என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகை டாப்சி பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் பேட்மின்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போ என்பவரை காதலித்து வருகிறார்.

    ஆடுகளம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்சிக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்கள் குவிந்து வருகின்றன. பிங்க் படத்தின் மூலம் அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் தமிழில் ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக பேட்மின்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போ என்பவரை காதலித்து வருகிறார்.



    இந்நிலையில், நடிகை டாப்சி நீண்ட இடைவெளிக்கு பின் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு டாப்சி, "நான் இதுவரை தாய்மை அடையவில்லை. அதனால் இப்போது என் திருமணம் இருக்காது. திருமணம் குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவேன்" என்று கேலியாக கூறினார்.

    பிரபலங்கள் பலர் தாய்மைக்கு பின் திருமணம் செய்து கொண்ட நிலையில் டாப்சியின் இந்த பதிவிற்கு சமூக வலைதளத்தில் பலர் பாலிவுட் பிரபலங்களை மறைமுகமாக தாக்குகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • நடிகர் விஷால் தற்போது ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இதையடுத்து விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

    நடிகர் விஷால் தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதைத்தொடர்ந்து விஷாலின் 34-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளார். ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இன்வீனியோ ஆரிஜன் இணைந்து பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றனர். மேலும், இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.


    இந்நிலையில், நடிகர் விஷால் தனது சமூக வலைதளத்தில் 'நடந்து முடிந்தவற்றை மறந்துவிடுங்கள். எதிர்காலத்தை நோக்கி பயணியுங்கள்' என்று மோட்டிவேஷன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை லைக் செய்து ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.



    • நடிகர் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் 'டிடி ரிட்டன்ஸ்' .
    • இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    டிடி ரிட்டன்ஸ் போஸ்டர்

    ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொலை’.
    • இப்படத்தை விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியுள்ளார்.

    இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி, தற்போது கிரைம் திரில்லர் வகை படமான 'கொலை' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை 'விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.


    இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதையடுத்து படக்குழுவினர் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். இதில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி பேசியதாவது, பல வருடங்களுக்குப் பிறகு பாலாஜி குமார் தமிழில் படம் இயக்குவது மகிழ்ச்சியான விஷயம். படம் நன்றாகவே வந்திருக்கிறது. கதை சொல்லும்போது முதலில் மூன்று கதாநாயகிகள் என சொன்னார்கள். பிறகு இரண்டானது. அதிலும் மீனாட்சி இன்னொருவருக்கு ஜோடி. ரித்திகா எனக்கு தங்கச்சி போல! எனக்கு ஒரே ஒரு மனைவி என்று சொன்னார்கள். அந்த கதாபாத்திரமும் நம்மிடம் எரிந்து விழும். இப்படி ஒவ்வொரு படத்திலும் எனக்கு பெரிதாக ரொமான்ஸ் கிடைக்காமல் செய்கிறார்கள். எனக்கு நீதி வேண்டும்.


    ஆனால், படம் ஒரு ஜாலியான அனுபவமாக இருந்தது. இயக்குனர் பாலாஜி, எலான் மஸ்க் தங்கச்சியின் நண்பர் என்பதால் சீக்கிரம் எலான் நம் தமிழ் சினிமாவில் படம் தயாரிக்க வாய்ப்பிருக்கிறது. மீனாட்சி அடிப்படையில் மருத்துவர், இப்போது ஐ.ஏ.எஸ் படித்து வருகிறார். அடுத்து தெலுங்கில் மகேஷ்பாபுவின் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ஆர்யாவுக்கு நன்றி என்று பேசினார்.


    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஆர்யா பேசியதாவது, இந்த நிகழ்வுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நானும் விஜய் ஆண்டனியும் எங்களது ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் வளர்வதற்கு மாற்றி மாற்றி உதவிக் கொண்டோம். நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுப்பது எனக்கு மகிழ்ச்சி. விஜய் ஆண்டனி தனது ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒன்றை புதிதாக முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைப்பார். அந்த வகையில், இந்தப் படமும் நிச்சயம் வித்தியாசமாக தான் இருக்கும். படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள் என்று பேசினார்.

    • கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி(79) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
    • இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த சில மாதத்துக்கு முன் நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    இதையடுத்து கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி(79) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் உயிரிழந்தார் என அவரது மகன் தெரிவித்துள்ளார். அவரது மறவையொட்டி கேரளாவில் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

    இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதிமய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தேசியத்தின் மேல் பெரும்பற்றும் மாநில வளர்ச்சியில் மாளாத அக்கறையும் கொண்டு மிக நீண்டகாலம் வெற்றிகரமான அரசியல் பணி செய்து மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற தலைவர் உம்மன் சாண்டியின் மறைவு நாட்டிற்கும், கேரளத்திற்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.





    • நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொலை’.
    • இப்படம் வருகிற 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி, தற்போது கிரைம் திரில்லர் வகை படமான 'கொலை' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை 'விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.


    இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், கொலை திரைப்படத்தின் இறுதி டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'ஒரு பொய்யோட சத்தம் எப்படி கேக்கும்னு காதுக்கு நல்லா தெரியும்' போன்ற வசனங்கள் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • நடிகர் ரஜினிகாந்த் தற்போது ’ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


    மாலத்தீவு கடற்கரையில் ரஜினி

    இந்நிலையில், தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது பிரேக் எடுக்கும் விதமாக மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் அவர் கூலாக சில் செய்யும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் 170-வது படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், நடிகர் சூர்யாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

    • மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாவீரன்’.
    • இப்படம் வெளியாகி ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

    'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14 தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.



    'மாவீரன்' திரைப்படத்திற்கு விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில், இது குறித்து இயக்குனர் மடோன் அஸ்வின் நேர்காணல் ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், விஜய் சேதுபதி சார் ஒரு ரூபாய் கூட பணம் வாங்காமல் மாவீரன் படத்திற்கு குரல் கொடுத்தார். நானும் சிவகார்த்திகேயனும் முதல்முறையாக இண்டஸ்ட்ரியில் இந்த டிரெண்டை ஆரம்பிப்பதில் பெருமை அடைகிறேன், அதனால் இதற்கு எனக்கு பணம் வேண்டாம். சிவகார்த்திகேயனுக்காக இதைச் செய்வதில் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று விஜய் சேதுபதி தெரிவித்ததாக இயக்குனர் மடோன் அஸ்வின் கூறினார்.

    • நடிகர் விஜய் ‘விஜய் மக்கள் இயக்கம்’ மூலமாக மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.
    • விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக உருவாக்க ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளார் விஜய்.

    திரையுலகிற்கும், தமிழக அரசியலுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. திரையுலகில் உச்சத்தை தொட்ட எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலில் தனிப்பெரும் சக்தியாக திகழ்ந்தனர். இன்றைய அரசியலிலும் திரையுலகினர் வலுவாக காலூன்றி உள்ளனர். விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சீமான் உள்ளிட்டவர்கள் தனக்கென தனி பாதை அமைத்து அரசியலில் பயணிக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அவர் அதற்கான காலம் கனியவில்லை என ஒதுங்கிய நிலையில் இளம் ரசிகர் பட்டாளங்களை தன்வசம் வைத்துள்ள நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக உருவாக்க ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி உள்ளார். சமீபகாலமாக திரைப்படத்தில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசி பலரது கவனத்தை ஈர்த்த விஜய் தன் செயல்பாட்டை வசனத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் அடுத்தகட்ட நகர்வுக்கு மாற்றியுள்ளார்.

    இந்த சூழலில் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டதில் விஜய்க்கு ஆதரவு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. வார இதழ் நடத்திய சர்வேயில் விஜய் அரசியலுக்கு வரலாமா?, விஜய்க்கு ஓட்டு போடுவீர்களா?, விஜய் கூட்டணி வைக்கலாமா?, அவர் அரசியலுக்கு வந்தால் எந்த கட்சிக்கு பாதிப்பு?, தமிழக அரசியலில் விஜய்யால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? என்ற 5 கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

    சென்னை, கொங்கு, வடக்கு, டெல்டா என 5 மண்டலங்களாக பிரித்து சர்வே பணி மேற்கொள்ளப்பட்டது. தொகுதிக்கு ஒரு ஆண்கள், பெண்கள் கல்லூரிகளில் 500 குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டார்கள். ஒரு குழுவுக்கு 10 முதல் 15 பேர் வரை என மொத்தம் 5 ஆயிரத்து 250 பேர் இதில் களம் இறங்கினர். புதுவையில் தனியே 30 பேர் கொண்ட குழு சர்வே பணியில் ஈடுபட்டது.

    மொத்தம் 1 லட்சத்து 52 ஆயிரத்து 100 பேரிடம் சர்வே எடுக்கப்பட்டது. சர்வேயில் பங்கேற்ற மாணவ-மாணவிகளில் விஜய் அரசியலுக்கு வர 72.50 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 27.50 சதவீதம்பேர் அவர் அரசியலுக்கு வரவேண்டாம் என்று கருத்து தெரிவித்து உள்ளனர்.

    71.56 சதவீதம் பேர் விஜய்க்கு ஓட்டு போடுவோம் என்றும், 28.44 சதவீதம் பேர் விஜய்க்கு ஓட்டு போடமாட்டோம் என்று கூறியுள்ளார்கள்.தேர்தலில் விஜய் கூட்டணி வைக்க 52.70 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 47.30 சதவீதம்பேர் கூட்டணி வைக்கவேண்டாம் என்று கூறியுள்ளனர்.

    அதேபோல் விஜய் அரசியலுக்கு வருவதால் தி.மு.க. வுக்கு பாதிப்பு என 40.16 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பு என்று 22.11 சதவீதம் பேரும், அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு என்று 20.75 சதவீதம் பேரும், பா.ஜ.கவுக்கு பாதிப்பு என்று 16.98 சதவீதம்பேரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    தமிழக அரசியலில் விஜய்யால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? என்ற கேள்விக்கு முடியும் என்று 76.53 சதவீதம் பேரும், முடியாது என்று 23.47 சதவீதம்பேரும் கருத்து கூறியுள்ளனர். சர்வேயில் பெரும்பாலானோர் கருத்து விஜய்க்கு ஆதரவாகவே உள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் விஜய்யின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது.

    பொதுவாக விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவு அதிகரித்துள்ள நிலையில் அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார்? வெளிப்படையாக தனது அரசியல் பிரவேசத்தை அறிவிப்பாரா? பாராளுமன்ற தேர்தலில் மக்கள் இயக்கத்தினரை களம் இறக்குவாரா? என்ற பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. அரசியல் களத்தில் விரைவில் விஜய்யின் அதிரடி தொடங்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

    ஆசியாவில் சமூக வலைதளங்களில் விஜய் தொடர்பான செய்தி, வீடியோக்கள் அதிகளவில் பார்க்கப்படுகின்றன. பார்வையாளர்கள் அதிகம் தேடும் நபராக நடிகர் விஜய் ஆசிய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் 3-வது இடத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. இதை அறிந்தே விஜய் தனது அரசியல் நகர்வுகளை தொடங்கி இருக்கிறார்.

    • நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’.
    • இப்படம் கடந்த ஜூன் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    மாவீரன் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'மாவீரன்' திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.




    • நடிகர் அர்ஜுன் தாஸ் தற்போது "அநீதி" திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற ஜூலை 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் தற்போது "அநீதி" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


    அநீதி போஸ்டர்

    இப்படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குனர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, "அநீதி" திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இது தொடர்பான போஸ்டரை படகுழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    "அநீதி" திரைப்படம் வரும் ஜூலை 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×