கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்த 'டைனோசர்ஸ்' படக்குழு

இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'.இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்த 'டைனோசர்ஸ்' படக்குழு
Published on

புதுமுக இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'. இப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேலக்ஸி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் 'டைனோசர்ஸ்' படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இப்படத்தில் தனா என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் ரிஷியும், ஆறுமுகமாக ரமனாவும், பாபு கிளியப்பனாகவும் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

'டைனோசர்ஸ்' திரைப்படம் ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com