என் மலர்
சினிமா செய்திகள்
- ’உயிரே’ படத்தின் "தைய தைய தைய்யா" என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தவர் மலைக்கா அரோரா.
- மலைக்கா அரோராவும், அர்ஜுன் கபூரும் லிவிங்டு கெதராக வாழ்ந்து வருகின்றனர்.
மணிரத்னம் இயக்கத்தில் இந்தியில் உருவான 'தில்சே' தமிழில் 'உயிரே' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற "தைய தைய தைய்யா" என்ற பாடலுக்கு நடனமாடி மலைக்கா அரோரா தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். பல்வேறு இந்தி படங்களிலும் நடித்து வந்தார்.

மலைக்கா அரோரா- அர்ஜுன் கபூர்
1998-ம் ஆண்டில் தயாரிப்பாளர் அர்பாஸ்கானை திருமணம் செய்தார். 2017-ம் ஆண்டு அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஆனது. பின்பு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் முதல் மனைவியின் மகனான அர்ஜுன் கபூரை காதலித்தார். மலைக்கா அரோா, அர்ஜுன் கபூரை விட 12 வயது மூத்தவர் ஆவார். காதலுக்கு எதிர்ப்பு வந்த நிலையில் காதலிக்க வயதில்லை மனசு தான் காரணம் என்று லிவிங்டு கெதராக வாழ்ந்து வருகின்றனர்.

குத்தாட்டம் போட்ட மலைக்கா அரோரா
இந்த நிலையில் அர்ஜுன் கபூரின் 38-வது பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் நண்பர்களுடன் மலைக்காவும் கலந்து கொண்டார். விழாவில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு போதையில் போட்ட குத்தாட்டம் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக இணைவதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு அழைப்பு விடுக்கப்படுகிறது.
- 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வோரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023ம் ஆண்டு 'ஆஸ்கர் விருதுகள்' தேர்வுக்குழுவுக்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்கர் விருது குழுவில் தேர்வாகியுள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் ராஜமவுலி பதிவிட்டுள்ளார். அதில், ஆர்.ஆர்.ஆர் படக்குழுவிலிருந்து 6 நபர்கள் ஆஸ்கர் தேர்வு குழுவில் இணைந்திருப்பது மிகவும் பெருமையாகவுள்ளது. இந்திய சினிமாவில் இருந்து இடம்பெற்றிருக்கும் அனைவருக்கும் வாழ்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- டி.டி.எப்.வாசன் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார்.
- இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார்.

இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கவுள்ளார். அதாவது, இயக்குனர் செல்அம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தை தி பட்ஜெட் பிலிம் கம்பெனி தயாரிக்கிறது. இதையடுத்து இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் டி.டி.எப் வாசனின் பிறந்த நாளான இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'மஞ்சள் வீரன்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. டி.டி.எப்.வாசன் கையில் சூலாயுதத்துடன் புல்லட் பைக்கில் சீறிப் பாய்வது போல உள்ள இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரில் '299 கி.மீ. வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
- பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கான தனி இடத்தை பிடித்து கொண்டவர் மாரி செல்வராஜ்.
- இவர் விஜய்க்கு கதை கூறியதாக சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கான தனி இடத்தை பிடித்து கொண்டவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் தற்போது மாமன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் மாரி செல்வராஜ், விஜய்யிடம் கதை சொல்லியதாக சமீபத்திய நேர்காணலில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதில், நான் விஜய்யிடம் கதையை விவரித்தேன். கதையை சொல்லி முடித்த பிறகு விஜய் சாரின் ரியாக்ஷன் "என்ன சார்". நான் ஒரு இயக்குனராக கதை கூறினேன், ரசிகராக அல்ல என்று தெரிவித்துள்ளார்.
- இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மாமன்னன்'.
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரைப்பிரபலங்கள் கமல்ஹாசன், தனுஷ் மற்றும் பலர் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

இந்நிலையில், 'மாமன்னன்' திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்த இயக்குனர் மாரி செல்வராஜ் "என் மனதில் இருப்பதை நான் படமாக எடுத்துவிட்டேன். மக்களின் முழுமையான கருத்திற்காக காத்திருக்கிறேன். நிச்சயமாக மக்கள் நல்ல விஷயங்களை, நல்ல கருத்துக்களை, சமூகத்திற்கு தேவையான கருத்துகளை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்ட படம் இது. இந்த படம் எல்லா மக்களையும் சென்றடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் என்ன நினைத்து படம் எடுத்தேனோ அது மக்களுக்கு போய் சேந்திருக்கிறது" என்று பேசினார்.
- இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் திரைப்படம் 'பார்க்கிங்'.
- இப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கிறார்.
பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் 'பார்க்கிங்' படத்தில் நடிக்கிறார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கிறார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு நிறைவடைகிறது.

பார்க்கிங் போஸ்டர்
இதையடுத்து நேற்று இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண், "இரண்டு குடும்பம். ஒரு பார்க்கிங். உலக பிரச்சினை" என்று பதிவிட்டுள்ளார்.
- சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் “டீசல்”.
- இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு பியார் பிரேமா காதல், தாரால பிரபு போன்ற பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவர் தற்போது லெட்ஸ் கெட் மேரீட், நூறு கோடி வானவில், லப்பர் பந்து, டீசல், பார்க்கிங் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
"டீசல்" திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி வருகிறார். இப்படத்தை 'எஸ்.பி சினிமாஸ் எண்டெர்டைன்மெண்ட்' தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்க வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் ஹரிஷ் கல்யாணுக்கு வாழ்த்து தெரிவித்து 'டீசல்' படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. கையில் டீசல் பம்ப் வைத்து கோவத்துடன் இருக்கும் ஹரிஷ் கல்யாணின் இந்த போஸ்டர் தற்போது லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
- தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் ரவீந்தர்.
- இவர் நடிகை மகாலட்சுமியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பிரபல டி.வி. நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டு சமூக வலை தளங்களில் பிரபலமானவர் தயாரிப்பாளர் ரவீந்தர்.

முருங்கைக்காய் சிப்ஸ், நட்புனா என்னன்னு தெரியுமா?, நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள ரவீந்தர் மீது பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
கிளப் ஹவுஸ் என்கிற செயலி மூலமாக அறிமுகமான ரவீந்தர் என்னிடம் நன்றாக பழகினார். இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் அவர் என்னிடம் ரூ.20 லட்சம் கடன் கேட்டார். சினிமா நடிகர் ஒருவருக்கு 'அட்வான்ஸ்' கொடுக்க வேண்டி இருப்பதாக கூறி இந்த பணத்தை என்னிடம் அவர் கேட்டார். நான் ரூ.15 லட்சம் பணம் மட்டும் தன்னிடம் உள்ளதாக கூறி அந்த பணத்தை 2 தவணையாக ரவீந்தரின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தேன்.

இந்த பணத்தை ரவீந்தர் அவர் சொன்னபடி திருப்பி தரவில்லை. இதுபற்றி பல முறை தொடர்பு கொண்டு கேட்டும் அவர் என்னை அலைக்கழித்தார். சில நேரங்களில் அவதூறாக பேசினார். பின்னர் எனது செல்போன் அழைப்பை எடுக்காமல் பிளாக் செய்து விட்டார். ரவீந்தர் என்னிடம் பணம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருப்பதால் அதுபற்றி உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.
- ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக இணைவதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு அழைப்பு விடுக்கப்படுகிறது.
- 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக இணைவதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதற்கு முன்பு தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர்.
- நடிகர் கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் -2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் மூன்றாம பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் 'இந்தியன் -2' படப்பிடிப்பு சென்னை விமானநிலையத்தில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையம் ஆணையத்திடம் படக்குழு ரூ.1.24 கோடி கட்டணமாக செலுத்தி முன் அனுமதி பெற்றது.

இந்நிலையில் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான பேச்சுகள் எழுந்துள்ளது. அதன்படி இந்தியன் 2 படத்திற்காக நிறைய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. எனவே மூன்றாம் பாகம் வருவதற்கான வாய்புகள் அதிகமுள்ளதாகவும், கமல் மற்றும் ஷங்கர் இருவரும் படத்தை பார்த்து திருப்தி அடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஷங்கருக்கு நடிகர் கமல்ஹாசன் கைக்கடிகாரம் ஒன்றை நேற்று பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வரும் 'டெவில்' படத்தில் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
- இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
'சவரக்கத்தி' இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் "டெவில்". இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.

மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ். இளையராஜா படத்தொகுப்பையும் மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் மேற்கொள்கிறார்கள். இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக "டெவில்" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் மிஷ்கின் இசையமைத்துள்ள "டெவில்" படத்தின் முதல் பாடலான "கலவி" பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’.
- இப்படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை பார்த்த திரைப்பிரலங்கள் தனுஷ் உள்ளிட்ட பலரும் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், 'மாமன்னன்' திரைப்படத்தை பார்த்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக இயக்குனர் மாரி செல்வராஜ் பதிவிட்டிருப்பது, மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.






