என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.



    இப்படம் நாளை (29-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மாமன்னன் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. வடிவேலு, உதயநிதி, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • இசையமைப்பாளர் டி.இமான் பல படங்களின் பணிகளில் பிசியாக இருக்கிறார்.
    • இவர் அவ்வப்போது கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கும் உதவி செய்து வருகிறார்.

    விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.


    சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். இவரின் கைவசம் 'வள்ளி மயில்', 'மலை' போன்ற படங்கள் உள்ளன. இப்படி பல படங்களில் பிசியாக இருக்கும் டி.இமான் அவ்வப்போது கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கும் உதவி செய்து வருகிறார்.


    மாணவி அமுதா- டி.இமான்

    இந்நிலையில், சேலம், கல்பாறைப்பட்டி, செவ்வாய் காட்டில் வசித்து வரும் அமுதா என்ற மாணவி பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது அம்மா, அப்பா, அக்கா என அனைவரும் ஜூன் மாதம் ஒரு விபத்தில் இறந்து விட்டனர். மொத்த குடும்பத்தையும் இழந்த அமுதா தன் படிப்பிற்கு உதவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

    இந்த செய்தியை பார்த்த இசையமைப்பாளர் டி.இமான் அந்த மாணவிக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்து விவரங்களை பகிருமாறு கேட்டுள்ளார். இந்த செயலைத் தொடந்து ரசிகர்கள் டி.இமானை பாராட்டி வருகின்றனர்.

    • ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.



    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், 'ஜெயிலர்' படம் குறித்து நடிகர் யோகி பாபு சமீபத்திய் பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ரஜினி சார் காம்பினேஷனில் இது வித்யாசமானப் படம். தர்பார் படத்தில் ரஜினி சாருடன் சில காமெடிகள் மட்டுமே இருக்கும். ஆனால் ஜெயிலரில் படம் முழுக்க காமெடி இருக்கும். ரஜினி சாரும் அந்த காமெடி காட்சிகளில் மிக எதார்த்தமாக நடித்துள்ளார் என்றார்.

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மாமன்னன்’.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் 'மாமன்னன்' படத்துக்கு தணிக்கை குழுவால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.


    இந்நிலையில், 'மாமன்னன்' படம் குறித்து நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மாரி செல்வராஜின் மாமன்னன் உணர்ச்சிபூர்வமானது. வடிவேலு சார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் திறமையான நடிப்பை கொடுத்துள்ளனர். இடைவேளை காட்சிகள் சரவெடியாக இருக்கும். இறுதியாக ஏ.ஆர்.ரகுமான் இசை மிகவும் அழகாக உள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்.



    • மாமன்னன் படத்தை தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • இந்த வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் 'மாமன்னன்' வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதனிடையே சில தினங்களுக்கு முன்பு மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி ஓ.எஸ்.டி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளர் ராமசரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உதயநிதி நாயகனாக நடிக்க நடிகைகள் ஆனந்தி, பாயல் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிப்பில் இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் "ஏஞ்சல்" என்ற படத்தை தயாரித்து வருவதாகவும், 2018ம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில் ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல் மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்திருக்கிறார்.



    இதனை தனது கடைசி படம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதனால் "ஏஞ்சல்" படத்தை முடிக்காமல் "மாமன்னன்" படத்தை வெளியிட அனுமதித்தால் அது தங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஒப்பந்தப்படி இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தரவேண்டும் என்றும் ரூ.25 கோடி இழப்பீடி தரவேண்டும் என்றும், அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    அதன்பின்னர் இந்த மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு பதிலளிக்க உதயநிதி ஸ்டாலின் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அவகாசம் கோரப்பட்டதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை 28ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதற்குள் இருவரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.



    இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே 42 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. இன்னும் 8 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது. இதனிடையில் மாமன்னன் தான் தன்னுடைய கடைசி படம் என்று உதயநிதி அறிவித்திருந்ததனால் இந்த வழக்கை தாக்கல் செய்திருப்பதாகவும் வாதிட்டார். மாமன்னன் தனது கடைசி படம் அல்ல மேலும் இரண்டு படங்கள் நிலுவையில் இருப்பதாக உதயநிதி கூறியிருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    மேலும் இந்த கதையை மாற்றி படத்தை வெளியிடவேண்டும் என்றால் படத்தின் கதாநாயகனின் ஒப்புதல் வேண்டும், அந்த ஒப்புதல் தெரிவித்து உதயநிதி தரப்பில் பிரமான பத்திரம் தாக்கல் செய்தால் அதை ஏற்று கொள்ள தயாராக இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதே சமயம் உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த மீதமுள்ள படத்தை முடித்து கொடுக்க வேண்டும் என்று கோரினாலும் கூட தனக்கு ஏற்பட்ட அந்த இழப்புக்கு ரூ.25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுதாரர் கேட்டிருக்கிறார். 2018ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இந்த வழக்கானது தாக்கல் செய்ய முடியாது என்றும் வாதிட்டார்.

    இந்த வழக்கில் எதிர்தாரராக சேர்க்கப்பட்டிருக்கும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறது. ஆனால் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் என்ற அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டிருப்பதினால் எதிர் மனுதாரராக சேர்க்காத ஒரு நிறுவனத்திற்காக எந்த ஒரு தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று மாமன்னன் படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று நீதிபதி குமரேஷ்பாபு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

    • மகிழ்த்திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கவுள்ளார்.
    • தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்க்ள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், வலிமை படத்தை 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.



    இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் கலக்கி வருகிறது. கூல் லுக்கில் அஜித் இருக்கும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

    • மாமன்னன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை (29-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.



    இதனிடையே மாமன்னன் திரைப்படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், தாக்கல் செய்த மனுவில், "மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன், தற்போது மாமன்னன் போன்ற குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த படங்களை எடுத்து வருகிறார். கடைசியாக இவர் எடுத்த கர்ணன் திரைப்படம் கொடியன்குளம் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. தற்போது வெளியாகவுள்ள மாமன்னன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனையை காட்டும் விதமாகவே அமைந்துள்ளது.



    இப்படம் வெளிவந்தால் தேவர், தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு இடையே பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், இப்படத்தை திரையிலோ, எந்த ஓடிடி தளம் போன்ற வேறு ஏதேனும் தளத்திலோ ஒளிபரப்பவும் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.



    இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தணிக்கை துறை அனுமதி வழங்கியதில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் காவல்துறையினர் பார்த்து கொள்வார்கள், திரைப்படம் மக்கள் பார்க்கவே - இரண்டு நாட்களில் அதனை மறந்து விடுவார்கள். பேச்சு உரிமை கருத்து உரிமை அனைவருக்கும் உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    • விஜய் ஆண்டனி நடிப்பில் பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’கொலை’.
    • இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார்.

    இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை 'விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

    இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.



    இந்நிலையில், 'கொலை' படத்தின் ரிலீஸ் தேதியை விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். அதன்படி இப்படம் வருகிற ஜூலை 21ம் தேதி வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. 



    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
    • சமீபத்தில் தமன்னா, மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த பொழுது ரசிகர்கள் பலரும் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்தனர்.

    கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.



    சமீபத்தில் தமன்னா, மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த பொழுது ரசிகர்கள் பலரும் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்தனர். அப்பொழுது ரசிகர் ஒருவர் தமன்னாவின் காலில் விழுந்தார். பின்னர் தமன்னாவுக்கு பூங்கொத்து கொடுத்த அந்த ரசிகர், தனது கையில் தமன்னாவின் முகத்தை பச்சை குத்தியிருந்ததை காண்பித்தார். ரசிகரின் அன்பை நெகிழ்ந்து பார்த்த தமன்னா, கண்கலங்கி அவரை கட்டியணைத்தார். மேலும் அவர் கொடுத்த பூங்கொத்து மற்றும் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு அவருக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • நடிகர் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார்.
    • சிம்புவின் 50வது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு, 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.



    இப்படத்திற்கு பிறகு சிம்பு, வேல்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயரிக்கும் படத்தில் நடிக்கிறார். இதற்கு பிறகு சிம்புவின் 50வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளதாகவும் இதனை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்பட்டது.



    தற்போதைய தகவல்ப்படி மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் அவரது 234 வது படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும், இந்த படமே சிம்புவுக்கு 50வது படம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிம்பு இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தனது 50வது படத்தில் சிம்பு வில்லனாக நடிக்கயிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதற்கு முன்பு சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 'லியோ' படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் வெளியாகி எதிர்ப்புகள் கிளம்பியது.
    • இந்த பாடலுக்காக படக்குழு அதிரடி காட்டியுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.




    இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. அதே சமயத்தில் இந்த பாடல் போதைப் பொருளை ஊக்கவிக்கும் வகையில் இருப்பதாகவும், விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. மேலும் இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளிக்கப்பட்டது.



    இந்நிலையில் "நா ரெடி" பாடலின் லிரிக் வீடியோவில் புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரை கொல்லும் என டிஸ்க்ளைமர் (Disclaimer) இணைக்கப்பட்டுள்ளது.



    • பிக்பாஸ் ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
    • ஆறாவது சீசனில் நடிகர் அசீம் டைட்டிலை வென்றார்.

    தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


    பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் டைட்டிலை கைப்பற்றினர். இந்த நிகழ்ச்சியின் ஆறு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதைத் தொடர்ந்து ஏழாவது சீசனையும் கமல் தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், பிக்பாஸ் ஏழாவது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரேகா நாயர், மாகபா ஆனந்த், விஜே பாவனா, கே.பி.ஒய்.சரத் ஆகியோரிடம் ஆடிஷன் நடந்ததாக தெரிகிறது. இன்னும் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ×