என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    'லியோ' படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் தனக்கான காட்சிகளை நடிகர் விஜய் நிறைவு செய்தார்.


    லியோ படக்குழு

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 மாதமாக நடைபெற்று வந்த 'லியோ' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இது தொடர்பான புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.




    • இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடித்த திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்'.
    • இப்படம் ஜூன் 26-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

    இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த மே 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். மேலும் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    இப்படம் ஜூன் 26-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில், 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் நிறைவுபெற்றதையடுத்து இசையமைப்பாளர் டி.இமான் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "50 நாட்களாக தொடர்ந்து சமூக ஊடகங்களில் "கழுவேத்தி மூர்க்கனை" பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். தலைவர்களும் திரை ஆளுமைகளும் முற்போக்காளர்களும் பல மேடைகளில் படத்தினை பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படம் சார்ந்த கூட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. பத்துக்கும் மேலான காட்சிகள் தனியாக சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.


    கழுவேத்தி மூர்க்கன் போஸ்டர்

    ஒரு நல்ல திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும், ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும், படம் பேசும் தளத்திலான சூழல்கள் உருவாகும் போது படம் மீண்டும் திரும்பிப் பார்க்கப்பட வேண்டும். அதுவே வெற்றி. 50 நாட்களாக கழுவேத்தி மூர்க்கன் அவ்வேலையை செய்தபடி பயணித்துக் கொண்டே இருக்கிறான், நம்ம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும், அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும்.. கழுவேத்திமூர்க்கன். தோள் கொடுத்தவர்களுக்கு கை குலுக்கி நன்றிகளும் பூங்கொத்துக்களும்.. தொடர்கிறது பயணம்.." என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.




    • தற்போது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது.
    • ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க வாக்குகளை பொருட்படுத்தாமல் உதவி செய்து வருகிறது.

    ஆந்திரா மாநில முன்னாள் முதல்-அமைச்சர் நடிகர் என்.டி.ராமராவின் மகள் புரந்தேஸ்வரி பா.ஜ.க.வின் புதிய மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்று முதன் முதலாக விஜயவாடா வந்தார். அவருக்கு வழி நெடுகிலும் பா.ஜ.க.வினர் பூக்களை தூவி வரவேற்றனர்.

    அப்போது அவர் கூறியதாவது:- ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சி மேலிட உயர்நிலைக் குழு கவனித்துக் கொள்ளும். ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்துவேன்.தற்போது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது. எதிர்காலத்திலும் அவர்களுடன் கூட்டணி தொடரும்.


    புரந்தேஸ்வரி மீது மலர்களை தூவிய மக்கள்

    ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க வாக்குகளை பொருட்படுத்தாமல் உதவி செய்து வருகிறது. மத்திய அரசு வீட்டு வசதி திட்டங்களுக்காக கடந்த 9 ஆண்டுகளில் ஆந்திர மாநிலத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இதில் குறைந்தபட்சம் 65 சதவீதம் வீடுகள் தற்போது கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 35 சதவீத குடியிருப்புகள் கூட தயாராக இல்லை.

    ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியின் காரணமாக மாநிலத்தில் சாலைகள் மோசமாக உள்ளன. தேசிய திட்டமான போலவரம் பாசன திட்டத்தின் பணிகள் மெதுவாக நடக்கிறது. ஜெகன் மோகன் ரெட்டி அரசு திட்டமிட்டபடி அதனை முடிக்க முடியாவிட்டால் அதன் கட்டுமானத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க மறைமுக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவியின் சகோதரியான புரந்தேஸ்வரி தெலுங்கு தேசம் கட்சி குறித்து எதுவும் பேசாதது அந்த கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நடிகர் முகேன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இந்த படத்தை இயக்குனர் கவின் இயக்குகிறார்.

    'வேலன்' பட வெற்றி மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் கவின் இயக்கத்தில் முகேன் மீண்டும் இணைந்துள்ளார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும், 'கோல்டன் ரெட்ரீவர்' வகை நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. கிரைம் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ள இத்திரைப்படத்திற்கு 'பார்க்கிங்' திரைப்பட புகழ் ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். 'டாடா' புகழ் ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார்.


    G. மணிக்கண்ணன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் புதிய படத்தின் பூஜை சென்னையில்  துவங்கியது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் வாகமன் பகுதிகளில்  நடைபெறவுள்ளது. அடுத்த வாரத்தில் தொடங்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்படிப்பை, ஒரே கட்டமாக தொடங்கி நிறைவு செய்ய திரைப்படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ராஜகுமாரன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'நீ வருவாய் என'.
    • இந்த படத்தில் நடிகை தேவயானி கதாநாயகியாக நடித்தார்.

    தமிழ் திரையுலகில் 'தொட்டால் சிணுங்கி' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை தேவயானி, காதல் கோட்டை உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

    'நீ வருவாய் என' படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் ராஜகுமாரன். அந்த படத்தில் நடிகர்கள் அஜித், பார்த்திபன், நடிகை தேவயானி ஆகியோர் நடித்தனர். அந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அப்போது நடிகை தேவயானிக்கும் இயக்குனர் ராஜகுமாரனுக்கும் காதல் மலர்ந்து அந்த காதலும் வெற்றி பெற்றது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்துக்கு பிறகு தேவயானி நடிக்கவில்லை. கணவர் ராஜகுமாரனுடன் கிராமத்தில் குடியேறி விவசாயத்தில் ஆர்வம் காட்டினார். இந்த தம்பதிக்கு பிரியங்கா ராஜகுமாரன், இனியா ராஜகுமாரன் ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.


    ராஜகுமாரன்- தேவயானி

    ராஜகுமாரன் இயக்கத்தில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த 'நீ வருவாய் என' படத்தின் 2-ம் பாகத் தில் நடிகர் விஜய் மகன் சஞ்சயையும், தேவயானி மகள் பிரியங்காவும் ஜோடியாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது.

    இது பற்றி தேவயானியின் கணவரும், இயக்குனருமான ராஜகுமாரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- திரை உலகில் நான் இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக சேர்ந்த பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்தது. 15 வருடங்கள் போராடி தான் சினிமா துறையில் வெற்றி பெற்றேன்.


    சஞ்சய்- இனியா தேவயானி

    1999-ல் சூப்பர்குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் தயாரிப்பில் உருவான "நீ வருவாய் என" படத்தை முதல் முதலாக இயக்கினேன். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு 2-ம் பாகத்தை உருவாக்கும்படி பலரும் கூறி வந்தார்கள். இப்போது அதற்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்.

    இந்த படததில் நடிகர் விஜய் மகன் சஞ்சயை நடிக்க வைக்க திட்டம் உள்ளது. எனது மகள்களுக்கும் சினிமா ஆசை உள்ளது. எனவே சஞ்சய் ஜோடியாக எனது மகளை நடிக்க வைக்கவும் ஆலோசித்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் விஷால் தற்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


    சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.



    'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் முதல் பாடல் வருகிற 15-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த பாடலை இயக்குனர் டி.ராஜேந்தர் பாடியுள்ளார். இந்நிலையில், இந்த பாடலின் தெலுங்கு வெர்ஷனை நடிகர் விஷால் பாடியுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார். மேலும், இந்த பாடல் மூலம் விஷால் பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார். 




    • நடிகர் ரஜினி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படத்தின் இரண்டாவது பாடல் வருகிற 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான 'இது டைகரின் கட்டளை' பாடல் வருகிற 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.


    ஜெயிலர் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது 'ஜெயிலர்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதை உறுதி செய்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுதாக்கல் செய்திருந்தார்.

    கடந்த 2018-ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து வெளிவந்த விமர்சனத்தை நடிகரும், பா.ஜ.க. கட்சியின் பிரமுகருமான எஸ்.வி.சேகர் தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.


    இதே போன்று கடந்த 2020-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான தகவல்களை தெரிவித்ததாகவும் தேசிய கொடியை அவமதிக்கும் விதமாக யூடியூபில் வீடியோ வெளியிட்டதாகவும் எஸ்.வி.சேகருக்கு எதிராக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

    சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுதாக்கல் செய்திருந்தார்.


    இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசஷ், பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பான சர்ச்சை பேச்சு குறித்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். அதேபோன்று தேசியக்கொடி அவமதிப்பு தொடர்பான வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பான சர்ச்சை பேச்சு வழக்கில் 'பாதிப்பு ஏற்படுத்தியதை மன்னிப்பு மூலம் சரிகட்டி விடமுடியாது' என்று கூறியுள்ளார். மேலும், இந்த வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • நடிகர் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் 'டிடி ரிட்டன்ஸ்' .
    • இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. காமெடி திரில்லராக உருவாகியுள்ள இந்த டிரைலர் இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறாது.


    'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



    • நடிகர் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.

    அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


    இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடலான 'இது டைகரின் கட்டளை' பாடல் வருகிற 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. 


    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் பலருக்கும் யுவன் சங்கர் ராஜா இசை கூடுதல் பலமாக அமைந்தது.
    • திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.

    சரத்குமார் நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. அதன்பின்னர் தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா, மௌனம் பேசியதே, 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மத்தியில் இடம்பிடித்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் பலருக்கும் இவரின் இசை கூடுதல் பலமாக அமைந்தது.


    திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட யுவன் சங்கர் ராஜா ஹை ஆன் யுவன் (High on U1) என்ற இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி மலேசியாவில் ஜூலை 15 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பாட்டு பாடி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள். சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு சிலம்பரசன் மலேசியாவில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதால் ரசிகர்களிடையே ஹை ஆன் யுவன் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


    ஹை ஆன் யுவன் இசை நிகழ்ச்சியை தொழிலதிபர் கார்த்திக் இளம்வழுதி, கவிதா சுகுமார் பெரும் பொருட்செலவில் நடத்துகிறார்கள். ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்கவே யுவன் சங்கர் ராஜா மற்றும் சிலம்பரசனை ஒன்று சேர்த்து இருக்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் யுவன் சங்கர் ராஜாவை வைத்து அமெரிக்காவில் உள்ள 6 மாநகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தவும் முடிவு செய்து இருப்பதாக கார்த்திக் இளம்வழுதி, கவிதா சுகுமார் கூறியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நடிகர் வைரமுத்து இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    • வைரமுத்துவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தினார்.

    கவிஞர் வைரமுத்து இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெசன்ட் நகரில் உள்ள வைரமுத்துவின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இதை பார்த்து கொந்தளித்த பாடகி சின்மயி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பல பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஒரு மனிதனின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். பல விருதுகளை பெற்ற பாடகியான நான் MeToo இயக்கத்தின் மூலம் இந்த கவிஞர் மீது பாலியல் புகார் தெரிவித்ததற்காக, 2018-ம் ஆண்டு முதல் தமிழ் திரைத்துறையில் பணியாற்ற முடியாத தடையை எதிர்கொண்டிருக்கிறேன்.




    பல தசாப்தங்களுக்கு முன்னர் பிறந்த தவறான நடத்தை கொண்ட அந்த கவிஞர், எந்தப் பெண்ணின் மீதும் கை வைக்கலாம் என்று முடிவு செய்தார், பல அரசியல்வாதிகளுடன் குறிப்பாக திமுகவுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தால் சம்பந்தப்பட்ட பெண்களை அச்சுறுத்தினார். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பெண்களின் பாதுகாப்புக்காக பேசுவதாக கூறுவது அவமானம். வைரமுத்துவைப் பற்றி பேச்சு எழும்போதெல்லாம் அவர்கள் அனைவரும் அமைதியாகிவிடுவார்கள்.


    சின்மயி பதிவு

    ஒவ்வொரு ஆண்டும் இவரின் பிறந்தநாளில், சிறந்த தமிழ்ப் பெண்ணியப் பண்பாட்டில் உள்ள ஆண்களும், பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணைக் குறியிட்டு வயிறு எரியுதா? என்று சொல்கிறார்கள். இது, நமது அற்புதமான பலாத்கார மன்னிப்புக் கலாச்சாரம். இங்கே அவர்கள் பாலியல் குற்றவாளிகளைக் கொண்டாடுகிறார்கள், அவர்களுக்கு எதிராக பேசும் பெண்களைத் துன்புறுத்துகிறார்கள்.

    பிரிஜ் பூஷன் முதல் வைரமுத்து வரை அனைவரும் எப்போதும் தப்பித்து விடுவார்கள், ஏனென்றால் அரசியல்வாதிகள் இவர்களைப் பாதுகாப்பார்கள்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

    ×