என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குள் செல்ல பக்தர்கள் அனுமதி கிடையாது என்பதால், விநாயகர் சதுர்த்தி வருகிற 10-ந்தேதி வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
சுவாமிமலை அருகே திருவலஞ்சுழியில் உள்ள வெள்ளை விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோவிலில் விநாயக சதுர்த்தி விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது கொடிமரம் அருகே வாணி-கமலாம்பிகா சமேத வெள்ளை விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
வருகிற 11-ந்தேதி வரை விழா நாட்களில் காலை, மாலை இருவேளைகளிலும் சாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா உள் பிரகாரத்திலேயே நடைபெறுகிறது.
விழாவில் 6-ந்தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடும், 8-ந்தேதி திருக்கல்யாணமும், 10-ந் தேதி காலை 7 மணிக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேவேந்திரன் பூஜையும், மாலை மூஷிக வாகனத்தில் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குள் செல்ல பக்தர்கள் அனுமதி கிடையாது என்பதால், விநாயகர் சதுர்த்தி வருகிற 10-ந்தேதி வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் அன்றைய தினம் வழக்கமாக நடைபெறும் தேரோட்டமும் ரத்து செய்யப்படுகிறது என கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

காராம்பசுவின் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் குஷ்டம் கூட குணமாகும் என்று சங்க கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.
சிவனுக்கு பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்வதன் மூலம் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறலாம். காராம்பசுவின் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் குஷ்டம் கூட குணமாகும் என்று சங்க கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.
காராம்பசு என்று குறிப்பிட்டு கூறுவதற்கு காரணம் உண்டு. மற்ற பசுவின் பாலுக்கும் காராம் பசுவின் பாலுக்கும் சுவையிலேயே நிறைய வித்தியாசம் இருக்கும். சாதாரண பசுவின் பாலைக் கொண்டு சிவனை வணங்குவதை விட, காராம்பசுவின் பாலைக் கொண்டு சிவனை வழிபட்டால்தான் முழுமையான பலன் கிடைக்கும்.

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர்சதுர்த்தி விழாவையொட்டி உற்சவர் விநாயகர் வெள்ளி மூஷிகம் மற்றும் சிறப்பு அலங்காரத்திலும், சண்டிகேசுவரர் ரிஷப வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்த விழா பக்தர்கள் அனுமதியின்றி எளிமையாக நடைபெற்றது.
அதேபோல் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாகவும், அரசின் வழிகாட்டுதலின்படி 1-ம்தேதி தொடங்கியது. கொரோனா காலமாக உள்ளதால் தினந்தோறும் காலை மற்றும் இரவு ஆகிய நேரங்களில் உற்சவர் பிரகாரம் சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதன்படி தினந்தோறும் இரவு சிம்மம், பூதம், தாமரை, ரிஷபம், மயில், குதிரை, யானை ஆகிய வாகனங்களில் கற்பக விநாயகர் எழுந்தருளி பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர்சதுர்த்தி விழாவையொட்டி நேற்று உற்சவர் விநாயகர் வெள்ளி மூஷிகம் மற்றும் சிறப்பு அலங்காரத்திலும், சண்டிகேசுவரர் ரிஷப வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
10-ம் திருநாளான வருகிற 10-ந் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி அன்று காலை பக்தர்கள் அனுமதியின்றி தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் இரவு பஞ்ச மூர்த்தி உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவையொட்டி கோவில் முன்பு மின்னொளி அலங்காரம் அமைக்கும் பணிக்காக தற்போது கம்புகள் மூலம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.

கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கஞ்சமலை சித்தேஸ்வர சுவாமி கோவில் செயல் அலுவலர் பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் கொரோனா தடுப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு அரசு அறிவிப்பின்படி இன்று (3-ந்தேதி) முதல் வருகிற 5-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது 6-ந் தேதி அமாவாசை உற்சவத்தில் அதிகப்படியான பக்தர்கள் கோவிலில் கூடுவார்கள் என்பதால் 6-ந் தேதியும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.
எனவே பக்தர்கள் இன்று முதல் 6-ந் தேதி வரை பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தவும், குளிக்கவோ, பொங்கல், வைக்கவும், வழிபாடு செய்யவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நம்மால் முடிந்த அளவிற்கு லட்சுமிக்கு நிவேதனங்கள் படைத்து இந்த பிரார்த்தனை ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். அந்த உபதேச பிரார்த்தனை வருமாறு:-
மனிதனுக்கு முக்கிய தேவை பணம். ஆனால் ஒரு சிலரிடமே பணம் தங்குகிறது. பணத்தையும், பதவியையும் இழந்து மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்கள் கூட சிரமப்பட்டிருக்கிறார்கள். இந்திரன் தனது தகாத செயலால் பதவியை இழந்து அலைந்திருக்கிறார்.
மீண்டும் பதவியை பெற பால்கடலில் பூஜை நடத்தினார். அப்போது விஷ்ணு சில உபதேசங்களை சொன்னார். இந்த உபதேசத்தை நாமும் நமது வீட்டில் பூஜை அறையில் அமர்ந்து சொன்னால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
நம்மால் முடிந்த அளவிற்கு லட்சுமிக்கு நிவேதனங்கள் படைத்து இதை சொல்ல வேண்டும். அந்த உபதேச பிரார்த்தனை வருமாறு:-
ஆயிரம் இதழ்களை கொண்ட தாமரைப்பூவில் வசிப்பவளே! ஆயிரம் நிலாக்களின் பிரகாசத்தைப் போன்ற முகத்தைப் பெற்றவளே! இனிமை தருபவர் உள்ளத்திற்கு உற்சாகத்தை அளிப்பவளே! தங்கத்தைபோல் மின்னுபவளே! ஒளி பொருந்திய ஆடையை அணிந்திருப்பவளே! பலவகை ஆபரணங்களால் ஒளி வீசும் தெய்வீக தன்மை கொண்ட தாயே! மலர்முகம் கொண்டவளே! மந்தகாச புன்னகையை உடையவளே! என்றும் குறையாத இளமையைக் கொண்டவளே! உன்னை வணங்குவோருக்கு சகல செல்வங்களையும் அள்ளித் தருபவளே! மகாலட்சுமி உன்னை வணங்குகிறேன்.
சகல உலகங்களிலும் உள்ளவர்களால் போற்றப்படும் தாயே! உலக உயிர்களுக்கு மகிழ்ச்சியை தருபவளே! ரத்தினங்களாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டு விஸ்வகர்மாவால் செய்யப்பட்ட அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவளே! தாமரையில் வசிப்பவளே! உனக்கு தூய்மையான கங்கை நீரை அர்ப்பணம் செய்கிறேன். மிகவும் புனிதமானதும், பாவங்களை அழிக்கக் கூடியதுமான அக்னியைப் போன்றது இந்த கங்கை நீர், இந்தந ¦ரை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். உனக்கு பூக்கள், சந்தனம் ஆகியவற்றுடன் கூடிய கங்கையின் புனித நீரை சங்கால் அபிஷேகம் செய்கிறேன். இதை நீ ஏற்றுக் கொள்வாயாக.
அன்பிற்குரிய ஹரிக்கு மனைவியானவே! உனது தேகத்தின் அழகைக் கூட்ட நறுமண தைலத்தையும், நறுமண திரவியங்களையும் கொண்ட இந்த கங்கை நீரை அர்ப்பணிக்கிறேன். பரந்தாமனின் அன்பிற்குரிய செல்வமே! உனக்கு நறுமண திரவியங்கள் சேர்க்கப்பட்ட இந்த சாம்பிராணியைத் தருகிறேன். ஏற்றுக் கொள்.
பொதிகை மலையில் விளையும் சந்தனத்தை உனக்கு அர்ப்பணம் செய்கிறேன். ஏற்றுக் கொள்வாயாக. அழகிய வடிவம் கொண்டதும், ஒளிபரப்புவதும் சகல உயிர்களுக்கும் கண் போன்றதுமான இந்த தீபத்தை உனக்கு அர்ப்பணிக்கிறேன். ஏற்றுக் கொள்வாயாக.
அறுசுவை நிரம்பியதும் உடலுக்கு நல்லதுமான இந்த நைவேத்தியத்தையும் அளிக்கிறேன். இதையும் ஏற்றுக் கொள்.
இவ்வாறு கூறி வணங்க வேண்டும்.
ஒவ்வொரு பிரார்த்தனையை சொல்லும்போது அந்தந்த பொருட்களை அம்பாளிடம் ஒப்படைக்க வேண்டும். வசதி இல்லாதவர்கள் தீபம் ஏற்றி வழிபாட்டாலே போதுமானது. அதே நேரம், மானசீகமாக இந்த பொருட்களை எல்லாம் அம்பாளுக்கு அர்ப்பணிப்பதாக கருதி இந்த உபதேசத்தை சொன்னால் நீங்கள் பணம் குவிக்கும் வகையில் லட்சுமி தேவி செல்வத்தை அள்ளித் தருவாள்.

ஒரத்தநாடு புதூர் அய்யனார் கோவிலில் ரூ.27 லட்சம் செலவில் 80 டன் எடை கொண்ட கல்லில் யானை மற்றும் குதிரை சிலைகள் நிறுவப்பட்டது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு புதூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் ரூ.3 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு விரைவில் குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. இதற்காக கோவிலில் யானை மற்றும் குதிரை சிலைகளை வைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர்.
இதற்காக திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள திருமுருகன்பூண்டி கிராமத்தில் யானை மற்றும் குதிரை சிலைகளை ரூ.27 லட்சம் செலவில் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. 50 டன் எடையுள்ள கல்லில் யானை சிலையும், 30 டன் எடையுள்ள கல்லில் குதிரை சிலைகளையும் சிற்பிகள் மணிகண்டன், சந்தோஷ்குமார், தினேஷ்குமார் ஆகியோர் செய்து வந்தனர். இந்தப் பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கிரேன் எந்திரம் மூலம் கனரக லாரியில் சிலைகள் ஏற்றப்பட்டு நேற்றுமுன்தினம் இரவு ஒரத்தநாடு புதூர் அய்யனார் கோவில் வந்தடைந்தது.
கோவிலுக்கு ஒரே கல்லில் செய்யப்பட்டு யானை மற்றும் குதிரை சிலைகள் கொண்டுவரப்பட்டதால் பக்தர்கள், கிராமமக்கள் திரண்டு வந்து வாணவேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நேற்று காலை கிரேன் எந்திரம் மூலம் லாரியிலிருந்து சிலைகள் இறக்கப்பட்டு கோவிலில் வைத்து, முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் பக்தர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

பங்குனி மாதம் 23 முதல் 27-ம் தேதி வரையிலும் சூரியன் வணங்கும் வேளையில் நிகழும் விசேஷ பூஜைகளில் கலந்துகொண்டு வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
விழுப்புரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தால், விழுப்புரத்திலிருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது திருநாவலூர். அருள்மிகு மனோன்மணி அம்மை சமேதராக அருள்மிகு பக்தஜனேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் புண்ணிய க்ஷேத்திராம் இது!
இறைவனின் தோழன் என்றே ஞானநூல்கள் பலவும் போற்றும் சுந்தர மூர்த்தி சுவாமிகள் அவதரித்த தலம், இந்தத் திருநாவலூர் என்கிறார்கள் பக்தர்கள்! இங்கே பக்தஜனேஸ்வரராக சிவம் கோயில் கொண்ட திருக்கதை அற்புதமானது.
ஆலய வரலாறு
1300 ஆண்டுகள் பழைமையான சிவாலயம் என்கிறார்கள். ஐந்து நிலை கோபுரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. கோபுர வாயில் கடந்து உள்ளே நுழைந்தால், அழகும் அமைதியும் ததும்ப காட்சி தருகிறது ஆலயம். பிரமாண்டமான நந்தி சிவச் சந்நிதியை எதிர்நோக்கி அமர்ந்திருக்க, அருகிலுள்ள சிங்க மண்டபத்தை ஒட்டியபடி அம்பாள் சந்நிதிக்கான பாதை செல்கிறது.
இதைக் கடந்ததும் உள் பிராகாரம். கிழக்குச் சுற்றில்- 16 பட்டைகளுடன் கூடிய நரசிங்க லிங்கம்; நரசிங்க முனையரையர் ஸ்தாபித்து வழிபட்டது. தெற்குச் சுற்றில்- பொள்ளாப் பிள்ளையார், சேக்கிழார், சைவ நால்வர், அறுபத்து மூவரும், தொகையடியார்களும். தொடர்ந்து சப்தமாதர்கள். தென்மேற்கு மூலையில்- வலம்புரி விநாயகர். அடுத்து சோமாஸ்கந்தர், வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகர், பன்னிரு கரங்களுடன் மயிலேறுநாதராக அருள்கிறார்.
தொடர்ந்து நகர்ந்தால்... மேற்குச் சுற்றுத் திருமாளிகையில் முருகனுக்கு அருகில், விஷ்ணு சேவை சாதிக்கிறார். அடுத்து, கிருத யுக லிங்கம்; அதற்கும் அடுத்து, சண்டிகேஸ்வரர். தொடர்ந்து திரேதா யுக லிங்கம்; பிரம்மா; துவாபர யுக லிங்கம்; கலியுக லிங்கம்.
வடமேற்கு மூலையில் தனிச் சந்நிதியில் கஜலட்சுமி. வடக்குச் சுற்றில் சப்தரிஷிகள் பிரதிஷ்டை செய்த சப்த லிங்கங்கள்; வெவ்வேறு அளவுகளில் பாணங்கள் மட்டும் உள்ளன. தொடர்ந்து வந்தால், நடராஜர் சந்நிதி. கிழக்குச் சுற்றில் திரும்பினால், நவக்கிரகங்கள்.
அடுத்ததாக, அழகான ருத்திராட்ச விதானத்தின் கீழ் ஸ்ரீபார்கவலிங்கம்; சுக்கிரன் வழிபட்ட சிவலிங்கம் (பிருகு முனிவரின் மகன் என்பதால் பார்கவன் என்ற பெயரும் சுக்கிரனுக்கு உண்டு). அடுத்துள்ள இரண்டு சந்நிதிகளில் பைரவர் திருவுருவங்கள். அதனையும் அடுத்து, சூரியன் சந்நிதி. சுக்கிரனும் சூரியனும் இந்தத் தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி உய்வு பெற்றனர்.
கருவறையில், ஸ்ரீபக்தஜனேஸ்வரர்; வட்ட வடிவ ஆவுடையார். கிழக்கு நோக்கிய லிங்கத்தின் பாணம் சற்றே உயரமானது. நாவலேசர், தொண்டர் நாயகர், மனோன்மணி நாயகர், விஷ்ணுபூஜிதர், சாம்புபுரேசர், சண்டேச அனுக்கிரஹர், கருடானுகிரஹர், விஷபாத விமோசனர், கபர்தீசர், ஞானாச்சார்யர் முதலான திருநாமங்கள் கல்வெட்டுகளிலும் வழக்கிலும் காணப்படுகின்றன.
அம்பாள் சந்நிதியின் எதிரில் நந்தி. மகா மண்டபத்தில், ஒருபுறம் விநாயகர்; மறுபுறம் துர்கை. கருவறையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள் மனோன்மணி அம்பிகை. இரண்டு கரங்களில் பாசம் மற்றும் அங்குசம்; மீதமிரு கரங்களில் அபயம் மற்றும் வரம் முத்திரைகள். நாவலாம்பிகை, சுந்தராம்பிகை ஆகிய திருநாமங்களும் இவளுக்கு உண்டு.
சுக்கிரனின் தவத்தால் மகிழ்ந்து காட்சியளித்த சிவபெருமான், பூலோகத்தில் உள்ள பல தலங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்து வரும்படி அவரைப் பணித்தாராம். அப்படி, சுக்கிரன் வழிபட்ட தலங்களில் முதன்மையானது திருநாவலூர் என்கிறார்கள். சுந்தரர் இங்கு ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்று ஞான தீக்ஷை பெற்றதாகச் சொல்கிறார்கள்.
பங்குனி மாத 23 முதல் 27-ம் தேதி வரையிலும் சூரியன் வணங்கும் வேளையில் நிகழும் விசேஷ பூஜைகளில் கலந்துகொண்டு வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். அதேபோல், இந்தக் கோயிலில் கொடி மரத்தின் அருகே உள்ள சுந்தர கணபதிக்கு மஞ்சள் மாலை கட்டி வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும்; வீடு கட்டும் ஆசையும் நிறைவேறும்.
சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் விழாவில், பஞ்ச மூர்த்தி உற்சவம் நிகழும். சுந்தரர் அவர்களை வணங்கி வழிகாட்டிச் செல்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர நாளில், சுந்தரருக்கு விசேஷ பூஜை நடைபெறும். ஆடிச் சுவாதி மிகவும் விசேஷம். நவராத்திரியும் சிறப்பாக நடைபெறுகிறது!.

தென் இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூரு தசரா திருவிழாவுக்கு நிகராக தமிழகத்தில் நெல்லை பாளையங்கோட்டையில் தசரா விழா 100 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
பாளையங்கோட்டை அனைத்து கோவில் தசரா விழா கூட்டமைப்பு தலைவர் கனகசுப்பிரமணியன், செயலாளர் மனகாவலம், பொருளாளர் சாய்முருகன், நிர்வாகி ராஜீவ்காந்தி மற்றும் பக்தர்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
தென் இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூரு தசரா திருவிழாவுக்கு நிகராக தமிழகத்தில் நெல்லை பாளையங்கோட்டையில் தசரா விழா 100 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இங்கு ஆயிரத்தம்மன், பேராத்து செல்வி அம்மன், முப்புடாதி, தென் பகுதி முத்தாரம்மன், விசுவகர்ம உச்சினிமாகாளி, வடபகுதி முத்தாரம்மன், யாதவர் உச்சினி மாகாளி, தூத்துவாரி அம்மன், வடபகுதி உச்சினிமாகாளி அம்மன், கிழக்கு பகுதி உச்சினிமாகாளி அம்மன், தேவி உலகம்மன், தேவி புது உலகம்மன் ஆகிய 12 அம்மன் கோவில்களிலும் தசரா திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு ஆவணி மாதம் அமாவாசை நாளில் கால்நாட்டி, புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையில் சப்பர வீதிஉலாவுடன் விழா நடைபெறும்.
கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கு நடைமுறைகள் உள்ளதால் வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) அனைத்து அம்மன் கோவில்களிலும் கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்க வேண்டும். அரசு வழிகாட்டுதலுக்கு ஏற்ப பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அம்மனை வழிபட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, விழா நடைபெற அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் 442-வது ஆண்டு மகிமை திருவிழா நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வெளியூர் பக்தர்கள் விழாவில் பங்கேற்க அனுமதியில்லை.
மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் 442-வது ஆண்டு மகிமை திருவிழா நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்தில் முதல் திருப்பலியும், காலை 6.30 மணிக்கு ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, திருச்சிலுவை ஆசீர் வழங்கப்படும். விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருச்சிலுவை திருத்தலத்திலும், பங்கு ஆலயத்திலும் திருப்பலிகள் நடைபெறும்.
விழாவில்முக்கிய நாளான 13-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலியும் பின்பு ஐந்து திருக்காய சபையின் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாலை 6.30 மணிக்கு பெருவிழா மாலை ஆராதனையும். 14-ந்தேதி திருச்சிலுவைமகிமை பெருவிழாவை யொட்டி அதிகாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்திலும், திருச்சிலுவை திருத்தலத்திலும் திருப்பலிகள் நடைபெறும்.
காலை 6 மணிக்கு திவ்விய ஐந்து திருக்காய திருச்சபையினர் பவனி வந்து மகிமை பெருவிழா ஆராதனைகள் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசிர் மாலை 5.30 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் கொடியிறக்க திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வெளியூர் பக்தர்கள் விழாவில் பங்கேற்க அனுமதியில்லை.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழாவின் 7-ம் நாளான நேற்று சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் உலா வந்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, விழா நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 10-ம் திருநாளான வருகிற 5-ந்தேதி வரையிலும் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
7-ம் திருநாளான நேற்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உருகுசட்ட சேவை நடைபெற்றது. காலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் வெற்றிவேர் மாலை அணிந்து சப்பரத்தில் எழுந்தருளி கோவிலுக்குள் உலா வந்து, உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதிக்கு சென்றார்.
மாலையில் உள்பிரகாரத்தில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் சிவப்பு நிற பட்டாடைகளாலும், சிவப்பு நிற மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் சிவப்பு நிற பட்டு உடுத்தி, சிவப்பு நிற மலர்கள் சூடி செம்மேனியுடன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்தார். சுவாமி சண்முகர் பின்புறம் சிவன் அம்சமாக காட்சி கொடுத்தார்.
8-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) பகலில் சுவாமி, வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளுகிறார்.
10-ம் திருநாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடைபெறாது. சுவாமி-அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி, உள்பிரகாரத்தில் வலம் வருகின்றனர்.
விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியூப் இணையதளத்திலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இந்த விரதத்தை ஆண், பெண் குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம்.
அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள (அஷ்டமி, நவமி இல்லாத) ஒரு வெள்ளிக் கிழமை இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.
விரதம் கடைப்பிடிக்கும் தினத்துக்கு முதல் நாளே சில பூஜை பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். லட்சுமி படம், குபேரன் படம், குபேர யந்திரம் இப்படி லட்சுமி குபேரன் சம்மந்தமா இருக்கிறத எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
மஞ்சள் தூள், குங்குமம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, சந்தனம், பழம், பூ, சாம்பிராணி, கற்பூரம், நவதான்யம், தலைவாழை இலை இதெல்லாம் முதல் நாளே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. விரதம் இருக்கும் வெள்ளிக்கிழமை அன்றைக்கு காலையிலே எழுந்து குளிச்சிட்டு, சுத்தமான உடை அணிந்து நெத்திக்கு பொட்டு வெச்சுக்கிட்டு தயாராக வேண்டும்.
நல்ல நேரத்துல லட்சுமி குபேரன் படம், குபேர யந்திரம் இதை எல்லாம் எடுத்து மஞ்சள், குங்குமம் வெச்சு பூஜையில் வையுங்கள். குபேரன் யந்திரம், படம் மட்டும் இருந்தா வடக்கு திசையிலே வைக்க வேண்டும். படத்துக்கு முன்னால், தலைவாழை இலையை வைத்து அதுமேல் நவ தானியத்தையும் ஒண்ணாக் கலக்காம சுத்திவர பரப்பி வைங்க. அதுக்கு நடுவுல ஒரு செம்பை வைத்து சுத்தமான தண்ணீரால் நிரப்பி அதுல கொஞ்சம் மஞ்சள் தூளைப் போட்டு வைக்க வேண்டும்.
செம்பு மேல மஞ்சள் பூசின ஒரு தேங்காயை வைத்து, சுற்றிலும் மாவிலையை சொருகி கலசம் மாதிரி அமைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழம், இதோட தட்சணை எல்லாத்தையும் கலசத்துக்கு முன்னால் வைத்தல் வேண்டும். கொஞ்சம் மஞ்சள் தூள் எடுத்து சிறிது தண்ணீர் விட்டு சின்னதா பிள்ளையார் பிடிச்சு, வாழை இலையின் வலப்பக்கம் வைத்து குங்குமப் பொட்டு வைக்க வேண்டும். படம், யந்தரம், கலசம் மஞ்சள் பிள்ளையார் ஆகியவற்றிற்கு பூக்களை போட்டு ஊதுபத்தி ஏற்றி வைக்கவும்.
கிழக்கு பார்த்து அமர்ந்து, பிள்ளையார் மந்திரம் ஸ்லோகங்களைக் கூறவும். பின்னர் லட்சுமி ஸ்லோகம், துதியைக் கூறவும், குபேரனை பற்றிய ஸ்லோகம், மந்திரம், துதி ஆகியவற்றைக் கூறவும். எந்தத் துதியும் தெரியவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். மனதிற்குள் கணபதி, லட்சுமி, குபேரனின் திருநாமங்களுடன் போற்றி சேர்த்துக் கூறவும். பின்பு தூப தீபம் காட்டி வாழைப் பழம், பசும்பால் (சர்க்கரை போட்டுக் காய்ச்சியது) பாயாசம் என்று முடிந்த நிவேதனத்தை செய்து பகவானுக்கு படைக்கலாம்.
வெற்றிலை, பாக்கு, பழத்தை சுமங்கலிகளுக்கும், தட்சணையை ஏழைகளுக்கு கொடுக்கவும். நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்க தேவையான செல்வத்தையும் நிலையான சந்தோஷத்தையும், நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தா...! என்று குபேரனை மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டு வேண்டிக் கொள்ள வேண்டும். உங்க வாழ்க்கையில் குறுக்கிடக் கூடிய இன்னல்கள், தடைகள் எல்லாவற்றையும் நீக்கி, வளமும் நலமும் உங்களை வந்தடைய குபேரன் நிச்சயம் அருள்புரிவார்.

இந்த விரதத்தை ஆண், பெண் குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். லட்சுமி குபேர விரதம் இருந்தால் உங்களுடைய லட்சியம் எல்லாம் ஈடேறும்.
இதையும் படிக்கலாம்.. சீரடி சாய்பாபாவின் மந்திரத்தை சொல்வதால் தீரும் பிரச்சனைகள்
உங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு கவசமாக சீரடி சாய்பாபாவின் மந்திரம் இருக்கும். இதை பல்வேறு வகைகளில் பாபா தன் பக்தர்களுக்கு உணர்த்தி இருக்கிறார். அதை காணலாம்....
தினமும் காலையில் இறைவழிபாடு செய்யும் போது ஒரு 10 நிமிடம் ஒதுக்கி “ஓம் சாய் ஸ்ரீசாய் ஜெய ஜெய சாய்” மூல மந்திரத்தை மனதார சொல்லுங்கள். உங்களது அன்பையும், பக்தியையும் பாபா ஏற்றுக் கொண்டு ஆசீர்வதிப்பார். உங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு கவசமாக இந்த மூல மந்திரம் இருக்கும். இதை பல்வேறு வகைகளில் பாபா தன் பக்தர்களுக்கு உணர்த்தி இருக்கிறார். அதை காணலாம்....
* யார் எனது திரு நாமத்தை தினமும் இடைவிடாமல் ஜெபிக்கிறாரோ அவர் நிச்சயம் முக்திப்பேறு அடைவார்.
* ஆடம்பரங்களையும் வெளித் தோற்றங்களையும் கண்டு நான் ஏமாறுவதே இல்லை. என் நாமத்தை மனதுக்குள் ஆத்மார்த்தமாக உச்சரித்துக்கொண்டே இருப்பவர்தான் எனது உண்மையான பக்தனாக இருக்க முடியும். அத்தகையவர்களின் உள்ளங்களில்தான் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
* யார் என்னுடய நாமத்தை நம்பிக்கையோடு சொல்லி வருகிறோரோ அவருக்கு நான் விரும்பியதை எல்லாம் அளிக்கிறேன். இதன் காரணமாக அவருக்கு என் மேல் உண்டான பக்தி பல்கிப் பெருகும்.
* சாய் சாய் என்ற திருநாமம் கலியுகத்தின் மாயையைக்கலைக்கும். அதர்மங்களை எரிக்கும். பேச்சாலும், செயல்களாலும் செய்யப்படும் பாவங்கள் என் முன்பு சொல்லப்படும் சாய் சாய் என்ற மந்திரத்தால் பறந்தோடி விடும்.
* உங்களுடைய புத்திசாலித்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு எப்போதும் சாய் சாய் என்று என்னையே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அப்படி வைத்துக் கொண்டால் இந்த உலகின் தேவையற்ற பந்தபாசப்பிடிகளில் இருந்து நீங்கள் விடு விக்கப்படுவீர்கள்.
* யாருடைய பாவங்கள் எல்லாம் மறக்கப் படுகிறதோ அந்த அதிர்ஷ்டசாலிகளே என் திருநாமத்தை சொல்லி வணங்கும் அரிய பாக்கியத்தை பெறுவார்கள்.
* நீ எந்த காரியத்தை செய்தாலும் அல்லது செய்து கொண்டு இருந்தாலும் எதை செய்தாலும் என்னையே நினைவில் நிறுத்தி என் நாமத்தை சொல்லிக் கொண்டே செய். என் நாமம் எந்த அளவுக்கு உச்சரிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு அந்த வேலையை நான் மிக எளிதாக வெற்றி அடையும்படி செய்வேன்.
* நீங்கள் என்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் நான் உங்களை நோக்கி பல அடிகள் எடுத்து வைப்பேன். உங் கள் மனதில் தோன்றும் ஆழமான எண்ணங்களையும் நான் அறிவேன். ஒவ்வொரு நிமிடமும் நான் கவனித்துக் கொண்டு இருக்கிறேன். என் நாமத்தை உச்சரித்தால் அருகில் இருந்து உங்களை காப்பாற்றிக் கொண்டே இருப்பேன்.
* ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் என்ற என் நாமத்தை உச்சரிப்பதால் உனக்கு வேறு எந்தவித சிந்தனையும் தோன்றாது. வேறு எந்த துன்பங்களும் வராது. என் நாமத்தை மனதுக்குள் ஒருமித்த உணர்வுடன் சொல்லச் சொல்ல உண்மைகள் தானாக வெளிவரும்.
* என் பக்தன் என்னிடம் மட்டுமின்றி எல்லா ஜீவன்களிலும் நான் இருப்பதாக உணரவேண்டும். அப்படி உணர்ந்து என் நாமத்தை உச்சரிக்கும்போது எல்லாவற்றிலும் என்னை குருவாக நீ காண முடியும். நாளடைவில் அவன் நானாக ஆகி விடுவான்.
* பக்தா உன் எண்ணங்கள், குறிக்கோள் கள் அனைத்திலும் என் நாமத்தை சேர்த்துக் கொள். உனக்கு மிக உயரிய நிலை விரைவில் கிடைக்கும்.
* ஒருவன் முழு மனதுடன் என் நாமத்தை உச்சரித்தால் அவனது உடல், ஆத்மா இரண்டை பற்றியும் எந்தவித கவலையும் கொள்ள வேண்டியது இல்லை. என்னைப் பற்றிய பேச்சுகளையே கேட்டு என்னையே நினைத்து என் நாமத்தையே அவன் உச்சரித்தால் என்னோடு கலந்து விடுவான்.
* இடைவிடாமல் என் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்களது லட்சியத்தை தங்கு தடையின்றி மிக எளிதாக சென்று அடைவார்கள்.
* நான் மிகப்பெரிய உபசாரங்களை எனக்கு செய்யுங்கள் என்று என் பக்தர்களிடம் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. ஆடம்பரமான வழிபாடுகள் எனக்கு வேண்டாம். ஆத்மார்த்தமாக உள்ளம் ததும்ப சாய் சாய் என்று சொன்னாலே போதும்.
* ஒருவன் தனது சுமைகளை என் மீது இறக்கி விட்டு எனது நாமத்தை நினைத்துக் கொண்டே இருந்தால் நான் அவனு டைய எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்கிறேன்.
- இப்படி மூல மந்திரத்தின் மகிமையை சாய் பாபா தனது பக்தர்களுக்கு பல தடவை உணர்த்தி உள்ளார். அதனால்தான் பாபா பக்தர்கள் இடையே சாய்ராம் சாய்ராம் என்று சொல்வது வழக்கத்துக்கு வந்தது.