என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    இன்றைய தலைமுறைக்கும் புரியும் வகையில் இசையமைக்க வேண்டும்.

    மராட்டிய மன்னர் சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறித்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்தன.

    'சாவா' (Chhava) திரைப்படத்தின் இசை குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மிக முதிர்ச்சியான மற்றும் அழுத்தமான பதிலடி கொடுத்துள்ளார்.

    ஒரு வரலாற்றுப் படத்திற்கு இசை அமைக்கும் போது, அந்த காலகட்டத்தின் ஆன்மாவை சிதைக்காமல், அதே சமயம் இன்றைய தலைமுறைக்கும் புரியும் வகையில் இசையமைக்க வேண்டும். நான் எப்போதும் பரிசோதனைகளை (Experiments) விரும்புபவன்

    இந்தப் படத்தின் இசை என்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல, அது சம்பாஜி மகாராஜின் வீரத்தையும் தியாகத்தையும் பிரதிபலிக்கும் ஒரு கருவி. அதை உணர்வுப்பூர்வமாக அணுகியுள்ளேன்.

    விமர்சனங்கள் எப்போதும் வரும். அவை கலைஞனை செதுக்கும். ஆனால், ஒரு படைப்பை முழுமையாகப் பார்த்த பிறகு அதன் பின்னணியைப் புரிந்துகொண்டால் அந்த இசையின் நோக்கம் புரியும்.

    சாவா பிரிவினையை பேசும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன்.

    ஆனால், 'வீரத்தை காட்டுவது'தான் அப்படத்தின்

    மையக்கருவாக நான் பார்க்கிறேன்.

    'இப்படத்திற்கு நான் ஏன் தேவை?' என அதன் இயக்குநரிடம் கேட்டேன். 'நீங்கள் மட்டும்தான் இப்படத்திற்கு தேவை' என பதிலளித்தார்.

    இப்போது சிலர் "90ஸ் காலத்தில் ரோஜா மாதிரி நல்ல இசை கொடுத்தீர்கள்" என்று சொல்கிறார்கள். அதை கேட்கும்போது, இப்பொழுது நான் நல்ல இசையை தரவில்லையா? என்ற எண்ணம் உருவாகிறது. அது மனதளவில் பாதிப்பை உண்டாக்குகிறது

    கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 20–30 படங்களுக்கு இசை அமைத்திருக்கேன். இப்போது எனக்காக கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தனுஷ் அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    பிரபல நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தனுஷ் கடந்த ஆண்டில் குபேரா படத்திலும், இட்லி கடை படத்தை இயக்கியும் நடித்திருந்தார்.

    இந்தியில் தேரே இஷ்க் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து, வேல்ஸ் இண்டர்னேஷ்னல் தயாரிப்பில், போர்த் தொழில் இயக்குநர் விக்னேஷ்ராஜா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி இருக்கும் கர படத்தில் தனுஷ் நடித்துள்ளா்.

    மாறுபட்ட கதைக்களத்தில், ஆக்ஷன் த்ரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. இதுபோல், தனுஷ் அடுத்தடுத்து படங்களை கைவசத்தில் வைத்துள்ளார்.

    தென்னிந்திய மற்றும் இந்தித் திரையுலகில் மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மிருணாள் தாகூர். மிருணாள் தாகூரும், தனுஷூம் இணைந்து இதுவரை எந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும், இருவருக்கிடையே கிசு கிசுக்கள் மட்டும் உலா வருகிறது.

    'சன் ஆஃப் சர்தார் 2' பட விழாவில் தனுஷ் கலந்து கொண்டதும், அங்கு இருவரும் நெருக்கமாகப் பேசிப் பழகிய வீடியோக்களுமே இந்த வதந்திகள் பரவ முக்கியக் காரணமாக அமைந்தன.

    இது குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்துள்ள மிருணாள், "தனுஷ் ஒரு சிறந்த நடிகர். அவர் அந்த விழாவிற்கு அஜய் தேவ்கனின் அழைப்பின் பேரில் வந்திருந்தார். மற்றபடி எங்களைப் பற்றி வரும் செய்திகளில் உண்மை இல்லை" என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    இந்நிலையில், தனுஷ்- மிருணாள் தாகூர் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டேட்டிங்கிள் இருக்கும் இருவரும் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

    நடிகர் தனுஷ் ஏற்கனவே ரஜினி காந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து, 18 ஆண்டுகள் கழித்து விவாரகத்து செய்துக் கொண்டனர். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இந்தநிலையில், தனுஷ் மிருணா தாகூரை 2வதாக திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    காந்தி நினைவு தினமான வருகிற 30-ந்தேதி உலகளவில் வெளியாகிறது காந்தி டாக்ஸ்

    மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் நடித்திருந்தனர். இதன்பின்னர் இந்த மூவர்கள் கூட்டணி இணைந்துள்ள படம் 'காந்தி டாக்ஸ்'.

    வசனங்கள் எதுவுமின்றி மெளனப் படமாக உருவாகியுள்ள காந்தி டாக்ஸ், டார்க் காமெடி ஜானரில் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    கிஷோர் பி பெல்லேக்கர் இயக்கியுள்ள 'காந்தி டாக்ஸ்' படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    மேலும், 'காந்தி டாக்ஸ்' படம் காந்தி நினைவுதினமான வருகிற 30-ந்தேதி உலகளவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், காந்தி டாக்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று வெளியாகியுள்ளது.

    பராசக்தியின் உணர்வு இன்னும் என்நெஞ்சில் அப்படியே இருக்கிறது.

    சென்னையில் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பராசக்தி திரைப்படத்தை பார்த்துவிட்டீர்களா என செய்தியாளர்கள் வைரமுத்துவிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த வைரமுத்து கூறியதாவது:-

    பராசக்தி திரைப்படத்தை பார்த்துவிட்டேன்..ஆம், 1952ம் ஆண்டில் வெளிவந்த பராசக்தி திரைப்படத்தை பார்த்துவிட்டேன். முன்பே பார்த்து நான் வியந்து, மகிழ்ந்து, உணர்ந்த திரைப்படம்.

    நடிகர் திலகம் என்கிற மாபெரும் கலைஞனும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் வசனகர்த்தாவும் தமிழ்நாட்டிற்கு கொடுத்த குடை என்று சொல்லவேண்டும்.

    பராசக்தி 52-ல் வெளிவந்தது.. 53-ல் நான் பிறக்கிறேன். நான் வளர வளர பராசக்தி படித்து, கேட்டு வளர்ந்திருக்கிறேன். அந்த பராசக்தியின் உணர்வு இன்னும் என்நெஞ்சில் அப்படியே இருக்கிறது.

    தற்போது வந்துள்ள பராசக்தி படத்தை நான் பார்க்கவில்லை. படம் பார்க்காமல் நான் கருத்து சொல்லக் கூடாது. முகர்ந்து பார்க்காமல் வாசனை சொல்லக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ட்ரெய்ன் படத்திற்கு மிஷ்கின் இசையமைக்கிறார்.

    பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் ட்ரெயின். மிஷ்கின் கடைசியாக 2020ம் ஆண்டில் சைக்கோ படம் வெளியானது. இதில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஆகியோர் நடித்துருந்தனர். இந்தப் படம் இளையராஜாவின் இசையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    இதற்கிடையே, ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காகக் காத்திருக்கிறது. இதுவும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் இன்று பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு, ட்ரெய்ன் படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி கையில் ஒரு பையுடன், மிகவும் எதார்த்தமான அதே சமயம் தீவிரமான ஒரு தோற்றத்தில் காணப்படுகிறார்.

    பெயருக்கு ஏற்றார் போலவே, இந்தப் படத்தின் கதை பெரும்பாலும் ரெயிலை மையமாக வைத்தே நகரும் ஒரு டார்க் த்ரில்லர் வகை எனத் தெரிகிறது.

    • பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பாலமேடு ஜல்லிக்கட்டு சென்ற வருடத்தைவிட இந்த வருடம் இன்னும் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது.

    மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிப்பதற்காக நடிகர் சூரி அரங்கத்துக்கு வந்தார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிற்பத்தை நினைவுப்பரிசாக சூரி வழங்கினார்.

    இதன் பின்னர் நடிகர் சூரி நிருபர்களிடம் கூறுகையில், 'ஜல்லிக்கட்டு கலாச்சாரம் இடையில் குறையக்கூடிய சூழல் வந்தது. மீண்டும் எழுச்சி பெற்று தற்போது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு சென்ற வருடத்தைவிட இந்த வருடம் இன்னும் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது' என்றார்.

    • 2001-ம் ஆண்டு நான் குழந்தையாக இருக்கும் போது அம்மா நடித்த ‘பஞ்சதந்திரம்’ படப்பிடிப்பு தளத்தில் நானும் இருந்தேன்.
    • கடந்த ஆண்டு சைமா விருது விழாவில் அவர் அருகில் இருந்தும் என்னால் அவருக்கு ஹாய் கூட சொல்ல முடியவில்லை.

    'முந்தானை முடிச்சு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ஊர்வசி. கமல்ஹாசனுடன் பல படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய திரை உலகில் ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்து தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் ஊர்வசி நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் ஊர்வசி மகள் தேஜலட்சுமியும் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மலையாளத்தில் உருவாகும் 'சுந்தரியாயவள் ஸ்டெல்லா' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள தேஜாலட்சுமி 'பாப்லோ பார்ட்டி' என்ற படத்தில் தாய் ஊர்வசியுடன் இணைந்து நடித்துள்ளார்.

    இந்த நிலையில் ஊர்வசியும், மகள் தேஜலட்சுமியும் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் தேஜலட்சுமி பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், 2001-ம் ஆண்டு நான் குழந்தையாக இருக்கும் போது அம்மா நடித்த 'பஞ்சதந்திரம்' படப்பிடிப்பு தளத்தில் நானும் இருந்தேன்.

    அங்கு நான் கோபமாக இருக்கும்போது கமல் சார் என்னை தூக்கி சென்று எனக்கு பிடித்த உணவை ஊட்டி விடுவார். அதனால் நான் அழ மாட்டேன். இது என் வாழ்நாளில் மறக்க முடியாத விஷயம்.

    கடந்த ஆண்டு சைமா விருது விழாவில் அவர் அருகில் இருந்தும் என்னால் அவருக்கு ஹாய் கூட சொல்ல முடியவில்லை. இதனால் நான் அழுது விட்டேன். இதையடுத்து என் அம்மா பரவாயில்லை 'மோலே' நாம் ஒரு நாள் அவரை அலுவலகத்தில் போய் பார்ப்போம் என்று கூறினார். அந்த ஒருநாள் மிக விரைவில் வர வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அந்த நாள் வந்தது. அவரை 10 நிமிடங்கள்தான் சந்தித்தேன். ஆனால் 10 வருடங்களை போல் உணர்ந்தேன் என்று பதிவிட்டுள்ளார். 

    • இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    • ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தெரிவித்து இருந்தார்.

    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியா அளவில் இப்படம் தயாராக உள்ளதாகவும், இப்படத்தை சார்மி கவுர் தயாரிப்பதாக கூறப்பட்டுள்ளது. நடிகை தபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அதன்பின் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இந்த நிலையில், விஜய் சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவரின் புதிய படம் தொடர்பான அறிவிப்பை ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது.

    அதாவது, பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு 'Slum Dog - 33 Temple Road' என பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான போஸ்டரை வெளியிட்டு விஜய் சேதுபதிக்கு படக்குழு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. போஸ்டரில் விஜய் சேதுபதி ஆக்ரோஷமாக ரத்தக்கறை படிந்த கத்தியுடன் பணப்பெட்டிகளுக்கு நடுவில் நிற்கும்படியாக உள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜூன் மாதம் வெளியாக உள்ள 'ஜெயிலர் 2' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இப்படத்தை டி. டி. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார்.
    • இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    சத்ய ஜோதி பிலிம்ஸ் டி. ஜி. தியாகராஜன் வழங்க, தயாரிப்பாளர்களாக செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'லெனின் பாண்டியன்'. இப்படத்தை டி. டி. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார்.

    'லெனின் பாண்டியன்' படத்தில் பல முக்கியமான நட்சத்திரங்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். இதில் தமிழ் திரைப்பட உலகின் பன்முக திறமையாளராக திகழும் கங்கை அமரன் நடித்துள்ளார். மேலும், நடிகை மற்றும் அரசியல்வாதியான ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழ் திரையுலகில் திரும்பி வந்துள்ளார். இவர்களுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன், ஷ்ரீதா ராவ், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா, மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஏ. எம். எட்வின் சக்காய் கவனிக்க, தொகுப்பை நாகூரான் ராமச்சந்திரன் மேற்கொண்டுள்ளார்.

    இந்த நிலையில், 'லெனின் பாண்டியன்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கங்கை அமரன், ரோஜா வயதான தோற்றத்திலும், தர்ஷன் கணேஷ் காவல்துறை உடையில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார்.

    கிராமப்புறத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. 



    • குறைந்த பட்ஜெட்டில் உருவாகி ரூ.80 கோடி வசூல் செய்தது.
    • படம் நாளைமுதல் Sony LIV ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

    சமீப காலங்களாகவே வித்தியாசமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் நடிகர் மம்மூட்டி. அந்த வகையில், அறிமுக இயக்குநர் ஜித்தின் கே ஜோஸ் இயக்கத்தில் மம்மூட்டி, விநாயகன், காயத்ரி அர்ஜூன், ரஜிஷா விஜயன், ஸ்ருதி ராமசந்திரன், மாளவிகா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'களம்காவல்'.

    இந்தப் படம் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வில்லனாக மம்மூட்டி நடித்திருப்ப இப்படம், குறைந்த பட்ஜெட்டில் உருவாகி ரூ.80 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் நாளைமுதல் Sony LIV ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. 


    • இரண்டாம் பாகத்தையும் ஏகேஆர் சரவணன்தான் இயக்குகிறார்
    • இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் பேண்டஸி மற்றும் நகைச்சுவை இணைந்து வெற்றிகரமாக உருவான சில படங்களில், ஒன்று மரகத நாணயம். நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

    இதனைத்தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தையும் ஏகேஆர் சரவணன்தான் இயக்குகிறார். இதில் ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர், முனிஷ்காந்த், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

    பேஷன் ஸ்டூடியோஸ், அக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு, படக்குழு சிறப்பு புரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 


    • அஜித்தின் இந்த கார் ரேஸ் வாழ்க்கைத் தொடர்பான ஆவணப்படமும் உருவாகி வருகிறது.
    • கேம்பா எனர்ஜி' 'அஜித் குமார் ரேஸிங்' அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்படும் என அறிவிப்பு வெளியானது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். தனது சொந்த கார் ரேஸிங் அணியான, அஜித்குமார் ரேஸிங்' மூலம் பல்வேறு பந்தயப் போட்டிகளில் கலந்துவருகிறார் அஜித்குமார். அஜித்தின் இந்த கார் ரேஸ் வாழ்க்கைத் தொடர்பான ஆவணப்படமும் உருவாகி வருகிறது.

    இதனிடையே ரிலையன்ஸ் நிறுவனத்தின் எனர்ஜி டிரிங்க் பிராண்டான 'கேம்பா எனர்ஜி' (Campa Energy), அஜித் குமாரின் 'அஜித் குமார் ரேஸிங்' அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்படும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் கேம்பா எனர்ஜி ட்ரிங்க் விளம்பரத்தில் அஜித் நடித்துள்ளது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதன்மூலம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஜித் குமார் மீண்டும் விளம்பர உலகில் கால் பதித்துள்ளார்.

    இந்திய விளையாட்டு வீரர்களை சர்வதேச அளவில் ஊக்குவிக்கவும், "மேட்-இன்-இந்தியா" திட்டங்களுக்கு ஆதரவளிக்கவும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ரிலையன்ஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×