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
இதைத்தொடர்ந்து தேர் கோவில் வளாகத்துக்குள் வலம் வந்தது. இதில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.