மீண்டும் வெளியாகும் 'மாமன்னன்' திரைப்படம்

உதயநிதி நடிப்பில் வெளியான 'மாமன்னன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இப்படம் சில தினங்களுக்கு முன்பு நாயகுடு" (Nayakudu) என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது.
மீண்டும் வெளியாகும் 'மாமன்னன்' திரைப்படம்
Published on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர்.

மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் "நாயகுடு" (Nayakudu) என்ற பெயரில் ஜூலை 14-ம் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை 27ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று போஸ்டர் வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளிலும் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com