என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், சாமி திருவீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிருஷ்ணசாமி, காளிங்க நர்த்தன அவதாரத்தில் காட்சி அளித்தார்.
    கோவையை அடுத்த துடியலூர் பன்னிமடையில் பழமை வாய்ந்த கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இங்கு கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், சாமி திருவீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிருஷ்ணசாமி, காளிங்க நர்த்தன அவதாரத்தில் காட்சி அளித்தார். மேலும் சிறப்பு அபிஷேக அலங் கார பூஜை செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிவித்து தாய்மார்கள் அழைத்து வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    கோவை பி.என்.புதூர் மருதமலை பிரதான சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்றது. ராமர், லட்சுமணர், சீதாதேவி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. துளசி மாலைகள் மற்றும் மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அருணாச்சலம் சுப்புலட்சுமி குழுவினரின் பஜனை பாடல்கள் நடைபெற்றது. பக்தர்களுக்கு சமூக இடைவெளி யுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகளுக்கு பிரசாதம்வழங்கப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஹிந்து பரிஷத் சார்பில் கோவை ரத்தினபுரி பகுதியில் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர்.

    பேரூர் பச்சாபாளையத்தில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இங்க கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று காலை காலசந்தி பூஜைகளுடன் தொடங்கியது. 16 வகை திரவியங்களால், ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. பாமா, ருக்மணி சமேதரராக ஸ்ரீ வேணுகோபால சுவாமி அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் சாமியை தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, கோபால பாராயண வழிபாடு, ஸ்ரீராதா கிருஷ்ணனுக்கு அபிஷேகம் நடந்தது.
    சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, நேற்று காலை 10.30 மணிக்கு கோபால பாராயண வழிபாடு, ஸ்ரீராதா கிருஷ்ணனுக்கு அபிஷேகம் நடந்தது.

    காலை 11 மணிக்கு குழந்தை கிருஷ்ணருக்கு இனிப்புகள் படைக்கப்பட்டு அபிஷேகம், பகல் 12 மணிக்கு மகிளா சபா சார்பில் பஜனை, மாலை 5 மணிக்கு குழந்தைகளின் பஜனை, இரவு 7 மணிக்கு அமரபாரதி குழுவினரின் பஜனை, 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 10 மணிக்கு ஆச்சாரியா பள்ளி மாணவ, மாணவிகளின் நாட்டிய நாடகம், இரவு 10.30 மணிக்கு குழந்தை கிருஷ்ணருக்கு மகாபிஷேகம், இரவு 12 மணிக்கு நள்ளிரவில் கிருஷ்ணரின் தெய்வீக தோற்றத்தை நினைவுகூரும் தரிசனம், ஆரத்தி மற்றும் ஊஞ்சல் சேவை நடந்தது.

    கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதி இல்லாததால் வீடுகளில் இருந்தபடி இணையதளம் மூலம் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் சுமித்ரா கிருஷ்ணதாஸ் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

    தொடர்ந்து இன்று(செவ்வாய்கிழமை) இஸ்கான் நிறுவனர் ஆச்சார்யாவின் 125-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
    ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 6-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    31-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * தேய்பிறை நவமி
    * பாஞ்சராத்திர ஜெயந்தி
    * சந்திராஷ்டமம் - அனுஷம்

    1-ம் தேதி புதன் கிழமை :
     
    * சுபமுகூர்த்த நாள்
    * தேவகோட்டை, பிள்ளையார்பட்டி தலங்களில் விநாயக பெருமான் உற்சவாரம்பம்
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை
     
    2-ம் தேதி வியாழக்கிழமை :

    * ஸ்மார்த்த ஏகாதசி
    * அமிர்த்த யோகம்
    * பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயம் இரவு சிம்ம வாகன உலா
    * திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர் உற்சவாரம்பம்
    * சந்திராஷ்டமம்- கேட்டை, மூலம்

    3-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * சுபமுகூர்த்த நாள்
    * வைஷ்ணவ ஏகாதசி
    * திருச்செந்தூர்முருகன் காலை வெள்ளி சப்பரத்தில் பவனி, இரவு வெள்ளை சாற்றி வெள்ளி குதிரையில் புறப்பாடு
    * சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்

    4-ம் தேதி சனிக்கிழமை :

    * பிரதோஷம்
    * உப்பூர் விநாயகப்பெருமான் மயில் வாகன பவனி
    * மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண சுவாமி ரெங்கநாதன் திருக்கோலமாய் காட்சி
    * சந்திராஷ்டமம் - பூராடம், உத்திராடம்

    5-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * மாத சிவராத்திரி
    * திருச்செந்தூர் கோவிலில் மகா ரதோற்சவம்
    * சந்திராஷ்டமம் - உத்திராடம், திருவோணம்

    6-ம் தேதி திங்கள் கிழமை  :

    * சர்வ அமாவாசை
    * பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் காலை வெள்ளி, கேடயம் மாலை கஜமுக சூரசம்ஹாரம்
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் -  திருவோணம், அவிட்டம்
    நாம் படைக்கும் நைவேத்தியங்களை ஏற்றுக்கொள்ள கண்ணன் வருகை தருவார் என்ற நம்பிக்கையிலேயே, அன்றைய தினம் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கண்ணனின் கால் சுவடு பதிக்கப்படுகின்றன.
    தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் மணம் முடித்து வைத்து, அவர்களை தன் தேரிலேயே அரண்மனை நோக்கி அழைத்துச் சென்றான் கம்சன். அப்போது வானில் ஒலித்த அசரீரி, ‘தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையால் உன் உயிருக்கு ஆபத்து’ என்று சொல்லியது. அதுவரை அன்பாக நோக்கிய தேவகியை, வெறுப்பாக நோக்கினான் கம்சன்.

    அவளை அப்போதே கொன்றுவிட நினைத்த கம்சனை, வசுதேவர் தடுத்து நிறுத்தினார். ‘தங்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளையும் கம்சனிடமே தந்து விடுவதாகவும், தேவகியை ஒன்றும் செய்ய வேண்டாம்’ என்றும் அவர் கேட்டுக்கொண்டதால் மன சமாதானம் அடைந்தான், கம்சன். இருப்பினும் தங்கையையும், அவளது கணவனையும் சிறையில் அடைத்து தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டான். அவர்களுக்குப் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும், தரையில் வீசிக் கொன்றான். அவனது கணக்குப்படி ஏழு குழந்தைகள் பிறந்து, அவர்களின் வாழ்வு முடிந்துவிட்டது.

    எட்டாவது குழந்தைக்காக காத்திருந்தான், கம்சன். ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமி தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு, தேவகியின் வயிற்றில் பிறந்தார், கிருஷ்ணர். தங்களுக்கு பிறந்த குழந்தையை தேவகியும், வசுதேவரும் ரசிப்பதை மறந்து தரிசித்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் அதன் ஒளி பொருந்திய தேகம், தெய்வ கடாட்சத்தை கண்முன் நிறுத்தியது.

    கணநேரத்தில் அக்குழந்தை, மகாவிஷ்ணுவாக உருமாறி நின்றது. “நீங்கள் இருவரும் சுதபா- பிருச்னி தம்பதியராக இருந்தபோது, 12000 ஆண்டுகள் என்னை நோக்கி தவம் செய்தீர்கள். அந்த தவத்தை மெச்சி நான் உங்களுக்கு காட்சியளித்தபோது, என்னையே மகனாக அடைய வேண்டும் என்று வரம் கேட்டீர்கள். அதன்படியே நான் உங்களுக்கு அந்தப் பிறவியில் ‘பிருச்னிகர்பா’ என்ற பெயரில் மகனாக பிறந்தேன். மறு பிறவியில் நீங்கள் காஷ்யபர்- அதிதி தம்பதியராக இருந்தபோது ‘உபேந்திரன்’ என்ற பெயரில் பிறந்து வளர்ந்தேன்.

    இப்போது ‘கண்ணன்’ என்ற திருநாமத்தில் வளர்வதற்காக, உங்களுக்கு மீண்டும் பிறந்துள்ளேன். இதன்பிறகு உங்கள் இருவருக்கும் பிறப்பு இல்லை. கம்சனிடம் இருந்து உங்களையும், மக்களையும் விடுவிக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. அதன் பிறகு நீங்கள் வைகுண்டம் வந்து விட வேண்டியதுதான். என்னை கோகுலத்தில் உள்ள நந்தகோபர் மனைவி யசோதையிடம் சேர்த்துவிடுங் கள். அதற்கு பதிலாக அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்துவிடுங்கள்.

    பிறகு அனைத்தும் சுபமாகவே நடக்கும்” என்றார். மகாவிஷ்ணு.

    அவர் தான் பிறந்ததன் நோக்கத்தை சொல்லிய மறுநொடியே மீண்டும் குழந்தையாக மாறிப்போனார். அவர் சிறையில் நள்ளிரவு வேளையில் கிருஷ்ணன் அவதரித்த தினமே, ‘கிருஷ்ண ஜெயந்தி’ என்று கொண்டாடப்படுகிறது. அஷ்டமி திதியில் பிறந்த காரணத்தால், இந்த நாளை ‘கோகுலாஷ்டமி’ என்றும் அழைப்பார்கள். இந்த புனித நாளில், கண்ணனுக்கு பிடித்தமான நைவேத்தியங்களான, சீடை, முறுக்கு, வெண்ணெய் போன்றவற்றை படைத்து வழிபட வேண்டும். நாம் படைக்கும் நைவேத்தியங்களை ஏற்றுக்கொள்ள கண்ணன் வருகை தருவார் என்ற நம்பிக்கையிலேயே, அன்றைய தினம் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கண்ணனின் கால் சுவடு பதிக்கப்படுகின்றன. இந்த நாளின் பகல் வேளை முழுவதும் விரதம் இருந்து, இரவில் வழிபாடு செய்து, அதன்பிறகு உணவருந்த வேண்டும்.

    கிருஷ்ண ஜெயந்தி விழாவில் முன் வாசலில் இருந்து வீட்டின் பூஜை அறை வரை போடப்படும் கால் பாதச்சுவடு, வெண்ணெய் மற்றும் சீடை, முறுக்கு நைவேத்தியம் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருக்கின்றன.
    கிருஷ்ணன் அவதரித்த தினமே, ‘கிருஷ்ண ஜெயந்தி’ என்று கொண்டாடப்படுகிறது. அஷ்டமி திதியில் பிறந்த காரணத்தால், இந்த நாளை ‘கோகுலாஷ்டமி’ என்றும் அழைப்பார்கள்.

    பசு

    கிருஷ்ணனை ‘கோபாலன்’ என்று அழைப்பார்கள். ‘கோ’ என்பதற்கு ‘பசு’ என்று பொருள். பசு என்பது மாட்டை மட்டும் குறிப்பதல்ல, அது உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் குறிக்கும் சொல்லாகும். வனத்திற்குள் சென்று கண்ணன், பசு மேய்த்ததன் உண்மையான உட்பொருள் ஒன்று உண்டு. மனம் என்பது காட்டை குறிக்கும். தீய குணங்கள் என்னும் கொடிய மிருகங்களும் நடமாடும் இடம் அது. அந்த வனத்திற்குள் கண்ணன் நுழைந்துவிட்டால், நம் மனமானது ‘பிருந்தாவனம்’ போல் ஆகிவிடும். தீயகுணங்கள் யாவும் மறைந்து, மணம் வீசும் துளசியைப் போல நற்பண்புகள் மனதில் துளிர்விடும்.

    கிருஷ்ணன் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது, தலையில் மயில் இறகு, கையில் புல்லாங்குழல் தாங்கிய அவரது உருவம்தான். அதே போல் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் முன் வாசலில் இருந்து வீட்டின் பூஜை அறை வரை போடப்படும் கால் பாதச் சுவடு, வெண்ணெய் மற்றும் சீடை, முறுக்கு நைவேத்தியம், உறியடி பானை உள்ளிட்ட சில அடையாளங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருக்கின்றன. அப்படிப்பட்ட சிறப்பு அடையாளங்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம்...

    கிருஷ்ணன்

    திருவடி சுவடு

    கிருஷ்ணனின் வாழ்வில் அவனது குழந்தைப் பருவ லீலைகளே அனைவராலும் அதிகம் ரசிக்கப்பட்டது. அந்த குழந்தைக் கண்ணன் இருக்கும் இடம் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். எனவே தான் கிருஷ்ண ஜெயந்தி நாளில், கண்ணன் தங்கள் இல்லத்திற்கு வருவதாக பாவித்து, அவனது திருவடி சுவடை, அரிசி மாவில் பதிப்பார்கள். இறைவன் அனைத்து இடங்களிலும் இருக்கும் தனித்துவம் மிக்கவன் என்பதை எடுத்துரைப்பதற்காகவும், அனைத்து வீடுகளிலும் கண்ணனின் பாதச் சுவடு பதிக்கப்படுகிறது.

    உறியடி

    கிருஷ்ண ஜெயந்தியின் முக்கிய விளையாட்டு ‘உறியடி’ நிகழ்வு. இதில் மண்பானையை கட்டி இளைஞர்கள் உடைப்பார்கள். கிருஷ்ணன், தன்னுடைய சிறுவயதில், கோபியர் சுமந்து செல்லும் பால், தயிர் கொண்ட மண் பானைகளை விளையாட்டாக உடைத்ததை நினைவு கூரும் வகையில் இது நடத்தப்பட்டாலும், அதற்குள் சிறந்த தத்துவம் பொதித்துள்ளது.

    மண் பானைக்குள் உள்ள வெற்றிடத்துக்கு ‘ஆகாயம்’ (வெளி) என்று பொருள். அதே ஆகாயம்தான் பானைக்கு புறத்திலும் உள்ளது. பானை உடையும் போது, உள்ளே உள்ள ஆகாயம், வெளியே உள்ள ஆகாயத்துடன் இரண்டற கலக்கிறது. அதுபோல் ஜீவாத்மா, மாயை என்ற மண் பானைக்குள் கிடக்கிறது. அது இறைவனை நினைக்கும் ஞானத்தால் உடைபடுகிறது. பின் ஜீவாத்மா, பரமாத்மாவோடு இணைந்து, ஜீவ முக்தியைப் பெறுகிறது என்பதே அந்த தத்துவம்.

    மயில் இறகு

    திருமாலின் அவதாரம் தான், கிருஷ்ணன். திருமால் எப்போதுமே அலங்காரப் பிரியர். பட்டுப் பீதாம்பர உடை, எண்ணற்ற ஆபரணங்கள், மணி மகுடம் என்று அலங்கரித்திருந்தாலும், கண்ணனின் அழகுக்கு அழகு சேர்ப்பது அவனது தலையில் இருக்கும் மயில் இறகு என்றால் அது மிகையல்ல. கண்ணன் நினைத்திருந்தால் மிகப்பெரும் செல்வாக்குடன் தரணியை ஆண்டிருக்க முடியும். ஆனால் அவன், ஆயர்பாடி சிறுவர்களுடன் சேர்ந்து மண்ணில் புரண்டு விளையாடினான். ஆனாலும் மறைக்க முடியாத மலரின் நறுமணத்தைப் போல, கிருஷ்ணனின் முகம் தெய்வீக ஒளி வீசியது. சிறு வயதிலேயே பல பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் மதியுகம் பெற்றவனாக விளங்கினான். அதனால் அவன் மீது அன்பும் பாசமும் கொண்ட ஆயர்பாடி சிறுவர்கள், கண்ணனை கவுரவிக்க நினைத்தனர். ஒருநாள் வனத்தில் இருந்தபோது, அங்கே சுற்றித்திரிந்த மயிலைப் பிடித்து, அதன் ஓர் இறகை கிருஷ்ணனின் தலையில் வைத்தனர். அதுவே கண்ணனின் சிறப்பான அடையாளமாக மாறிப்போனது.

    வெண்ணெய்

    கண்ணனுக்கு பிடித்த உணவில் ‘வெண்ணெய்’ முக்கியமானது. அவன் வெண்ணெய் பிரியன் என்பதால் ‘நவநீத சோரன்’ என்றும் அழைக்கப்பட்டான். ‘நவநீதம்’ என்பதற்கு ‘வெண்ணெய்’ என்று பொருள். மோரை கடைந்து வெண்ணெய் எடுத்த பிறகு, அதை மோரிலோ, நீரிலோ போட்டால் அது கரையாது. உலக மயக்கத்தில் இருக்கும் மனதை, வெண்ணெய் போல பிரித்து, கண்ணனிடம் ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு மனம் உலக ஆசைகளில் ஒன்றாது, கிருஷ்ணனிடம் நிலைத்துவிடும் என்பதை விளக்கும் தத்துவமே வெண்ணெய் நைவேத்தியம்.

    புல்லாங்குழல்

    கிருஷ்ணனின் கையில் எப்போதும் இருக்கும் ஒரு பொருள், புல்லாங்குழல். அதை இசைப்பதில் கண்ணன் வல்லவன். அவன் புல்லாங்குழல் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை . புல்லாங்குழலில் இருந்து சுவரங்கள் பிறக்க, அதை இசைப்பவனின் பிராண சக்தியும், குழலில் உள்ள துளைகளும், இசைப்பவனின் விரல் பதங்களும் தேவைப்படுகின்றன. மனித உடலும் துளைகளால் அமைந்ததுதான். அவை கழிவுகளை வெளியேற்றுகின்றன. அழியக்கூடிய இந்த உடலை இறை சேவைக்காக அர்ப்பணித்தால், அதுவே புல்லாங்குழல் போல புனிதமாகிவிடும். கிருஷ்ண சிந்தனை என்ற‘பூரகத்தை’ (மூச்சை உள்ளிழுத்தல்) செய்து, கிருஷ்ண தியானம் என்னும் ‘கும்பகம்’ (மூச்சை உள்ளடக்குதல்) பயின்று, கிருஷ்ண நாம கீர்த்தனம் என்னும் ‘ரோசகத்தை’ (மூச்சை வெளியிடுதல்) செய்தால், யோகியாக மாறலாம். அதன் மூலம் மனதில் உள்ள தீய குணங்கள் என்னும் கழிவுகள் தாமாகவே வெளியேறிவிடும்.
    அரிசி மாவினால் கண்ணனின் காலடிகளை இட்டு கோபாலனை தங்கள் இல்லங்களுக்குப் பெண்கள் அழைப்பர். அன்று பல கோவில்களில் “உறியடி” திருவிழா நடைபெறும்.
    ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன்னர் அவரை வழிபடுவர்கள் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை வரையவும்.

    ஸ்ரீகிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும். கிருஷ்ணனுக்கு கமல பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும். மூன்று அல்லது மூன்றின் பெருக்குத்தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும். அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும்.

    பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும். சந்தனம், தாழம்பூ, மல்லிகை, சம்பா மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.
    வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும்.

    ஸ்ரீகிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கையில் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    கிருஷ்ண பகவான் அஷ்டமி திதியில், சிராவண மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் நடுஇரவில், ரோகிணி நட்சத்திரத்தில் ரிஷப ராசியில் பிறந்தார்.

    கோகுலாஷ்டமி திதியில், கிருஷ்ண தத்துவம் இப்பூவுலகில் 1000 மடங்கு அதிகம் ஆகியுள்ளது. மீதி நாட்களைக் காட்டிலும் அன்றைக்கு கிருஷ்ண தத்துவம் அதிக செயலாற்றலைக் கொண்டிருப்பதால் ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என நாமஜபம் செய்தால் கிருஷ்ணரின் அருள் நமக்கு அதிக பலனைக் கொடுக்கும்.

    நடு இரவில் கிருஷ்ணனை தொட்டிலில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரையில், விரதம் இருக்க வேண்டும். நடு இரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம். அல்லது மறுநாள் காலையில் உபவாசத்தை முடிக்கலாம்.

    அன்று மக்கள் இனிப்புகள், காரங்கள் செய்து குறிப்பாக சீடை வகைகள் பல செய்து கண்ணனுக்கு நிவேதனம் செய்து மகிழ்வர்.

    அரிசி மாவினால் கண்ணனின் காலடிகளை இட்டு கோபாலனை தங்கள் இல்லங்களுக்குப் பெண்கள் அழைப்பர். அன்று பல கோவில்களில் “உறியடி” திருவிழா நடைபெறும்.

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் தம்பதி சகிதமாகவே விரதம் இருக்க வேண்டும். பகலில் விரதம் இருக்க வேண்டும். இரவில் ஸ்ரீகிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.

    மறுநாள் கிருஷ்ணருக்கு மீண்டும் பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தி அன்னதானம் செய்ய வேண்டும். அதன்பிறகு விரதத்தை பூர்த்தி செய்வது மிகவும் சிறந்தது.

    கிருஷ்ணனை இவ்வாறு பாடி வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார்.
    பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும். அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

    கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும். அந்த நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.

    ‘மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
    தூய பெருநீர் யமுனைத் துறைவனை
    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
    தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
    தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
    வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க
    போய பிழையும் புகு தருவானின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.’

    கிருஷ்ணனை இவ்வாறு பாடி வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார்.

    பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும். கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி மகிழ்வது சிறப்பு.

    இதையும் படிக்கலாம்... பகவான் கிருஷ்ணர் அவதாரம்
    கிருஷ்ணர் ராதை வேடமிட்டவர்கள் ஆடிப்பாடிக் கொண்டு செல்வார்கள். பறைகள் முழங்க, கொம்புகள் ஊத, நாதஸ்வரம் ஒலிக்க ஸ்ரீகிருஷ்ணர் வீதி உலா வருவார்.
    ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று ஸ்ரீகிருஷ்ணனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது கிருஷ்ண அஷ்டோத்திரம் சொல்லப்பட்டு பூஜை செய்யப்படும்.

    சில ஆலயங்களில் கலசங்கள் வைத்து ஹோமங்கள் செய்து கலசநீரால் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அபிஷேக ஆராதனை செய்விக்கப்படும். பெண்கள் கோபிகா கீதம், திருப்பாவை முதலியவற்றிலிருந்து பாடல்களைப்பாடுவார்கள். நாராயணீயத்தில் இருந்து கிருஷ்ண லீலைகள் பற்றிய பாடல்களைப்பாடுவார்கள்.

    ஆண்கள், கிருஷ்ணனின் பெருமைகளை பஜனைப் பாடல்களாகப் பாடுவார்கள். இசைக்கருவிகளான மத்தளம், ஆர்மோனியம், புல்லாங்குழல், கஞ்சிரா, ஜால்ரா போன்றவை பயன்படுத்தப்பட்டு எங்கும் ஹரே ராமாஹரே கிருஷ்ணா, என்ற கோஷங்கள் ஒலிக்கும்.

    ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். சில ஆலயங்களில் கிருஷ்ண லீலைகள் நாடகமாக நடித்துக் காட்டப்படும். கேரளா போன்ற இடங்களில் மோகினி ஆட்டம் நடைபெறும்.

    சில ஆலயங்களில் உறியடி நிகழ்ச்சிகளும் நடைபெறும். இரவு உற்சவர் புறப்பாடு நடைபெறும். உற்சவர் வீதி உலா வரும்போது பின்னால் பஜனை செய்து கொண்டு பக்தர்கள் வருவார்கள்.

    முன்னால், கிருஷ்ணர் ராதை வேடமிட்டவர்கள் ஆடிப்பாடிக் கொண்டு செல்வார்கள். பறைகள் முழங்க, கொம்புகள் ஊத, நாதஸ்வரம் ஒலிக்க ஸ்ரீகிருஷ்ணர் வீதி உலா வருவார்.

    பகவான் திரும்ப ஆலயத்துக்குள் எழுந்தருளியதும் ஆரத்தி காட்டப்படும். மங்கள வாத்தியங்கள் முழங்க, கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடுகள் நிறைவடையும். பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா பலவித முறைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. வழுக்குமரம் ஏறுதல், உறியடி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    பகவான் கிருஷ்ணன் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.
    பூஜைக்குரிய இலை : துளசி பத்ரம்

    பூஜைக்குரிய மலர்கள் : மல்லிகை.

    நிவேதனப் பொருட்கள் : பால், வெண்ணெய், தயிர், அவல், சீடை, முறுக்கு முதலியன.

    படிக்க வேண்டிய நூல் : கிருஷ்ண அஷ்டோத்ர நாமாவளி, கிருஷ்ணாஷ்டக ஸ்தோத்திரம், ஆண்டாள் அருளிய அஷ்டோத்ர நாமாவளி, ஸ்ரீமத் பாகவதம், மகாபாரதக் கதைகள், கீதையின் நன்நெறிகள்.
    தீயவர்களையும் தீமைகளையும் அழித்து, நல்லோர்களையும் நன்மைகளையும் காப்பதற்காக உருவானதே ஸ்ரீகிருஷ்ண அவதாரம். கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.
    1. சந்தான கோபால கிருஷ்ணர்:- யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.
    2. பால கிருஷ்ணன்:தவழும் கோலம். பலரின் பூஜை அறையில் இப்படத்தையே காணலாம்.
    3. காளிய கிருஷ்ணன்:-- காளிங்க மர்த்தனம் புரியும் கிருஷ்ணன்.
    4. கோவர்த்தன தாரி:-கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.
    5. ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்):-வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.
    6. முரளீதரன்: -இதில் கிருஷ்ணன் நான்கு கைகளுடன்,ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதனாய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.
    7. மதன கோபால்:- அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் முரளீதரன்.
    8. பார்த்தசாரதி: - அர்ஜூன னுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.
    கண்ணனின் சிலையை வீட்டில் வைத்து வணங்க வேண்டுமானால், சில சம்பிரதாயங்களை கடைபிடிக்கவேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    கண்ணனின் சிலையை வீட்டில் வைத்து வணங்க வேண்டுமானால், சில சம்பிரதாயங்களை கடைபிடிக்கவேண்டும்.

    சிலையின் உயரம் ஒரு கை அளவுக்கு மேல் இருக்க கூடாது. தனி பூஜை அறை இருக்க வேண்டும். எந்நேரமும் அது சுத்தமாக இருக்க வேண்டும். உடல் சுத்தம் மட்டுமின்றி, மன சுத்தம் இருந்தால் மட்டுமே பூஜை அறைக்குள் செல்லவேண்டும்.

    குறிப்பாக கண்ணனின் சிலையை வைத்து வணங்குபவர்கள் பயமின்றி இருக்க வேண்டும். மரண பயத்தை ஏற்படுத்தும் நோய்களோ, கவலையோ தாக்கினால் கூட அஞ்சாமல் கீதையை பாராயணம் செய்து கொண்டு, அவன் அருகில் இருக்க வேண்டும்.
    ஆயர்குலப் பெண்கள் குழந்தையைப் பார்க்க பலவகை ஆபரணங்கள் அணிந்து வந்தனர். விஷ்ணு அலங்காரப் பிரியர். அவரைப் பார்க்க வந்தவர்களும் சகல அலங்காரத்துடன் வந்தனர்.
    கிருஷ்ணன் சிறையில் பிறந்த போதே பலவகை ஆபரணங்களுடன் தோன்றினார். அவரது தந்தை வசுதேவர், குழந்தையை ஆயர்பாடியில் உள்ள நந்தகோபர் வீட்டில் விட்டு வந்தார்.

    அப்போது, ஆயர்குலப் பெண்கள் குழந்தையைப் பார்க்க பலவகை ஆபரணங்கள் அணிந்து வந்தனர். விஷ்ணு அலங்காரப் பிரியர். அவரைப் பார்க்க வந்தவர்களும் சகல அலங்காரத்துடன் வந்தனர்.

    எனவே அட்சய திரிதியை, ஆடிப்பெருக்கு நாளில் நகை வாங்குவதுபோல, கிருஷ்ணஜெயந்தி நன்னாளிலும் நகை வாங்கி அணியலாம்.
    ×