என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் விஷால் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
- இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'அதிருதா' பாடல் வெளியாகியுள்ளது. இயக்குனர் டி.ராஜேந்தர் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- இயக்குனர் இன்னாசி பாண்டியன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இந்த படத்தை பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்த பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் 'டைரி' பட இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகுகிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

விறுவிறுப்பான ஆக்ஷன், த்ரில்லர் ஆக உருவாக உள்ள இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகையான வைஷாலி ராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். ஆர். சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கே பி ஒய் வினோத், விஜே தணிகை, சென்றாயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்திற்கு 'டிமான்டி காலனி', 'டைரி' உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாளுகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் சென்னை, தென்காசி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

இப்படம் குறித்து இயக்குனர் இன்னாசி பாண்டியன், "இது ஒரு முழு நீள ஆக்ஷன் திரில்லர் திரைப்படம். இந்த கதையை தான் நான் எனது முதல் திரைப்படமாக இயக்க இருந்தேன், ஆனால் ஒரு சில காரணங்களால் அது இயலவில்லை. எனவே இதை எனது இரண்டாவது படமாக தற்போது இயக்குகிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தயாரிப்பாளர் கதிரேசன் அவர்களுக்கு நன்றி" என்று கூறினார்.
- ரஜினி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான 'இது டைகரின் கட்டளை' பாடல் வருகிற 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'ஜெயிலர்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இயக்குனர் நவீன்குமார் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘நியதி’.
- இப்படம் ஆக்ஷன் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.
இயக்குனர் நவீன்குமார் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் 'நியதி'. இந்த படத்தில் அஞ்சனா பாபு, கோபிகா சுரேஷ், கோவிந்த மூர்த்தி, தேனி முருகன், அக்ஷயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஆக்ஷன் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜீனியஸ் பிலிம் கம்பெனி தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு ஜாக் வாரியர் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மிகவும் விறுவிறுப்பாக உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
- மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’.
- ‘மாவீரன்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஷங்கர் பதிவு
இந்நிலையில், 'மாவீரன்' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் ஷங்கர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மாவீரன் திரைப்படம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இயக்குனர் மடோன் அஸ்வினின் திறமை சினிமாவில் நிலைத்து நிற்பார் என்பதை காட்டுகிறது. மாஸான சிறந்த பொழுதுப்போக்கு படம். சிவகார்த்திகேயன் பாராட்டுக்குரிய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதிதி கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். மிஷ்கின், சரிதா, யோகிபாபு சிறப்பாக நடித்துள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.
- நடிகர் ரோபோ சங்கர் உடல் மெலிந்து காணப்பட்டதையடுத்து பல வதந்திகள் வந்தன.
- பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் என் உடம்பை நான் குறைத்ததற்கு காரணம் சினிமாவிற்காக தான், அதுமட்டுமல்லாமல் எனக்கு இடையில் மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டது என்று வெளிப்படையாக கூறினார்.
தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

சமீபகாலமாக அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. இதையடுத்து ரோபோ சங்கர் குறித்து பல வதந்திகள் பரவி வந்தன. பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் என் உடம்பை நான் குறைத்ததற்கு காரணம் சினிமாவிற்காக தான், அதுமட்டுமல்லாமல் எனக்கு இடையில் மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டது என்று வெளிப்படையாக கூறினார். தற்போது இவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், ரோபோ சங்கருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் போன் செய்து அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். மேலும், தன் மகளுக்கு இன்னும் ஆறு மாதத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் திருமண தேதி குறித்து தற்போது வரை முடிவு செய்யப்படவில்லை என்றும் கண்டிப்பாக உங்களுக்கு கூறிவிட்டு தான் எதையும் செய்வேன் என்றும் ரோபோ சங்கர் கூறினார்.
- சந்திரயான்-3 விண் கலம் நேற்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
- பூமியின் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட விண்கலத்தை இஸ்ரோவின் தரை கட்டுப்பாட்டு நிலையம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதில் கடந்த 2008-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்-1 விண்கலம் திட்டம் வெற்றி பெற்றது. 2019-ம் ஆண்டு ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் வெற்றி பெறவில்லை. லேண்டர் நிலவில் வேகமாக தரையிறங்கியதால் தொடர்புகளை இழந்தது. இதற்கிடையே நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ததற்காக சந்திரயான்-3 விண்கலம், நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண் கலம் நேற்று மதியம் 2.35 மணிக்கு ஏவப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோ மீட்டர் தூரத்தை அடைந்ததும் சந்திரயான்-3 விண்கலத்தை இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது. பூமியின் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட விண்கலத்தை இஸ்ரோவின் தரை கட்டுப்பாட்டு நிலையம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

பின்னர் 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவை நோக்கி பயணத்தை தொடங்கியது. சந்திரயான்-3 விண்கலம், நிலவின் சுற்று வட்டப் பாதையை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. அதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பூமியின் சுற்று வட்ட பாதையை சுற்றி வரும் சந்திரயான்-3 விண்கலம் வருகிற ஆகஸ்டு 5-ந்தேதி நிலவின் சுற்றுப்பாதையை அடையும்.
இந்நிலையில், சந்திரயான் விண்கலம் குறித்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சந்திரயான் 3
விண்ணில்
நிலைநிறுத்தப்பட்டதில்
இந்திய விஞ்ஞானிகளை
அண்ணாந்து பார்க்கிறது
அகிலம்
ஆகஸ்ட் 23
அது தடுமாறாமல்
தடம் மாறாமல்
நிலாத் தரையில்
இயங்க வேண்டும்
உலகத்தின் கண்கள்
குவிய வேண்டும்
நிலாவின் மீதும்
இந்தியா மீதும்
வெற்றி நிச்சயம்
வெண்ணிலா சத்தியம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மக்களுக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றனர்.
- இது மட்டுமின்றி தலைவர்கள் பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அன்னதானம், குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கி விஜய் ரசிகர்கள் மக்கள் சேவையில் இறங்கினர்.
234 தொகுதிகளிலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர்களிடம் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று பேசி விஜய் அரசியல் அரங்கை அதிர வைத்தார். இதைத் தொடர்ந்து காமராஜர் பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் உள்ள அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதுமட்டுமல்லாமல் காமராஜர் பிறந்த நாளையொட்டி 234 தொகுதிகளிலும் ஏழை மாணவ-மாணவிகள் பயில இரவு பாடசாலை திட்டமான 'தளபதி விஜய் பயிலகம்' இன்று மாலை முதல் தொடங்கப்பட உள்ளது.

விஜய் தனது மக்கள் இயக்கத்தின் சார்பாக இப்படி பல உதவிகளை செய்து வருவது அவர் விரைவில் அரசியலில் கால்பதிக்க செய்யும் முன்னேற்பாடுகள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவர் அரசியலில் நுழைந்தால் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை ஆதரித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் காமராஜர் வழியை பின்பற்றினாள் அவர்களுக்கு வெற்றி நிச்சயமாக இருக்கும். விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. ஒருவேளை விஜய் அரசியலுக்கு வந்தால் நம் கட்சி பாதிக்கும், ஓட்டு போய்விடும் என்று நினைப்பவர்கள் எதிர்க்கலாம். இந்திய குடிமகனாக லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்து ஒரு சரியான அமைப்பை நிறுவிக்கொண்டிருக்கும் விஜய் சரியான நேரத்தில் வந்தால் அவருக்கு வெற்றி நிச்சயமாக கிடைக்கும்.
- நடிகர் பரத் தற்போது ‘லவ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பரத், தற்போது லவ் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளார். ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இப்படத்தை இயக்கியுள்ளார். திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28-ஆம் தேதி திரைக்கு வரவுள்து. இதையடுத்து இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதில் நடிகர் பரத் பேசியதாவது, இங்கு எனது 50-வது படத்தில் உங்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியது மகிழ்ச்சி. என் திரை வரலாற்றில் மோசமான படங்கள் செய்த போதும், நீ நல்லா பண்ணியிருக்க, நல்லா பண்ணு, நல்லா வருவ என எனக்குத் தொடர்ந்து ஊக்கம் தந்து வரும் உங்களுக்கு நன்றி. இந்தப் பயணம் மிகப்பெரியது.

படம் செய்யும் போது மிக உற்சாகத்துடன் வேலை பார்க்கிறோம். ஆனால் படம் ரிலீஸ் என வரும் போது பெரும் பிரச்சினைகள் வந்து நிற்கிறது. மன உளைச்சல்கள் தருகிறது. சினிமா இரண்டாகப் பிரிந்து போயிருக்கிறது. ஆனால் நான் எப்போதும் என் வேலையை சிறப்பாக செய்து வருகிறேன், அது தான் முக்கியம். இந்தப் படம் எங்கேயும் உங்களுக்கு போரடிக்காது, ஒரு சிறப்பான படம் பார்க்கும் அனுபவம் தரும். என் இயக்குனர் தயாரிப்பாளர் ஆர்.பி. பாலா சாருக்கு நன்றி. படக்குழுவினருக்கு நன்றி என்று பேசினார்.

மேலும், நடிகை வாணி போஜன் பேசியதாவது, நான் நிறையப் படங்கள் நடித்திருக்கிறேன். ஆனால் சில படங்களே மனதிற்கு முழு திருப்தியை கொடுக்கும். இந்தப்படத்தில் நான் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது. இந்தப் படத்தில் நானும் பரத்தும் நிறைய சண்டைகள் போட்டுள்ளோம், அடிகளும் பட்டது. ஆனால் அது படத்திற்காக மட்டும் தான், படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது உங்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி என்று பேசினார்.
- விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மக்களுக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றனர்.
- இது மட்டுமின்றி தலைவர்கள் பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
நடிகர் விஜய் சமீபகாலமாக தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அன்னதானம், குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கி விஜய் ரசிகர்கள் மக்கள் சேவையில் இறங்கினர்.
234 தொகுதிகளிலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர்களிடம் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று பேசி விஜய் அரசியல் அரங்கை அதிர வைத்தார். இது மட்டுமின்றி தலைவர்கள் பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து காமராஜர் பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் உள்ள அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் திரளாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் எராளமான இடங்களில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். காமராஜர் பிறந்த நாளையொட்டி 234 தொகுதிகளிலும் ஏழை மாணவ-மாணவிகள் பயில இரவு பாடசாலை திட்டமான 'தளபதி விஜய் பயிலகம்' இன்று மாலை முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் இலவச பாடசாலை குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, "மாணவர்களுக்காக விஜய் இலவச பாடசாலை தொடங்கியுள்ளது நல்ல விஷயம் தான். இல்லம் தேடி கல்வியின் நோக்கமே அதுதான். கொரோனா காலத்தில் யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களை சேர்பதற்கான பணிகளை செய்து வருகிறோம். இதற்கான பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுப்பட்டிருக்கிறார்கள்" என்று கூறினார்.
- விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- விஷாலின் 34-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார்.
லத்தி படத்தை தொடர்ந்து விஷால் தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து விஷாலின் 34-வது படத்தை சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

விஷால் 34 போஸ்டர்
இந்நிலையில், விஷாலின் 34-வது படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இதனை விஷால் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
Delighted & Pumped up to be part of this !
— Vishal (@VishalKOfficial) July 15, 2023
My 3rd combination with Director Hari. Looking forward to create the same magic as before & making it a special treat for audience worldwide.#Vishal34 - Shoot from today!#ProductionNo14 #Hari @stonebenchers @karthiksubbaraj pic.twitter.com/IpoHjpM01V
- விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மக்களுக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றனர்.
- இது மட்டுமின்றி தலைவர்கள் பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
நடிகர் விஜய் சமீபகாலமாக தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அன்னதானம், குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கி விஜய் ரசிகர்கள் மக்கள் சேவையில் இறங்கினர்.
234 தொகுதிகளிலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர்களிடம் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று பேசி விஜய் அரசியல் அரங்கை அதிர வைத்தார். இது மட்டுமின்றி தலைவர்கள் பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மாவீரர் வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் திரண்டு வந்து எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதைத் தொடர்ந்து காமராஜர் பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் உள்ள அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் திரளாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் எராளமான இடங்களில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள ஜிம்கானா கிளப் காமராஜர் சிலைக்கு மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காமராஜர் பிறந்த நாளையொட்டி 234 தொகுதிகளிலும் ஏழை மாணவ-மாணவிகள் பயில இரவு பாடசாலை திட்டமான 'தளபதி விஜய் பயிலகம்' இன்று மாலை முதல் தொடங்கப்பட உள்ளது. சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் விஜய் பயிலகம் தொடங்குவதற்கான பணிகள் முடி வடைந்த நிலையில் அங்கு இன்று மாலை முதல் மாணவ-மாணவிகளுக்கு கல்வி பயிற்சி அளிக்கப்படு கிறது.






