search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "marakkuma nenjam"

  • செப்டம்பர் 10-ந் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நிகழ்ச்சி நடந்த அன்று மைதானத்துக்கு ஏராளமானோர் வாகனங்களில் குடும்பத்துடன் திரண்டு வந்தனர்.

  சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் செப்டம்பர் 10-ந் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை ஆன்லைனில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதையொட்டி நிகழ்ச்சி நடந்த அன்று மைதானத்துக்கு ஏராளமானோர் வாகனங்களில் குடும்பத்துடன் திரண்டு வந்தனர்.


  முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்படாத காரணத்தால் குளறுபடியாகி போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் டிக்கெட் எடுத்து நிகழ்ச்சியை காண வந்த ஏராளமானோர் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் குழந்தைகளுடன் நெரிசலில் சிக்கி தவித்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

  இந்த சம்பவத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் மன்னிப்பு கேட்டதுடன் நிகழ்ச்சியை காண முடியாமல் ஏமாந்து சென்ற ரசிகர்கள் டிக்கெட்டை இமெயிலில் அனுப்ப கூறியும், அதை பரிசீலனை செய்து அவர்களுக்கு டிக்கெட்டுக்குரிய பணத்தை திரும்ப தருவதாகவும் கூறி இருந்தார். இதையொட்டி மின்னஞ்சலில் சுமார் 4000 பேர் பணத்தை திருப்பிக் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.


  இந்நிலையில், ரசிகர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கும் பணியில் ACTC நிறுவனம் ஈடுப்பட்டுள்ளது. இதனை அவர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.


  • ரக்‌ஷன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘மறக்குமா நெஞ்சம்’.
  • இந்த படத்தை இயக்குனர் இரா. கோ. யோகேந்திரன் இயக்கியுள்ளார்.

  இயக்குனர் இரா. கோ. யோகேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மறக்குமா நெஞ்சம்'. இந்த படத்தில் ரக்ஷன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இவருடன் மலினா, தீனா, பிராங்ஸ்டர் ராகுல் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  சச்சின் வாரியர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கோபி துரைசாமி ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். பள்ளி கால நினைவுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஜனார்தன் சவுத்ரி, ரமேஷ் பஞ்சக்னுலா, ரகு எல்லுரு மற்றும் இரா.கோ. யோகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 'மறக்குமா நெஞ்சம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெற்றுள்ளது.


  அதாவது, 'மறக்குமா நெஞ்சம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களுடன் படித்த சகமாணவர்கள் கலந்து கொண்டனர். இப்படத்தில் பணியாற்றியவர்களின் நண்பர்கள் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் மேடை ஏறி, பாடலை வெளியிட்டனர்.


  மேலும், இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு சிறப்பு விருது வழங்கி சிறப்பித்தனர். இந்த விருது நன்றிக் கடன் விருது என அழைக்கப்படுகிறது. நன்றிக் கடன் விருது என்று அறிவித்து, 'விதைத்துக் கொண்டே இருங்கள், முளைத்துக் கொண்டே இருக்கிறோம் - நன்றி' என்று எழுதப்பட்டு இருந்தது.


  நிகழ்ச்சியில் பேசிய ஆசிரியர்கள், தங்களது மாணவர்கள் பள்ளி நாட்களில் செய்த குறும்பு செயல்களை பகிர்ந்து, பள்ளி காலத்தில் கண்டிப்புடன் நடந்து கொண்ட பிறகும், நீண்ட காலம் கழித்து தங்களை அழைத்து விருது வழங்கி சிறப்பித்தது பற்றி தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். தமிழ் சினிமா மட்டுமின்றி, இதுபோன்ற நிகழ்ச்சியை இதுவரை கண்டதில்லை என கூறி இதற்கு ஏற்பாடு செய்த படக்குழுவுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நன்றி தெரிவித்தனர்.

  ×