search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவலிங்கம், நந்தி
    X
    சிவலிங்கம், நந்தி

    நிறம் மாறும் சிவலிங்கம்

    கும்பகோணம் மகாமக குளத்தின் அருகில் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள ஈசனை, ராமாயண காலத்தில் ராமபிரானும், லட்சுமணனும் வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது.
    * திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில், உள்பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கத்திற்கு தனி சன்னிதி உள்ளது. ‘அப்பு’ என்பதற்கு ‘நீர்’ என்று பொருள். பஞ்சபூதத் தலங்களில் இது நீர் தலமாக விளங்குகிறது. அப்புலிங்கம் தரைமட்டத்திற்கு கீழே உள்ளதால், தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். கடுமையான கோடை காலங்களிலும் இந்த நீர் கசிவு நிற்பதில்லை.

    * தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது, திருநல்லூர். இங்குள்ள சிவலிங்கத் திருமேனி தினமும் ஐந்து முறை வெவ்வேறு நிறங்களில் காட்சியளிக்கிறது. இதனால் இத்தல இறைவனை ‘பஞ்சவர்ணேஸ்வரர்’ என்று அழைக்கிறார்கள்.

    * கும்பகோணம் மகாமக குளத்தின் அருகில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கு சிவபெருமானுக்கு மட்டுமின்றி, நவ நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா, சரயு ஆகிய புனித நதிகளுக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்தக் கோவிலில் உள்ள ஈசனை, ராமாயண காலத்தில் ராமபிரானும், லட்சுமணனும் வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது.
    Next Story
    ×