ஐஸ்வர்யா ராஜேஷ் பட இயக்குனருடன் இணையும் அதர்வா

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஃபர்ஹானா’.இந்த படத்தின் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பட இயக்குனருடன் இணையும் அதர்வா
Published on

கடந்த 2016-ஆம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். இந்த படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்த 'மான்ஸ்டர்' படத்தை இயக்கினார்.

அதர்வா- நெல்சன் வெங்கடேசன்

தொடர்ந்து, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் நடிப்பில் 'ஃபர்ஹானா' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நெல்சன் வெங்கடேசன் விரைவில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com