என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு.
    • இப்படம் ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆனது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006-ம் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


    ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. நீண்ட வருடங்களுக்கு பிறகு வேட்டையாடு விளையாடு படம் ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆனது.


    சென்னையில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகள் நிறைந்து வந்தது. இதையடுத்து இப்படத்தின் மறு வெளியீட்டு வெற்றியை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கேக் வெட்டி கொண்டாடினர்.


    இந்நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வேட்டையாடு விளையாடு திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரூ.1 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரீ ரிலீஸிலும் சாதனை படைத்த இப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

    • நடிகர் வசந்த் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ’அஸ்வின்ஸ்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    தரமணி, ராக்கி ஆகிய படங்களில் நடித்த வசந்த் ரவி நடிப்பில் உருவான திரைப்படம் 'அஸ்வின்ஸ்' (ASVINS). இப்படத்தை திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான தருண் தேஜா இயக்கினார். இப்படம் இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் யூடியூபர்கள் குழுவை மையமாக வைத்து உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல்- ஹாரர் வகையைச் சேர்ந்தது.


    இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (எஸ்விசிசி) பி.வி.எஸ்.என். பிரசாத் தயாரித்துள்ளது. இப்படத்தில் விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப் மற்றும் சிம்ரன் பரீக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'அஸ்வின்ஸ்' திரைப்படம் கடந்த 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது.


    அஸ்வின்ஸ் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'அஸ்வின்ஸ்' (ASVINS) திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.




    • நடிகர் விஷால் 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் விநாயகர் சதுர்த்தியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடிகர் விஷால் தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதைத்தொடர்ந்து விஷாலின் 34-வது படத்தை சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம், ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணைந்து பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றனர். மேலும், இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.


    விஷால் 34 போஸ்டர்

    இந்நிலையில், விஷால் 34-வது படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். விஷாலுடன் பிரியா பவானி சங்கர் முதல் முறையாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





    • விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.
    • இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார்.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் 'விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்' என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.


    இந்நிலையில், 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'ஹிஸ் நேம் இஸ் ஜான்' பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதன் முழு லிரிக் வீடியோ வருகிற 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ திரைப்படம் உருவாகி வருகிறது.
    • இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.


    லால் சலாம் படக்குழு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் தனக்கான காட்சிகளை நடிகர் ரஜினிகாந்த் நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் இணைந்து “சத்தியதேவ் லா அகாடமி”-யை உருவாக்கியுள்ளனர்.
    • இந்த “சத்தியதேவ் லா அகாடமி”-யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் "சத்தியதேவ்" அவர்களின் நினைவாக சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் "சத்தியதேவ் லா அகாடமி"-யை (Sathyadev Law Academy) முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த அகாடமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


    இந்நிலையில், "சத்தியதேவ் லா அகாடமி"யை உருவாக்கிய சூர்யா மற்றும் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி சமூக நீதி அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

    எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அவர்களை இயக்குனராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியதேவ் லா அகாடமியைத் தொடங்கி வைத்தேன். இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி சூர்யாவின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன்.


    சட்டத்தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணிபுரிவது; இவை பயிற்சி செய்வது! எனவே, நான்_முதல்வன் திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன். நீதியரசர் சந்துரு அவர்களோடு, ஜெய்பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.



    • ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 44-ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் பரிசளிக்கப்பட்டது.

    திரைக்கலைஞர் சிவகுமார் தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக 12-ஆம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். தகுதியான மாணவ -மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார்.


    'சிவகுமார் கல்வி அறக்கட்டளை'யின் 44-ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ. 2,50,000 (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் ) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழை மாணவர்களுக்கான 'தாய்தமிழ் பள்ளிக்கு' நிதி உதவியும், மூத்த ஓவிய கலைஞர் ஜெயராஜுக்கு ரூபாய் ஒரு லட்சமும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சிவகுமார் பேசியதாவது, 1979-ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட 'சிவகுமார் கல்வி அறக்கட்டளை' தொடர்ந்து 12-ஆம் வகுப்பு தேர்வில் சிறந்த உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்குப் பிறகு அகரம் பவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள்.


    கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கூறினார்.

    • நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குஷி’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

    இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குஷி'. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'குஷி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    குஷி படக்குழு

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'குஷி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.




    • இயக்குனர் அன்பு புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த படத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கிறார்.

    மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். "வால்டர்", "ரேக்ளா" படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரைக்கடர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.


    புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது. இவ்விழாவினில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார்.


    இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கேரளா காடுகளில் துவங்கியுள்ளது. மேலும் ஒரிசா தாய்லாந்து காடுகளில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பை ஆடி 18 - ஆம் தேதி அறிவிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    • நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
    • இவர் இளைஞர் நலத்துறை அமைச்சரும் நகரி எம்.எல்.ஏவுமாக இருக்கிறார்.

    ஆந்திராவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இதையொட்டி ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் கடந்த 2 வாரமாக 'யாத்ரா' என்ற நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். நடை பயணத்தின் போது முதல்- மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை கடும் விமர்சனம் செய்தார்.



    இதற்கு ரோஜா பதில் கூறுகையில், "பவன் கல்யாண் ஒரு நடிகர் என்பதால் அவரை பார்க்கத்தான் கூட்டம் வருகிறது. இதெல்லாம் ஓட்டாக மாறாது. பவன் கல்யாண் முதல்- மந்திரிக்கு பாடம் எடுப்பதை பார்க்கும் போது சன்னி லியோன் ஒழுக்கத்தை பற்றி வேதம் ஓதுவது போல் உள்ளது என்று பேசினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இணையத்திலும் இதற்கு எதிர்ப்பு வலுத்தது.

    இந்தநிலையில் சன்னி லியோன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் ரோஜா பேசிய வீடியோவை வெளியிட்டு நான் ஆபாச நடிகைதான். ஆனால் எனது கடந்த காலத்தை நினைத்து ஒரு போதும் வருத்தப்பட்டதில்லை. உங்களை போல் இல்லாமல் நான் என்ன செய்ய விரும்பினாலும் அதை வெளிப்படையாகவே செய்வேன். ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை. உங்களுக்கும், எனக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் நான் ஆபாச பட உலகை விட்டு வெளியேறினேன். ஆனால் அதை நீங்கள் செய்யவில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.



    • கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.
    • இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் 'விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்' என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.


    துருவ நட்சத்திரம் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வருகிற 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. பல நாட்களுக்கு பிறகு இப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 




    • 1980 முதல் ஆண்டுதோறும் சிவகுமார் அறக்கட்டளை பல மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறது.
    • 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேரின் மேல்படிப்பிற்கு கல்வி உதவி தொகையை சூர்யா வழங்கினார்.

    பழம்பெரும் நடிகரான சிவகுமார் 1979-ல் தனது 100- வது படத்தின் போது சிவகுமார் கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்தார். இதை நடிகர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். பின்னர் 1980 முதல் ஆண்டுதோறும் இந்த அறக்கட்டளை மூலம் பல மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார். இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு பெற்றோரை இழந்த 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேரின் மேல்படிப்பிற்கு கல்வி உதவி தொகையை சிவகுமாரின் மகன் நடிகர் சூர்யா வழங்கினார்.



    இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியதாவது, கல்வி மூலமாக வாழ்க்கையை படியுங்கள், வாழ்க்கை மூலமாக கல்வியை படியுங்கள். வாழ்க்கை முழுவதும் கல்வி ரொம்ப தேவையான ஒரு விஷயம். ஏனென்றால் சமூகத்தில் ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. சாதி, மதம் இவை அனைத்தையும் கடந்து எப்படி நாம் வாழ்க்கையை பார்க்க போகிறோம். வெறும் மார்க் மட்டுமே கிடையாது வாழ்க்கை. அதை தாண்டி வாழ்க்கையை எப்படி புரிந்து கொள்ளலாம்.

    தொழிலுக்கும் சுற்றி இருக்கும் அறிவியலுக்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்பதை சொல்லிக் கொடுப்பது கல்வி. அந்த கல்வி சூழலை அழகாக வைத்து கொள்ள ரொம்ப ரொம்ப முக்கியம் ஆசிரியர்கள். இங்கு வந்திருக்கும் ஆசிரியர்களை பார்க்கும் போது எவ்வளவு சவால்கள் இருக்கும் அதை எல்லாம் தாண்டி ஒரு பள்ளிக்கு வரும் மாணவர்களை எவ்வாறு ஊக்குவிக்கிறார்கள், இவ்வளவு தூரம் நான் வருவதற்கு என் ஆசிரியர்கள் தான் காரணம் என்று மாணவர்கள் கூறும் போது, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களுக்கும் தலைவணங்கி நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.


    மூன்று வருடமாக அகரம் அரசுடன் சேர்ந்து இயக்கி வருகிறது. இந்த வருடம் ஒரு லட்சம் மாணவ- மாணவிகளை கல்லூரி மற்றும் பள்ளிக்கு மீட்டு வர உதவியது. நாங்கள் 14 வருடங்களாக சமமான கல்வி கொடுக்க வேண்டும் என்று பல அமைப்புகளுடன் சேர்ந்து இதுவரைக்கும் 5200 மாணவ-மாணவிகளின் வாழ்க்கையை மாற்ற முடிந்தது. ஆனால், அரசுடன் சேர்ந்து இயக்கி மூன்று வருடத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற முடிந்துள்ளது. அரசுடன் சேர்ந்து பயணிப்பது அகரத்தின் பெருமை" என்று கூறினார்.

    ×