மர்ம உலகில் நுழையும் சந்தானம்.. டிடி ரிட்டன்ஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிடி ரிட்டன்ஸ்'.இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது.
மர்ம உலகில் நுழையும் சந்தானம்.. டிடி ரிட்டன்ஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் சந்தானம் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

மேலும், 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com