மீண்டும் வெளியாகும் 'தண்டட்டி' திரைப்படம்

இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் கடந்த 23ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'தண்டட்டி'.இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
மீண்டும் வெளியாகும் 'தண்டட்டி' திரைப்படம்
Published on

அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் நடிகர் பசுபதி நடிப்பில் கடந்த 23ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'தண்டட்டி'. இப்படத்தை சர்தார், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. வித்யாசமான கதைக்களத்தில் உருவாயிருந்த இப்படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் 'தண்டட்டி' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் ஜூலை 14ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் மீண்டும் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com