என் மலர்
சினிமா செய்திகள்
- ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்தின் முன்னோட்ட வீடியோவை நேற்று முன்தினம் படக்குழு வெளியிட்டது.
- இந்த வீடியோவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை நேற்று முன்தினம் படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

ஜவான் படத்தின் முன்னோட்ட வீடியோவை பாராட்டி இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். அதில், "பாலிவுட்டில் அறிமுகமாகும் படத்திலேயே சிறப்பாக பணியாற்றி இருக்கும் இயக்குனர் அட்லியை நினைத்து பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை. முன்னோட்ட வீடியோ சர்வதேச தரத்தில் உள்ளது. அட்லியின் பொறுமையும் கடின உழைப்பும் நன்றாக தெரிகிறது. எனது சார்பாக மிகுந்த பாராட்டும் அரவணைப்பும். நயன்தாராவின் பாலிவுட் அறிமுகமே ஷாருக்கானுடன் இருப்பது கனவு நினைவான மாதிரி உள்ளது. அனிருத் மற்றும் விஜய் சேதுபதிக்கு எனது பாராட்டுக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் பாராட்டு தெரிவித்த இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் ஷாருக்கான் பதிலளித்துள்ளார். அதில், விக்னேஷ் சிவன் உங்களின் அன்புக்கு நன்றி. நயன்தாரா அருமையானவர்... ஆனால் இதை நான் யாரிடம் சொல்கிறேன்... உங்களுக்கு முன்பே தெரியும்!!! ஆனால், அவர் இப்போது நன்றாக அடிக்கவும் உதைக்கவும் கற்றுக் கொண்டுள்ளார். ஜாக்கிரதையாக இருங்கள்!! என்று ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.
- பூ ராமு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கிடா.
- இப்படத்தை அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கியுள்ளார்.
அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில், பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் கிடா (Goat). மேலும் மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இப்படத்தை ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரித்துள்ளனர்.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப் பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியுள்ள கிடா திரைப்படம் இன்னும் திரைக்கு வராத நிலையில் சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்த்து வருகிறது,
சமீபத்தில், இந்தியன் பனோரமா மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் கிடா திரைப்படம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆகஸ்ட் 11ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை நடக்கும் மெல்போர்னின் 14வது இந்திய திரைப்பட விழாவில் (14th Indian film festival of Melbourne) திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கிடா திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பலரின் பாராட்டுக்களை பெற்று வருவது படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
- விஜய்யின் கார் சிக்னலில் நிற்காமல் சென்றதற்காக ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.
- இதனை நடிகர் விஜய் ஆன்லைன் வாயிலாகாக செலுத்தியுள்ளார்.
நடிகர் விஜய் நேற்று பனையூர் விஜய் மக்கள் நல இயக்க அலுவகத்தில் 234 தொகுதி நிர்வாகிகளுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதற்காக நீலாங்கரையில் இருந்து பனையூருக்கு விஜய் காரில் சென்றார். அப்போது அக்கரை பகுதி சிக்னலில் நடிகர் விஜயின் கார் நிற்காமல் சென்றது வீடியோ காமிராவில் பதிவானது.

இதையடுத்து, போக்குவரத்து போலீசார் நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர். சிக்னலை மதிக்காமல் விஜயின் கார் சென்றதாக புகார் எழுந்த நிலையில், போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் போக்குவரத்து விதிமீறலுக்கான ரூ.500 அபராத தொகையை நடிகர் விஜய், ஆன்லைன் மூலம் செலுத்தினார்.
- ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான படம் ‘நண்பன்’.
- இப்படத்திற்கு பிறகு விஜய் மீண்டும் ஷங்கருடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2012ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் 'நண்பன்' படத்தில் நடித்திருந்தார். இதில் விஜய்யுடன் இணைந்து ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ், சத்யன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நண்பன் படத்திற்கு பிறகு ஷங்கர் மீண்டும் விஜய்யுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யிடம் படத்தின் ஒன்லைனை ஷங்கர் கூறியதாகவும், இது விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 'இந்தியன் 2' மற்றும் 'கேம் சேஞ்சர்' படத்திற்கு பிறகு ஷங்கர் இப்படத்தின் முழு ஸ்க்ரிப்ட் பணிகளை முடிக்கவுள்ளதாகவும், இப்படம் 'தளபதி 69' அல்லது 'தளபதி 70' படமாக இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் ஷங்கர் இணையவுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார்.
- சிக்னலில் நிற்காமல் சென்றதற்காக நடிகர் விஜய்க்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை:
நடிகர் விஜய் சமீபத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.
இதற்கிடையே, நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் 234 தொகுதி நிர்வாகிகளுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், நீலாங்கரையில் இருந்து பனையூர் வரும் வழியில் உள்ள சிக்னலில் நடிகர் விஜயின் கார் நிற்காமல் சென்றது வீடியோ காமிராவில் பதிவானது. இதையடுத்து, போக்குவரத்து போலீசார் நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். சிக்னலை மதிக்காமல் விஜயின் கார் சென்றதாக புகார் எழுந்தநிலையில், போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மதுபான விற்பனையை அதிகப்படுத்துவது குறித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- கர்நாடகாவை போல தமிழகத்திலும் டெட்ரா பாக்கெட்டில் மதுபானம் விற்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தமிழகத்தில் அண்மையில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக அங்கு பணியாற்றிய ஊழியர்கள் வேறு கடைகளுக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து மதுபான கடைகளில் விற்பனை குறைந்து வருவதாக தகவல்கள் வரத் தொடங்கியது. இதன் காரணமாக டாஸ்மாக் மதுபான விற்பனையை அதிகப்படுத்துவது குறித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படுதல், கர்நாடகாவை போல தமிழகத்திலும் டெட்ரா பாக்கெட்டில் மதுபானம் விற்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

சரத்குமார் அறிக்கை
இந்நிலையில், காலை 7 மணி முதல் 9 மணி வரை டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படுவதற்கான ஆலோசனையை கண்டித்து நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "காலை 07.00 மணி முதல் 09.00 மணி வரை மதுக்கடைகளை திறப்பதற்கான ஆலோசனையை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும்
மனித மூளையை சலவை செய்து, சமூக குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமான மது விற்பனையை மேலும் படிப்படியாக குறைப்பது பற்றி அரசு சிந்தித்து முடிவெடுக்கலாமே தவிர, பொருளாதார தேவைக்காக மக்களின் ஆரோக்கியத்தை சீர்குலைத்து மேலும் மது விற்பனையை அதிகரிக்க நேர்ந்தால், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, வலுவான போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
- நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது.
- இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’.
- இப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

'மாவீரன்' திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'மாவீரன்' திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளார். இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
- நடிகை லீனா மரியா பால் ‘பிரியாணி’ படத்தில் இடம்பெற்றிருந்தார்.
- இவர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் காதலி ஆவார்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி, நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'பிரியாணி'. இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிகை லீனா மரியா பால் இடம்பெற்றிருப்பார். மேலும், இவர் ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் ஜான் ஆபிரகாம் நடித்த 'மெட்ராஸ் கஃபே' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் காதலி ஆவார்.

லீனா மரியா பால்
நடிகை லீனா மரியா பால் சட்ட அமைச்சகத்தின் உயர் அதிகாரி போல் நடித்து ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கில் கடந்த 2021-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது முதல் சிறையில் இருந்து வரும் லீனா மரியா பால் இந்த வழக்கில் ஜாமின் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீபதி தினேஷ் குமார் ஷர்மா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- நடிகர் விஜய் சேதுபதி பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
- இவர் தற்போது நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், விஜய் சேதுபதி மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, 'உப்பென்னா' படத்தின் இயக்குனர் புச்சி பாபு சனா அடுத்ததாக ராம் சரணின் 16-வது படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே 'உப்பென்னா' திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜமவுலி, மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
- இதனிடையே ராஜமவுலி தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
பாகுபலி மற்றும் ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் ராஜமவுலி. ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ரசிகர்களை கவர்ந்து ஆஸ்கர் உள்ளிட்ட உலகின் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது.
தொடர்ந்து ராஜமவுலி அடுத்து இயக்கும் படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜமவுலி, மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய ராஜமவுலி இந்த படம் ஒரு உலகளாவிய அதிரடி சாகச படமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

இயக்குனர் ராஜமவுலி கடந்த ஜூன் மாதம் தமிழ்நாட்டு கோவில்களுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நீண்ட நாட்களாக தமிழ்நாட்டிற்குள் சுற்றுலாப் பயணம் செல்ல விரும்பினேன். என் மகள் கோவில்களுக்குச் செல்ல விரும்பினாள். அதனால் ஜூன் கடைசி வாரத்தில் ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், கானாடுகாத்தான், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களுக்குச் சென்றோம். நேர்த்தியான கட்டிடக்கலை, அற்புதமான பொறியியல் மற்றும் பாண்டியர்கள், சோழர்கள் நாயக்கர்கள் மற்றும் பல ஆட்சியாளர்களின் ஆழ்ந்த ஆன்மிக சிந்தனை மெய்சிலிர்க்க வைத்தது.
மந்திரக்கூடம், கும்பகோணம், ராமேஸ்வரத்தின் முருகன் மெஸ் என எல்லா இடங்களிலும் உணவு அருமையாக இருக்கும்... ஒரு வாரத்தில் 2-3 கிலோ எடை அதிகரித்திருக்கும். 3 மாத வெளிநாட்டு பயணம் மற்றும் உணவுக்குப் பிறகு, இந்த தாயகம் சுற்றுப்பயணம் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
- பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான படம் கேஜிஎஃப்.
- இப்படம் ஜப்பானில் வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான படம் கேஜிஎஃப். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இதில் ராக்கி பாய் என்ற கதாப்பாத்திரத்தில் யஷ் நடித்திருந்தார். மேலும் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் பல முன்னணி ரசிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வசூல் ரீதியாக சாதனை படைத்தது. குறிப்பாக கேஜிஎஃப் இரண்டாம் பாகம் சர்வதேச அளவில் சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் பெற்ற பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்ளும் ஜப்பானில் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக நடிகர் யஷ் வீடியோ பகிர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.






