என் மலர்
சினிமா செய்திகள்

லீனா மரியா பால்
ரூ.200 கோடி மோசடி வழக்கு.. பிரியாணி பட நடிகை மனு தள்ளுபடி
- நடிகை லீனா மரியா பால் ‘பிரியாணி’ படத்தில் இடம்பெற்றிருந்தார்.
- இவர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் காதலி ஆவார்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி, நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'பிரியாணி'. இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிகை லீனா மரியா பால் இடம்பெற்றிருப்பார். மேலும், இவர் ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் ஜான் ஆபிரகாம் நடித்த 'மெட்ராஸ் கஃபே' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் காதலி ஆவார்.
லீனா மரியா பால்
நடிகை லீனா மரியா பால் சட்ட அமைச்சகத்தின் உயர் அதிகாரி போல் நடித்து ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கில் கடந்த 2021-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது முதல் சிறையில் இருந்து வரும் லீனா மரியா பால் இந்த வழக்கில் ஜாமின் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீபதி தினேஷ் குமார் ஷர்மா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.






