search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மாமன்னன் படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
    X

    மாமன்னன் படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

    • மாமன்னன் படத்தை தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • இந்த வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் 'மாமன்னன்' வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதனிடையே சில தினங்களுக்கு முன்பு மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி ஓ.எஸ்.டி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அதன் உரிமையாளர் ராமசரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உதயநிதி நாயகனாக நடிக்க நடிகைகள் ஆனந்தி, பாயல் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிப்பில் இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் "ஏஞ்சல்" என்ற படத்தை தயாரித்து வருவதாகவும், 2018ம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில் ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல் மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்திருக்கிறார்.



    இதனை தனது கடைசி படம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதனால் "ஏஞ்சல்" படத்தை முடிக்காமல் "மாமன்னன்" படத்தை வெளியிட அனுமதித்தால் அது தங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஒப்பந்தப்படி இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தரவேண்டும் என்றும் ரூ.25 கோடி இழப்பீடி தரவேண்டும் என்றும், அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    அதன்பின்னர் இந்த மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு பதிலளிக்க உதயநிதி ஸ்டாலின் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அவகாசம் கோரப்பட்டதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை 28ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதற்குள் இருவரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.



    இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே 42 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. இன்னும் 8 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது. இதனிடையில் மாமன்னன் தான் தன்னுடைய கடைசி படம் என்று உதயநிதி அறிவித்திருந்ததனால் இந்த வழக்கை தாக்கல் செய்திருப்பதாகவும் வாதிட்டார். மாமன்னன் தனது கடைசி படம் அல்ல மேலும் இரண்டு படங்கள் நிலுவையில் இருப்பதாக உதயநிதி கூறியிருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    மேலும் இந்த கதையை மாற்றி படத்தை வெளியிடவேண்டும் என்றால் படத்தின் கதாநாயகனின் ஒப்புதல் வேண்டும், அந்த ஒப்புதல் தெரிவித்து உதயநிதி தரப்பில் பிரமான பத்திரம் தாக்கல் செய்தால் அதை ஏற்று கொள்ள தயாராக இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதே சமயம் உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த மீதமுள்ள படத்தை முடித்து கொடுக்க வேண்டும் என்று கோரினாலும் கூட தனக்கு ஏற்பட்ட அந்த இழப்புக்கு ரூ.25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுதாரர் கேட்டிருக்கிறார். 2018ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இந்த வழக்கானது தாக்கல் செய்ய முடியாது என்றும் வாதிட்டார்.

    இந்த வழக்கில் எதிர்தாரராக சேர்க்கப்பட்டிருக்கும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறது. ஆனால் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் என்ற அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டிருப்பதினால் எதிர் மனுதாரராக சேர்க்காத ஒரு நிறுவனத்திற்காக எந்த ஒரு தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று மாமன்னன் படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று நீதிபதி குமரேஷ்பாபு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

    Next Story
    ×