ரீ ரிலீஸிலும் இத்தனை கோடிகளா..! வாய்பிளக்க வைத்த வேட்டையாடு விளையாடு வசூல்

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு.இப்படம் ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆனது.
ரீ ரிலீஸிலும் இத்தனை கோடிகளா..! வாய்பிளக்க வைத்த வேட்டையாடு விளையாடு வசூல்
Published on

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006-ம் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. நீண்ட வருடங்களுக்கு பிறகு வேட்டையாடு விளையாடு படம் ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆனது.

சென்னையில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகள் நிறைந்து வந்தது. இதையடுத்து இப்படத்தின் மறு வெளியீட்டு வெற்றியை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வேட்டையாடு விளையாடு திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரூ.1 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரீ ரிலீஸிலும் சாதனை படைத்த இப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com