299 கி.மீ. வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்.. டி.டி.எப் வாசன் போஸ்டர் வைரல்

டி.டி.எப்.வாசன் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார்.இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.
299 கி.மீ. வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்.. டி.டி.எப் வாசன் போஸ்டர் வைரல்
Published on

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார்.

இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கவுள்ளார். அதாவது, இயக்குனர் செல்அம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தை தி பட்ஜெட் பிலிம் கம்பெனி தயாரிக்கிறது. இதையடுத்து இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் டி.டி.எப் வாசனின் பிறந்த நாளான இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'மஞ்சள் வீரன்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. டி.டி.எப்.வாசன் கையில் சூலாயுதத்துடன் புல்லட் பைக்கில் சீறிப் பாய்வது போல உள்ள இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரில் '299 கி.மீ. வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com