ரிலீஸ் தேதியை அறிவித்த விஜய் ஆண்டனி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

விஜய் ஆண்டனி நடிப்பில் பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’கொலை’.இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார்.
ரிலீஸ் தேதியை அறிவித்த விஜய் ஆண்டனி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Published on: 

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை 'விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், 'கொலை' படத்தின் ரிலீஸ் தேதியை விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். அதன்படி இப்படம் வருகிற ஜூலை 21ம் தேதி வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com