என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் உற்சவர் காமாட்சி தாயாரை எழுந்தருள செய்து, அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை ஓதி குங்கும லட்சார்ச்சனை செய்தனர்.
    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் சிரவண மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று குங்கும லட்சார்ச்சனை நடந்தது. கோவில் மண்டபத்தில் உற்சவர் காமாட்சி தாயாரை எழுந்தருள செய்து, அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை ஓதி குங்கும லட்சார்ச்சனை செய்தனர். முன்னதாக கலச ஸ்தாபனம், கணபதி பூஜை, புண்யாவதனம், கலச ஆராதனை நடந்தது.

    குங்கும லட்சார்ச்சனையில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், உதவி அதிகாரி சத்ரேநாயக், கண்காணிப்பாளர் பூபதி மற்றும் கோவில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரம் முன்பும், 16 கால் மண்டபத்தின் முன்பும் நின்று கற்பூரம் மற்றும் விளக்கேற்றி ஏற்றி வழிபட்டனர்.
    பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவுப்படி வாரத்தில் 3 நாட்கள் அருணாசலேஸ்வரர் கோவில் மூடப்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று முன்தினம் வரை 4 நாட்கள் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    தொடர்ந்து நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோவில் கோபுர நுழைவு வாயில்கள் மூடப்பட்டது. இருப்பினும் கோவிலில் வழக்கம் போல் நடைபெறும் அனைத்து பூஜைகளும் நடைபெற்றன.

    பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கோவிலின் ராஜகோபுரம் முன்பும், 16 கால் மண்டபத்தின் முன்பும் நின்று கற்பூரம் மற்றும் விளக்கேற்றி ஏற்றி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் கோவிலின் வெளியில் நின்று சாமியை வணங்கினர். மேலும் தனித்தனியாக பக்தர்கள் கிரிவலமும் சென்றனர்.

    இத்திருக்கோவிலின் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் நின்று காணும் போது ஐந்து கோபுரங்களின் தரிசனம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன.
    திருத்தலக் குறிப்பு:

    இத்திருக்கோவில் அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோவில் மற்றும் இக்கோவிலின் உள்ளே இளங்கோவில் என்னும் அருள்மிகு மின்னும் மேகலை சமேத சகல புவனேஸ்வரர் திருக்கோவில் என இரண்டு கோவில்கள் சேர்ந்து அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த கலை நயம் மிக்க சிற்பங்களைக் கொண்ட சிவ தலமாக விளங்குகிறது. இந்த இரண்டு கோவில்களும் சோழர் காலத்திய கற்கோயிலாக விளங்குகின்றன. இராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி ஆகியோரது காலத்தில் கோவில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோழ நாட்டின் காவிரி தென்கரை பாடல் பெற்ற திருத்தலங்களில் 56, 57-வது திருத்தலங்களாக விளங்குகின்றன.

    தல மூர்த்தி : அருள்மிகு மேகநாத சுவாமி
    தல இறைவி : அருள்மிகு லலிதாம்பிகை (சாந்த நாயகி அம்மன்)
    தல விருட்சம் : வில்வ மரம்
    தீர்த்தம் : சூர்ய புஷ்கரணி

    திருமீயச்சூர் பெருங்கோவில் கஜப்பிரஷ்ட விமான அமைப்பினை உடையது. இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும் ஏழு கலசங்களுடனும், கோவிலின் இரண்டாவது உள் கோபுரம் மூன்று நிலைகளுடன் ஐந்து கலசங்களுடனும் காணப்படுகின்றன. முதலில் அன்னை லலிதாம்பிகை குடிகொண்டுள்ள சன்னதி தனி கோபுரத்தின் கீழ் உள்ளது. அதனை அடுத்து, பெருங்கோயிலின் இரண்டாவது உள் கோபுரத்தில் நுழையும்போது ரத விநாயகர் நம்மை வரவேற்கிறார்.

    முதலில் மேகநாத சுவாமி சன்னதி அமைந்துள்ளது. உட் பிரகாரத்தின் தென் பகுதியில் நாக பிரதிஷ்டைகள், சேக்கிழார், போன்றோரது திருவுருவங்களும், சப்த மாதாக்கள் பூஜித்த லிங்கங்கள், சுற்றி வரும்போது பிரகாரத்தில், அக்னி, எமன், இந்திரன் வழிபட்ட லிங்கங்கள், வள்ளி, தேவசேன சமேத சுப்பிரமணியர், நிருதி, வருணன், குபேரன், அகத்தியர், ஈசான லிங்கங்களும் உள்ளனர்.

    இக்கோவில் சிற்பக் கலையில் சிறப்போடு விளங்குகிறது என்பதற்கு உதாரணமாக, சுவாமி அம்பாளை அமைதியாய், சாந்தமாய் இருக்கச் சொல்லும் தோற்றத்தில் இத்தலத்தின் க்ஷேத்திர புராணேஸ்வரர் திருவுருவம் அமைந்துள்ளது. இந்த சிற்பத்தில் என்ன ஒரு விசேஷம் என்றால், அம்பாளையும், ஈஸ்வரனையும் ஒரு புறத்தில் இருந்து பார்க்கும்போது சிரித்த முகமாகவும், மற்றொரு புறத்தில் இருந்து காணும் போது கோபமாகவும் தோன்றும் வண்ணம் இந்த சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இந்த சிற்பத்தை காணும்போது நம் தினப்படி வாழ்வில் நடக்கும் விஷயம் தான் நினைவுக்கு வருகிறது. வீட்டில் கணவன் மனைவிக்குள் எத்தனை பிரச்சினைகள் நடந்து, சண்டை சச்சரவுகள் நடந்தாலும், வெளியில் இருந்து ஒரு விருந்தினர் நம் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால் அப்படியே கோபமான முகத்தை, சாந்தமான முகமாக மாற்றிக்கொண்டு விருந்தோம்பல் புரிவது நமது பண்பாடு. இவ்வாறு இறைவன் கூட அவர்களைக் காணச் சென்ற பக்தர்களாகிய நம்மை விருந்தினர்களாக நினைத்து தன் மனைவியை சிரித்த முகத்துடன் இருக்குமாறு சொல்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஈஸ்வரனக்குத்தான் அவரது பக்தர்கள் மேல் எத்தனை பிரியம்.

    இப்பெருமானைப் பார்த்துவிட்டு அப்படியே சுற்றி வரும்போது தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சந்திரசேகரர், அஷ்டபுஜா துர்க்கை, ரிஷபாருடர், ஆகியோரது திருவுருவங்களையும் கடந்து செல்கின்றோம். இந்த பெருங்கோயிலின் அர்த்தமண்டப வாயிலில், துவார கணபதிகளையும், போதிகை தூண்களும் அழகு சேர்க்கின்றன. இக்கோயிலின் வடப் பக்கத்திலே இளங்கோயிலை தரிசனம் செய்யலாம்.

    இத்திருக்கோவிலின் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் நின்று காணும் போது ஐந்து கோபுரங்களின் தரிசனம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. கோபுர தரிசனம் கோடி புண்ணியம். கோபுரங்களின் தரிசனம் கோடானு கோடி புண்ணியம்.

    கோபுர தரிசனத்திற்கு பின்னர் அங்கேயே சற்றுதள்ளி, இளங்கோயிலின் சுற்றுச் சுவர்களில் லிங்கோத்பவர், பிரம்மா, மகாவிஷ்ணுவாகிய மும்மூர்த்திகளின் தரிசனம் நமக்கு ஒருசேரக் கிடைக்கிறது.

    திருக்கோவில் அமைவிடம்:

    அருள்மிகு லலிதாம்பிகை திருக்கோவில், திருமீயச்சூர் என்னும் ஒரு சிற்றூரில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள பேரளம் என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவிலும், திருவாரூரில் இருந்து 22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. காரைக்காலில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பாதையில் உள்ளது.

    தசரா திருவிழா இன்னும் ஒருமாதத்தில் தொடங்கவுள்ள நிலையில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.
    கொரோனா பரவல் தடுப்பு காரணமாக தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதித்துள்ளது. தசரா திருவிழா இன்னும் ஒருமாதத்தில் தொடங்கவுள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் வளாகத்தில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    தசரா திருவிழாவிற்கு விரதம் இருக்கும் பக்தர்கள் நேற்று குலசேகரன்பட்டினத்துக்கு வந்து, கடலில் புனித நீராடினர். பின்னர் அவர்கள் செவ்வாடை அணிந்து கோவில் முன்பு நின்று அம்மனை நினைத்து வழிபட்டு மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழாவின் 8-ம் நாளான நேற்று சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி உலா வந்தார்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 27-ந் தேதி ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விழா நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 10-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    8-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 6 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி வெள்ளை சாத்தி கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலுக்குள் உலா வந்து, உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதிக்கு சென்றார்.

    அங்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல் 12.05 மணிக்கு சுவாமி, அம்பாள்களுக்கு மகா தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் பச்சை நிற பட்டாடை உடுத்தி, மரிக்கொழுந்து மற்றும் பச்சை நிற மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்தார்.

    பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்து வரும் விழாவின் 10-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடைபெறாது. நாளை காலையில் சுவாமி குமரவிடங்க பெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் உலா வருகின்றனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். ஆவணி திருவிழாவையொட்டி, மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மற்றும் போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    நவ நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அன்னையின் பெருவிழாவான 8-ந்தேதி ஆடம்பர தேர் ஆலய முற்றத்தில் பக்தர்களின் வழிபாட்டுக்கு அலங்கரித்து வைக்கப்படுகிறது.
    அரியாங்குப்பத்தில் பிரசித்திபெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 331-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக சிறப்பு திருப்பலி நடைபெற்றது. புதுவை- கடலூர் உயர்மறை மாவட்ட முதன்மை குருவான ஆயரின் பிரதிநிதி அருள் தந்தை அருளானந்தம் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஆலய பங்குத்தந்தை அந்தோணிரோச் தலைமை தாங்கினார்.

    இதில் பங்கு நிர்வாகக்குழு, பங்கு மக்கள் திரளான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கலந்துகொண்டனர். கைகளை சுத்தம் செய்துகொள்ள கிருமிநாசினியும் வழங்கப்பட்டது.

    நவ நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அன்னையின் பெருவிழாவான 8-ந்தேதி ஆடம்பர தேர் ஆலய முற்றத்தில் பக்தர்களின் வழிபாட்டுக்கு அலங்கரித்து வைக்கப்படுகிறது.

    ஆண்டு பெருவிழா வருகிற 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் அன்று காலை 6 மணிக்கு திருப்பலி நடக்கிறது. காலை 7.30 மணிக்கு அப்போஸ்தலிக்க ஆயர் பீட்டர் அபீர் தலைமையில் திருப்பலி நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து மாலை 6 மணி திருப்பலிக்குப் பின் ஆலய உள்புறத்தில் மட்டும் ஆடம்பர பெரிய தேர் பவனி நடைபெறுகிறது. நோய்த்தொற்று பரவல் காரணமாக அரசு விதிகளுக்கு உட்பட்டு ஆடம்பர தேர் பவனி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து 13-ந்தேதி கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை அந்தோணி ரோச் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
    தங்க பத்ம பீடத்தினை கற்பக விநாயகர், மூலவர் வைத்தியநாதசாமி, தையல் நாயகி அம்மன், செல்வ முத்துக்குமாரசாமி ஆகிய சன்னதிகள் முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பத்ம பீடத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது.
    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல்நாயகி அம்மன்- வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமாரசுவாமி, நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.

    இந்தநிலையில் இந்த கோவிலில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியின்படி, வைத்தியநாதசாமி சன்னதி நேர் எதிரே உள்ள கொடிமரத்திற்கு தங்கத்தகடுகள் பதிக்கும் திருப்பணி தொடங்கி நடைபெற்று வந்தது.

    இந்தநிலையில் கொடி மரத்திற்கு தங்க தகடுகள், பத்மபீடம் ஆகியவை தயார் செய்யப்பட்டு அவற்றை கொடிமரத்தில் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது.

    முன்னதாக தங்க பத்ம பீடத்தினை கற்பக விநாயகர், மூலவர் வைத்தியநாதசாமி, தையல் நாயகி அம்மன், செல்வ முத்துக்குமாரசாமி ஆகிய சன்னதிகள் முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பத்ம பீடத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதன்பின்னர் தங்க ரேக் மற்றும் தங்க பத்ம பீடம் கொடிமரத்தில் பொருத்தும் பணி தொடங்கியது. இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்றார். அப்போது கோவில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் உடனிருந்தார்.
    சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியால், சிவபெருமானை, தேவர்கள் அனைவரும் மறந்து விட்டனர்.
    பிரதோஷத்தில் நித்தியப் பிரதோஷ, பிரளய பிரதோஷம், பட்சப் பிரதோஷம் என மொத்தம் இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

    சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷ வழிபாடு. ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும்.

    ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவ பூஜை செய்த பலன் உண்டாகும். சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியால், சிவபெருமானை, தேவர்கள் அனைவரும் மறந்து விட்டனர். இந்த தவறை பிரம்மன் எடுத்துரைத்தார். வெட்கி தலைகுனிந்த தேவர்கள் அனைவரும் சிவபெருமானை தரிசித்து மன்னிப்பு கோரினர்.

    மகிழ்ச்சி அடைந்த ஈசன், திருநடனம் புரிந்தார். நந்தி தேவர் மத்தளம் வாசிக்க, சரஸ்வதி வீணை மீட்ட, மகா விஷ்ணு புல்லாங்குழலையும், பிரம்மன் தாளத்தையும், எண்ணற்ற இசைக்கருவிகளை பூதகணங்களும் வாசிக்க ஈசனின் இனிய நடனத்தை அனைவரும் கண்டுகளித்து பெருமானை துதித்து பாடி வணங்கினர். ஈசன் நடனம் புரிந்தது சனிக்கிழமை திரயோதசி தினத்தில். எனவே தான் மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்று சிவன் ஆலத்திற்கு சென்று பிரதோஷ வழிபாடு செய்தால் 5 வருடம் ஆலயம் சென்ற பலன் கிட்டும்.

    சனிப் பிரதோஷ காலத்தில் சிவனை தரிசித்தால் சகல பாவங்களும் நீங்கி புண்ணியங்கள் சேரும். இந்திரனுக்கு நிகரான செல்வாக்கும், புகழும் கிடைக்கும். அன்றைய தினம் செய்யப்படும் தான தர்மங்கள் அளவற்ற பலன்களைத் தரும். எல்லாவற்றிற்கும் மேலாக பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் வல்லமை வாய்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

    சனிப் பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் சிவபெருமானின் நாட்டியத்தை காண வருவார்கள் என்பது ஐதீகம். அதனால் ஆலயத்தின் மற்ற சந்நிதிகள் அந்த நேரத்தில் திரையிடப்பட்டிருக்கும். அதே பிரதோஷ நேரத்தில் மற்ற ஆலயங்களுக்கு செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.
    கொரோனா பரவலை தடுப்பதற்காக இதுபோன்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
    ராமேசுவரம் :

    தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு பக்தர்கள் செல்ல அரசால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் வெள்ளிக்கிழமையான நேற்று முதல் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவில் ரத வீதிசாலைகள் வழக்கம்போல் நேற்று பக்தர்கள் நடமாட்டம் குறைவாக இருந்து. வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த நிலையில் வருகிற 6-ந் தேதி சர்வ அமாவாசையாக இருப்பதால் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகிற 6-ந் தேதி அமாவாசை அன்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட மற்றும் திதி தர்ப்பண பூஜை செய்யவும், கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்தும், மாவட்ட கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டு உள்ளார்.

    கொரோனா பரவலை தடுப்பதற்காக இதுபோன்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    தினமும் ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திரம் வாசிப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் நினைத்தபடி உடனே நிறைவேறும் என்பது ஐதீகம். உங்கள் வீட்டில் சகல செல்வங்களும் சேரும்.
    ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திரம் வாசிப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் நினைத்தபடி உடனே நிறைவேறும் என்பது ஐதீகம். மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைத்து உங்கள் வீட்டில் சகல செல்வங்களும் சேரும். குடும்ப நன்மைக்காகவும், செல்வவளம் வேண்டியும் மகாலட்சுமியை அஷ்டோத்திரம் ஜெபித்து, மகாலட்சுமிக்கு குங்குமத்தால் 108 முறை அர்ச்சனை செய்து வர வேண்டும். இவ்வாறு செய்வதால் வேண்டிய வரத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

    தேவ்யுவாச:

    தேவ தேவ மஹாதேவ த்ரிகாலக்ஞ மஹேஸ்வர |
    கருணாகர தேவேச பக்தாநுக்ரஹகாரக ||
    அஷ்டோத்தரசதம் லக்ஷ்ம்யா: ச்ரோதுமிச்சாமி தத்வத: |

    ஈஸ்வர உவாச:

    தேவி ஸாது மஹாபாகே மஹாபாக்யப்ரதாயகம் |
    ஸர்வைச்வர்யகரம் புண்யம் ஸர்வபாப-ப்ரணாசநம் ||

    ஸர்வதாரித்ர்ய-சமநம் ச்ரவணாத் புக்தி-முக்திதம் |
    ராஜவச்யகரம் திவ்யம் குஹ்யாத் குஹ்யதமம் பரம் ||

    துர்லபம் சர்வதேவாநாம் சதுஷ்சஷ்டி கலாஸ்தபம் |
    பத்மாதீநாம் வராந்தாநாம் நிதீநாம் நித்யதாயகம் ||

    ஸமஸ்ததேவ-ஸம்ஸேவ்யம் அணிமாத்யஷ்ட ஸித்திதம் |
    கிமத்ர பஹுநோக்தேந தேவி ப்ரத்யக்ஷ-தாயகம் ||

    தவ ப்ரீத்யாऽத்ய வக்ஷ்யாமி சமாஹிதமநா: ச்ருணு |
    அஷ்டோத்தர-சதச்யாஸ்ய மகாலக்ஷ்மீஸ்து தேவதா ||

    க்லீம் பீஜம் பதமித்யுக்தம் சக்திஸ்து புவனேச்வரீ |
    அங்கந்யாஸ: கரந்யாஸ: ஸ இத்யாதி ப்ரகீர்த்தித: ||

    த்யானம்

    வந்தே பத்மகராம் ப்ரஸந்நவதநாம் ஸௌபாக்யதாம் பாக்யதாம் |
    ஹஸ்தாப்யாமபயப்ரதாம் மணிகணைர் நாநாவிதைர் பூஷிதம் || 1

    பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர ப்ரஹ்மாதிபிஸ்-ஸேவிதாம் |
    பார்ச்வே பங்கஜ சங்க பத்ம நிதிபிர்யுக்தாம் ஸதா சக்திபி: || 2

    ஸரஸிஜ நயநே ஸரோஜஹஸ்தே தவளதராம்சுக கந்த மால்யசோபே |
    பகவரி ஹரிவல்லபே மனோக்ஞே த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத் மஹ்யம் || 3

    || ஓம் ||

    பிரக்ருதீம் விக்ருதீம் வித்யாம் ஸர்வ பூத ஹித ப்ரதாம் |
    ச்ரத்தாம் விபூதிம் ஸுரபீம் நமாமி பரமாத்மிகாம் || 1

    வாசம் பத்மாலயாம் பத்மாம் சுசிம் ஸ்வாஹாம் ஸ்வதாம் ஸுதாம்|
    தந்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் நித்யபுஷ்டாம் விபாவரீம் || 2

    அதிதிம் ச திதிம் தீப்தாம் வஸுதாம் வஸுதாரிணீம்|
    நமாமி கமலாம் காந்தாம் காமாக்ஷீ க்ரோதஸம்பவாம் || 3

    அநுக்ரஹப்ரதாம் புத்திம் அநகாம் ஹரிவல்லபாம் |
    அசோகாம் அம்ருதாம் தீப்தாம் லோக சோக விநாசிநீம் || 4

    நமாமி தர்மநிலயாம் கருணாம் லோகமாதரம் |
    பத்மப்ரியாம் பத்மஹஸ்தாம் பத்மாக்ஷீம் பத்மஸுந்தரீம் || 5

    பத்மோத்பவாம் பத்மமுகீம் பத்மநாபப்ரியாம் ரமாம் |
    பத்மமாலாதராம் தேவீம் பத்மிநீம் பத்மகந்திநீம் || 6

    புண்யகந்தாம் ஸுப்ரஸந்நாம் ப்ரஸாதாபிமுகீம் ப்ரபாம் |
    நமாமி சந்த்ரவதனாம் சந்த்ராம் சந்த்ரசஹோதரீம் || 7

    சதுர்புஜாம் சந்த்ரரூபாம் இந்திராம் இந்து சீதளாம் |
    ஆஹ்லாத ஜனனீம் புஷ்டிம் சிவாம் சிவகரீம் சதீம் || 8

    விமலாம் விச்வ ஜநநீம் புஷ்டிம் தாரித்ர்யநாஸிநீம் |
    ப்ரீதிபுஷ்கரிணீம் சாந்தாம் சுக்லமால்யாம்பராம் ச்ரியம் || 9

    பாஸ்கரீம் பில்வநிலயாம் வராரோஹாம் யசஸ்விநீம் |
    வஸுந்தரா-முதாரங்காம் ஹரிணீம் ஹேமமாலிநீம் || 10

    தனதான்யகரீம் ஸித்திம் ஸ்த்ரைண ஸௌம்யாம் சுபப்ப்ரதாம் |
    ந்ருபவேச்ம கதாநந்தாம் வரலக்ஷ்மீம் வஸுப்ரதாம் || 11

    சுபாம் ஹிரண்ய-ப்ராகாராம் ஸமுத்ர-தநயாம் ஜயாம் |
    நமாமி மங்களாம் தேவீம் விஷ்ணுவக்ஷஸ்தலஸ்திதிதாம் || 12

    விஷ்ணுபத்நீம் பிரசந்நாக்ஷீம் நாராயண-ஸமாஸ்ரிதாம் |
    தாரித்ர்ய த்வம்ஸிநீம் தேவீம் ஸர்வோத்பத்ரவ-வாரிணீம் || 13

    நவதுர்காம் மஹாகாளீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் |
    த்ரிகாலக்ஞான ஸம்பந்நாம் நமாமி புவனேச்வரீம் || 14

    லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜதநயாம் ஸ்ரீரங்க தாமேஸ்வரீம் |
    தாஸீபூத-ஸமஸ்ததேவ-வனிதாம் லோகைக-தீபாங்குராம் || 15

    ஸ்ரீமந்மந்த கடாக்ஷலப்த விபவ பிரஹ்மமேந்த்ர கங்காதராம் |
    த்வாம் த்ரைலோக்ய குடும்பினீம் ஸரஸிஜாம்
        வந்தே முகுந்தப்ரியாம் || 16
    மாதர்நமாமி கமலே கமலாயதாக்ஷீ | ஸ்ரீவிஷ்ணு
        ஹ்ருத்கமலவாஸிநி விச்வமாத: || 17 க்ஷீரோதஜே கமல கோமல கர்பகெளரி |
        லக்ஷ்மீ: ப்ரஸீத ஸததம் நமதாம் சரண்யே || 18
    த்ரிகாலம் யோ ஜபேத்வித்வான் ஷண்மாஸம் விஜிதேந்த்ரிய: |
    தாரித்ர்ய த்வம்ஸனம் க்ருத்வா ஸர்வமாப்நோதி யத்நத: || 19

    தேவீநாம ஸஹஸ்ரேஷு புண்யமஷ்டோத்ரம் சதம் |
    யேந ச்ரியமவாப்நோதி கோடி ஜன்மதரித்ரத: || 20

    ப்ருகுவாரே சதம் தீமாந் படேத் வத்ஸரமாத்ரகம் |
    அஷ்டைச்வர்ய-மவாப்நோதி குபேர இவ பூதலே || 21

    தாரித்ர்ய-மோசனம் நாம ஸ்தோத்ரமம்பாபரம் சதம் |
    யேந ஸ்ரியமவாப்நோதி கோடி ஜன்ம தரித்ரத: || 22

    புக்த்வா து விபுலான் போகான் அஸ்யாஸ் ஸாயுஜ்யமாப்நுயாத் |
    ப்ராத: காலே படேந்நித்யம் ஸர்வது:கோப சாந்தயே || 23

    படம்ஸ்து சிந்தயேத் தேவீம் ஸர்வாபரணபூஷிதாம் ||

    || ஸ்ரீ லக்ஷ்மியஷ்தோத்தர சதநாமஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||
    காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் முதல் வில்-அம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.
    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் நாட்டில் வேறு எந்தக்கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.

    சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு அதன் பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு தினமும் பூஜைகள் நடைபெறும் இந்த பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது.

    அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை அந்த பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.

    இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், ஒய்யம்மார்பட்டியை சேர்ந்த ரேணுகாதேவி (வயது 60) என்ற பக்தரின் கனவில் உத்தரவான வில், அம்பு ஆகிய பொருட்கள் நேற்று முதல் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 6-ந் தேதி முதல் பச்சை வேட்டி துண்டு, வெள்ளை சட்டை, மதிப்பிழந்த 500 ரூபாய் 2 நோட்டுகள், 5, 2, 1 ரூபாய் நோட்டுகள் மொத்தம் ரூ.1008 மதிப்பிலும், 2 ராசி கட்டங்கள், தேங்காய், எலுமிச்சை, வெற்றிலை பாக்கு, பூ ஆகிய பொருட்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

    உத்தரவு பொருளான வில்-அம்பை கொண்டுவந்து வைத்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பக்தர் ரேணுகாதேவி கூறியதாவது:-

    நான் பல முறை சிவன்மலை முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளேன். கடைசியாக ஒருமுறை இங்கு வந்து சென்றதற்கு பிறகு ஒரு நாள் என்னுடைய கனவில் சாமி வில், அம்பு வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று உணர்த்தினார். இதுபற்றி சிவன்மலை கோவில் அர்ச்சகர்களிடம் தெரியப்படுத்தி வில்-அம்பு வைத்து பூஜை செய்யுங்கள் என்று கூறினேன்.

    மேலும் வில்-அம்பு வைத்து பூஜை செய்யப்படுவதால் வில்-அம்பு புராணங்களில் கடவுள் அரக்கர்களை வதம் செய்வதற்காக பயன்படுத்தினார். அதுபோல தற்போது உள்ள கொரோனா வைரசை சாமி வதம் செய்து முற்றிலும் அழிப்பார் எனவும், உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கொரோனாவை காரணம் காட்டி கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அரசு தடை விதித்துள்ளது.
    மதுரை இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனாவை காரணம் காட்டி கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்கள் பக்தர்கள் அனுமதிக்கு அரசு தடை செய்துள்ளது. இது ஏற்புடையதல்ல. இந்து கோவில்கள் மற்ற வழிபாட்டு தலங்கள் போல் ஒரு சாதாரண வழிபாட்டுதலமல்ல. இந்து கோவில்களில் திருமேனிகள் உள்ளது. தினமும் 6 கால பூஜைகள், விஷேச பூஜைகள் என ஆகம விதிகள்படி நடந்து வருகிறது.

    அரசு இதனை உணர வேண்டும். எனவே இந்து கோவில்களில் தினமும் பக்தர்களுக்கு அனுமதிக்க வேண்டி தமிழக முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை கோரிக்கை மூலம் வேண்டுகோள் விடுக்கும் வகையில் பக்தர்களிடம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். பக்தர்கள் பூர்த்தி செய்து தரும் அஞ்சல் அட்டைகளை அரசுக்கு அனுப்ப முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×