என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் கடந்த 23ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'தண்டட்டி'.
- இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் நடிகர் பசுபதி நடிப்பில் கடந்த 23ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'தண்டட்டி'. இப்படத்தை சர்தார், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. வித்யாசமான கதைக்களத்தில் உருவாயிருந்த இப்படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் 'தண்டட்டி' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் ஜூலை 14ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் மீண்டும் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன்.
- இவர் தற்போது புதிய படம் இயக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.
2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் தற்போது புதிய படம் இயக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

விக்னேஷ் சிவன் பதிவு
இந்நிலையில், நடிகர் விக்னேஷ் சிவன் கிரிகெட் வீரர் டோனியுடன் இருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் டோனி, விக்னேஷ் சிவன் டீ- சர்ட்டில் கையொப்பமிடுகிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த விக்னேஷ் சிவன், டோனியின் கைகளை பிடித்து முத்தமிடுகிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர். மேலும், பாட்ஷா ஸ்டைலில் டோனிக்கு முத்தம் கொடுப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
- நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான தசரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இவர் நடிக்கும் 30வது படத்தின் கிளிம்ப்ஸ் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் வெப்பம், ஆஹா கல்யாணம், நான் ஈ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

இந்நிலையில் நானியின் 30வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நானி 30 படத்தின் டைட்டில் அறிவிப்பு கிளிம்ப்ஸ் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் சவுரவ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
- இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் வேட்டையாடு விளையாடு.
- இப்படத்தின் இரண்டாம் பாகம் துவங்க திட்டமிட்டுள்ளதாக கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006-ம் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. நீண்ட வருடங்களுக்கு பிறகு வேட்டையாடு விளையாடு படம் ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆனது.

சென்னையில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகள் நிறைந்து வந்தது. நேற்று வேட்டையாடு விளையாடு படத்தின் மறு வெளியீட்டு வெற்றியை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கவுதம் வாசுதேவ் மேனன், வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தின் கதையை நடிகர் கமலிடம் கூறியுள்ளேன், அவருக்குப் பிடித்திருந்தது. துருவ நட்சத்திரம் வெளியீட்டுக்குப் பின் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தின் பணிகளை துவங்க திட்டமிட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
- சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்களின் பிரச்சினை குறித்து பேசினார்.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாவீரன்'. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

'மாவீரன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், மிஷ்கின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்கள் படும் இன்னல்களை பற்றி பேசியிருந்தார். அதில், நமக்கு சம்பளம் வந்தால் போதும் தயாரிப்பாளருக்கு பிரச்சனை வந்தால் நமக்கென்ன என்று ஒதுங்கி இருக்க முடியாது. தான் நடித்த படத்தில், லாப நஷ்டங்களில் எனக்கு பங்கு உள்ளது. அந்த படத்திற்கு வரும் பிரச்சனைகளை முடிந்தவரை தீர்த்துவைப்பது எனது கடமை என்று பேசினார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் பிரச்சினை குறித்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்து அதன் தலைவர் முரளிராமநாராயணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். திரைப்படம் தயாரிக்கும் போது தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்னை குறித்து முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தெரிவித்த கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளார்.
- நடிகர் விஜய் நேற்று மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- இந்த ஆலோசனையில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நடிகர் விஜய் 234 தொகுதியில் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் மாலை 5.30 மணி வரை நடந்தது. இதில் 50 சதவீத மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தியதுடன் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
விஜய்யை சந்தித்த நிர்வாகிகள் 90 சதவீதம் பேர் விஜய்யிடம் தீவிர அரசியலுக்கு வரும்படி வலியுறுத்தினார்கள். அவர்களிடம் சிரித்த படியே முதுகில் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் பேசிய விஜய், பரிசு பெறுவதற்கான மாணவ-மாணவிகளை நல்ல முறையில் அழைத்து வந்து பாதுகாப்பாக வீட்டில் கொண்டு சேர்த்தீர்கள். உங்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
அதற்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் விஜய்யிடம் உங்களது விருப்பத்தை நாங்கள் செயல்படுத்துகிறோம். எங்களது அனைவரின் ஒரே நோக்கமும் விருப்பமும் நீங்கள் விரைவில் தீவிர அரசியலுக்கு வந்து தமிழகத்துக்கும், மக்களுக்கும் நல்ல பணிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இந்நிலையில், விஜய் 2-வது நாளாக இன்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, ஈரோடு, கடலூர், வேலூர், திருப்பத்தூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிவகங்கை, தர்மபுரி உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'லால் சலாம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் ரஜினி நிறைவு செய்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தில் ரஜினி தனது பகுதி காட்சிகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
- இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’.
- இப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை நேற்று முன்தினம் படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இப்படத்தின் முன்னோட்டம் குறித்தும் அட்லீ, பிரியா மற்றும் அவரது குழந்தை குறித்தும் ஷாருக்கான் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள அட்லீ, "மன்னர்களின் கதைகளைப் படிப்பதில் இருந்து நிஜமான ஒருவருடன் பயணத்தைத் தொடங்குவது வரை, நான் கனவு கண்ட வாழ்க்கையை வாழ்கிறேன் என்று நினைக்கிறேன்.

இந்தப் படம் என்னுடைய எல்லைக்கு என்னை அழைத்து சென்றது. இந்த பயணத்தில் விலைமதிக்க முடியாத அனுபவங்களைப் பெற்றேன். இதில், சினிமா மீதான உங்கள் ஆர்வத்தையும், கடின உழைப்பையும் கடந்த 3 வருடங்களாக உன்னிப்பாக கவனித்து வந்த எனக்கு அது மிகப் பெரிய உத்வேகம் அளித்தது. லவ் யூ சார். இந்த சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு மொத்த படக்குழு சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- இயக்குனர் ஷங்கர் தற்போது ’இந்தியன்- 2’, ‘கேம் சேஞ்ஜர்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் 'கேம் சேஞ்ஜர்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.

'கேம் சேஞ்ஜர்' திரைப்படத்தில் நடிகர் ராம் சரண் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஆக்ஷன் காட்சியை படமாக்குவதில் இயக்குனர் ஷங்கர் தீவிரம் காட்டி வருகிறார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
- விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நிர்வாகிகள் தொடர்ந்து பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.
- சமீபத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடிகர் விஜய் தொடர்ச்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய மாணவ- மாணவிகளை 234 தொகுதி நிர்வாகிகள் மூலம் கண்டறிந்து ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே இந்த நிகழ்ச்சி பெறும் வரவேற்பை பெற்றது.மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் விஜய்யை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர்.
இந்நிலையில், மாணவ- மாணவியர்களின் கல்விக்கு உதவும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர பாடசாலையை துவங்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக மாவட்ட வாரியாக தொடர்ந்து முன்னெடுப்புகளை எடுக்குமாறு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ஆம் தேதி முதல் இந்த திட்டம் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இரவு நேர பாடசாலைக்கு தேவையான இடம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் அதற்கான வாடகை, ஆசிரியர் தேர்வு போன்ற அனைத்து செலவுகளையும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு நான்கு இடங்களுக்கு மேல் இந்த பாடசாலை அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நடிகர் விஜய் நேற்று மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார்.
- இதில் 50 சதவீத மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
நடிகர் விஜய் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சமீபத்தில் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என கூறினார்.
மேலும், விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது வழங்கி வருகிறார். இதனால், நடிகர் விஜய் விரைவில் அரசியல் களத்தில் இறங்குகிறார் என்ற வெளிப்படையாக அறிவிக்கப்படாத தகவல் வலம் வருகிறது.
இதையடுத்து நேற்று 234 தொகுதியில் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் மாலை 5.30 மணி வரை நடந்தது. இதில் 50 சதவீத மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தியதுடன் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வெளியே வந்த நிர்வாகிகள் சிலர், "அரசியலுக்கு வருமாறு விஜய்யை அழைத்தோம். அதற்கு அவர் நான் அரசியலுக்கு வந்தால், அதில்தான் என் முழு கவனமும் இருக்கும். சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றார். அவரது அரசியல் வருகைக்கான அனைத்து கட்டமைப்புகளையும் செய்து விட்டோம். விஜய் எப்போது அரசியலுக்கு வந்தாலும் பணியாற்ற தயாராக உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இன்று மீண்டும் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தை இயக்கியவர் கார்த்திக் அத்வைத்.
- இவர் தற்போது பிரபல நடிகர் சிவராஜ் குமார் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ் குமார் 'சிவண்ணா எஸ்சிஎஃப்சி01' (#ShivannaSCFC01) என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தை இயக்கிய கார்த்திக் அத்வைத் இயக்குகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுதீர் சந்திர பாதிரி இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் சிவராஜ் குமாரின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கான்செப்ட் போஸ்டர் மூலம் வெளியிடப்பட்டது. தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு 'விக்ரம் வேதா' மற்றும் 'கைதி' படங்களுக்கு இசையமைத்த சாம் சிஎஸ் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






