குடும்பத்தை இழந்த மாணவி.. உதவிக்கரம் நீட்டும் டி.இமான்

இசையமைப்பாளர் டி.இமான் பல படங்களின் பணிகளில் பிசியாக இருக்கிறார்.இவர் அவ்வப்போது கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கும் உதவி செய்து வருகிறார்.
குடும்பத்தை இழந்த மாணவி.. உதவிக்கரம் நீட்டும் டி.இமான்
Published on

விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். இவரின் கைவசம் 'வள்ளி மயில்', 'மலை' போன்ற படங்கள் உள்ளன. இப்படி பல படங்களில் பிசியாக இருக்கும் டி.இமான் அவ்வப்போது கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கும் உதவி செய்து வருகிறார்.

மாணவி அமுதா- டி.இமான்

இந்நிலையில், சேலம், கல்பாறைப்பட்டி, செவ்வாய் காட்டில் வசித்து வரும் அமுதா என்ற மாணவி பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது அம்மா, அப்பா, அக்கா என அனைவரும் ஜூன் மாதம் ஒரு விபத்தில் இறந்து விட்டனர். மொத்த குடும்பத்தையும் இழந்த அமுதா தன் படிப்பிற்கு உதவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த செய்தியை பார்த்த இசையமைப்பாளர் டி.இமான் அந்த மாணவிக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்து விவரங்களை பகிருமாறு கேட்டுள்ளார். இந்த செயலைத் தொடந்து ரசிகர்கள் டி.இமானை பாராட்டி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com