அர்ஜுன் தாஸ் படத்திற்கு தணிக்கைக்குழு இந்த சான்றா அளித்தது..?

அர்ஜுன் தாஸ் படத்திற்கு தணிக்கைக்குழு இந்த சான்றா அளித்தது..?

நடிகர் அர்ஜுன் தாஸ் தற்போது "அநீதி" திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படம் வருகிற ஜூலை 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Published on

தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் தற்போது "அநீதி" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

அநீதி போஸ்டர்

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குனர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, "அநீதி" திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இது தொடர்பான போஸ்டரை படகுழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

"அநீதி" திரைப்படம் வரும் ஜூலை 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com