படப்பிடிப்பை நிறைவு செய்த குஷி படக்குழு

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குஷி’.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
குஷி படக்குழு
குஷி படக்குழு
Published on

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குஷி'. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'குஷி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

குஷி படக்குழு

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'குஷி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com