ராஜா திரும்ப வந்துட்டாரு.. கவனம் ஈர்க்கும் துல்கர் சல்மான் பட டீசர்

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.இப்படம் ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ராஜா திரும்ப வந்துட்டாரு.. கவனம் ஈர்க்கும் துல்கர் சல்மான் பட டீசர்
Published on

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியது.

'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com