கிறிஸ்துமஸ் காத்திருப்பை நிறைவு செய்த விஜய் சேதுபதி.. உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் விஜய் சேதுபதி பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பிற்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் காத்திருப்பை நிறைவு செய்த விஜய் சேதுபதி.. உற்சாகத்தில் ரசிகர்கள்
Published on

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது மெரி கிறிஸ்துமஸ் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என பேசப்பட்டது. பிறகு அதனை மறுத்து தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு உறுதிபடுத்தியது. மேலும் இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் படம் வெளியாகவில்லை.

மெரி கிறிஸ்துமஸ் போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். பல நாட்களுக்கு பின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com