என் மலர்
சினிமா செய்திகள்
- பேட்ட, மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மாளவிகா மோகனன்.
- இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் களம் இறங்கினார்.

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'மாறன்' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் தமிழில் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் மாளவிகா மோகனன் தற்போது பதிவிட்டிருக்கும் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ரோஜா செடியில் பூக்களை மாளவிகா பறிப்பது போன்று இடம் பெற்றிருக்கும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள், பூப்பறிக்க நீயும் போகாதே.. உன்ன பாத்தாலே பூக்களுக்குள் கத்தி சண்டையடி என்ற பாடல் வரிகளை கமெண்ட் செய்து வருகின்றனர்.
- 'ஜென்டில்மேன்' திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
- 'ஜென்டில்மேன்-2' திரைப்படத்தில் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கிறார்.
1993-ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் 'ஜென்டில்மேன்'. இப்படத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், மனோரம்மா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து சமீபத்தில் 'ஜென்டில்மேன்-2' படத்தை அடுத்ததாக தயாரிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்திருந்தார். இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா சக்ரவர்த்தி நடிக்கிறார். கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு கலை இயக்குனராக தோட்டா தரணி இணைந்துள்ளார். மேலும் தோட்டா தரணியோடு அவரது மகள் ரோகிணி தரணியும் இப்படத்தில் பணியாற்றுகிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜென்டில்மேன்-2' திரைப்படத்தின் பாடல் எழுதும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ள கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "கொச்சியில் இருக்கிறேன்
ஜென்டில்மேன் 2
படத்திற்குப் பாட்டெழுதுகிறேன்
ஆஸ்கர் விருதுக்குப் பிறகு
கீரவாணி(மரகதமணி)
இசையமைக்கும்
முதல் தமிழ்ப்படம்
அதிகாலைப் பறவைகளாய்ப்
பாடிக்கொண்டிருக்கிறோம்
கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார்
குஞ்சுமோன் படத்துக்குக்
குறையிருக்குமா பாட்டுக்கு?
விரைவில்
அர்ப்பணிக்கிறோம் நாட்டுக்கு" என்று குறிப்பிட்டுள்ளார்.
- உதயநிதி நடிப்பில் வெளியான 'மாமன்னன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படம் சில தினங்களுக்கு முன்பு நாயகுடு" (Nayakudu) என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர்.

மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் "நாயகுடு" (Nayakudu) என்ற பெயரில் ஜூலை 14-ம் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை 27ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று போஸ்டர் வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளிலும் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.
- இவர் தனது பிறந்தநாளில் நற்பணி மன்றத்தை தொடங்கியுள்ளார்.
வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், எஃப்ஐஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
விஷ்ணு விஷால் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவருடைய பிறந்தநாளில் நற்பணி மன்றம் தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணக்கம்! என்மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த நற்பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிறந்தநாள் முதல் 'விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்' என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.!

இனி எனது ரசிகர்களின் செயல்பாடுகள் அனைத்தும் 'விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்' மூலமாக ஒருங்கிணைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அடிப்படையில் நான் விளையாட்டுத் துறையில் இருந்து வந்தவன் என்ற முறையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறோம்.
இதில், ஹேமமாலினி ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், திவ்யா தடைதாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்டாலின் ஜோஸ் டெக்கத்லானில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த முயற்சியை மேலும் பெரிதாக்கி; விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் ஒரு செயல் திட்டத்தைத் தீட்டி வருகிறோம். அந்தத் திட்டம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறோம், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி! என்று குறிப்பிட்டுள்ளார்.
- இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'.
- இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
புதுமுக இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'. இப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேலக்ஸி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் 'டைனோசர்ஸ்' படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இப்படத்தில் தனா என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் ரிஷியும், ஆறுமுகமாக ரமனாவும், பாபு கிளியப்பனாகவும் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
'டைனோசர்ஸ்' திரைப்படம் ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'கேப்டன் மில்லர்'.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஜூலை 28 சம்பவம் இருக்கு.. கில்லர் கில்லர் என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் இது கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட்டாக இருக்கலாம் என்று பேசி வருகின்றனர்.
- நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே'.
- இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே' (Project K). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.
மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் 'புராஜெக்ட் கே' படத்தின் தீபிகா படுகோனேவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ ஜூலை 21ம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இந்த படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் சமீபத்தில் வெளியானது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான 'இது டைகரின் கட்டளை' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
- விடுதலை முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
- இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என இயக்குனர் வெற்றிமாறன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், 'விடுதலை -2' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக நடிகர் சூரி தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
- நடிகை நயன்தாரா தற்போது ‘ஜவான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

ஜவான் போஸ்டர்
இந்நிலையில், நயன்தாராவின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கையில் துப்பாக்கியுடன் நயன்தாரா இருக்கும் இந்த போஸ்டரை நடிகர் ஷாருக்கான் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், 'புயலுக்கு முன்வரும் இடி அவள்' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
- நடிகர் விஜய் சேதுபதி பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
- இவர் பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பிற்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது மெரி கிறிஸ்துமஸ் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என பேசப்பட்டது. பிறகு அதனை மறுத்து தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு உறுதிபடுத்தியது. மேலும் இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் படம் வெளியாகவில்லை.

மெரி கிறிஸ்துமஸ் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். பல நாட்களுக்கு பின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- பிரபல நடிகையான இலியான பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
- இவர் நண்பன் படத்தில் நடிகர் விஜய்யுடன் ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார்.
தமிழில் நண்பன் படத்தில் நடிகர் விஜய்யுடன் ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் இலியானா டிகுரூஸ். இவர் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். நண்பன் படத்தில் இருக்கானா இடுப்பிருக்கானா என்ற பாடலுக்கு இடுப்பை ஆட்டி ரசிகர்களை கவர்ந்த இலியானா, அதன்பின்னர் உடல் எடை கூடி இருந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் இலியானா, சமீபத்தில் என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என பதிவிட்டு, சாதனை பயணம் தொடங்கி விட்டது என்ற பொருள் அடங்கிய வாசகம் இடம்பெற்ற குழந்தையின் உடையையும் வெளியிட்டிருந்தார்.

இலியானா பதிவு
இலியானாவிற்கு திருமணமாகாத நிலையில் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகை இலியான தற்போது தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதிலும் ஒரு ட்விஸ்டாக அவரின் பெயர் மற்றும் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை. இந்த காதலன் யார் என்ற விவரங்களின் தேடுதல் வேட்டையில் ரசிகர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.






