என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ஹரிஷ் கல்யாண்-அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்து வரும் படம் லப்பர் பந்து.
    • இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு படக்குழு ஹரிஷ் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

    கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் 'லப்பர் பந்து'. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.



    சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளன இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’.
    • இப்படம் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ளது.

    உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.



    இப்படத்தை பார்த்த திரைப்பிரலங்கள் தனுஷ் உள்ளிட்ட பலரும் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற்னார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், 'மாமன்னன்' படத்தின் புதிய கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வடிவேலு பாடலுடன் வெளியான இந்த வீடியோ ரசிகர்களை உருக வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது 'பார்க்கிங்' படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைகிறது.

    பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் 'பார்க்கிங்' படத்தில் நடிக்கிறார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கிறார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. ராம்குமார் பாலகிருஷ்ணன் முன்பு 'பலூன்' படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


    இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு நிறைவடைகிறது.


    பார்க்கிங் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. ஹரிஷ் கல்யாணின் இரண்டு முகங்களை பிரதிபலிக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.




    • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.
    • இப்படம் நாளை (ஜூன் 29) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நாளை (29-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் 'மாமன்னன்' திரைப்படத்தை பார்த்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து உதயநிதி தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "மாமன்னன் திரைப்படத்தை பார்த்ததோடு இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வுப்பூர்வமாக பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் சார் அவர்களுக்கு மாமன்னன் படக்குழுவினர் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று பதிவிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.




    • இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் 'சந்திரமுகி 2' திரைப்படம் உருவாகியுள்ளது.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

    சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.


    லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டு வந்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.


    சந்திரமுகி 2 போஸ்டர்

    இந்நிலையில், 'சந்திரமுகி 2' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் புதிய அப்டேட் நாளை (ஜூன் 29) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். 




    • நடிகர் விக்ரம் தற்போது ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'தங்கலான்'. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு அவரின் விலா எலும்பு முறிந்தது. இதனால் விக்ரம் சிறிது காலம் படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.


    இதையடுத்து தற்போது 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் விக்ரமிற்கு மேக்கப் போடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பெரிய முடி மற்றும் தாடியுடன் விக்ரம், ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


    • நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.
    • இப்படம் ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.


    துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியது.


    'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.



    • நடிகர் கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் -2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் 'இந்தியன் -2' படப்பிடிப்பு சென்னை விமானநிலையத்தில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையம் ஆணையத்திடம் படக்குழு ரூ.1.24 கோடி கட்டணமாக செலுத்தி முன் அனுமதி பெற்றது.


    இந்நிலையில், 'இந்தியன் -2' திரைப்படத்தின் பிராதான காட்சிகளை நடிகர் கமல்ஹாசன் பார்த்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், "'இந்தியன் 2' படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் ஷங்கர். இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி" என்று பதிவிட்டுள்ளார்.


    ஷங்கருக்கு வாட்ச் பரிசளித்த கமல்

    மேலும், இயக்குனர் ஷங்கருக்கு நடிகர் கமல்ஹாசன் கைக்கடிகாரம் ஒன்றை பரிசளித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தையும் கமல் பகிர்ந்துள்ளார். இதற்கு முன்பு 'விக்ரம்' திரைப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை கமல் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 




    • நடிகர் விஜய் தற்போது ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. அதே சமயத்தில் இந்த பாடல் போதைப் பொருளை ஊக்கவிக்கும் வகையில் இருப்பதாகவும், விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. மேலும் இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து "நா ரெடி" பாடலின் லிரிக் வீடியோவில் புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரை கொல்லும் என டிஸ்க்ளைமர் (Disclaimer) இணைக்கப்பட்டது.



    இந்நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் நடிகர் விஜய் படங்கள் மட்டும் ஏன் இப்படி சர்ச்சையாகின்றன என தெரியவில்லை என்று கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது, புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளை தான் ஊக்கப்படுத்த விரும்பவில்லை. படத்தின் கதைக் களத்தையும் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம் . லியோ திரைப்படம், ஒரு விழிப்புணர்வு கதையாக கூட இருக்கலாம் . திரைப்படங்களை கலை நயத்தோடு பார்க்க வேண்டும். படத்தை வெறும் படமாக மக்கள் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    • நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.
    • இப்படம் நாளை (29-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நாளை (29-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.


    இதையடுத்து 'மாமன்னன்' படம் குறித்து நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், "மாரி செல்வராஜின் மாமன்னன் உணர்ச்சிபூர்வமானது. வடிவேலு சார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் திறமையான நடிப்பை கொடுத்துள்ளனர். இடைவேளை காட்சிகள் சரவெடியாக இருக்கும். இறுதியாக ஏ.ஆர்.ரகுமான் இசை மிகவும் அழகாக உள்ளது." என்று குறிப்பிட்டிருந்தார்.


    இந்த பதிவிற்கு நன்றி தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், "எல்லாவற்றிற்கும் நன்றி தனுஷ். உங்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் மாமன்னன் உருவாகி இருக்காது" என்று பதிவிட்டுள்ளார்.



    • இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஃபர்ஹானா’.
    • இந்த படத்தின் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    கடந்த 2016-ஆம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். இந்த படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்த 'மான்ஸ்டர்' படத்தை இயக்கினார்.


    அதர்வா- நெல்சன் வெங்கடேசன்

    தொடர்ந்து, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் நடிப்பில் 'ஃபர்ஹானா' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நெல்சன் வெங்கடேசன் விரைவில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அசின்.
    • அசின், கடந்த 2016-ம் ஆண்டு ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டார்.

    ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அசின். அதன்பின்னர் விஜய்யுடன் சிவகாசி, சூர்யாவுடன் கஜினி, விக்ரமுடன் மஜா, உள்ளம் கேட்குமே என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தார். மேலும் வரலாறு, போக்கிரி, வேல், காவலன், தசாவதாரம் உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார்.



    அசின், ஹவுஸ்புல்-2 படத்தில் நடித்தபோது அக்ஷய்குமாரின் நண்பரும், மைக்ரோ மேக்ஸ் நிறுவனருமான ராகுல் சர்மாவுடன் காதல் மலர்ந்தது. புகழின் உச்சத்தில் இருந்த அசின் கடந்த 2016-ம் ஆண்டு ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த கையோடு கணவருடன் செட்டில் ஆன அசின், சினிமாவை விட்டும் விலகினார்.

    இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு அசின் - ராகுல் சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அசின் - ராகுல் சர்மா தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.



    ராகுல் சர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனை அறிந்த அசின் அவரை எச்சரித்தும், அவர் கேட்காததால் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து உள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து இருவரும் எந்த தகவலும் வெளியிடவில்லை அசின், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியிருந்தார். இதை வைத்தே அவர் கனவருடன் விவாகரத்து என பேசப்பட்டது.



    இந்த செய்தி நடிகை அசின் பார்வைக்கு சென்ற நிலையில், தற்போது அசின், சமூக வலைத்தளத்தின் வாயிலாக இது முற்றிலும் வதந்தி என பதிவிடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில், நாங்களே ஜாலியாக டூர் செய்துக் கொண்டு பிரேக்பாஸ்ட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இப்படியொரு கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத ஒரு செய்தி வருவதை பார்த்து வேடிக்கையாகத்தான் இருக்கு என்றும் உங்களுக்கு வேற வேலை இல்லையா? இன்னும் பெட்டரா ஏதாவது டிரை பண்ணுங்க என நடிகை அசின் பதிவிட்டு விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    ×