என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிடி ரிட்டன்ஸ்'.
- இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் சந்தானம் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
மேலும், 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
- இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘விடாமுயற்சி’.
- இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'விடாமுயற்சி' படத்தின் அப்டேட் வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். பல நாட்களுக்கு பின் இப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- ரக்ஷன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘மறக்குமா நெஞ்சம்’.
- இந்த படத்தை இயக்குனர் இரா. கோ. யோகேந்திரன் இயக்கியுள்ளார்.
இயக்குனர் இரா. கோ. யோகேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மறக்குமா நெஞ்சம்'. இந்த படத்தில் ரக்ஷன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இவருடன் மலினா, தீனா, பிராங்ஸ்டர் ராகுல் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சச்சின் வாரியர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கோபி துரைசாமி ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். பள்ளி கால நினைவுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஜனார்தன் சவுத்ரி, ரமேஷ் பஞ்சக்னுலா, ரகு எல்லுரு மற்றும் இரா.கோ. யோகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 'மறக்குமா நெஞ்சம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெற்றுள்ளது.

அதாவது, 'மறக்குமா நெஞ்சம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களுடன் படித்த சகமாணவர்கள் கலந்து கொண்டனர். இப்படத்தில் பணியாற்றியவர்களின் நண்பர்கள் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் மேடை ஏறி, பாடலை வெளியிட்டனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு சிறப்பு விருது வழங்கி சிறப்பித்தனர். இந்த விருது நன்றிக் கடன் விருது என அழைக்கப்படுகிறது. நன்றிக் கடன் விருது என்று அறிவித்து, 'விதைத்துக் கொண்டே இருங்கள், முளைத்துக் கொண்டே இருக்கிறோம் - நன்றி' என்று எழுதப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சியில் பேசிய ஆசிரியர்கள், தங்களது மாணவர்கள் பள்ளி நாட்களில் செய்த குறும்பு செயல்களை பகிர்ந்து, பள்ளி காலத்தில் கண்டிப்புடன் நடந்து கொண்ட பிறகும், நீண்ட காலம் கழித்து தங்களை அழைத்து விருது வழங்கி சிறப்பித்தது பற்றி தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். தமிழ் சினிமா மட்டுமின்றி, இதுபோன்ற நிகழ்ச்சியை இதுவரை கண்டதில்லை என கூறி இதற்கு ஏற்பாடு செய்த படக்குழுவுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நன்றி தெரிவித்தனர்.
- விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர பாடசாலையை துவங்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
- விஜய்யின் இந்த முயற்சிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடிகர் விஜய் தொடர்ச்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய மாணவ- மாணவிகளை 234 தொகுதி நிர்வாகிகள் மூலம் கண்டறிந்து ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே இந்த நிகழ்ச்சி பெறும் வரவேற்பை பெற்றது.மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் விஜய்யை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர்.

இதையடுத்து மாணவ- மாணவியர்களின் கல்விக்கு உதவும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர பாடசாலையை துவங்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக மாவட்ட வாரியாக தொடர்ந்து முன்னெடுப்புகளை எடுக்குமாறு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ஆம் தேதி முதல் இந்த திட்டம் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் இந்த முயற்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சுரேஷ் காமாட்சி- விஜய்
இந்நிலையில், 'மாநாடு' போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, விஜய்யை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எத்தனையோ குழந்தைகள் இன்னமும் இரவு நேரம் படிக்க வசதி இல்லாமல் தவிக்கிறார்கள். மதிப்பெண்களால் வெற்றிபெற்று நாளிதழ்களில் மின்னொளியில் படித்தேன்... மண்ணெண்ணெய் விளக்கில் படித்தேன் என மாணாக்கர்கள் சொல்லும்போதுதான் அவர்களின் வறுமை புரிய வருகிறது. அப்படியிருக்க, தமிழ் சினிமாவில் கோலோச்சும் நாயகன் விஜய் அவர்கள் இரவுப் பாடசாலை திட்டத்தை செயல்படுத்த முன்வந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. தான் நிஜ கதாநாயகன் என தன் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டிருப்பது கல்விச் செல்வம் தளைக்க மிக மிக அவசியமானது. தொடர்க. வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி புதிய படத்தில் நடிக்கிறார்.
- இந்த படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழில் வெப்பம், ஆஹா கல்யாணம், நான் ஈ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

இதையடுத்து நானியின் 30-வது படத்தை இயக்குனர் சவுரவ் இயக்குகிறார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'ஹாய் நான்னா' என படக்குழு டைட்டில் வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
'ஹாய் நான்னா' திரைப்படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கவிஞர் வைரமுத்து இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- இவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.

கவிஞர் வைரமுத்து இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெசன்ட் நகரில் உள்ள வைரமுத்துவின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குஷி’.
- இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குஷி'. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

'குஷி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'என் ரோஜா நீயே' பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து 'குஷி' படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாம் பாடலான 'ஆராத்யா' பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
- நடிகர் ரஜினி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஜெயிலர் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஜெயிலர்' படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
- ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
- இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் முதல் பாடல் வருகிற 15-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த பாடலை இயக்குனர் டி.ராஜேந்தர் பாடியுள்ளார். இதனை படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
- விஜய் சேதுபதி 50-வது படத்தை 'குரங்கு பொம்மை' இயக்குனர் இயக்குகிறார்.
- இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதி செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மகாராஜா போஸ்டர்
இந்நிலையில், இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'மகாராஜா' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- நடிகர் விஜய் இன்று மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார்.
- இந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடிகர் விஜய் தொடர்ச்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய மாணவ- மாணவிகளை 234 தொகுதி நிர்வாகிகள் மூலம் கண்டறிந்து ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே இந்த நிகழ்ச்சி பெறும் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற காரணமாக இருந்த 234 தொகுதியில் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நேற்று விஜய் ஆலோசனை நடத்தினார். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் மாலை 5.30 மணி வரை நடந்தது. இதில் 50 சதவீத மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

விஜய் 2-வது நாளாக இன்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, ஈரோடு, கடலூர், வேலூர், திருப்பத்தூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிவகங்கை, தர்மபுரி உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது, விஜய் நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்தார் மற்றும் அவர்களது குடும்பத்தை பார்த்துக் கொள்ள கூறினார். இலவச பாடசாலை குறித்து விஜய்யிடம் அனுமதி பெற்றபின் முறையான அறிவிப்பு வெளியாகும் என கூறினார்.
- சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘மாவீரன்’.
- இந்த திரைப்படம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாவீரன்'. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து 'மாவீரன்' திரைப்படத்திற்கு தடைவிதிக்க கோரி இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், இந்த படத்தில் மிஷ்கின் நடித்துள்ள காட்சிகளில் இந்திய ஜனநாயக கட்சியின் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளதால் அந்த காட்சிகளை நீக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எந்த அரசியல் கட்சியும் குறிப்பிடப்படவில்லை என படத்தின் ஆரம்பத்தில் 15 வினாடிகளும் இடைவேளையில் 15 வினாடிகளும் படம் முடியும் போது 10 வினாடிகளும் மொத்தம் 40 வினாடிகள் பொறுப்பு துறப்பு வெளியிட வேண்டும் என்று பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டு படத்தை வெளியிட அனுமதித்துள்ளார்.
மேலும், இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காதவாறு காட்சிகள் இடம்பெற வேண்டும் என்றும் அதற்கு ஏற்றவாறு காட்சியில் உள்ள கொடியின் நிறத்தை மாற்றி ஓடிடி மற்றும் சாட்லைட் சேனலில் வெளியிட உத்தரவிட்டுள்ளார்.






