நடிகர் சிவராஜ் குமாருடன் இணைந்த தமிழ் பட இயக்குனர்

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தை இயக்கியவர் கார்த்திக் அத்வைத்.இவர் தற்போது பிரபல நடிகர் சிவராஜ் குமார் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.
நடிகர் சிவராஜ் குமாருடன் இணைந்த தமிழ் பட இயக்குனர்
Published on

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ் குமார் 'சிவண்ணா எஸ்சிஎஃப்சி01' (#ShivannaSCFC01) என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தை இயக்கிய கார்த்திக் அத்வைத் இயக்குகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுதீர் சந்திர பாதிரி இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் சிவராஜ் குமாரின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கான்செப்ட் போஸ்டர் மூலம் வெளியிடப்பட்டது. தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு 'விக்ரம் வேதா' மற்றும் 'கைதி' படங்களுக்கு இசையமைத்த சாம் சிஎஸ் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com