மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் "கிடா" திரைப்படம்.. உற்சாகத்தில் படக்குழு

பூ ராமு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கிடா.இப்படத்தை அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கியுள்ளார்.
மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் "கிடா" திரைப்படம்.. உற்சாகத்தில் படக்குழு
Published on

அறிமுக இயக்குனர் ரா.வெங்கட்  இயக்கத்தில்,  பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் கிடா (Goat). மேலும் மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இப்படத்தை ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரித்துள்ளனர்.

மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப் பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியுள்ள கிடா திரைப்படம் இன்னும் திரைக்கு வராத நிலையில் சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்த்து வருகிறது,

சமீபத்தில், இந்தியன் பனோரமா மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் கிடா திரைப்படம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆகஸ்ட் 11ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை  நடக்கும் மெல்போர்னின் 14வது இந்திய திரைப்பட விழாவில் (14th Indian film festival of Melbourne) திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கிடா திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பலரின் பாராட்டுக்களை பெற்று வருவது படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com